சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama in Africa to defend US strategic and profit interests

அமெரிக்க மூலோபாய மற்றும் இலாப நலன்களைப் பாதுகாக்க ஒபாமா ஆபிரிக்கா சென்றுள்ளார்

By Bill Van Auken
28 June 2013

use this version to print | Send feedback

வியாழனன்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மூன்று நாடுகளுக்கான ஒரு வார கால ஆபிரிக்க பயணத்தின் ஆரம்பத்தில் செனெகல் நாட்டின் ஜனாதிபதி மக்கி சால் மற்றும் அந்த நாட்டின் தலைமை நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்களை சந்தித்தார், இப்பயணமானது அமெரிக்க மூலோபாய மற்றும் இலாப நலன்களை இக் கண்டத்தில் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கண்டத்தின் சந்தைகள், கணிசமான எரிசக்தி, தாதுப்பொருட்கள் இன்னும் பிற ஆதார வளங்களுக்கான ஒரு புதிய போராட்டம் எந்த அளவுகளில் சீனாவிற்கு எதிராக ஒரு முக்கிய இலக்காக இருக்கிறது என்பதாகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் ஓர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு திரும்புகையில் 20 மணி நேரம் கானாவில் கழித்ததற்குப் பின், முதல் தடவையாக ஒபாமா ஆபிரிக்காவிற்கு வந்துள்ள  பயணமாக இது இருக்கிறது. அப்பொழுது புதிய ஜனாதிபதியாக இருந்த அவர் “என் உள்ளே ஆபிரிக்க இரத்தம் ஓடுகிறது” என அறிவித்தார்.

இத்தகைய வனப்புரை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒபாமா ஜனாதிபதியாக இருப்பது குறித்த மைய முக்கியத்துவத்தை வெளிப்படையாக்குகிறது: அதாவது உலகிற்கு ஒரு புதிய முகத்தை அளித்தல், அதே நேரத்தில் இவருக்கு முன்பு இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கீழ் சர்வதேச சீற்றத்தையும் வெறுப்பையும் தூண்டிய கொள்ளை முறை மற்றும் குற்றவியல் கொள்கைகளை அப்படியே தொடர்தல் என்பதாகும்.

நான்கு ஆண்டுகளுக்கு பின் முதல் ஆபிரிக்க-அமெரிக்க ஜனாதிபதி என்னும் புதுமை கணிசமாக மறைந்துவிட்டது, ஆபிரிக்க செய்தி ஊடகத் தகவல்களின்படி, கண்டத்தில் சிறப்பு பிணைப்பை காண, ஒபாமாவின் முயற்சிகளான அவருடைய குடும்ப வரலாற்றை கூறுவது குறித்து வெறுப்பு மனப்பான்மை இருக்கிறது. உண்மையில் ஒபாமாவின் கீழ் ஆபிரிக்காவிற்கான அமெரிக்க உதவி சரிந்துவிட்டது; புஷ் ஜனாதிபதிக் காலத்தில் கடைசி ஆண்டில் இருந்த 8.24 பில்லியன் டாலர்களிலிருந்து இன்று 7 பில்லியன் டாலர்கள் என்றுதான் உள்ளது.

இவருடைய ஜனாதிபதிக் காலம் இன்னும் ஆழமான முறையில் புஷ்ஷுடையதைவிடச் சர்வதேச குற்றம் என்னும் சகதியில் அமிழ்ந்துள்ளதுடிரோன் படுகொலைகளில் இருந்து பாரிய NSA உளவு பார்த்தல் என அமெரிக்க மற்றும் உலக மக்கள் மீது நடத்தப்படும் செயற்பாடுகள்வரை, மேலும் இக்குற்றத்தை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு எதிராக வேட்டையாடலை நடத்துவது வரை. இப்பிரச்சினைகள் ஒபாமாவுடன் ஆபிரிக்காவிற்கும் தொடர்ந்து வந்துள்ளன, அவருடைய பயணத்தின் முக்கிய இலக்கு ஜனநாயகத்தைவளர்க்க, என்பது அபத்தமானதும், பாசாங்குத்தனமானதுமாகும்.

