சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Exposure of sex-for-fees web site underscores UK student poverty

கட்டணத்திற்கு பாலியல் உறவு என்னும் வலைத் தளம் இங்கிலாந்து மாணவர்களின் வறுமையை அம்பலப்படுத்துகிறது

By Aidan Claire and Joe Mount
15 January 2013

use this version to print | Send feedback

ஒரு வலைத் தளம், அதன் வாடிக்கையாளர்களுடன் பால் உறவு கொண்டால் மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றிற்கு £15,000 கொடுக்கிறது என்பதை இண்டிபென்டென்ட் சமீபத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு நிருபர் SponsorAScholar.co.uk உடைய மார்க் லங்காஸ்டரின் மதிப்பீட்டாளர்ஒருவருடன் நடந்த பேச்சுக்களை பதிவு செய்ய ஒரு காமெராவை மறைத்து வைத்துப் பயன்படுத்தினார். மாணவர்கள் பெறும் ஊதியத் தரம் தங்கள்ஆதரவாளருடன்அவர்கள் ஈடுபடத் தயாராக இருக்கும் பாலியல் செயல்களைப் பொறுத்து உள்ளது என்று அவர் விளக்கினார். பணத்தைப் பெறும் தகுதிக்காகநடைமுறை மதிப்பீட்டிற்கும்மாணவர் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

செய்தி ஊடகத்தின் கவனம் பாதுகாப்பு அமைச்சரகத்துடன் தொடர்புள்ள தகவல், தொழில்நுட்பத்துறை ஆலோசகர் லங்காஸ்டர் மீது இருந்தது. மகளிர் துறை மந்திரி ஜோ      ஸ்வின்சன் ஒரு பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு விடுத்து, அரசாங்கம்விபச்சாரத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுவோர்களை எவரேனும் பயன்படுத்தினால் அரசாங்கம் பிரச்சினையை உரிய முறையில் சமாளிக்கும்என்று உறுதியளித்தார்.

ஆனால் அரசாங்கம்தான் சிலரை விபச்சாரத்தை நோக்கி திரும்புவதற்கு கட்டாயப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மாணவர்களுக்கு பயிற்சிக்கட்டணம் செப்டம்பர் 2012இல் ஆண்டு ஒன்றிற்கு £9,000 என முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது. கல்வித்துறைக் வெட்டுக்களுக்கும்  இதற்கும் இடையே உள்ள தொடர்பை ஸ்வீன்சன் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில்,”தகுதி உடைய மாணவர் எவரும் பயற்சிக் கட்டணம் கொடுக்க வேண்டியதில்லை, அரசாங்கநிதி பெறும் நிறுவனங்களில் பயிற்சிக் கட்டணங்களுக்கான முழுத் தொகையும் கடன்களாகக் கிடைக்கும் என்றார்.

ஐக்கிய அரசின் மாணவர்கள் பயிற்சிக் கட்டணக் கடனான £9,000வரை விண்ணப்பிக்கலாம், மற்றும் £5,500 பராமரிப்புக் கடனுக்கும் (லண்டனில் இருப்பவர்களுக்கு to £7,675) விண்ணப்பிக்கலாம். வருமான வழிவகை பரிசோதனைக்கு உட்பட்ட பராமரிப்பு மானியமும் கிடைக்கும். ஆனால் வீட்டு வருமானம் £40,000 (£20,000 ஒரு பெற்றொருக்கு என்று இரு பெற்றோர்கள் இருக்கும் வீடுகளில்) பராமரிப்பு மானியம் என்று மாணவர் £550 இனைத்தான் பெறுவார். வறிய குடும்பங்களில் இருந்து வரும் இளைஞர்கள் இன்னும் கூடுதலான தொகையை (£25,000விடக் குறைவாக ஈட்டும் குடும்பங்களில் இருந்து வருபவர்களுக்கு £3,354 வழங்கப்படும்). ஆனால் அவர்கள் பெறக்கூடிய கடன் தொகை குறைக்கப்பட்டுவிடும்.

