சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP holds meeting in Jaffna despite military threats

இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் சோசக யாழ்ப்பாணத்தில் கூட்டத்தினை நடத்தியது

By our correspondent
25 January 2013

use this version to print | Send feedback

இலங்கையில், சோசலிச சமத்துவக் கட்சி அதன் முன்னோக்கு ஆவணமான, சோசலிச சமத்துவக் கட்சியின் வராலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் பற்றிய விரிவுரையை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் நடத்தவிடாது தடுக்க முயற்சித்த போதிலும் வெற்றிகரமாக நடத்தியது. கூட்டம் நடக்கவிருந்த வீரசிங்கம் மண்டபத்தினை பாதுகாப்பு அமைச்சின் உத்தரவை சுட்டிக் காட்டி நிர்வாகம் இழுத்து மூடியிருந்த நிலையிலும், மண்டபத்தின் நுழைவாயிலில் விரிவுரை நடத்தப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரங்கள், தீவுப்பகுதி மற்றும் பல்கலைக்கழக வளாகம் ஆகிய பிரதேசங்களில் பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தபோது, முன்னோக்கு ஆவணத்தின் சுமார் 100 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் விளைவாக, தொழிலாளர்கள், குடும்ப பெண்கள், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள், மீனவர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என சுமார் 50 பேர் விரிவுரையை கேட்க வந்திருந்தனர்.

விரிவுரைக்கு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, இராணுவ மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து வந்தனர். நிகழ்ச்சிக்காக ஒன்று கூடிய மக்களை அவர்கள் நெருக்கமாக அவதானித்தனர்.

கூட்டத்துக்கு தலமை வகித்த, சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழு அங்கத்தவர் பி.ரி. சம்பந்தன், அரசாங்கத்தினதும் இராணுவத்தினதும் நடவடிக்கையை, கட்சியின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என கண்டனம் செய்தார். உலகத் தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்துக்கு எதிராக புரட்சிகரப் போராட்டத்துக்குள் நுழைகிறது என அவர் விளக்கினார். இலங்கையில் வர இருக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் சம்பந்தமாகவும் மற்றும் அந்த போராட்டங்களுக்கு தலைமை வகிக்க சோசலிச சமத்துவக் கட்சி பொறுப்பேற்பது சம்பந்தமாகவும் அரசாங்கம் பீதியடைந்துள்ளதையே இந்த விரிவுரை மீதான தடை தெளிவுபடுத்துகிறது.

சம்பந்தன், நவசமசமாஜக் கட்சி போன்ற போலி இடதுசாரிகளின் வரலாற்றோடு, இந்த முன்னோக்கு ஆவனத்தில் உள்ளடங்கியுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் பெருமை மிகுந்த வரலாற்றை வேறுபடுத்திக் காட்டினார். அவர்களால் தமது சொந்த வரலாற்றினைக் கூட எழுத முடியாதுள்ளது, ஏனெனில் அவர்கள் ஓவ்வொருவரும் ஏதாவது ஒரு முதலாளித்துவ கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். இலங்கைக்குள், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஆகியவற்றினால் மட்டுமே, ஒரு புரட்சிகர தலமைத்துவத்தைக் கட்டியெழுப்புவதன் பாகமாக, 45 வருடகாலமாக இடைவிடாமல் ஒரு அனைத்துலக சோசலிச முன்னோக்கிற்காக முன்னெடுத்த போராட்டத்தினை ஒரு ஆவணத்தின் மூலம் வழங்க முடிந்திருக்கிறது, என அவர் கூறினார்.


எம். தேவராஜா, யாழ்ப்பாண கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பிரதான உரையை ஆற்றிய சோசலிச சமத்துவக் கட்சி மத்திய குழு உறுப்பினர் எம். தேவராஜா, உலகம் பூராவுமான பொருளாதார பொறிவினால் ஏற்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தியடைந்துவரும் வர்க்கப் போராட்டச் சூழ் நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக ஆவணம் வெளியிடப்பட்டுள்ளதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

1930களின் மாபெரும் பொருளாதார பின்னடைவுக்குப் பின்னர், தற்போதைய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியில், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள், கசப்பான போராட்டங்களினூடாக வெற்றிகொள்ளப்பட்ட வாழ்க்கைத் தரங்கள், சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகின்றன, என தேவராஜா தெரிவித்தார். அதே சமயம், பிரதான ஏகாதிபத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி நாடுகளை மறு-காலனித்துவம் செய்து தமது ஆதிக்கத்தை ஸ்தாபிக்க முயற்சிப்பதனால், போட்டி சக்திகளுக்கு இடையில் பதட்ட நிலைமைகள் அதிகரித்து வருகின்றன.