ஒபாமாவின் ஆபிரிக்க பயணம் பற்றிய வெள்ளை மாளிகையின் செய்தி ஊடகத்திற்கான அறிக்கை: “ஜனாதிபதி ஆபிரிக்க துணை சகாரா நாடுகளுடன் பொருளாதார வளர்ச்சி விரிவு, முதலீடு, வணிக விரிவு, ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தப்படுதல்; மற்றும் அடுத்த தலைமுறை ஆபிரிக்கத் தலைவர்கள் மீது முதலீடு செய்தல் உட்பட ஆழமாக பெருகும் உறவுகளின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவார்.”

ஒபாமாவுடன் சென்றுள்ள அமெரிக்க வணிகப் பிரதிநிதி மைக்கேல் ப்ரோமன், பயணத்திற்கு முன் கூறினார்: “ஆபிரிக்காவிற்கு முதலீட்டாளர்கள், குறிப்பாக அமெரிக்க முதலீட்டாளர்கள் வேண்டும்.” அவரும் இன்னும் பிற அமெரிக்க அதிகாரிகளும் பயணத்தின் வலியுறுத்தலாக இருப்பது உதவியைக் காட்டிலும் அமெரிக்க பெருநிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை ஊக்குவிப்பதாகும், வாஷிங்டன் எப்பொழுதும் முன்னாள் காலனித்துவ நாடுகளை அதனுடைய நலன்களுக்கு தாழ்த்தும் கருவியாக பயன்படுத்தியது என்பதுதான். பயணத்தின்போது பல வணிக நிர்வாகிகள் ஒபாமாவுடன் சென்றுள்ளனர், அமெரிக்கா உருப்படியாக எதை அளிக்கப் போகிறது என்பது தெளிவாக இல்லை.

ஒபாமாவின் பயணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு சீனாவின் புதிய ஜனாதிபதி ஜி ஜின்பிங் செனெகலுக்கும் அதன் பின் அமெரிக்க ஜனாதிபதி செல்ல இருக்கும் இரு நாடுகளான தென்னாபிரிக்கா, தன்சானியாவிற்கு விஜயம் செய்திருந்திருந்தார். பெய்ஜிங்கில் பதவி ஏற்றபின் முதல் வெளிநாட்டுப் பயணத்தில் கொங்கோ குடியரசிற்கும் ஜி சென்றிருந்தார்.

அவருடைய பயணத்தின்போது ஜி ஆபிரிக்க நாடுகளுக்கு 20 பில்லியன் டாலர்கள் கடனுதவி அளித்து முக்கிய உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டார்; அதில் தன்சானியாவின் பகமோயோவில் 10 பில்லியன் டாலர்கள் துறைமுகத் திட்டமும் இருந்தது.

ஆபிரிக்க வணிக, முதலீடுகளில் சீனாவானது அமெரிக்காவை விஞ்சிவிட்டது. அதுதான் ஆபிரிக்காவின் மிகப் பெரிய வணிகப் பங்காளி; இருவழி வணிகமும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 200 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கிட்டத்தட்ட இருமடங்காகிவிட்டது; இது அமெரிக்கா, அக்கண்டத்தில் கொண்டுள்ள வணிகத்தைப் போல் இரு மடங்காகும்.

சீன முதலீட்டில் அதிகமாக சுரங்கத் தொழில் மற்றும் கட்டுமானத் துறைகளில் உள்ளன; இவைகள் மூலப் பொருட்களை எடுப்பதற்கும் அவைகளை சீனாவிற்கு அனுப்பிவைத்தலுக்கும் வசதியாக இருக்கிறது.

வாஷிங்டனின் “ஜனநாயக” மந்திரம் ஆபிரிக்க அரசாங்கங்களை தடையற்ற சந்தைச் சீர்திருத்தங்களை நடத்தக் கட்டாயப்படுத்தும் நோக்கத்தை உடையது. இதில் தனியார்மயமாக்கல்கள், மானியங்களை அகற்றுதல், சர்வதேச மூலதனம் கோரும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அகற்றுதல் ஆகியவைகள் அடங்குகின்றன. இது சீனச் செல்வாக்கை எதிர்க்கும் நோக்கத்தையும் கொண்டது; வாஷிங்டன் போல் இல்லாமல், சீனாவிற்கு “ஜனநாயகத்திலோ” அல்லது “மனித உரிமைகளிலோ” அக்கறை இல்லை எனக் கூறப்படும்.

