சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The hijacking of Evo Morales
International gangsterism in Snowden manhunt

ஏவோ மோராலேஸ் கடத்தப்படுதல்
ஸ்னோடன் வேட்டையாடலில் சர்வதேச கொள்ளைக்கூட்ட முறை

Bill Van Auken
4 July 2013

use this version to print | Send feedback

செவ்வாய் இரவு ஜனாதிபதி ஈவோ மோராலேஸுடைய  ஜெட் விமானத்தை அது எட்வார்ட் ஸ்னோவ்டெனை பொலிவியாவிற்கு தஞ்சம் கொடுத்து அழைத்துச் செல்லக்கூடும் எனக் கருதி கட்டாயமாக தரை இறங்க வைக்கப்பட்டதானது 1930களுக்குப் பின் முன்னோடியில்லாத அளவிற்கு ஏகாதிபத்திய சட்ட விரோதம் இழிந்துள்ளதன் ஒரு பகுதியாகும்.

பிரான்ஸ், போர்த்துக்கல், இத்தாலி மற்றும் ஸ்பெயின் அனைத்தும் தங்கள் வான்வழியே விமானம் செல்லக்கூடாது எனக் கூறிவிட்டன; மூன்று மணி நேரம் அது வானில் இருந்த பின் எரிபொருள் மிகவும் குறைவாகிப் போய்விட்ட நிலையில், அது அவசரமாக தரையிறங்க வேண்டியதற்காக முந்தைய நிராகரிப்பு நீக்கப்பட்டு, ஆஸ்திரியாவின் வியன்னாவில் தரையிறக்கப்பட்டது.

லா பாசில் (La Paz) நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரெஞ்சுத் தூதரகத்திற்கு வெளியே குழுமி, கற்களை விட்டெறிந்து, பிரெஞ்சுக் கொடியை எரித்து, பாசாங்குத்தன பிரான்ஸ்!என்று கூச்சலிட்டனர். தங்கள் கருத்தை நிரூபிப்பதுபோல் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் புதனன்று இவை அனைத்தும் ஒரு புரிந்து கொள்ளாத தன்மையால் ஏற்பட்டவை என்றும், மோராலேஸ் விமானத்தில் இருக்கிறார் எனத் தெரிந்தால், விமானத்திற்கு பிரச்சினை இருந்திருக்காது என்றார்.

மோராலேஸ் இன்னும் பல மூத்த பொலிவிய அதிகாரிகளின் உயிர்கள் மாஸ்கோவில் எரிவாயு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் உச்சி மாநாட்டில் இருந்து திரும்பிவரும்போது தவிர்க்க முடியாதபடி ஆபத்தில் இருத்தப்பட்டன, மாஸ்கோவில் முன்னாள் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர் விமான நிலையத்தின் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய பகுதியில் 11 நாட்களாக அகப்பட்டுக் கொண்டுள்ளார்; எந்த நாடும் அவரை இன்னும் வரவேற்கத் தயாராக இல்லை என்ற நிலையில். பின்னர் பொலிவிய ஜனாதிபதி அடிப்படையில் வியன்னாவில் அடுத்த நாள் காலை வரை பிணைக் கைதி போல் நிறுத்தி வைக்கப்பட்டார், காலையில்தான் ஐரோப்பிய நாடுகள் பறக்கும் தடையை நீக்கின.

இந்த வழிவகைகள் அனைத்தும் அரச பயங்கரவாதம், வானில் உரிமை மீறல்கள்தான். இவை ஐரோப்பிய அரசாங்கங்களால் நடத்தப்பட்டபோது, அவற்றை உண்மையாக இயக்கியது வாஷிங்டனிலுள்ள ஒபாமா நிர்வாகம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. அது இடையறா, சட்டவிரோத மனித வேட்டையாடலை ஸ்னோடனுக்காக நடத்துகிறது; NSA அமைப்புடைய இரகசிய அரசியலமைப்பு விரோத ஒற்றாடல் திட்டத்தை மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு எதிராக நடத்தப்படுவதை அவர் அம்பலப்படுத்தியதற்குப் பதிலடியாகும் இது.

மோராலேஸ் ஆஸ்திரியாவிலுள்ள ஸ்பெயினின் தூதர் விமான நிலையத்திற்கு வந்து அவரிடம் அவர்களுடைய விமானம் ஸ்பெயினின் வான் வழியே செல்ல முடியுமா, கானரித் தீவுகளில் எரிபொருள் போட்டுக் கொள்ள முடியுமா என்பது பற்றிக் காலையில்நண்பர்களுடன்மாட்ரிட் கலந்து பேசியபின் தெரிவிப்பதாகக் கூறினார். இந்தநண்பர்கள்அமெரிக்க வெளியுறவுச் செயலகம், CIAயின் வேர்ஜீனியத் தலைமையகம் மற்றும் லாங்லி ஆகியவைகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐரோப்பிய தலைவர்களின் நடவடிக்கைகள் அசாதாரணமானவை. ஸ்னோவ்டென் பகிரங்கப்படுத்தியுள்ள இரகசிய கோப்புக்கள் வாஷிங்டன் அந்த நாடுகளின் அரசாங்கங்கள், தூதரகங்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தையே ஒற்றாடல் செய்ததை அம்பலப்படுத்தியுள்ளன. பிரெஞ்சு அரசாங்கம் இத்தகைய வெளிப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றிய அமெரிக்க வணிக உடன்பாடு கையெழுத்திடப்படுவது, இன்னும் பிற ஒத்துழைப்புக்களையும் கிட்டத்தட்ட நிறுத்திவிடும் என உறுதி கொண்டுள்ளது.

