சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Inaugural demagogy

பதவிப்பிரமாண உரையில் வார்த்தைஜாலக் கருத்துக்கள்

Barry Grey and David North
22 January 2013
use this version to print | Send feedback

திங்களன்று தன் பதவிப் பிரமாண ஆரம்ப உரை, ஜனாதிபதி பாரக் ஒபாமா வார்த்தைஜாலமாகப் பேசுவதில் புதிய மட்டத்தை அடைந்து, ஜனநாயகம், சமத்துவம் என்னும் கொள்கைகளையும் வார்த்தையாடல்களில் பெரிதுபடுத்தி காட்டினார். இவை தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் நிலைகளுடனோ அல்லது அவர் இதுவரை தொடர்ந்துள்ள கொள்கைகளுடனோ எவ்வித தொடர்பும் இல்லாததுடன், இரண்டாம் பதவிக்காலத்தில் தொடரப் போகும் கொள்கைகளிலும் இருக்கப் போவதில்லை.

சுதந்திர பிரகடனத்தை உதவிக்கழைத்து ஒபாமா உரையை ஆரம்பித்தார். அதில் அனைத்த மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருத்திற்கு அவர் பலமுறை திரும்பி, ஒரு சில குறைந்த எண்ணிக்கையான மக்கள் மிகவும் நன்றாகவும், அதிகரித்தளவில் பலர் வாழ்க்கையையே நடத்த முடியாது என்ற நிலையில் நாடு வெற்றி பெற முடியாது என்று அறிவித்தார்.

இச்சொற்களைக் கேட்டதும் கடந்த நான்கு ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் இருப்பவர் யார் என்று வினவுவதற்குத்தான் ஒருவருக்குத் தோன்றும். ஏனெனில் இக்காலத்திலேயே பெருநிறுவன இலாபங்கள் மிகவும் அதிகரித்து, வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் தங்களைச் செல்வக் கொழிப்பு உடையவர்களாக ஆக்கிக் கொண்டனர்.

ஜனநாயகத்தின் உயர் சிந்தனைகளைப் பொறுத்தவரை, இவை ஒபாமாவாலும் அவருக்கு முன்னால் இருந்த குடியரசு, ஜனநாயகக் கட்சியினர் இரு பிரிவுகளாலுமே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிராகரிக்கப்பட்டுவிட்டன. 1980 களின் ஆரம்பத்தில் பாரியளவில் செல்வம் மறுபகிர்விற்கு உட்பட்டுத்தப்பட்டமை எதிர்பார்த்தபடி, செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் இல்லாத மிகப் பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது. ஒபாமா இந்த நிகழ்வுப்போக்கை மேலும் தன்னுடைய முதல் பதவிக்காலத்தில் விரைவுபடுத்தி நிதிய உயரடுக்கின் செல்வத்தை பாதுகாத்து, விரிவுபடுத்தும் தன் பொருளாதாரத் திட்டத்தில் குவிப்புக் காட்டி, 2008ல் வெடித்த பொருளாதார நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் விலை செலுத்துமாறு செய்தார்.

தன்னுடைய உரையில் ஒபாமா அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு போன்ற அடிப்படை சமூகநலத் திட்டங்களைக் பாதுகாத்தல் என்று சித்திரித்தார். அமெரிக்கா இந்நாட்டைக் கட்டியெழுப்பிய தலைமுறைக்குப் பாதுகாப்பு கொடுத்தல், வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் தலைமுறையில் முதலீடு செய்தல் என்பதற்கிடையே விருப்பத் தேர்வைக் எடுக்கவேண்டும் என்ற நம்பிக்கையை நாம் நிராகரிக்கிறோம் என்று அவர் அறிவித்தார்.

