சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Hands off Edward Snowden!

ஸ்னோவ்டென் மீது கைவைக்காதே!

Bill Van Auken
9 July 2013

use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகமும் அமெரிக்க இராணுவ, உளவுத்துறைக் கருவியும் எட்வார்ட் ஸ்னோவ்டெனை கைப்பற்ற உலகம் முழுவதும் ஆக்கிரோஷமான வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், சந்தேகத்திற்கு இடமின்றி வாஷிங்டனிடம் இருந்து வந்துள்ள தீவிர அழுத்தத்தை ஒட்டி, ரஷ்ய அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக அவர் பொறியில் அகப்பட்டது போல் இருக்கும் மாஸ்கோ சர்வதே விமான நிலையத்தில் இருந்து முன்னாள் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் ஒப்பந்தக்காரர் வெளியேறவேண்டும் என்னும் அப்பட்டமான சமிக்ஞைகளை அனுப்புகின்றனர்.

ஸ்னோவ்டெனுடைய உயிர் உடனடி ஆபத்தில் உள்ளது. அமெரிக்க குடிமக்கள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருக்கும் மக்கள் மற்றும் அரசாங்கங்கள்மீதும், மேற்கு ஐரோப்பாவில் இருந்து பிரேசில் வரை அமெரிக்க நடத்திவரும் மாபெரும் அரசியலமைப்பு விரோத, சட்டவிரோத ஒற்றாடல்களை ஸ்னோவ்டென் அம்ப்பலப்படுத்தியதை அடுத்து வாஷிங்டனுடைய பழிவாங்கும் தன்மை கொண்ட சர்வதேச வேட்டையாடல் நடவடிக்கை தீவிரமாகிவிட்டது.

ஒபாமா நிர்வாகத்தின் சர்வதேச மிரட்டலும் காடைத்தனமும் மட்டுமே எட்வார்ட் ஸ்னோவ்டென் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நிபந்தனையற்ற தஞ்சம் கோரும் உரிமையை நாடுவதை மேலும் நம்பகத்தன்மை உடையதாகச் செய்கிறது.

அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை அமைப்பின் கட்டாயத்தின் பேரில் செயல்படும் பல ஐரோப்பிய சக்திகள், கடந்த வாரம் பொலிவியாவின் ஜனாதிபதி ஏவோ மோராலேஸுடைய விமானத்தை பலவந்தமாக தரையிறக்கியதில் முழுமையாக தெளிவாக்கியுள்ளது. போருக்கே வழிவகுக்கக் கூடிய இந்த அசாதாரண நடவடிக்கைக்கு கூறப்பட்ட காரணம், ஸ்னோவ்டென் விமானத்தில் இருக்கிறார் எனச் சந்தேகிக்கப்பட்டதுதான்.

இத்தகைய சந்தேகங்கள் உண்மையிலேயே இருந்தனவா அல்லது வாஷிங்டன் மோராலேஸை உதாரணமாக ஆக்க விரும்பியதா என்பது தெளிவில்லை, ஆனால் ஸ்னோவ்டென் தஞ்சத்திற்கு தகுதி பெற்றவர் என்று மோராலேஸ் கூறியதற்கும், பொலிவியா அதை கொடுக்க தயாராக உள்ளது என்று கூறியதற்கும், இதையொட்டி அத்தகைய நடவடிக்கையை எடுக்க நினைக்கும் எந்த அரசாங்கத் தலைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒன்று மட்டும் உறுதி, நடு வானில் குறைந்த எரிபொருளுடன் இருந்த பொலிவிய ஜனாதிபதியின் பயணத்திட்டத்தை இடருக்கு உட்படுத்தி அவருடைய உயிரையும் பணயம் வைக்க அமெரிக்க அரசாங்கம் தயார் என்றால், தன்மீதான அம்பலப்படுத்தலை நிறுத்த ஸ்னோவ்டெனை கொலை செய்ய அது தயார் என்பது இன்னும் வெளிப்படையாகிறது.

அமெரிக்க அரசியல் நடைமுறை மோராலேஸுக்கு எதிராக காட்டப்பட்ட சீற்றத்தை தொடர்ந்து, ஸ்னோவ்டென் விவகாரத்தில் மற்ற அரசாங்கங்களையும் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தியுள்ளது.

ஸ்னோவ்டென் மீதான அடக்குமுறையில் ஒற்றைமையாக, இரு கட்சிகளின் முன்னணி உறுப்பினர்களும் இப்பிராந்தியத்தில் நீண்ட குற்றம் சார்ந்த ஏகாதிபத்திய ஆக்கிரோஷ செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில், ஞாயிறு தொலைக்காட்சி செய்திப் பேட்டிகள், இலத்தீன் அமெரிக்க திசைப் பக்கம் ஒரு பெரிய தடியை அசைக்க பயன்படுத்தப்படுகிறது.

