சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Imperialism plans “decades of war” in Africa

ஆபிரிக்காவில் பல தசாப்தங்களுக்கான போருக்கு” ஏகாதிபத்தியம் திட்டமிடுகிறது

Bill Van Auken
23 January 2013
use this version to print | Send feedback

மாலியில் பிரெஞ்சுக் குறுக்கீடு, அதைத் தொடர்ந்து அல்ஜீரியாவில் இரத்தக்களரி முற்றுகை ஆகியவை ஆபிரிக்காவில் புதிய ஏகாதிபத்திய போட்டிகளில் ஒரு திருப்பு முனையைக் குறிக்கின்றன. லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க-நேட்டோ போர் மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் நடக்கும் குறுங்குழுவாத போரைத் தொடர்ந்து வந்துள்ள இந்நிகழ்வுகளில் மனிதகுலம் பெரும் சக்திகள் உலகை மீண்டும் அவற்றின் நிலப்பகுதிகள், சந்தைகள் மற்றும் ஆதாரங்களுக்கான அதிர்ச்சிதரும் உந்துதலாக நடத்துவதைக் காண்கிறது.

உலகினல் பெரும் பகுதியை மறு-காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் இம்முயற்சி முதலில் ஆபிரிக்கா காலனித்துவமாக மாற்றப்பட்டபோது இருந்த குருதி கொட்டிய அடக்குறைத் தன்மையையும்விட இன்னும் அதிகமாக இருக்கும் என நம்புவதற்குக் காரணங்கள் உள்ளன.

லிபியப் போரைப் பொறுத்தவரை, போர் விமானங்களை கட்டவிழ்த்தல் மற்றும் போர் நாய்களான French Foreign Legion ஆகியவற்றை மாலியில் ஈடுபடுத்தியுள்ள வகையில் பிரான்ஸ் முன்னணியில் உள்ளது. ஆனால் பிற பிரதான ஏகாதிபத்திய சக்திகள் தாங்கள் வெறுமனே அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளன.

பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் காமெரோன் ஐக்கிய அரசு “வட ஆபிரிக்காவில் அரசாங்க கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களை மூடிவிட மற்ற சக்திகளுடன் ஒத்துழைக்கப் போவதாகவும், இதில் அதன் வழிவகைகள் அனைத்தும் பயன்படுத்தப்படும்” என்றும் உறுதியளித்துள்ளார். மாலி மற்றும் அண்டை நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை “ஒர் உலக அச்சுறுத்தல்” என்று கூறிய காமெரோன் “இவற்றிற்கான விடை காணப் பல மாதங்கள் என்று இல்லாமல், பல ஆண்டுகள், ஏன் தசாப்தங்கள் கூட பிடிக்கும்” எனக்கூறினார்.

ஒபாமா நிர்வாகம் ஆரம்பத்தில் மாலி நிகழ்வுகள் குறித்து ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையைத்தான் கொண்டிருந்தது; இதற்குக் காரணம் அது ஐயத்திற்கு இடமின்றி ஒரு ஏகாதிபத்திய போட்டி நாட்டிற்கு உதவுவதுடன், தன் சொந்த கொள்கை நோக்கங்களும் ஆபிரிக்காவில் குறைந்துவிடும் என்ற கவலைதான். ஆனால் அல்ஜீரியப் பிணைக் கைதிகள் நெருக்கடி வந்தபின், குறைந்தப்பட்சம் 80 உயிர்களை காவுகொண்ட நிகழ்வோடு (மூன்று அமெரிக்கர்களும் அடக்கம்) வாஷிங்டன், தான் ஆக்கிரோஷத்துடன் தலையிடப் போவதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா கடந்த வெள்ளியன்று கூறினார்: “எங்கு இருந்தாலும் அல்குவேடாவைச் சுற்றி வளைக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கிறோம். பாக்கிஸ்தானின் கூட்டாட்சி நிர்வாகப் பழங்குடிப் பகுதிகளில் அவர்களைத் தாக்க முற்படுகிறோம். யேமனிலும் சோமாலியிலும் அவர்களை தொடர்கிறோம். வட ஆபிரிக்கா மற்றும் மாலியில் அல் குவேடா ஒரு செயற்பாட்டுத் தளத்தை நிறுவாமல் உறுதியாகப் பார்க்கும் பொறுப்பையும் கொண்டிருக்கிறோம்.”

இத்தகவல் தவறுக்கு இடமின்றி உள்ளது. மாலியும் அப்பிராந்தியமும் அமெரிக்கக் கொலை வெறியாட்டத்திற்கு ஒரு புதிய முன்னிலைப் பகுதியாக மாறிவிட்டன; இச்செயல் முதலில் பிரிடேட்டர் டிரோன்கள், ஹெல்பைர் ஏவுகணை ஆகியவற்றுடன் செயல்படுத்தப்படும்.

