சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Why the SEP (Germany) rejects a state ban of the neo-fascist NPD

நவ-பாசிச NPD மீதான அரதடையை ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி ஏன் நிராகரிக்கிறது?

By the Partei für Soziale Gleichheit (PSG)
10 January 2013

use this version to print | Send feedback

டிசம்பர் மாத நடுவில் ஜேர்மன் பாராளுமன்றத்தின் மேல்மன்றம் (Bundesrat) தீவிர வலதுசாரி ஜேர்மன் தேசிய ஜனநாயகக் கட்சியை (NPD) மேல் நீதிமன்றம் தடைசெய்வதற்கான வழக்கு ஒன்றை அனுப்புவதற்கு உடன்பட்டது. இதுவரை பாராளுமன்றத்தின் கீழ்மன்றமும் (Bundestag) மற்றும் அரசாங்கமும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கொடுப்பதற்குத் தயக்கம் காட்டியுள்ளன. கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) அத்தகைய நடவடிக்கை எடுக்கத் தயங்குகையில், எல்லாவற்றிற்கும் மேலாக சமூக ஜனநாயக கட்சியும்   (SPD) இடது கட்சியும் மற்றும் பசுமைக் கட்சியும் தடைக்கு ஆதரவாக உள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி (PSG) அடிப்படையில் அவ்வாறான தடையை எதிர்க்கிறது. அத்தகைய தடை தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவாது, மாறாக தீவிர வலதுசாரிகளுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள அரசாங்க அமைப்புகளைத்தான்   வலுப்படுத்துவதுடன், சர்வாதிகார நடவடிக்கைகள் எடுப்பதை அதிகரிக்கும்.

ஓர் அரசியல் கட்சியை தடைசெய்வது என்பது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை தீவிரமாக மீறுவதைத்தான் பிரதிபலிக்கும். பாராளுமன்றத்தில் இருக்கும் எந்தக் கட்சியும் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று பெரும்பாலான மக்கள் உணர்கையில் அவர்கள் உத்தியோகபூர்வ அரசியலுக்கு தமது முதுகை காட்டுகின்றனர். அப்பொழுது ஆளும் உயரடுக்கு அதை எதிர்கொள்ளும் முறையில் ஒன்றுகூடும் உரிமையைத் தாக்கி, மக்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கலாம் அல்லது கொடுக்கக்கூடாது என்பதை தீர்மானிக்கின்ற உரிமையை தான் எடுத்துக்கொள்கின்றது.

இறுதி ஆய்வில் இத்தகைய தடைகள் சமூகத்தின் மிக வலதுசாரித்தன, பிற்போக்குத்தனப் பிரிவுகளை வலுப்படுத்தி, ஊக்குவிக்கின்றது என்பதை வரலாறு பலமுறையும் காட்டியுள்ளது. அதே நேரத்தில், தொழிலாளர் இயக்கம் சுதந்திரமாகவும் ஜனநாயகரீதியாகவும் கருத்தை வெளிப்படுத்தும் அடிப்படை வடிவங்கள் மறுக்கப்படுகிறது.

1920 களிலும் 1930களிலும் ஜேர்மனியில் இருந்த வைமார் குடியரசுக் காலத்தில், குடியரசை பாதுகாக்கும் சட்டம் போன்ற நடவடிக்கைகள் அரசியல் அமைப்புக்களை கலைக்க அனுமதித்தது. இவை பிரத்தியேகமாக தொழிலாளர் இயக்கத்திற்குள் இருந்த இடதுசாரி குழுக்களுக்கே பிரயோகிக்கப்பட்டன. போருக்குப் பிந்தைய ஜேர்மனியில் ஒரு சிறிய வலதுசாரி Socialistischen Reichspartei (சோசலிச பேரரசுக் கட்சி- SRP) 1953  இல் தடைசெய்யப்பட்டமையானது மூன்று ஆண்டுகளுக்குப்பின் கம்யூனிஸ்ட் கட்சியை (KPD) அழிப்பதற்கு முன்னோடியாயிற்று. இன்று NPD தடைசெய்தல் என்பது அரசாங்கத்தின் அதிகாரங்களை விரிவாக்குவதற்குத்தான் பயன்படுமே ஒழிய, ஐரோப்பா முழுவதும் பெருகும் பாசிச ஆபத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உதவாது.