இத்தகைய கருத்தியல் கூற்றுக்கள் ஆபிரிக்க செவிட்டுக் காதுகளில் விழுவது போல் தோன்றுகின்றன. ஒபாமாவின் வருகைக்கு முன், வெளியுறவுக் கொள்கை ஸ்தாபனத்துடன் நெருக்கமாகத் தொடர்புள்ள Foreign Affairs என்னும் அமெரிக்க ஏடானது செனகல் ஜனாதிபதி மக்கி சாலை கூடுதல் சீன முதலீடு ஆபிரிக்க ஜனநாயகத்தின் வருங்கால வாய்ப்பிற்கு நல்லது இல்லையாஎனக் கேட்டுள்ளது.

சால் கூறினார்: “நல்லது, சீன முதலீடு ஜனநாயகத்திற்கு எப்படி ஆபத்தைத் தரும் என நான் காணவில்லை. சீனாவுடன் ஒத்துழைப்பு என்பது மிக நேரடியாவும், விரைவாகவும், மேற்கத்தைய நாடுகளுடன் கொண்டிருக்கும் ஒத்துழைப்பை விட உள்ளது—அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், பிற இருதரப்பு நன்கொடையாளிகள் என. இவற்றை ஆள்வதில் பல அளவு கோல்கள் உள்ளன, பல வழிமுறைகள் உள்ளன... சீனா சிறப்பாகச் செய்கிறது என நான் கூறவில்லை, குறைந்தப்பட்சம் விரைவாக அது நடந்து கொள்கிறது.”  

வாஷிங்டனுடைய “ஜனநாயக” செயல்திட்டத்தை பொறுத்தவரை, ஒபாமாவின் பயணம் அவருடைய நிர்வாகத்தின் கூற்றுக்களை பொய்யாக்குகிறது. அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டனுக்கு நெருக்கமான நட்பு நாடுகளான எத்தியோப்பியா, நைஜீரியா, உகண்டா, கென்யா ஆகியவற்றைப் பயணத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது பரந்தமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சோமாலியத் தலையீட்டில் கைக்கூலிப் படைகளாகத் தன் இராணுவத்தை அளித்த முதலாவது நாடு (செனகல்) உள்நாட்டு அடக்குமுறையில் இழிந்த பெயரைக் கொண்டது. இரண்டாவதில், அமெரிக்காவானது நைஜீரிய வடகிழக்கில் போகோ ஹறம் ஆயுதமேந்திய இஸ்லாமியவாத இயக்கத்திற்கு எதிராக எதிர் எழுச்சி நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது; இங்கு பல படுகொலைகள், விசாரணைகளற்ற மரணதண்டனைகள், காணாமற் போதல்கள் நிகழ்ந்துள்ளன.

சோமாலியாவில் போருக்கு கைக்கூலித் துருப்புக்களை அளித்துள்ள உகண்டாவும் அரசியல் எதிர்ப்பை வன்முறையில் அடக்கியுள்ளது; அரசாங்கத்தை குறைகூறியதற்கு செய்தித்தாள்களை மூடிவிட்டது; ஓரினச் சேர்க்கையாளர்ளுக்கு எதிராக தீய பிரச்சாரத்தை நடத்தியுள்ளது. ஒபாமாவின் தந்தையின் தாயகமும் நெருங்கிய நட்பு நாடுமான கென்யாவின் ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் 2007-2008 தேர்தல்களை தொடர்ந்து 1,000 பேர் இறந்துள்ள வன்முறையை தூண்டியவர்களாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் மனிதகுலத்திற்கு எதிராக குற்றம் செய்தவர்கள் என்பதற்கு தேடப்படுபவர்கள் ஆவர்கள். இவர்கள்தான் அமெரிக்க “ஜனநாயகத்தின்” பங்காளிகள் ஆவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் எஞ்சியுள்ள இராணுவ சக்தியை வெளிப்படையாக சீனாவின் ஆபிரிக்க செல்வாக்கு அதிகரிப்பதற்கு எதிராக பயன்படுத்துகிறது. அமெரிக்க-நேட்டோப் போர் லிபியாவில் சீனாவின் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடைய முதலீட்டை இழந்து, தன் குடிமக்களில் ஆயிரக்கணக்கானவர்களை வெளியேறும் மாறும் கட்டாயப்படுத்தியது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சீன அரச எண்ணெய் நிறுவனங்களான Sinopec மற்றும் Petrochina இரண்டும் ஆக்கிரோஷமாக லிபிய பெட்ரோலிய ஏலச் சலுகைகளுக்கு  போட்டியிடுகின்றன.