ஆனால் அதைத்தான் அவர் தன் முதல் பதவிக்காலத்தில் செய்ய ஆரம்பித்தார். மருத்துவப் பாதுகாப்பில் இருந்து நூறு பில்லியன் கணக்கான நிதிகளை அவருடைய சுகாதாரப் பாதுகாப்பு மொத்தச் சீர்திருத்த்திற்காகக் குறைத்து, குடியரசுக் கட்சியினருக்கு ஒரு பாரிய விட்டுக்கொடுப்பை கொடுத்தார். அதில் சுகாதாரப் பாதுகாப்புக்கான தகுதி பெறும் வயது அதிகரிக்கப்பட்டது, சமூகப் பாதுகாப்பு நலன்களில் கடுமையான குறைப்புக்கள் ஆகியவை அடங்கியிருந்தன. தன்னுடைய ஆரம்ப உரையில்கூட, ஒரு திமிர்பிடித்த இரட்டைப் பேச்சு என்னும் முறையில் ஒபாமா காலம் கடந்துவிட்ட திட்டங்களை அகற்ற வேண்டிய தேவையை மறு உறுதிப்படுத்தி, சுகாதாரப் பாதுகாப்பின் செலவைக்குறைத்தல், நம் பற்றாக்குறையின் அளவைக் குறைத்தல் என்னும் கடினமான விருப்பத் தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

அவர், ஒரு தசாப்த போர்க்காலம் இப்பொழுது முடிவடைகிறது. பொருளாதார மீட்பு தொடங்கிவிட்டது என்று கூறுகையில் சில நேரங்களில் அவருடைய ஏமாற்றுத்தனம் மாயத்தோற்றங்களுக்குரிய அளவினை எடுத்து நின்றது. இரு கூற்றுக்களுமே அப்பட்டமான பொய்கள் ஆகும்.

ஒபாமா பேசுகையிலேயே அவருடைய ஆலோசகர்கள் மாலியின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பிற்கு அமெரிக்க இராணுவத்தின் ஆதரவை விரிவாக்குவதற்கான விவாதங்களில் மூழ்கி இருந்தனர். இப்போரும் லிபியாவில் அமெரிக்கத் தலைமையிலான போரின் வெளிப்பாடுதான். இவருடைய நிர்வாகம் சிரியாவில் நடக்கும் குறுங்குழுவாத உள்நாட்டுப் போரில் மத்திய பங்கைக் கொண்டுள்ளதுடன், ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு தயாரிப்பை நடத்துகிறது.

பொருளாதார மீட்பைப் பொறுத்தவரை, அதைப் பற்றி ஏதாவது பேச முடியும் என்றால், அது பிரத்தியேகமாக மக்களின் மிகச்செல்வம் உடைய அடுக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பரந்துபட்ட உழைக்கும் மக்கள் தொடர்ந்து பரந்த வேலையின்மை, குறையும் ஊதியங்கள், பெருகும் வறிய நிலை, பட்டினி, வீடற்ற நிலை ஆகியவற்றைத்தான் எதிர்கொள்கின்றனர்.

தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்தில் ஒபாமா தொடரவிருக்கும் சிக்கனம், போர்க் கொள்களைகளின் உண்மையான தன்மை அவருடைய உரையை அடுத்து அவர் CIAக்கு தான் நியமித்துள்ள இயக்குனரையும், நிதி மந்திரியையும் உத்தியோகபூர்வமாக காங்கிரஸிற்கு தெரியப்படுத்தியதில் உடனடியாக விளக்கப்பட்டது. அவர் புஷ் ஆட்சியின்போது சித்திரவதைக்கு ஆதரவு கொடுத்தவரும் ஒபாமாவின் டிரோன் படுகொலைத் திட்டத்தின் தலைவருமான ஜோன் பிரென்னனை CIA இற்கு தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார். நிதிக்கு பொறுப்பாக அவர் முன்னாள் வோல் ஸ்ட்ரிட் வங்கியாளரும் குடியரசுக் கட்சியுடனான விவாதங்களில் வரவு-செலவுத் திட்ட குறைப்புக்களுக்கு ஒபாமாவின் முக்கிய நபராக இருந்த ஜாகோப் லூவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