உண்மையில், அரச அதிகாரங்களை அதிகரிப்பது, பாசிச மற்றும் வலதுசாரிப் போக்குகளின் எழுச்சிகளுடன் பிரிக்கப்பட முடியாதவை. இரண்டின் வளர்ச்சிக்கும் பின்னணியில் ஜேர்மனி மற்றும் ஐரோப்பா முழுவதும் வர்க்கப் போராட்டத்தின் தீவிரம் உள்ளது. கண்டம் முழுவதும் ஆளும் உயரடுக்கு நெருக்கடியின் சுமையை மக்கள் மீது சுமத்துவதுடன், பல தசாப்தங்கள் போராடிப்பெற்ற சமூக நலன்களை அழிக்கிறது. இத்தகைய தாக்குதல் ஜனநாயக உரிமைகளுடன் இணைந்திருக்க முடியாது. அரச அதிகாரங்களை முடுக்கிவிடுவது கீழிருந்து வரும் அனைத்து எதிர்ப்பையும் அடக்குவதற்கும், கண்காணிப்பைக் கொள்ளுவதற்கும் உதவுகையில், சமூகத்தின் சக்கையாய் போன பகுதியை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் அணிதிரட்டுவதற்கு தீவிர வலதுசாரிக் கும்பல்களால் பயன்படுத்தப்படுகின்றது.

ஜேர்மனியில் தீவிர வலதுகள் இதே அரச அமைப்புகளால்தான் கட்டமைக்கப்பட்டு ஆதரவளிக்கப்படுகின்றது. அது NPD  தடைக்கு ஆதரவு கொடுத்து "வலதுசாரிக்கு எதிரான போராட்டம் என்றழைக்கப்படுவதை வலுப்படுத்த விரும்புகிறது. உத்தியோகபூர்வமா NPD தடைசெய்யப்பட முன்னர் எடுத்த முயற்சியில் இது ஏற்கனவே வெளிப்பட்டிருந்தது. அந்த முயற்சி அப்போது தோல்வியுற்றது. ஏனெனில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் NPD “உண்மையில் அரசு நடத்தும் அமைப்பு ஆகும்என்ற முடிவிற்கு வந்ததாலாகும். சட்ட நடவடிக்கைகளின்போது NPD கட்சிச் செயலர்கள் ஏழுபேரில் ஒருவரேனும் அரச இரகசியப் பிரிவிடம் இருந்து ஊதியம் பெறுவது வெளிப்பட்டது.

கடந்த ஆண்டு அதிவலதுசாரி பயங்கரவாத அமைப்பான National Socialist Underground” என்பது குறித்து வெளிவந்த கருத்துக்கள் இரகசியப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாசிச, வலதுசாரிப் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகள் பற்றிய விபரங்களை வெளிக்கொண்டு வந்தது. இரகசியப் பிரிவும், பொலிஸும் தீவிர வலது பிரிவுகளுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொண்டுள்ளதுடன், மறைமுகமான நபர்கள் மூலம் தீவிர வலதுசாரிக் குழுக்களுக்கு நிதியளித்துள்ளதுடன், சில குழுக்கள் நிறுவப்படவும் உதவியுள்ளன. உண்மையில் NSU இன் கொலைக்காரத்தன பயங்கரவாதத் தாக்குதல்களில் அரச அதிகாரிகள் ஈடுபட்டிருந்ததையும் மற்றும் அரசாங்க முகவர்களின் கண்களின் முன்னேயே அவற்றை நடத்தினர் என்பதற்கான சான்றுகள் கணிசமாக உள்ளன.

அகதிகள், குடியேறுவோர் ஆகியோருக்கு எதிராக நடத்தப்படும் அரசாங்க மற்றும் செய்தி ஊடகப் பிரச்சாரங்கள் தீவிர வலதுகளின் வளர்ச்சிக்குத் அடித்தளம் அமைத்தன. 1992ல் தஞ்சம் பெறும் முறையை தவறாக பயன்படுத்துவது எனக்கூறப்பட்டதற்கு எதிரான பிரச்சாரம் அனைத்துக் கட்சிகளாலும், பாராளுமன்றத்தாலும் மற்றும் செய்தி ஊடகத்தாலும் செய்யப்பட்டது. இது அலையென இனவெறி வன்முறைக்கு வழிவகுத்தது. ரொஸ்டொக்கில் தஞ்சம்கோரியோர் தங்கியிருந்த விடுதி ஒன்றை முற்றுகையிட்டதுடனும் மற்றும் சோலிங்கன் மோலனில் கொலைக்காரத் தாக்குதல்களுடன் உச்சகட்டத்தை அடைந்தது.  இன்று, தஞ்சம்கோரியோர் திட்டமிட்டு நாட்டை விட்டு அகற்றப்படுவது, முஸ்லிம்களை வன்முறைமிக்க அடிப்படைவாதிகள் என்று கடுமையான குறைகூறுதல் ஆகியவையும் அதேபோன்ற விளைவுகளில்தான் முடியும்.