இவை நகைப்பிற்கிடமான புள்ளி விவரங்கள். ஒரு NUS ஆய்வு, கிடைக்கக் கூடிய உதவித்தொகைக்கும் நடைமுறைச் செலவினங்களக்கும் இடையே சராசரியாக மாணவர்களுக்கு £8,556 (£8,112 லண்டனில்) இடைவெளி இருப்பதாகத் தெரிவிக்கிறது. இதன் பொருள் லண்டனில் படிக்கும் மாணவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுகையில் £50,000 கடனைக் கொண்டிருப்பார் என்பதாகும். இதைத்தவிர, மாணவர்கள் மற்றும் ஒரு £8,556 இனை வருடத்தில் வாழ்வதற்கே கண்டுபிடிக்கவேண்டும். 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு குறைந்தப்பட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு £4.98 என்றுள்ள நிலையில், மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 34 மணித்தியாலம் வருடம் முழுவதும் உழைத்தால்தான் இதைத்தவிர படிக்கும் நேரமும் உண்டுஇடைவெளியை நிரப்ப முடியும்.

இங்கிலாந்தில் வாடகை தீவிரமாக உயர்ந்துள்ளதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேவையான பணத்திற்குக் கணிசமாக பங்கைக் கொண்டுள்ளது. NUS/Unipol Accommodation Costs Survey பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான இடங்களில்கூட  வாடகை கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காகிவிட்டது எனத் தெரியப்படுத்துகிறது. சராசரி வாடகை £59.17 என 2001/2002 இருந்ததில் இருந்து 2011-12 ல் 97 விகிதமாக £117.67 என உயர்ந்துள்ளது.

தனியார் துறையில் வாடகைகள் இன்னும் அதிகமாகும். வாரத்திற்கு £140 என்பதில் இருந்து (ஆண்டிற்கு £7,280) வாரத்திற்கு £157.48 (ஆண்டிற்கு £8819) என சராசரியாக உயர்ந்துள்ளன. இந்த மதிப்பீடு சராசரி வாடகைகளில் பெருகும் உயர்வு எப்படித் தீவிரமாக உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இது நிறுவனங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட, தனியார் மண்டபங்களிலும் 2009/2010 NUS மதிப்பீடு மூன்று ஆண்டுகளுக்கு முன்  நடத்தப்பட்டதில் இருந்து 25% அதிகரித்துள்ளது.

இந்த நிலைமை ஒரு தேசிய வேலையின்மை விகிதம் 2.51 மில்லியன் இருப்பதால் (1 மில்லியன் இளைஞர்களிடையே) கூடுதல் இடர்களை ஏற்படுத்துகின்றது. அதுவும் அங்கு குறைந்தப்பட்ச ஊதிய வேலைகளே  கிடைப்பதற்கு அரிதாக இருக்கும் நிலைமையில்.

NUS மாணவர் மதிப்பீடு ஒன்று 48 சதவிகித முழு நேரப் பட்டப்படிப்பு படிப்பவர்கள் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை சந்திக்கப் போதுமான பணமின்றி கவலைப் படுவதாகக் கூறுகிறது. இன்னும் 10 சதவிகிதத்தினர் நிதியைப் பற்றிக் கவலைப்படுவதால்தங்கள் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் மதிப்பீடு கூறுகிறது. பாதிக்கும் மேலான 52% இனர் வாழ்க்கைச் செலவை சந்திக்க தங்கள் குடும்பங்களிடம் இருந்து ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அது தெரிவிக்கிறது.

இப்பொருளாதார நிலைமை SponsorAScholar போன்ற விபச்சார முகவர் அமைப்புக்கள் பாதிக்கப்படும் மாணவர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்த  அனுமதித்துள்ளது. புதிய ஆய்வுகள் லாப் நடனம், போல் நடனம், வழித்துணையாக அழைத்துச் செல்லுதல் மற்றும் விபச்சாரம் ஆகியவை உட்பட பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு இருமடங்காக ஆகிவிட்டது என்றும், இது மொத்தத்தில் 6% எனவும் தெரியப்படுத்துகின்றது.

பாலியல் தொழிலின் பொருளாதாரம் இப்பொழுது உயர்கல்விப் பொருளாதாரத்துடன் அதிகம் பிணைந்துள்ளது என்று டாக்டர் ரொன் ரோபர்ட்ஸ் கூறுகிறார்; “ஐக்கிய அரசில் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் இருந்து சராசரியாக £600,000 இல் இருந்து £3 மில்லியன் வரை நிதிகளாக பெறுகிறது.”

2010இல் ரோபரட்டின் ஆய்வு நான்கு மாணவர்களில் ஒருவருக்கு தங்கள் படிப்பிற்கு பாலியல் தொழிலூடாக நிதி சேகரிக்கும் ஒருவரைப் பற்றித் தெரியும் என்றும் இது 1990ல் 3%தான் என இருந்தது என்றும் கூறுகிறது.

