சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Artifact: A musician’s struggle against a giant corporation

Artifact: ஒரு மாபெரும் நிறுவனத்திற்கெதிரான ஓர் இசைக்கலைஞரின் போராட்டம்.

By Robert Fowler
19 November 2012

use this version to print | Send feedback


Artifact
Artifact

டேவிட் ஃபிஞ்ச்சரின் (Fight Club 1999), டெரன் அரனோவ்ஸ்கியின் (Requiem for a Dream 2000) படங்களில் நடித்த ஜெரட் லெற்ரோ ஒரு திரைப்பட நடிகராக பொது மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஆயினும், Thirty Seconds to Mars இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக, சமீப வருடங்களாக தனது கவனத்தை இசையுலகின் பக்கமாக திருப்பியுள்ளார்.

பார்தோலோமிவ் கப்பின்ஸ் (Dr. Seuss புகழ்) - எனும் புனைபெயரில் லெற்ரோவே இயக்கியிருக்கும் Artifact திரைப்படம், 2008 ஆகஸ்ட்டில் இந்த இசைக்குழுவிடம் 30 மில்லியன் டாலர் கேட்டு முன்னணி இசைப்பதிவு நிறுவனமான EMI வழக்கு பதிவுசெய்ததை பற்றி சித்தரிக்கிறது. நவம்பர் 8 ல் நியூயோர்க் நகரின் ஆவணப்பட விழாவான DOC NYC இல் ஒரு பகுதியாகவும், அதற்கு முன்னர் செப்டம்பரில் ரொரொன்டோ திரைவிழாவிலும் இது திரையிடப்பட்டது.

வெளிப்படையான சட்டபூர்வமற்ற அவர்களது தற்போதுள்ள  ஒப்பந்தத்திலிருந்து தங்களுக்கு மன்னிப்பு கோருவது லெற்ரோ குழு செய்தகுற்றமாகும். ஆயினும், அவர்களின் ஒப்பந்தப்படி மூன்று ஆல்பங்களை ஒப்படைக்க Thirty Seconds to Mars தவறிவிட்டதாக EMI வாதிட்டது.

 நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இத்தருணத்தில், 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆல்பங்கள் விற்கப்பட்டுள்ளது என்ற உண்மையால் லெற்ரோவும் அவரது சக இசைக்கலைஞர்களும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் வருந்துகின்றனர். அவர்களுக்கு ஒரு பென்னி கூட உரிமைத்தொகையாக கிடைக்காத்துடன், மேலும்... இன்னும் EMI இற்கு 1.4 மில்லியன் டாலர்கள் கடன்பட்டுமுள்ளனர்.  இத்திரைப்படத்தில் காட்டுது போல், “சம்பளம் கொடுக்கப்படாத இசைக்கலைஞர்கள்என்று ஒரு விமர்சகர் குறிப்பிடுவதுபோல், வியாபாரத்தில் ஈடுபடும் இசைப்பதிவு நிறுவனங்கள் இவ்வாறுதான் வழமையாக இயங்குகின்றன.

நாங்கள் அவர்களுடன் (EMI) 9 வருடங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் வசித்து வந்த கலிஃபோர்னிய சட்டத்தின் கீழ், 7 வருடத்திற்கு மேல் கட்டுப்படமுடியாத ஒரு ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்டோம்...” என்று தங்கள் இசைக்குழுவின் வலைத் தளத்தில் லெற்ரோ அதன் இக்கட்டான நிலையை விளக்கியுள்ளார்.

 “ஆமாம், எங்களை EMI நஷ்டஈடு கேட்டிருக்கிறது, ஆனால் அது நாங்கள் ஆல்பத்தை ஒப்படைக்கத் தவறியதற்காகவோ அல்லதுவெளியேறுவதற்காகவோஅல்ல. ஏறக்குறைய 45 நாட்களுக்கு முன், பழைய, காலாவதியான சட்டப்படி இல்லாததும் செல்லாததுமான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வது என்ற சட்டபூர்வ உரிமையை செயல்படுத்தினோம் என்பதாலேயே கூட்டுத்தாபனம் எங்கள் மீது வழக்கு தொடர்ந்தது.”

