சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : மாலி

France escalates Mali war amid Algerian hostage crisis

அல்ஜீரிய பணயக் கைதிகள் நெருக்கடிக்கு இடையே பிரான்ஸ் மாலிப் போரை விரிவாக்குகிறது

By Kumaran Ira
18 January 2013
use this version to print | Send feedback

பிரான்ஸ் மாலியில் தனது படைகளின் நகர்வுகளை 1,400 என அதிகரித்துள்ளது; இது வடக்கு மாலியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள் தலைமையிலான எழுச்சியாளர்களுடன் போரை விரிவாக்கிக் கொண்டிருக்கையிலும், ஒரு அல்ஜீரிய இயற்கை எரிவாயு வளாகத்தில் ஏற்பட்டுள்ள பணயக் கைதிகள் நெருக்கடிக்கு நடுவேயும் நடந்துள்ளது; அந்த வளாகம் மாலியில் பிரெஞ்சுப் போருக்குப் பதிலடியாகக் கைப்பற்றப்பட்டிருந்தது.

நேற்று அல்ஜீரிய இராணுவம் லிபிய எல்லை அருகே உள்ள In Amenas என்னும் மூலோபாய எரிவாயு வளாகத்தை டாங்குகள், ஹெலிகாப்டர்களைக் கொண்டு தாக்கியது. அல் குவேடாவுடன் தொடர்புடைய Battalion of Blood ஆயுதப் போராளிகள் பிரிவு 41 வெளிநாட்டினரை பணயக் கைதிகளாக எடுத்துள்ளதாகக் கூறுகிறது. தாக்குதலில் கிட்டத்தட்ட 30 பணயக் கைதிகளும் 11 இஸ்லாமியவாதப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர் என அல்ஜீரிய அரசாங்கம் தெரிவிக்கிறது. In Amenas நிலையத்தின் உற்பத்தி மதிப்பு ஆண்டு ஒன்றிற்கு 4பில்லியன் டாலர் என்றும் இது அல்ஜீரியாவின் எரிவாயு உற்பத்தியில் 12% என்றும் கூறப்படுகிறது; இதன் முக்கியமான இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளில் முழுமையாக 18% மும் ஆகும். அல்ஜீரியாவில் இருந்து அதன் எரிவாயு இறக்குமதிகளில் இத்தாலி 17% குறைப்பை தெரிவித்திருக்கையில், எரிசக்தி தொழில்துறை பகுப்பாய்வாளர்கள் இப்போர் ஐரோப்பாவை இன்னும் அதிகமாக ரஷ்ய இயற்கை எரிவாயு ஏற்றுமதிளை நம்ப வைக்கும் எனக் கூறியுள்ளனர்.

போர்க்களத்தின் மீது, போரைக் கண்காணிப்பதற்காக வாஷிங்டன் கண்காணிப்பு டிரோன் ஒன்றை பறக்க விட்டதாகக் கூறப்படுகிறது.

பாரிஸ் இத்தாக்குதலை மாலி மீது தான் படையெடுத்திருப்பதை நியாயப்படுத்துவதற்கு ஒரு போலிக்காரணமாக பயன்படுத்துகிறது; இப்போர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாகும் என்றும் கூறுகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட், “அல்ஜீரியாவில் நடப்பது மாலியின் உதவிக்கு பிரான்ஸ் செல்ல வேண்டும் என்னும் முடிவை இன்னும் அதிகமாக நியாயப்படுத்துகிறது.” என்றார்.

கடந்த வெள்ளியன்று பிரான்ஸ் செல்வாக்கற்ற காப்டன் அமடு சனோகோவின் இராணுவக் குழு ஆட்சியை காப்பதற்காக மாலியில் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆட்சி இன்னும் தெற்கு மாலியில் கட்டுப்பாட்டை கொண்டுள்ளது; எழுச்சியாளர்களோ மூலோபாய சிறுநகரான கொன்னாவைக் கைப்பற்றியுள்ளனர். ஆனால் ஆட்சியாளர்கள் எழுச்சியாளர்களின் தென்புற முன்னேற்றத்தைத் தடுப்பதற்குத் திணறுகின்றனர். பிரான்ஸ் இறுதியில் 2,500 துருப்புக்களை நிலைப்படுத்தும் திட்டங்களைக் கொண்டுள்ளது; தன் முன்னாள் மேற்கு ஆபிரிக்க காலனியின் மீது வான்வழித் தாக்குதலைத் தொடர்கிறது.