முதலாளித்துவ அரசியல் நடைமுறையே வார்த்தைஜால சொற்களைத்தான் வேண்டி நிற்கின்றது. முதலாளித்துவ சமூகத்தின் அவநம்பிக்கையான நிலை மறைக்கப்பட வேண்டும் அல்லது ஓரளவிற்கு நறுமணம் வீசும் சொற்றொடர்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். ஆனால் உண்மை என்பது முற்றிலும் அடக்கப்பட முடியாது. இது ஜனாதிபதி தன் ஆரம்ப உரையைக் கட்டமைக்கப் பயன்படுத்திய வனப்புரைப் விடயங்களில் மறைமுகமாக என்றாலும் பிரதிபலிக்கின்றது.

இந்த உரை மிக நீண்டவிவாதங்களின் விளைவு என்று ஒருவர் கருதமுடியும். ஒவ்வொரு சொல்லும் அதன் அரசியல் விளைவிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இடது ஒலி கொடுக்கும் வனப்புரைகளை பிரயோகிப்பது என்பது பொருளாதார, சமூக நிலைகள் குறித்து நாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் மக்களின் வெறுப்பு கொதிநிலையை அடைந்து கொண்டிருக்கிறது என்ற உணர்வை உறுதியாகக் கொடுக்கிறது.

அதே நேரத்தில் 9/11, பயங்கரவாதத்தின் மீதான போர் பற்றிய குறிப்பு ஏதும் இல்லாதது, ஒபாமாவின் மிக விருப்பமான கைதட்டுவாங்கும் வரியான ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது குறித்துக்கூட ஏதும் கூறப்படாதது உலக இராணுவச் செயற்பாடுகளுக்கு பரந்த ஆதரவு இல்லை என்ற உணர்வு வந்துள்ளதைக் காட்டுகிறது.

இந்த உரையில் லிங்கனின் ஒலிக் குறிப்பைக்காட்டும் முயற்சி இருந்தது வெளிப்படை. இது லிங்கனின் பைபிளை ஒபாமா பதவிப் பிரமாணத்திற்கு எடுத்துக் கொண்டது மற்றும் 16வது ஜனாதிபதியின் பல உரைகள் கெட்டிஸ்பேர்க் உரை, கூப்பர் ஒன்றிய உரை மற்றும் லிங்கனின் இரண்டாம் பதவியுரை ஆகியவை பற்றிய குறிப்புக்கள் இருந்தன. ஆனால் பிந்தையவரின் 1865 உரைக்கும் ஒபாமாவின் 2013 உரைக்கும் இடையிலான ஒப்பீடு இரண்டிற்கும் இடையே உள்ள எதிரெதிரான தன்மையைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

தன்னுடைய இரண்டாம் பதவிக்கால ஆரம்ப உரையை லிங்கன் அமெரிக்க மக்கள் மீது விழுந்துள்ள பெரும் சோகத்தின் சமூக, பொருளாதார மூலகாரணங்களை அடையாளம் காண பயன்படுத்திக் கொண்டார். எந்தவித இரட்டைப் பேச்சும் இல்லாமல், குழப்பம் இல்லாமல், அவர் அடிமை முறைதான் உள்நாட்டுப் போருக்குக் காரணம் என்றார். லிங்கனின் உரை வர்க்க அடக்குமுறையை அடையாளம் கண்டு, கண்டித்தது. அதுதான் அனைத்து இடர்ளுக்கும் பொறுப்பு என்றது. இலக்கிய உலகில் தலைசிறந்த படைப்பான லிங்கனின் மகத்தான உரை அரசியல் நேர்மை மற்றும் ஜனநாயக உயர் சிந்தனை ஆகியவற்றின் விட்டுக்கொடுக்காத பிணைப்பாக மிளிர்ந்தது.