பல காரணங்களுக்காக நாங்கள் முடித்துக் கொண்டோம், அவற்றை இங்கு சொல்வதற்கில்லை. (மாறாக மோசமான பேரமும் செய்ய மாட்டோம்). ஆனால் அடிப்படையில் எங்கள் பிரதிநிதிகளால் EMI நடுநிலையானதும் நியாயமானதுமான உடன்பாட்டிற்கு  ஒப்புக்கொள்ள வைக்க முடியவில்லை.

EMI உடனான Thirty Second to Mars ன் போராட்டம் நிதிய நெருக்கடி வெளிவந்ததால் ஏற்பட்டது போன்றே, அதை Artifact என்ற திரைப்படமாக்கும் பணியும் அதே நேரத்தில் ஆரம்பித்தது. மேலும் சுய முக்கியத்துவத்தின் குறிப்பிட்ட ஒரு கோணத்தில் இசைக்குழுவின் இக்கட்டான நிலைக்கும் உலக பொருளாதார நெருக்கடிக்குமிடையில் உள்ள சமாந்தரங்களை லெற்ரோ இக்கதையில் எடுத்துக்காட்டுயுள்ளார். “EMI டன் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சிக்கையில், உலகம் உடைந்துகொட்டிக்கொண்டிருந்தது என்றார். ஆயினும், இதுவரையிலும் இசைப்பதிவு நிறுவன அரக்கர்களை இசைக்கலைஞர்கள் குற்றஞ்சாட்டுவது போல, வோல் ஸ்ட்ரீட்டும் இதே பிரச்சனையின் ஒரு பகுதி என்பதற்கான தடயங்களை காட்டுகின்றனார்.

இவர் இத்திரைப்படத்தை விவரிப்பது போன்று, தானும் தனது சகோதரர் மற்றும் சக இசைக்கலைஞரான ஷானனின் குழந்தைப் பருவம் மற்றும் அவர்களது இசைக்குழுவின் தோற்றம் ஆகியவற்றை பிரதிபலித்தும், டேவிட் மற்றும் கோலியத்-மாதிரியான EMI டனான அவர்களின் சண்டையை விபரித்தும், லூசியானாவாசிகள் முற்றிலும் பண்பார்ந்த, கட்டுண்ட தனி நபர்களாக எதிர்கொள்வதாக சித்தரிக்கிறார்.

உண்மையில் முதன் முதலாக லெற்ரோவிற்கு rock ‘n’ roll மீது விருப்பம் ஏற்பட காரணமான இவரது மூத்த சகோதரும், டிரம் இசைக்கலைஞருமான ஷானன் மூலம்தான் இதுபற்றி நாம் அறிந்துகொண்டோம் என குறிப்பிடுகின்றார். அவர் பொருளாதார சவால்களை எதிர்கொண்டபோதும், அவர்களது தாயாரும், அவர்களை வளர்ப்பதிலுள்ள பிரச்சனைகளை சமாளித்து கடைசிவரையில் தனது மகன்களை ஊக்குவித்தார். லெற்ரோ தனது இளமையை  நினைவுகூருகையில்ஒரு கையில் இசைக்கருவியும் மற்ற கையில் உணவு முத்திரைகளையும் வைத்திருந்ததை நினைவுகூர்கிறார்.

லெற்ரோவின் தாயார் பற்றிய சில காட்சிகள் உண்மையாக உள்ளது.  ஆனால் சற்று உணர்ச்சிவசப்படுவது போல் ஆகிவிடுவதால், தகவல்களில் சிலவற்றை தவிர்த்திருக்க்கூடும்.

லெற்ரோவின் இசை சம்பந்தப்பட்ட தொகுப்புகள் தீவிரமாக அறிவொளியூட்டுவதாகவும் இல்லை, ஆனால் இவரது இசைக்குழுவின் இசை மீதான ஒருவரது கருத்துக்களைச் சார்ந்ததாக இருக்கலாம். இத்திரைப்படத்தில் Thirty Seconds to Mars இனை சற்று விளம்பரப்படுத்துவது, சில காட்சிகள் (சிலவேளை தவிர்க்கமுடியாதபடி, இவர்களது மூன்றாவது ஆல்பமான “This is War” பற்றிய ஒரு ஆவணப்படம் தயாரிக்க இருப்பதால்) சுவாரஸ்யம் குறைந்ததாக இருக்கின்றன.