ஆயினும்கூட, இந்த அரசாங்கங்கள் வாஷிங்டனின் திட்டமான பொலிவிய ஜனாதிபதியை கடத்துவதற்கு, ஆதாரமற்ற சந்தேகத்தில், அவர் ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் அளிக்கும் இறைமை உரிமையை பயன்படுத்துகிறார் என்பதால் விருப்பத்துடன் உடந்தையாக இருந்தன. இச்சந்தேகத்திற்கு வெளிப்படைக் காரணம் மோரேல்ஸ் மாஸ்கோவில் பொலிவியாஒற்றாடல் குறித்து தகவல்வெளியிடுவோரைஏற்கத் தயார் என்றும் ஸ்னோடனுடைய தஞ்ச மனுவைத் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்று கூறியதுதான்.

ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் பெறத் தகுதி உண்டு என்பது பற்றி கேள்விக்குறி இல்லை. அவர் அமெரிக்க அதிகாரிகளின் கைகளில் அகப்பட்டால், சித்திரவதைக்கு, விசாரணை இன்றிச் சிறைத்தண்டனைக்கு, அல்லது மரணத்திற்குக்கூட அஞ்சுகிறார், இவைகள் அனைத்துமே வாஷிங்டனால்பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்னும் போலிக் காரணம் காட்டப்பட்டு பலருக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ஏகாதிபத்தியம்மனித உரிமைகள்மற்றும் ஜனநாயகத்திற்கு பாடுபடுவது என்னும் போலிக் கூற்றுக்கள் ஸ்னோவ்டென் விவகாரத்தில் வெடித்துவிட்டன; இது உலகம் முழுவதும் கூட்டு இழிவு மற்றும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி அதிருப்தியாளர்களை தங்கள் சொந்த நாடுகளில் அமெரிக்கக் கொள்கையின் சொத்துக்களாக செயற்பட்டால் எப்பொழுதாவது வாஷிங்டன் ஏற்கும், ஆனால் அதன் நலன்களுக்கு சவால் எவரேனும் விட்டால், வாஷிங்டனுடைய விடையிறுப்பு வன்முறை ஆகும்.

மோரேல்ஸின் விமானம் கட்டாயப்படுத்தப்பட்டு தரையிறக்கப்பட்டது, மீண்டும் பாரக் ஒபாமாவை ஒரு பொய்யர் என அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஸ்னோவ்டெனை கைப்பற்றஜெட்டுக்களை விரட்டுவார்என்னும் அச்சுறுத்தல்களை இழிவுடன் உதறி ஒருவாரம்கூட ஆகவில்லை. ஆயினும்கூட இதைத்தான் வாஷிங்டனுடைய நேட்டோ நட்பு நாடுகள்அவருடைய சட்டவிரோத உத்தரவான மோரேல்ஸின் பயணத்தைத் தடைசெய்ய மறுத்திருந்தால் செய்திருப்பார்.

செய்தி ஊடகத்தைப் பொறுத்தவரை, அது எப்பொழுதும்போல் அரசாங்கத்தின் பொய்களை விசுவாசத்துடன் பரப்புவதாகத்தான் உள்ளது. புதனன்று CNN உடைய முக்கிய நிர்வாகிகள் மோரேல்ஸ் விமான சம்பவத்தை விவரிக்கையில் அதை விந்தையானது, என்றனர்: இதன்பொருள் ஒரு சர்வதேசக் குற்றத்தை நியாயப்படுத்தவர்களுக்கு இன்னமும் உத்தியோகபூர்வ போலிக்காரணம் கொடுக்கப்படவில்லை என்பதாகும். பொலிவிய ஜனாதிபதியின் விமானம் கடலில் விழுந்திருந்தால், அவை அவரைத்தான் அவருடைய இறப்பிற்கு குற்றம் சாட்டியிருக்கும்.