நைஜர், நைஜீரியா, பர்கினா பாசோ, செனெகல், டோகோ மற்றும் கானா என்னும் ஆறு நாடுகளுக்கும் தான் அமெரிக்கச் சிறப்புப் படைகளை “பயிற்சியாளர்கள்” என அனுப்பப் போவதகாவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்க அரசுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States -ECOWAS) என்னும் அமைப்பு, ஒரு ஆபிரிக்க தொகுப்பு படையாக அனுப்ப இருக்கும் துருப்புக்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு பினாமியாக செயல்படும். அவர்களை மாலிக்கு அனுப்புவதற்கான விமானங்களையும் அமெரிக்கா வளங்கும்.

இதுதான் ஒபாமாவின் பதவிப் பிரமாண வனப்புரையான “ஒரு தசாப்தப் போர் இப்பொழுது முடிவடைகிறது” என்பதின் இலட்சணம் ஆகும்.” அவர் காமெரோன் எச்சரிக்கை விடுத்த மறுநாள் திங்களன்று இவ்வாறு அறிவித்தார்.

ஒவ்வொரு போரும் அடுத்தப் போரைத் தோற்றுவிக்கும் ஒரு காலக்கட்டத்தில் நாம் நுழைந்துள்ளோம்: லிபியா, சிரியா, இப்பொழுது மாலி என இரண்டு ஆண்டு இடைவெளிகளில்.

இவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு, செய்தி ஊடகத்தில் அபூர்வமாகத்தான் ஒப்புக் கொள்ளப்படுகிறது. புதிய நெருக்கடியைப் பற்றிய பரபரப்பான தகவல்களை, மாலிப் போரில் இருந்து அல்ஜீரியாவின் எரிவாயு வளாக பணயக்கைதிகள் பற்றிய நாடகம் வரை கொடுக்கிறது; ஏதோ பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போரில் நன்மை தீமை இவற்றிற்கு இடையே நடக்கும் போரின் ஒரு பகுதி எனக் காட்டினால்தான் இது விளக்கப்பட முடியும் என்பது போல்.

“உள்நோக்கமுள்ள விளைவு” என்னும் சொல் செய்தி இணைய தளத்தில் கண்ணியமானவர்களால் கூறப்படுவதில்லை. ஆனால் இதுதான் துல்லியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லிபியாவில் ஆட்சிமாற்றத்திற்கான அமெரிக்க-நேட்டோ போர், முழுப் பிராந்தியத்திலும் உறுதிநிலையைக் குலைத்தது. கடாபி ஆட்சியில் பணிபுரிந்திருந்த பாதுகாப்புப் படையினரான துவாரெக்குகள் பலரையும் லிபியாவில் நேட்டோ ஆதரவு பெற்ற “புரட்சியாளர்கள்” கறுப்புத் தோலை உடைய மக்களை வேட்டையாடிக் கொன்ற நிலையில் மாலிக்குத் திரும்ப வைத்தது.

சகாரா பாலைவன பிராந்தியத்தின் விளிம்பில் உள்ள சாஹெல்லில் நாடோடிகளாக விளங்கும் துவாரெக்குகள் வடக்கு மாலி தவிர, நைஜர், அல்ஜீரியா, மொரோக்கோ, லிபியா மற்றும் பர்க்கினா பாசோவில் காணப்படுகின்றனர்.

மாலியின் மத்திய அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பொருட்படுத்தாத்தன்மை ஆகியவை 1960ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் நான்கு பெரிய கலகங்களுக்கு வழிவகுத்துள்ளன. இதேபோன்ற எழுச்சிகள் அண்டை நாடான நைஜரிலும் நடைபெற்றுள்ளது. லிபியாவில் இருந்து துவாரெக்குகள் ஏராளமான லிபிய ஆயுதங்களுடன் மீண்டும் வந்தது, சமீபத்திய எழுச்சியைத் தூண்டியுள்ளது; இப்படையோ, துவாரெக் துருப்பினர் மற்றும் மாலி இராணுவத்தில் இருந்து ஏராளமான அதிகாரிகள் நீங்கி இதில் சேர்ந்ததால் அதிக எண்ணிக்கையைப் பெற்றுவிட்டது.

ஆனால், மதசார்பற்ற துவாரெக் தேசியவாதிகளுக்குப் பதிலாக விரைவில் இன்னும் நல்ல ஆயுதங்களையும் நிதிகளையும் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் செயல்படத் தொடங்கின. லிபியாவில் அமெரிக்க-நேட்டோப் போரினால் மகத்தான வலிமையைப் பெற்ற இவர்கள் (அங்கு கடாபிக்கு எதிரான தரைப் படைகளில் வாஷிங்டனின் பினாமியாக செயல்பட்டு நிதி, ஆயுதங்களைப் பெற்றவர்கள்) இப்பொழுதும் அதேபோல் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக நடக்கும் போரில் அதிர்ச்சிதரும் துருப்புக்கள் எனப் பெயரிடப்பட்டு ஆயுதமும் நிதியும் பெறுகின்றனர். அல்குவேடாவுடன் தொடர்புடைய சக்திகளுடன் நடைமுறைக் கூட்டைச் செயல்படுத்துவதை புரிந்து கொள்ளாமல் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் அமெரிக்கக் கொள்கைகளை புரிந்து கொள்ளுவது முற்றிலும் இயலாதது ஆகும்.