எல்லா வகையிலும், ஷானன் லெற்ரோ ஒரு சிறந்த டிரம் இசைக்கலைஞர் என்பதில் சந்தேகமில்லை. குழுவின் மூன்றாவது நபரும், கிற்றார் இசைக்கலைஞரும் மற்றும் கீபோர்ட் இசைக்கலைஞருமான டோமோ மிலிசெவிக்கின் திறமைகளை மறுக்கவும் முடியாது.

இசைக்குழுவின் இசையின் மதிப்பையோ அல்லது அதன் உறுப்பினர்களது உட்பார்வையின் ஆழத்தைப் பற்றியோ இத்திரைப்படத்தில் எந்த காட்சியும் இல்லை. பாரபட்சமில்லாது சுரண்டுகிற மற்றும் கொள்ளையடிக்கிற இசைப்பதிவுத் தொழிலின் குணாதிசயமே இத்திரைப்படத்தில் முக்கி பிரச்சனை.

ஒரு கட்டத்தில், EMI தங்களின் வாழ்வையும் இசையையும் சட்டபூர்வமாக கட்டுப்படுத்துகிறது எனும் காரணத்தை முதன்மை பாடகர் குற்றம்சாட்டி துக்கப்படுகிறார். அவர் பியானோவில் கொஞ்சம் வாசித்ததும்அவர்களிடம் அனைத்தும் இருக்கிறது என்று பெருமூச்சுவிடுகிறார். தன் கருத்தை வலியுறுத்துவதற்காக, அவர் இதை பலதடவை சொல்கிறார்.

ஆம், உண்மையில், லெற்ரோவும் அவரது சக இசைக் கலைஞர்களும், இசைத்துறையின் வியாபாரப் பக்கம் குறித்து சிறிதளவு தெரிந்து வைத்திருக்கும் அல்லது எதுவுமே தெரியாத ஒரேமாதியான வகையைச் சேர்ந்த அப்பாவிக் கலைஞர்கள். எவ்வாறாயினும், இவர்கள் மூவரும் ஆவணப்படம் முழுவதிலும் தங்களது இக்கட்டான நிலையின் சிக்கல்களைப் புரிய வைக்க முயற்சிப்பதை நாம் பார்க்கிறோம். அவர்களின் இசைக்குழுவுக்கு கொடூரமான நிர்வாகம் மற்றும் சிறிது ஆறுதலான அறிவுரை வழங்குகின்ற சட்டத்தரணிகள் பற்றிய நீளமான காட்சிகள் இருக்கின்றன.

நிதி மற்றும் சட்ட விடயங்கள் இருந்தபோதிலும், லெற்ரோவின் ஸ்டூடியோவில் “This is War” பதிவு செய்வதை Thirty Seconds to Mars தளராது தொடர்கிறது.

இவரது படைப்பில் பணியாற்றுவதற்காக பிரிட்டனில் பிறந்த The larger than life இன் தயாரிப்பாளர் Mark “Flood” Ellis தனது திறமையைகாட்ட அழைக்கப்பட்டிருக்கின்றார். இவரது New Order, U2, The Smashing Pumpkins மற்றும் பிற முக்கிய இசைக் குழுக்களுடனான பணியூடாக Flood இன் மதிப்பு அவரை முன்கொண்டுவந்துள்ளது. பெருமளவு அடிப்படையான கலைநயமுள்ள இசையைக் கொடுக்க நினைக்கிறார், ஆனால் இவரது சிறந்த திறமை இவரது கலைநயம்சார்ந்த வர்ணனையில் இல்லை என்பதை ஒருவர் ஊகித்துக்கொள்ளலாம்.  

Thirty Seconds to Mars இனை லெற்ரோவின் ஹாலிவுட் தளத்திற்கு இட்டுச்சென்றது எது என்பது போன்ற சிலவற்றை விவாதிப்பதில் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. அது EMI-ன்கைகளில் உரிமையாகல் இருந்தது.