ஒரு17 வயது மாணவி, ஆறாம் படிவத்தில் படிப்பவர் அரசாங்கம் 2010 இல் EMA எனப்படும் கல்விப் பராமரிப்பு உதவித்தொகையை திரும்பப் பெற்றுக் கொண்டபின், தன் படிப்பிற்கு நிதி தேடுவதற்கு வழித்துணையாக செல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கினார் என்று BBC  தெரிவிக்கிறது.

மற்றொரு பொருளாதர வறுமையைக் காட்டும் வரலாற்றுத் தன்மை படைத்த குறியீடும் உயர்ந்துள்ளது. 2007 முதல் 2011 க்கு இடையே மாணவர்கள், உயர் கல்வி கற்போரிடையே தற்கொலை விகிதம் 38% உயர்ந்துவிட்டது என்று கார்டியன் தகவல் கொடுத்துள்ளது. மாணவிகளிடையே இது 50% உயர்ந்துள்ளது. இதுபற்றி NUS செய்தித் தொடர்பாளர் ஒருவர் நிதியும் கடன் பிரச்சினைகளும்அதிகரித்து மாணவர்கள் மீதானஅழுத்தங்களை பெருக்கிவிட்டன”, இந்நிலைமை பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கும் ஆதரவினை வெட்டியதால் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தைத் தெரிவித்தார். “உங்கள் கல்விக்காக அந்த அளவு நீங்கள் பணம் கொடுக்கையில், நல்ல எண்களுடன் தேர்ச்சி பெறுவது இன்னமும் முக்கியமாகிறதுஎன்றும் இதை மாணவர்கள் உணரும் கவலை பெருகிவிட்டது என்றும் சேர்த்துக் கொண்டார்.

விபச்சார நிறுவனங்கள்உங்கள் படிப்பைப் பாதிக்காத வகையில் நிதிய உதவி தருவதுபற்றிப் பேசுகின்றன. படர்ந்துள்ள வேலையின்மையின் பின்னணியில் அவை வழங்க முன்வரும் ஒரு மணி நேரத்திற்கு £416 என்பது, பல மாணவர்கள் இவ்வகையான பொருளீட்டலுக்கு கட்டாயப்படுத்தப்படுவது புரிந்து கொள்ள முடிகிறது.

பழைமைவாத/தாராளவாத ஜனநாயக கூட்டணி 1950களுக்குப் பின்னர் கல்வி முறையில் மிகப் பெரிய குறைப்புக்களைச் செயல்படுத்திவருகிறது. இது தொழிலாள வர்க்கம் 2008 நிதிய நெருக்கடிக்கு விலை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்ட இன்னும் பரந்த சிக்கன செயற்பட்டியலின் ஒரு பகுதிதான். ஒழுக்கநெறிக்கு, கடுமையான சட்டங்களுக்கு அழைப்புகள் மற்றும் இத்தகைய வழிகளில் ஈடுபடுவோர் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், சில நேரங்களில் பாலியல் தொழிலைதம்மேம்பாடு பெறுதல்என்னும் வாதங்களில் கூறப்படுவது ஆகியவை அனைத்தும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முற்றிலும் பயனற்றவையாக உள்ளன.

பெண்களும் சோசலிசமும் என்ற (Woman and Socialism)  உயர்ந்த படைப்பை எழுதிய ஒகுஸ்ட் பேபல் தற்கால மற்றும் தொல்சீர் சமூகத்தில் விபச்சாரத்தின் பங்கு குறித்து ஓரளவிற்குக் அதில் குறிப்பிட்டுள்ளார். சில தாராளவாத வர்ணனையாளர்கள், “துரதிருஷ்டவசமான சமூக நிலைமைகள், கணக்கிலா மகளிரைச் சுமையில் ஆழ்த்துகின்றன, ஒருவேளை ஏன் பலரும் தங்கள் உடலை விற்கின்றனர் என்பதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என மிகமெதுவாக ஏற்றுக்கொள்வதை குறிப்பிடுகின்றார். ஆனால், இதுதான் நிலைமை என்றால் பல வித்தியாசமான சமூக நிலைமை உருவாக்கப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது என்பதை அவர்கள் அறியவில்லைஎன்று கூறியுள்ளார். (அழுத்தம் மூலநூலில் உள்ளபடி)

சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்குமான அமைப்பு (International Youth and Students for Social Equality) கல்வியை பாதுகாத்தல், வாழ்க்கைத் தரங்களை பாதுகாத்தல் என்பது தொழிலாள வர்க்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சோசலிசத்திற்கு ஆதரவாகவும் போராட அணிதிரட்டப்படவில்லை என்றால் இயலாது என்று வலியுறுத்துகிறது.