NPD உறுப்பினர்கள் எண்ணிக்கை சமீபகாலத்தில் சரிந்து கொண்டிருக்கிறது. இது தப்பிப் பிழைத்திருக்க முடிந்ததற்கு காரணமே மத்திய நிர்வாக நீதிமன்றம் அக்கட்சி தவறான கணக்குகளை சமர்ப்பித்ததற்காக அதன்மீது சுமத்தப்பட்ட அரை மில்லியன் யூரோ அபராதத்தைக் கட்டுவதில் இருந்து விலக்களித்ததால் ஆகும். ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலது அமைப்புக்கள் கணிசமான செல்வாக்கைக் கொண்டுள்ளன. பிரான்சில் தேசிய முன்னணி 18% வாக்குகளை 2012 ஜனாதிபதித் தேர்தலில் பெற்றது. இது அதன் சிறந்த விளைவாகும். ஹங்கேரி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் வெளிப்படையான பாசிச ஜோபிக் மற்றும் கிரைசி அவ்கி இரண்டும் கணிசமான பாராளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளன.

இத்தகைய போக்கு ஜேர்மனியிலும் நிகழக்கூடும். தீவிர வலதின் வளர்ச்சிக்கு காரணம் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநல அரசு மீதான மிருகத்தனத் தாக்குதல்கள்தான். இது மக்களின் முழு அடுக்குகளையும் வறுமையிலும் அவநம்பிக்கையிலும் தள்ளுகிறது. இந்த நிலைமையில் சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடது அமைப்புக்கள் நெருக்கடிக்கு முற்போக்கான தீர்வைத் தடைக்கு உட்படுத்துகின்றன.

கிரேக்கத்தில் இது மிகத்தெளிவாக தெரிகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்ட ஐந்து சுற்றுச் சிக்கன நடவடிக்கைகள் ஊதியங்களையும் ஓய்வூதியங்களையும் கிட்டத்தட்ட 60% குறைத்துவிட்டன. வேலையின்மை உத்தியோகபூர்வமாக இப்பொழுது 25%க்கு மேல் உள்ளது. இந்நடவடிக்கைகளுக்கான பரந்த எதிர்ப்பு தொழிற்சங்கங்கள் மூலம் பயனற்ற ஒருநாள் வேலைநிறுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் நெரிக்கப்படுகின்றன. சிரிசா என்னும் தீவிர இடது கூட்டணி, சமூக ஜனநாயக PASOK  இன் சரிவினால் ஆதாயம் பெற்றுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உறுதியான ஆதரவைக் கொடுத்து, சர்வதேச வங்கிகளிடம் தன்னால் கிரேக்கத்தின் கடன்களை திருப்பிக் கொடுக்கப்படும் என்று உறுதிமொழி கூறுகின்றது. இச்சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் அதிகரித்துவரும் பெரும் சமூக அவநம்பிக்கை மற்றும் ஆத்திரம் ஆகியவற்றை பாசிசவாதிகள் பயன்படுத்த முடியும்.

80 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்திற்கு வந்தது, தொழிலாள வர்க்கம் சமூக ஜனநாயக் கட்சி (SPD), ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) ஆகியவற்றின் காட்டிக்கொடுக்கப்பால் முடமாக்கப்பட்டதால்தான். சமூக ஜனநாயக் கட்சி தொழிலாள வர்க்கத்தை அரசாங்கத்திற்கு அடிபணியச் செய்து, குடியரசின் சான்ஸ்லர் ஹென்றிச் ப்ரூனிங் உடைய அவசரக்காலச் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து இறுதியில் பெரும் பிற்போக்குவாதியான ஹிண்டன்பேர்க்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தது. அவர் பின்னர் ஹிட்லரை சான்ஸ்லராக நியமித்தார். ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலிசத் தலைமை ஹிட்லருக்கு எதிரான ஐக்கிய முன்னணியை அமைக்க மறுத்து, தன்னுடைய தோல்விவாத நிலைப்பாட்டை சமூக ஜனநாயக் கட்சிக்கு எதிரான தீவிர இடது தாக்குதல்களின் பின் மறைத்தது.

 “அவநம்பிக்கைக்குரிய கட்சியின் (நாஜிக்கள்) வெற்றி, சோசலிச நம்பிக்கைக் கட்சியான அதிகாரத்தை எடுத்துக் கொள்ள இயலாது என்பது நிரூபித்ததால்தான்என்று 1933ல் ட்ரொட்ஸ்கி எழுதினார். “ஜேர்மன் தொழிலாள வர்க்கம் எண்ணிக்கையிலும் கலாச்சாரத்திலும் அதன் இலக்கை அடையும் வலுவை கொண்டிருந்தது. ஆனால் தொழிலாளர்களின் தலைவர்கள் தகமையற்றவர்கள் எனத் தங்களை நிரூபித்துவிட்டனர்.”