பெரும் தொழிலதிபரான ஹெய் ஹேண்ட்ஸ் ஆல் நடத்தப்படும் தனியார் பங்கு நிறுவனமான Terra Firma Capital Partners, 2007 ஆகஸ்ட்டில் EMI இன் 6.4 பில்லியன் டாலர்கள் (£4.7 billion) பங்கு உரிமையை வாங்கிக்கொண்டது. இசைத்துறையின் நுணுக்கங்கள் குறித்த தனது அறியாமை, நீண்ட-கால ஊழியர்களை வெளியேற்றுவது போன்றவற்றால் ஹேண்ட்ஸ் உடனடியாக தனது அலட்சியத்தை காட்டினார். தலைமை நிர்வாக அதிகாரியின் புது வடிவம் பெற்ற நிறுவனம் லெற்ரோவையும் அவரது சக இசைக்குழு உறுப்பினர்களையும் விரைவில் வெளியேற்றியது.

நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் தீய எண்ணமுள்ளவர்களாக இருந்து, அவர்கள் இந்த ஆவணப்படத் தயாரிப்பையும் மற்றும் உண்மையில் சுயாதீன ஆல்பமான “This is War” இனையும் தடுக்க முயற்சித்தனர்.

எவ்வாறாயினும், திரு.ஹேண்ட்ஸின் இரக்கமின்மை முடிவில் அவருக்கெதிராக செயல்பட்டது. இசைத் துறையில் இவரது புலமையின்மை இவரை விரைவில் பின்னுக்கு தள்ளியதுடன் 2011ல் EMI-யை Citigroup எடுத்துக் கொண்டது. 

லெற்ரோ, ”இது கலைக்கும் வியாபாரத்துக்குமான நீண்டகால போராட்டம் என்று இத்திரைப்படத்தின் ஆரம்ப வர்ணனைகளில் குறிப்பிடுகிறார். இது மிகவும் உண்மை. சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்ற கருத்தியல்ரீதியான விருப்புகள் ஆரம்பத்தில் இருந்த போதிலும், அதன் ஓட்டத்தில் Thirty Seconds to Mars உண்மையில் சமரசம் செய்துகொள்ள நேரிட்டதை நாம் பார்க்கிறோம். லெற்ரோ, இசைப்பதிவு நிறுவனத்துடன் முன்னேற்பாடான ஒரு சந்திப்புக்காக பொறுமையுடன் காத்திருப்பது போன்ற ஒரு நீளமான காட்சியில் இந்த கடுமையான யதார்த்தம் வெளிப்படுகிறது. இரவு பகல் கடக்கிறது, ஆனாலும் அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. விரக்தியை உணர முடிகிறது, மாபெரும் இசை வர்த்தக நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் ஈடுபடும்போது அதில் தொடர்புடைய கலைஞர்களின் கைகள் கட்டப்பட்டுள்ள சூழ்நிலையை போன்றை அவரதும் இருந்தது.   

சக கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், இசை ஆல்பத் தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னாள் இசைப்பதிவு நிறுவன மேலதிகாரிகள் போன்ற பலதரப்பட்ட தனிநபர்களை திரைப்பட இயக்குனர்கள் பேட்டி காண்கிறார்கள். அவர்களுள் சிலர் தங்களின் கருத்துக்களில் மற்றவர்களை விட மிகவும் உள்ளார்ந்ததாக இருக்கின்றர்.

முத்திரை (label) இல்லாமல் ஒரு இசைக்குழு 20 மில்லியன் பதிவுகளை விற்க முடியுமா?” என்று சக கலைஞர்கள் சற்று கோபமாக கேள்வி எழுப்புகின்றனர். முடியலாம், ஆனால் அப்போது முத்திரை முக்கியமாவதால், கலைஞர்க்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? இணையம் மற்றும் பிற தொழில்நுட்பங்களின் தனிப்பட்ட சக்திகள் இருந்த போதிலும், பிரபல இசைப்பதிவு முத்திரைகள் (record label) மூலமாக அவனது அல்லது அவளது தொழிலை மேம்படுத்திக் கொள்வதற்கான உதவிகள் கலைஞருக்கும் எப்பொழுதும் தேவைப்படும் என்பது இவரது கருத்து.

EMI டன் தொடர்வதா அல்லது வேண்டாமா என்று சிந்திக்கும்போது, லெற்ரோ தன் சகோதரருடன் விவாதிக்கும்போதுசுயாதீனமாக இருப்பது ஒரு வாழ்நாள் அர்ப்பணிப்பு. நாள் முழுதும் எனக்கு பணி இருக்கும்.” என்கிறார். இந்த மொத்தத்தில் அவர் நம்பிக்கை இழந்துவிடுவது தெளிவாகிறது.