லிங்கன் ஒரு எழுச்சி பெறும் ஜனநாயக மற்றும் முற்போக்கான முதலாளித்துவ சமூகத்தின் தலைவராகப் பேசினார். 150 ஆண்டுகளுக்குப் பின் ஒபாமா பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள, அரசியலில் பிற்போக்குத்தன சமூக முறையின் பிரதிநிதி என்ற முறையில் பேசுகிறார். பரந்துள்ள சமூக வறிய நிலைக்கு முதலாளித்துவம் எந்த அளவிற்குப் பொறுப்பு கொண்டுள்ளது என்பதைப் பற்றி ஒரு சொல் கூறக்கூட அவருக்குத் தைரியமில்லை.

வறுமை, போர் ஆகியவற்றிற்கு முதலாளித்துவம்தான் காரணம் என்று அடையாளம் காணமுடியாத ஒபாமா, தற்காலச் சமூகத்தில் ஒடுக்குமுறையின் ஆதிக்கம் செலுத்தும் வடிவமான அதாவது தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுவதை அடையாளம் காணமுடியாது..

நிகழ்வு மற்றும் உரை இரண்டுமே ஆளும் வர்க்கத்தின் உத்தியோகப்பூர்வ சிந்தனைப் போக்காக ஒன்றிணைந்துவிட்டதும், நீண்டகாலமாக அமெரிக்காவில் இடது எனக் கருதப்படும் சலுகை பெற்றுள்ள மத்தியதர வகுப்பு பிரிவின் கொள்கைகள் அதிலும் குறிப்பாக இனம், பால், பாலியல் சார்பு கொள்கைகள் பற்றிய அரசியல் ஈடுபாடுகளின் நிகழ்போக்கு முழுமை பெற்றுள்ளதைத்தான் பிரதிபலித்தன. இவை சமூகத்தில் இருக்கும் வர்க்க வேறுபாடுகளைப் நிராகரித்து, ஒபாமாவின் சமத்துவம் பற்றிய கருத்துத்தான் அடையாள அரசியலின் வார்த்தைகளில் முற்றிலும் வடிவம் கொண்டு இருந்தது. இத்தகைய மோசடித்தன விளக்கத்தில் சுரண்டப்படும் தொழிலாள வர்க்கம் என்று ஏதும் கிடையாது.

இவ்வகையில், தற்கால முதலாளித்துவ அரசியல் விதிகளை ஒட்டி, இந்த உரை ஒரு குறிப்பைக் கூட வர்க்கம் பற்றி கொண்டிருக்கவில்லை. அதே போல் வேலையின்மை குறித்தும் எந்தவிதக் குறிப்பும் இல்லை.

அமெரிக்காவை உருவமைத்த ஒபாமாவின் சமூகப் போராட்டங்களின் தொகுப்பில் அவர் செல்மா மற்றும் ஸ்டோன்வால் குறித்துக் குறிப்பிட்டார் ஆனால் ஹேமார்க்கெட் தியாகிகள், IWW, பிளின்ட் உள்ளிருப்பு வேலைநிறுத்தம், நினைவு நாள் படுகொலை, அல்லது தொழிலாளர்களின் குருதியை கொடுத்து பெருவணிகத்திடமிருந்து சலுகைகளை பெற்றதை மற்றும் அமெரிக்க மக்களின் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை நிலைமையை மாற்றிய தொழிலாள வர்க்கத்தின் பெரிய போராட்டங்கள் எதுவும் பற்றியும் குறிப்பும் இல்லை.

ஒபாமா உரையின் பின்னணியில் இருக்கும் திவால்தன்மை, அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியின் வெளிப்பாடான வெடிப்புத் தன்மை நிறைந்த சமூக முரண்பாடுகள் எப்படியும் ஜனநாயகம், சமத்துவம் என்னும் வார்த்தைஜால சொற்களைப் பேசுவதின் மூலம் சமாளித்துக்கொள்ளலாம் என்ற கருத்தே ஆகும். சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவை நன்கு தெளிவாக அறிந்து கொள்ள நீண்ட காலம் பிடிக்காது.