பிரெஞ்சு-மாலித் துருப்புக்களுக்கும் எழுச்சியாளர் படைகளுக்கும் இடையேயான மோதல் வியாழன் அன்றும் தலைநகரான பமாகோவிற்கு 220 மைல்கள் வடக்கே இருக்கும் டியபலியில் தொடர்ந்தது; பிரெஞ்சு விமானப் படைகள் நகரத்தைத் தொடர்ந்து தாக்கின.

ஆனால் பிரெஞ்சு வான் தாக்குதல்கள் மற்றும் தரைத் தாக்குதல்கள் இருந்தபோதிலும், கிராமம் எழுச்சியாளர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. நியோனோவில் வசிக்கும் ஒருவரை அசோசியேட்டட் பிரஸ் நிருபர் மேற்கோளிட்டுள்ளார்: “நேற்று இரவு டியபலியில் குண்டுத் தாக்குதல்கள் இருந்தன; குடிமக்கள் நியோனோவிற்குத் தொடர்ந்து வருகின்றனர்; இன்று காலை டியபலியில் இருந்து மக்கள் வருவதைப் பார்த்தேன்; இஸ்லாமியவாதிகள்தான் இன்னும் அந்நகரை ஆக்கிரமித்துள்ளனர்.”

வடக்கே படைகள் நிலைப்பாடு கொண்டுள்ள நிலையில், இஸ்லாமியவாதப் படைகள் பமாகோவில் இருந்து 72 மைல்கள் தூரத்தில் மட்டுமே இருக்கும் பனம்பா சிறுநகரத்தில் காணப்பட்டனர்; இது எழுச்சியாளர்களின் முன்னேற்றத்தை நிறுத்த மாலி இராணுவத்தின் இயலாத நிலையை உயர்த்திக் காட்டுகிறது. ECOWAS  எனப்படும் மேற்கு ஆபிரிக்க பொருளாதாரச் சமூக நாடுகளில் இருந்து வந்துள்ள துருப்புக்கள் இப்பகுதியில் உதவிக்கு அனுப்பப்பட உள்ளனர்; அந்நாடுகள் 3,300 துருப்புக்களை பிரான்ஸின் போருக்கு உதவ உறுதியளித்துள்ளன.

ஒரு மூத்த மாலி இராணுவ மூலத்தை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் தெரிவித்ததாவது: “பனாம்பா எச்சரிக்கை நிலையில் உள்ளது. துணைப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று பமாகோவில் நைஜீரியத் துருப்புக்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன; அவை அப்பகுதியைக் காப்பதற்கு அனுப்பி வைக்கப்படலாம்.”

சமீபத்திய பிரெஞ்சு வான்வழித் தாக்குதல்களினால் குடிமக்கள் இறப்புக்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. ஆனால் குண்டுத்தாக்குதல்கள் இறப்பு எண்ணிக்கைகளில் தீவிர உயர்விற்குத்தான் வழிவகுக்கும். பிரெஞ்சு வான்தாக்குதல்கள் காவோ மற்றும் கொன்னாவிற்கு எதிராக இந்த வாரம் முன்னதாக நடத்தப்பட்டது குறித்த தகவல்கள் கிட்டத்தட்ட 60 முதல் 100 பேர் முறையே இந்நகரங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளன; இதில் குண்டுவீச்சுக்களால் உடல் சிதறுண்ட குடிமக்கள், மற்றும் வெடிப்புக்களில் இருந்து தப்புவதற்கு ஆற்றைக் கடக்க முற்பட்ட சிறுவர்கள் மூழ்கி இறந்ததும் அடங்கும்.