டொரொண்டோ திரைவிழாவில் இப்படத்தை திரையிட்டதில், இவரது இசைக்குழு ஏன் தங்களது சொந்த பதிவு நிறுவன முத்திரையை தொடங்கவில்லை என்று லெற்ரோவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அந்த வேலையை சிறப்பாக செய்வதற்கு இங்கு மற்றவர்கள் இருக்கின்றனர் என்று அவர் பதிலளித்தார். “ஷான்னனும் நானும் படைப்புகளை உருவாக்கி அவற்றை உலகுடன் பகிந்துகொள்ள விரும்புகிறோம் என்றார்.

மேலும், “நாங்கள் இசைப் பதிவு நிறுவனங்களுக்கு எதிரானவர்களல்ல, நாம் பேராசைக்கெதிரானவர்கள். நாம் அனைவரும் நியாயமாக நடத்தப்பட விரும்புகிறோம்.” என்று ஃபிலிம் மேக்கர் இதழ் குறிப்பிட்டது போன்று டொரொண்டோவில் லெற்ரோவும் விளக்கமளித்தார். அவர் இசைப்பதிவு நிறுவன ஊழியர்களை அதிகம் புகழ்ந்தார், ஆனால்கலைஞர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அவர்களைத் திருகுகின்ற ஒரு அமைப்பை வைத்திருக்கும் சிலர் மேல் மட்டத்தில் இருக்கிறார்கள், அவர்கள் பெரும்பாலும் ஊழியர்கள். இது இசைப்பதிவு நிறுவனங்களின் போராட்டமாக மட்டும் இல்லாமல், பெருநிறுவனங்களின் போராட்டமாக இருக்கிறது.

சாதாரணமாக தற்போதைய இசை-நிறுவனத்தின்ழமையான வடிவத்தை மட்டுமல்லாமல், ஒரு டிஜிட்டல் இசையுலகம் மற்றும் இலாப-நோக்குள்ள தனியார் நிறுவனங்களின் பொருத்தமற்ற தன்மையையும் சிலவேளை பாதி-உணர்மையுடனேயாகிலும் எடுத்துக்காட்டுவதே  இத்திரைப்படத்தின் பலமாகும்.

கலைஞர்களை அவர்கள் ஏன் கடைசி வரை பிழிந்தெடுக்கிறார்கள் என்பதற்கு, ஆண்டு விற்பனையளவு பெருமளவு குறைந்து, இசைப்பதிவு நிறுவனங்கள் தீவிர நெருக்கடியில் உள்ளன என்பது ஒரு காரணம். இந்த காலகட்டத்தில் இசைதிருட்டை தடுப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாக இருக்கிறது. அந்த இசை நிகழ்ச்சியின் பெரும் ரசிகர்களிடம் எத்தனை பேரிடம் தங்கள் இசைக்குழுவின் சமீபத்திய ஆல்பம் இருக்கிறது என்று கேட்பது, இத்திரைப்படத்திற்கு ஒரு வேடிக்கையான முடிவு. நம்பிக்கையேற்படுத்துகிற ஆதவுக் கரகோஷம் எழுகின்றது. பிறகு எத்தனை பேர் பாடல்களை இலவசமாக இணையத்திலிருந்து பெற்றார்கள் என்று கேட்கிறார். அதற்கும் சமமான ஒரு பலத்த கரகோஷம்!

இசை அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும், மேலும் இசைக்கலைஞர்கள் பல்வேறுவிதமாக அதற்கு நஸ்ட ஈடுகொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு ஒரு வேறுவிதமான  பொருளாதார அமைப்பு தேவை.

மொத்தத்தில் EMI மற்றும் பதிவுத்தொழிலை எடுத்துக் கொள்வதற்கு லெற்ரோவுக்கும் Thirty Seconds to Mars க்கும் தைரியம் இருக்கிறது. மொத்தத்தில் Artifact, இசைத்துறையை ஆதிக்கம் செலுத்துகின்ற இரக்கமின்மை மற்றும் பேராசை பற்றி வெளிப்படுத்திக்காட்டுகின்ற ஒரு நேர்மையான படைப்பு.