அமெரிக்க இராணுவத்தின் AFRICOM ஆனது டிரோன் தளம் ஒன்றை நைஜரில் நிறுவியுள்ளது; இது மாலியில் பிரெஞ்சு ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. மத்திய ஆபிரிக்காவில் குடிப்படைத் தலைவர் ஜோசப் கோனியைத் தேடுவது என்று கூறி, சிறப்புப் படையை கண்டம் நெடுகிலும் அனுப்பிவைத்து, ஆபிரிக்க இராணுவத்துடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சோமாலியாவில் அது பலமுறை இறப்பை எற்படுத்திய வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

கண்டத்தில் பெருகும் அமெரிக்க இராணுவவாதம் பரந்த விரோதப் போக்கை தோற்றுவித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகள் தன்னுடைய பயணத்தின் இரண்டாவது கட்டத்தில் தென்னாபிரிக்கா செல்வது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்; அங்கு முன்னாள் ஜனாதிபதியும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவருமான நெல்சன் மண்டேலாவின் எதிர்நோக்கும் மரணம் பயணத்திற்கு முன்னிழலாகிவிடும்; அவருடன் அமெரிக்க ஜனாதிபதி புகைப்படம் எடுத்துக் கொள்வதாக இருந்தது.

ஆனால் இப்பயணம் அவருடைய நிர்வாகத்தின் கொள்கைகள் குறித்த எதிர்ப்புக்களையும் முகம்கொடுக்கும். ஜனாதிபதி ஜாகப் ஜுமாவின் ANC அரசாங்கமானது வருகையை தென்னாபிரிக்க பொருளாதாரத்திற்கு ஒரு வரம் எனப் பாராட்டியிருக்கையில், ஆளும் கட்சியின் இரு அரசியல் பங்காளிகளான COSATU தொழிற்சங்கக் கூட்டமைப்பும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும், ஒரு ஒபாமா எதிர்ப்பு அணிவகுப்பில் ஜூன் 28 அன்று பிரிடோரியாவில் கலந்து கொள்கின்றன; அன்றுதான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரிக்காவிற்கு வருகிறார்.

இரண்டு அமைப்புக்களும் போர்க் குற்றங்களுக்கு ஒபாமா கைது செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

தென்னாபிரிக்க முஸ்லிம் வக்கீல்கள் சங்கமும் பிரிடோரியா நீதிமன்றத்தில் ஒபாமாவைக் கைது செய்ய வழக்குத் தொடர்ந்துள்ளது; ஆனால் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

எமது அரசியலமைப்பைப் பாதுகாக்கும் சங்கம் என்பது அமெரிக்க ஜனாதிபதியை “மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும், யுத்தக் குற்றங்களுக்கும்” விசாரணை நடத்தவேண்டும் என்னும் உறுதிப்பிரமாணத்தைப் பதிவு செய்துள்ளது.

மகம்மது ஹுசைன் வாவ்டா சமூகத்தின் வாக்குமூலம், ஒபாமாவின் மீது ஆயிரக்கணக்கான மக்களைக் கொலை செய்ததற்கு பொறுப்பு, இதில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் – இவைகள் பாக்கிஸ்தான், சிரியா இன்னும் சில நாடுகள் “அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல்” இல்லாதவற்றில் நடந்துள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த ஆவணம், அமெரிக்க அரசாங்கத்திற்கு விரோதம் எனக் கருதப்படுபவர்கள் மீது டிரோன் படுகொலை செய்துள்ளதற்கு ஒபாமா மீது குற்றம் சாட்டியுள்ளது. “இத்தாக்குதல்கள் ஒரு நீதிமன்றம் வெளியிட்டுள்ள ஆணைகளின் விதிப்படி இசைவு பெறவில்லை” என்றார் வாவ்டா.