பிரெஞ்சு அதிகாரிகள் இழிந்த முறையில் தாங்கள் குடிமக்களுக்கு ஆபத்து விளைவிப்பதைத் தவிர்க்க முயல்வதாகக் கூறினர். RTL வானொலியிடம் அட்மைரல் Edouard Guillaud கூறினார்: “பிரான்ஸ், குடிமக்கள் இறப்பதைத் தவிர்க்க முழுவதும் இயன்றதைச் செய்யும். சந்தேகம் இருந்தால் நாங்கள் குண்டு போட மாட்டோம்.”

பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகள் மாலிய நெருக்கடி குறித்து விவாதிக்கக் கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினர்; இதில் பிரெஞ்சுப் போருக்கு ஒப்புதல் கொடுக்கப்படுவதுடன், மாலிய இராணுவத்திற்கு உதவ இராணுவப் பயிற்சிப்பணி அனுப்பவும் இசைவு தரப்படும்.

மாலியில் பிரெஞ்சுப் போர் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடவோ, ஜனநாயகத்தை நிறுவுவதற்கோ நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சனோகோ இராணுவ ஆட்சிக்குழு ஆதிக்கத்தில் இருக்கும் பமாகோ ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்தும் ஒரு பிற்போக்குத்தனப் போரைத்தான் ஹாலண்ட் நடத்துகிறார்; இது இராணுவக்குழுவின் அதிகாரத்தை வடக்கு மாலியில் இஸ்லாமியவாத சக்திகளுக்கு எதிராகச் செயல்படுத்தும் விழைவுடன், வடக்கே உள்ள மாலியப் பிரிவினைவாதக் குழுக்களையும் அடக்க விரும்புகிறது. பிரான்சின் இறுதி இலக்கு, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கணிசமான பெருநிறுவன, இராணுவ நலன்களை மாலியிலும் அதன் முன்னாள் மேற்கு ஆபிரிக்க காலனிகளிலும் பாதுகாப்பதாகும்.

இவ்வாறு செய்கையில் பாரிஸ், வடக்கு மாலி மக்களின் நன்கறியப்பட்டுள்ள ஊழல் மிகுந்த பமாகோ ஆட்சிக்கு எதிரான விரோதப் போக்கையும் மீறிக் குறுக்கிடுகிறது. ஜனநாயகம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இது என அளிக்கப்படும் கொள்கை முற்றிலும் இழிவானதாகும்; ஏனெனில் பாரிஸும் பிற நேட்டோ நாடுகளும் இதே நேரத்தில் அல்குவேடா பிணைப்பு உடைய சக்திகளுடன் தங்கள் சிரியப் போரில் ஒத்துழைத்து வருகின்றன.

ஒரு பாலைவன, மலைப் பகுதியான வடக்கு மாலி நீண்ட காலமாகவே பகுதித் தன்னாட்சிப் பிராந்தியமாக, துவாரெக்குகள் மற்றும் இனவழி அரேபியர்களுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டுவந்துள்ளது; அதிலும் குறிப்பாக பிரான்ஸ், மேற்கு ஆபிரிக்காவில் 1960க்குப் பின் காலனித்துவ நிலையில் இருந்து நீங்கியபின் இவர்கள் பமாகோவில் உருவாக்கப்பட்ட மத்திய அரசாங்கத்துடன் விரோதப் போக்கைக் காட்டுகின்றனர். 1970கள், 1980களில் பலமுறை எழுச்சிகளும் எதிர்ப்புக்களும் வடக்கு மாலியில் பமாகோவிற்கு எதிராக இருந்தன, குறிப்பாக துவாரெக்குகளினால்.

ஒரு துவாரெக் எழுச்சி 1990களின் முற்பகுதியில் நடந்தபின், கடாபி ஆட்சி துவாரெக்குகளுக்கு லிபிய இராணுவத்தில் உயர்மட்டப் பதவிகளை வழங்க முன்வந்தார். 2012ல் பிரெஞ்சு ஏடு L’Express க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், Touré கூறினார்: உள்ளூர் அரபு-துவாரக் எழுச்சிகளை பொறுத்தவரை, கடாபி பேச்சுவார்த்தைகள், ஆயுதம் களைதல் இவற்றில் ஈடுபட்டு எழுச்சியாளர்ளின் நிலைப்பாட்டை அறிந்தார்.... முதலிலேயே நாங்கள் நேட்டோவிடம் லிபிய நெருக்கடியில் ஏற்படக்கூடிய துணைச் சேதம் குறித்து எச்சரித்தோம். ஆனால் நாங்கள் கூறியது கேட்கப்படவில்லை.”