சீனாவை அமெரிக்கா திட்டமிட்டு சுற்றி வளைப்பதனால் இராணுவப் பதட்டங்கள் பெருமளவில் அதிகரிப்பதை தேவராஜா சுட்டிக் காட்டினார். 20ம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய மோதல்கள் இரண்டு உலக யுத்தங்களுக்கு வழியமைத்துள்ளதோடு அதே அச்சுறுத்தல் மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கினார். பூகோள பொருளதார மீட்சி பற்றிய எதிர்பார்ப்புகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதோடு, இது முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான வீழ்ச்சியே என்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வை நிரூபித்துள்ளது.

2011ல் இருந்து எகிப்து மற்றும் மத்திய கிழக்கு ஊடாக வெடித்துள்ள சமூக கொந்தளிப்புகளின் அரசியல் அனுபவங்களை பற்றி விரிவுரையாளர் கவனத்தை ஈர்த்தார். துனீசியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் புரட்சிகர போராட்டங்களுக்கு வந்திருந்தாலும், முன்னோக்கு மற்றும் தலைமைத்துவ நெருக்கடியின் காரணமாக தொழிலாள வர்க்கத்தால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனது. அனைத்துலக சோசலிசத்தின் புரட்சிகர முன்நோக்கை வரலாற்று ரீதியில் அபிவிருத்தி செய்தது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பகுதிகளும் மட்டுமே. சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று அடித்தளங்களில் இது உள்ளடங்கியுள்ளது, என அவர் தெரிவித்தார்.

2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் உச்சகட்ட தோல்வியின் படிப்பினைகளை தேவராஜா வலியுறுத்தினார். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்து, முதலாளித்துவ அரசு ஒன்றை ஸ்தாபிப்பதை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியவாதத்தின் அரசியல் வங்குரோத்தை புலிகளின் தோல்வி கோடிட்டுக் காட்டுகிறது. கிராமப்புற வறியவர்களின் தலைமையாக, தொழிலாள வர்க்கத்தை சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டும் முன்னோக்கு இன்றியமையாதது, என அவர் வலியிறுத்தினார். தமிழ் மக்கள் உட்பட தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேசிய ரீதியில் தீர்வு கிடையாது.

விரிவுரையின் முடிவில், சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்தை இராணுவம் தடை செய்ததை கண்டனம் செய்த தேவராஜா, வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த தடையானது இலங்கையின் வடக்கை இராணுவம் ஆட்சி செய்வதையும் மற்றும் அரசாங்கம் நாடு பூராவும் பொலிஸ்-அரச ஆட்சியை விரிவுபடுத்த விரும்புவதையுமே வெளிப்படுத்துகின்றது. வெகுஜனக் கட்சியை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு அவர் வருகை தந்தவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

வருகை தந்தவர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் உரையாடினர். இந்த கூட்டத்துக்கு மண்டபத்தை வழங்க மறுத்ததை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு சோசலிசப் புத்தகத்தைப் பற்றி கலந்துரையாட இங்கு உரிமை இல்லையா? நான் இதை கடுமையாக கண்டிக்கின்றேன், என ஒரு குடும்பப் பெண் தெரிவித்தார்.

இராணுவத்தின் தடையின் மத்தியிலும் கூட்டத்தை நடத்த சோசலிச சமத்துவக் கட்சி எடுத்த தீர்மானத்தை ஒரு பல்கலைக்கழக மாணவன் பாராட்டினார்: உங்களை சந்திக்க முன் எனக்கு சோசலிசத்தைப் பற்றி தெரியாது. அச்சுறுத்தலின் மத்தியிலும் இந்தக் கூட்டத்தை நடத்த நீங்கள் முடிவு செய்ததை நான் பாராட்டுகிறேன். இந்த கூட்டத்தை தடை செய்ததன் மூலம் இந்த நாட்டில் எத்தகைய ஆட்சி நடக்கின்றது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது, என அவர் மேலும் கூறினார்.

கூட்டத்தை தடுக்க இராணுவம் முயற்சித்தமை பற்றிய செய்திகள் யாழ்ப்பாணத்தில் பல பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களிலும் வெளியாகியிருந்தன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல், வலம்புரி, உதயன் ஆகிய பத்திரிகைகள் கூட்டத்தைப் பற்றிய செய்திகளையும் வெளியிட்டிருந்தன.