அப்பொழுது சமூக ஜனநாயக் கட்சியும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாள வர்க்கத்திடையே பெற்றிருந்த அதேபோன்ற செல்வாக்கை இன்று எந்தக் கட்சியும் பெற்றிருக்கவில்லை. ஆனால் குட்டி முதலாளித்துவக் கட்சிகள், “இடதுஎனக் காட்டிக் கொள்பவை, கிரேக்கத்தில் சிரிசா, ஜேர்மனியில் இடது கட்சி போன்றவையும் அவற்றின் போலி இடது ஆதரவு அமைப்புக்களும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத் தாக்குதலை ஒடுக்குவதில் முக்கிய பங்கைக் கொடுள்ளன. இவை தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ அமைப்பை பாதுகாப்பதுடன், முதலாளித்துவ அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் பாதுகாக்கின்றன. NPD தடைசெய்யப்பட வேண்டும் என வலுவாக வாதிடுபவர்கள் இவர்களுள் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பாராளுமன்றத்தில் இருக்கும் இடது கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஊலா ஜெல்ப்க பலமுறையும் NPD தடைசெய்யப்பட ஆதரவு கொடுத்துப் பேசியுள்ளார். அத்தகைய தடை இன்னும் கவனமாகத் தயாரிக்கப்பட வேண்டிய நேரம் இதுதான், அது தோல்வி அடையக்கூடாது என்றும் இப்பெண்மணி கோரியுள்ளார்.

பிரித்தானிய சோசலிஸ்ட் கட்சியின் கிளை போன்ற இடது கட்சிக்குள் இயங்கும் SAV எனப்படும் ஜேர்மனியில் சோசலிச மாற்றீடு, NPD மீதான அரசாங்கத் தடை மட்டும் போதாது என்கிறது. மேல்நீதிமன்ற முடிவு இல்லாமலேயே கட்சிகள் கலைக்கப்படலாம் என அது கோருகிறது. NPD “உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும், அதன் நிதிகள், அலுவலகங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், அனைத்துக் கூட்டங்களும் கலைக்கப்பட வேண்டும்என்று SAV அறிவிக்கின்றது.

இன்னும் பலமான அரசுக்கு அவை அழைப்பு விடுகையில், இக்குழுக்கள் அனைத்துமே வர்க்க அழுத்தங்கள் தீவிரமடைந்துள்ளதற்கான பிரதிவிளைவைத்தான் காட்டுகின்றன. இவை வசதிபடைத்த அதிகாரத்துவத்தினர் மற்றும் குட்டி முதலாளித்துவத்தினருக்காக பேசுகின்றன. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்குக் கடுமையான விரோதப் போக்கை காட்டுகின்றனர். சமூக நிலைமை மோசமானால் அவர்கள் இன்னும் வெளிப்படையாக அரசுடன் ஒத்துழைப்பர். ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு, அதிகாரங்கள் நிறைந்த அரசுதான், அதுதான் பாசிசத்திற்கும் எதிரான அரண் என்று கூறுகையில், இவை, அரசோ தொழிலாளர்களுக்கு எதிராக இன்னும் தீவிரமாகத் தாக்குகையில் தொழிலாளர்களை முதலாளித்துவ அரசுடன் கட்டிவைக்க முற்படுகின்றனர். மேலும் NPD மீது கூடுதல் கவனத்தைக் காட்டுவது தீவிர வலதுசாரிகளின் வளர்ச்சிக்கும் வழியமைக்கும் உத்தியோகபூர்வ அரசியலின் பொதுவான வலதுபக்க திருப்பத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப உதவுகின்றது.

தீவிர வலதுசாரிகளிடம் இருந்து வரும் ஆபத்திற்கு எதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் சமூக, ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பரந்த தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கம் ஆளும் வர்க்கத்தின் அரசியலுக்கும் அதன் இடது கட்சியிலிருக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதிராக அதன் சுயாதீன முன்னோக்கான சமத்துவமான சோசலிச சமூகம் என்பதை முன்வைக்க வேண்டும். இந்த அடித்தளத்தில்தான் பணத்தை சுருட்டும் வங்கிகள், பெருநிறுவனங்களுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இத்தகைய முன்னோக்கு வலதுசாரி வார்த்தைஜாலங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, குட்டி முதலாளித்துவ தட்டின் சிறந்த பிரிவினரை தொழிலாள வர்க்கத்தின் பக்கம் ஈர்க்கும். வலசாரிகளுக்கு எதிரான போராட்டத்தின் மிக முக்கியமான அடிப்படை ஒரு புரட்சிகர தொழிலாளர் கட்சியை கட்டமைப்பதாகும். அது தேசிய எல்லைகளைக் கடந்து தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு முற்போக்கான தீர்வை முன்வைக்கும். இக்கட்சிதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாகும்.