மாலி அரசாங்கம் அதன் பேரழிவு கொடுத்த தனியார்மயம் மற்றும் சிக்கனக் கொள்கைகளை 1980ல் செயல்படுத்தியபின் அதற்கு லிபிய ஆட்சி நிதிய அளவில் உதவியது. இது பிரெஞ்சு மூலதனம் மாலியில் பெரும் பணயங்களைப் பெற அனுமதித்தது. L’Express இடம் Touré, கூறினார்: ஓட்டல்கள், சுற்றுலா, விவசாயம், வங்கித்துறை என்பவற்றில் லிபியா கணிசமான முதலீட்டைச் செய்தது; இதையொட்டி எங்கள் வளர்ச்சிக்கு அளிப்புக் கிடைத்தது.”

மாலிய நெருக்கடி லிபியாவில் நேட்டோப் போருக்குப் பின் வெடித்துள்ளது. துவாரக்குகள், கடாபியின் துருப்புக்களுடன் இணைந்து போரிட்டவர்கள், நேட்டோ ஆதரவுடைய எழுச்சியாளர்கள் கறுப்புத் தோல் உடைய மக்களை வேட்டையாடிய சூழ்நிலையில்  துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, மாலிக்கு 2012 முன்பகுதியில் திரும்பினர்; பலரும் அதிக ஆயுதங்களை வைத்திருந்தனர். இவர்கள் வடக்கு மாலிய எழுச்சிக் குழுக்களுக்கு மாலி இராணுவத்தைத் தோற்கடிக்க உதவினர். இஸ்லாமியவாத போராளிக்குழுக்கள் – அல்குவேடா இஸ்லாமிய மக்ரெப்பில் (AQIM) இருப்பது, MUJAO  எனப்படும் மேற்கு ஆபிரிக்காவில் ஜிகாத், ஒற்றுமைக்கான இயக்கம், அன்சார் டைன் மற்றும் நைஜீரிய போகோ ஹரம் ஆகியவை இதில் அடங்கும். இவை முக்கியமான பங்கையும் கொண்டிருந்தன, அதாவது ஷரியச் சட்டத்தை விரோதப் போக்குடைய மக்கள்மீது சுமத்துவது என்பதையும்.

ஏப்ரல் மாதம் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன் ஜனாதிபதி Touré ஐ சனோகோ பதவியில் இருந்து அகற்றினார்; இராணுவ அதிகாரிகள் Touré துவாரெக் எழுச்சியைத் திறமையுடன் சமாளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். ஆரம்பத்தில் சனோகோ ஆட்சிக்குழுவை வீழ்த்த பொருளாதார முற்றுகையை அமைத்தபின், பிரான்ஸ், எகோவாஸ் மற்றும் ஏகாதிபத்திய சக்திகள் இறுதியில் வடக்கு மாலியில் இருக்கும் எழுச்சியாளர்களுக்கு எதிராக அதை ஆதரிப்பது என்ற முடிவிற்கு வந்தன.

பமாகோ ஆட்சியின் வீழ்ச்சி, இப் பிராந்தியத்தில் உள்ள ஆட்சிகளிடம் தன் மதிப்பு குறைந்துவிடும் என்று பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அஞ்சுகிறது. மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் கணிசமான பெருநிறுவன அக்கறைகளைக் கொண்டுள்ளது; இது எரிசக்தி துறையில் இருந்து சுரங்க ஆதாரங்கள் வரை பரந்துள்ளது; அதே போல் பிரெஞ்சுத் தொழில்துறைக்கு குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பும் இதில் அடங்கும். இராணுவ சக்தி, இப்பிராந்தியத்தில் தன் போட்டி நாடுகளுக்கு எதிராக, குறிப்பாக சீனாவிற்கு எதிராக, தன் நலன்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இச்சக்திகளைத்தான் அது இப்பிராந்தியத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பை அடக்குவதற்குப் பயன்படுத்தும்.