அமெரிக்க அரசாங்கம் ஸ்னோவ்டென் விவகாரத்தில் இன்னும் வெளிப்படையாக ஒரு கொள்ளைக் கூட்ட ஆட்சியை போல் வெளிவந்துள்ளது; NSAயின் முன்னாள் ஒப்பந்தக்காரர் அல்லது யாரும் தன் குற்றங்களை அம்பலப்படுத்தினால் கொலைசெய்யத் தயாராக உள்ளது. ஒபாமா பென்டகனுக்காகவும் பரந்த உளவுத்துறைக் கருவிக்கும் முன்னால் நிற்பவர்தான்; அவைகள்தான் அவருடைய நிர்வாகத்தில் மேலாதிக்கும் செலுத்துகின்றன.

உலக அரங்கில் இந்த அரசாங்கம் இன்னும் அதிகமாக இராணுவவாதம் மற்றும் ஆக்கிரோஷத்தைத்தான் நம்புகிறது; பொலிவியா போன்ற நாடுகளை 1930களின் கடைசிப் பகுதியிலும் 1940களிலும் ஹிட்லர் சிறு நாடுகளை நடத்தியது போல் நடத்துகிறது.

பழமொழியான வெளியுறவுக் கொள்கை உள்நாட்டுக் கொள்கையின் விரிவாக்கம்தான் என்பது இங்கு வெளிப்பாட்டை காண்கிறது. உள்நாட்டில், ஸ்னோவ்டென் NSA உள்நாட்டு உளவுச் செயற்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது தெளிவாக்கியிருப்பதை போல், அமெரிக்க அரசாங்கம் ஒரு பொலிஸ் அரச சர்வாதிகாரத்தின் உள்கட்டமைப்பை நிறுவிக் கொண்டிருக்கிறது.

இது ஸ்னோவ்டெனின் விவகாரத்திலும், இராணுவ சிப்பாய் பிராட்லி மானிங்கின் இராணுவ நீதிமன்ற விசாரணையிலும் (ஆப்கானிஸ்தான், ஈராக் போர்கள் மற்றும் இரகசியம் என அரச அலுவலக தந்திகளில் இருப்பதை இரகசிய எதிர்ப்பு அமைப்பான விக்கிலீக்ஸுக்கு கொடுத்ததற்கு) தெளிவாகியுள்ளன.

இராணுவ வக்கீல்கள் திங்களன்று தங்கள் வழக்கின் முடிவு வாதத்தை சுருக்கிக் கூறுகையில், பிராட்லிஎதிரிக்கு உதவியகுற்றம் செய்துள்ளார், ஏனெனில் அவர் பகிரங்கப்படுத்திய தகவல்கள் அல் கெய்டாவினால் பார்க்கப்பட்டு மறு வெளியீட்டிற்கு உட்பட்டன. இதில்படுகொலைவீடியோ காட்சி அடங்கும்; அதில் ஈராக்கிய குடிமக்கள் அமெரிக்க ஹெலிகாப்டர் விமானத்தில் இருந்து வந்த தோட்டாக் குண்டுகளால் கொல்லப்பட்டதும் உள்ளது.

இத்தர்க்கத்தின்படி, எவரும்செய்தியாளர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள் உலக சோசலிச வலைத் தளம் உட்படஅமெரிக்க போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துபவர்கள், உண்மையில் அமெரிக்க மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தின் குற்றம் எதையும் அம்பலப்படுத்துபவர்கள், தேசத்துரோகி என்றும் உளவாளி என்றும்எதிரிக்கு உதவுபவர், அல் கெய்டாவிற்குஉடந்தைஎனக் குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட வேண்டியவர் பட்டியலில் இடம் பெறலாம்.

எட்வார்ட் ஸ்னோவ்டென் உடைய தைரியமான செயற்பாடுகள் அவருக்கு உலகம் முழுவதில் இருந்தும், அமெரிக்காவிலும்கூட, பரந்த மக்கள் ஆதரவைச் சேகரித்துள்ளன. அமெரிக்காவில் ஒன்றரை நூற்றாண்டுக் காலத்திற்கு முன் ஆபிரகாம் லிங்கன் கூறிய சொற்கள்மக்களுடைய, மக்களால், மக்களுக்காகஎன்பது இன்று நடக்கும் ஆட்சி குறித்த குற்றச்சாட்டு போல் உள்ளது; இது இராணுவம்/உளவுத்துறைக் கருவி ஆகியவற்றால், வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் நிதியத் தன்னலக் குழுக்களுக்காக ஆட்சி நடத்தப்படுகிறது.

மக்களுடைய ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக கொள்ளைக்கூட்ட ஆட்சிகள் நடத்தும் குற்றம் சார்ந்த சதித் திட்டத்தை அம்பலப்படுத்துவதற்காக, அமெரிக்காவில் மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவிலுள்ள செல்வம் கொழிக்கும் ஆளும் அடுக்குகளால் ஸ்னோவ்டென் வெறுக்கப்படுகிறார்.

இறுதியாக, ஸ்னோடனை பாதுகாத்தல் முற்றிலும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு மற்றும் ஆதரவைத்தான் முக்கியமாக நம்பியுள்ளது.