ஆப்கானிஸ்தானில் இதன் முன்னோடிபோல், இஸ்லாமிய மக்ரப்பில் அல் குவேடா (AQIM) என்பது, பயங்கரவாதத்தின் மீதான போரில்” அச்சுறுத்தும் அரக்கனாக வெளிப்பட்டுள்ளது; இது மேலை ஏகாதிபத்தியத்தின் ஒரு பிராங்கென்ஸ்டின் ராட்சசன் ஆகும். 1980களில் காபூலில் இருந்த சோவியத் ஆதரவு பெற்ற ஆட்சியுடன் போரிடுவதற்கு அமெரிக்க ஆதரவுடன் ஆப்கானிஸ்தானிற்கு பயணித்த படைகளில் இருந்து இது வெளிப்பட்டது. அதன் பின் தாயகத்திற்கு 1990களில் அல்ஜீரிய உள்நாட்டுப் போர் என்னும் இரத்தக் களரியை நடந்த வந்தது. அப்பொழுது அமெரிக்க, பிரெஞ்சு ஏகாதிபத்தியம் Islamic Salvation Front தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவதை தடுக்க அல்ஜீரிய இராணுவத்திற்கு ஆதரவு கொடுத்தன. இதைத் தொடர்ந்த அடக்குமுறையில் 100,000 அல்ஜீரியர்களுக்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் அமெரிக்க ஆதரவுடைய “எழுச்சியாளர்களைப் போல்”, AQIM அமெரிக்காவின் முக்கிய நட்பு அமைப்பான வளைகுடா கட்டார் ஷேக் முடியாட்சியிடம் இருந்து நிதி பெறகிறது என அல்ஜீரிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய மோதலுக்கு முன்பு AQIM மற்றும் அதே போன்ற குழுக்கள் மாலியின் அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஆதரவுடைய மத்திய அரசாங்கத்தின் உட்குறிப்பான ஒப்புதலைக் கொண்டுள்ளன என்பது நன்கு அறியப்பட்டதுதான்; அவை இப்பொழுது இஸ்லாமிய வாதிகளை துவாரெக்குகளுக்கு பயனுடைய எதிர்க்கனமாக காண்கின்றன.

இப்பொழுது இதே படை ஒரு “உலக அச்சுறுத்தலாகிவிட்டது” எக்கணமும் “தாயகத்தைத்” தாக்கலாம் என்பதை நம்புமாறு கோரப்படுகிறோம்.

ஆபிரிக்காவில் விரிவடைந்துள்ள போர் பயங்கரவாதம் பற்றியதோ அல்லது அல்குவேடா பற்றியதோ அல்ல. மாலியில் உண்மையான உந்துதல்கள் குறித்து டைம் ஏடு துல்லியமாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது: “எல்லா இடங்களிலும் ஆபத்துக்கள் பெருகுகின்றன; மிகப் பெரும் எண்ணெய் இருப்புக்கள் மேற்கத்தைய நிறுவனங்களை பரந்த சாஹெல் முழுவதும் உற்பத்தி நிலையங்களை நிறுவ ஈர்க்கின்றன. அல்ஜீரியாவிற்குத் தெற்கிலும், மாலிக்கும் அருகே நைஜர் உள்ளது; இது மிக வறிய பாலைவன நாடு; ஆனால் உலகிலேயே நான்காம் பெரிய யுரேனிய உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இது பிரான்சிற்கு முக்கிய இணையமான அணுசக்தி நிலையங்களுக்கு யுரேனியம் கொடுக்கிறது. அல்ஜீரியாவிற்குக் கிழக்கே லிபியா உள்ளது; அங்கு ஏராளமான மேற்கத்தைய நிறுவனங்கள் ஆபிரிக்காவின் சில மிகப் பெரிய எண்ணெய் இருப்புக்களை சுரண்டுகின்றன”.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் ஐரோப்பிய சக்திகள், முன்பு ஆபிரிக்காவை காலனித்துவமாக்கியவை, இந்த மூலவளங்களைக் கைப்பற்ற உறுதி பூண்டுள்ளன. ஆபிரிக்காவின் மிகப் பெரிய ஒற்றை வணிகப் பங்காளி என்னும் முறையில் சீனா வந்திருக்கும் நிலையில், வெளிநாட்டு நேரடி முதலீட்டு வளர்ச்சியில் பெய்ஜிங்கின் நிலைக்கு மிகவும் பின்தங்கிய தன்மையில் இருக்கும் வாஷிங்டனும் பொருளாதாரச் சரிவை ஈடு செய்யும் வகையில் இராணுவத் தலையீட்டிற்குத் திரும்பியுள்ளன.

ஏகாதிபத்திய சக்திகளிடையே நடக்கும் போட்டி, ஒரு நூற்றாண்டிற்கு முன் ஆபிரிக்காவில் செல்வாக்குப் பெற போட்டியை ஏற்படுத்தியதுபோல், தற்போதைய மோதல்கள் கண்டத்தின் மீது மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை ஏற்படுத்தியுள்ளன – ஒரு புதிய உலகப் போர் வெடிக்கும் அளவிற்கு இந்நிலை மாறியுள்ளது.