காங்கிரஸ் உறுப்பினரும், குடியரசுக் கட்சியின் மன்ற புலனாய்வு குழுவின் தலைவருமான மைக் ரோஜேர்ஸ் அறிவித்தார்: “இது தீவிர விவகாரம் ஆகும். அமெரிக்காவுடன் சில வர்த்தக நலன்களைக் கொண்டுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகள் கவனிக்கப்பட வேண்டும்; நாம் இத்தகைய நடவடிக்கையை ஏற்க மாட்டோம் என்னும் தெளிவான தகவல் அவற்றிற்கு அனுப்பப்பட வேண்டும்.

இதேபோல், செனட் வெளியுறவுக் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் ரோபர்ட் மெனென்டெஸ், எந்த நாடாவது ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் கொடுத்தால், அது “அவற்றை அமெரிக்காவிற்கு எதிராக நேரடியாக நிறுத்தும், அவை அதை அறியவேண்டும்” என்றார்.

அமெரிக்க அரசாங்கத்தின் காடைத்தனம் ஸ்னோவ்டெனுடைய கொள்கை வழிப்பட்ட செயல்களில் இருந்து தீவிரமாக வேறுபட்டுள்ளது. கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட பேட்டியின் இரண்டாம் பகுதியை வெளியிட்ட கார்டியன் செய்தித்தாள் முன்னாள் NSA ஒப்பந்தக்காரர் தன்னுடைய செயல்களை தன் அரசியல் வளர்ச்சி என்னும் நிலைப்பாட்டில் இருந்து விளக்கினார், அமெரிக்காவின் கூற்றான “ஒடுக்கப்பட்ட வெளிநாட்டு மக்களை விடுவிக்க தான் செயல்படுகிறது” என்னும் பெருந்தன்மைச் செயலை நம்பியதில் இருந்து, “உலக முழு உணர்வின் மனத்தில் ஒரு கருத்தைத் தோற்றுவிக்க உண்மையில் நாம் மக்களை தவறாக வழிநடத்துகிறோம்...” என்பதை உணர்ந்த வரை இந்த வளர்ச்சி அடங்கியிருந்தது.

உலகெங்கிலும் இருக்கும் மில்லியன் கணக்கான மக்கள் சார்பில்தான் ஸ்னோவ்டென் பேசினார்: “நான் பேசும், செய்யும், ஒவ்வொன்றும், நான் பேசுபவர்கள் அனைவரும், என்னுடைய படைப்பாற்றல் அல்லது நேசம் அல்லது நட்பு அனைத்தும் பதிவு ஆகிறது. அவ்வாறான ஒன்றை கட்டமைக்க நான் விரும்பவல்லை, அத்தகைய உலகத்தில் வாழவும் விரும்பவில்லை.”

"அரசாங்கத்தின் எல்லை தாண்டிச்செல்லும் செயல்களை “எமது தலைமை திருத்தும் என நான் காத்திருந்தேன், ஆனால் அது ஏற்படவில்லை, உண்மையில் முந்தைய அரசாங்கங்களின் எல்லைதாண்டிச் செல்லும் செயல்கள் அதிகமாக்கப்பட்டுவிட்டன, மோசமான ஊடுருவல் ஏற்பட்டுள்ளது, உண்மையில் இதை யாரும் நிறுத்தவும் இல்லை” என்று அவர் மேலும் விளக்கினார்.

இங்கு ஒற்றை தனிநபரின் சிந்தனைகள் மட்டும் வெளிப்படவில்லை, மாறாக ஒரு தலைமுறையின் அனுபவங்கள் முழுவதும் வெளிப்பட்டுள்ளன—இத்தலைமுறை வாஷிங்டனுடைய “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் பின்னணியில் அரசியலில் வயதிற்கு வந்து, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது ஆக்கிரமிப்புப் போர்கள் தொடக்கப்பட்டதை கண்டது; அவற்றில் பாதிக்கப்பட்டவர்கள் மில்லியன் கணக்கானவர்கள் ஆகும். இதைத்தவிர வெள்ளை மாளிகையில் இருந்து சித்திரவதை, குற்றம் ஆகியவற்றிற்கும் ஊக்கம் அளிக்கப்பட்டதையும் கண்டது.

புஷ் நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் தீவிரமாயின, இவர் நம்பிக்கை மற்றும் மாற்றத்தை கொண்டுவரப்போகிறவர் எனக் கருதப்பட்டார்; ஆனால் அவர், உலகளாவிய ட்ரோன் படுகொலைத் திட்டம், பரந்த அளவு சட்டவிரோத ஒற்று விரிவாக்கம், லிபியாவிலும் சிரியாவிலும் புதிய ஆக்கிரமிப்புப் போர்கள் ஆகியவற்றை மேற்பார்வையிடுகிறார்.

இவற்றின் விளைவு மில்லியன் கணக்கான இளைஞர்கள் இரு பெருவணிகக் கட்சிகளுடனும் வெறுப்படைந்துள்ளதோடு, மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களான உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராக ஒரு நிதியத் தன்னலக்குழுவின் நலன்களை பாதுகாக்க அர்ப்பணித்த அமெரிக்க அரசியல், பொருளாதார நடைமுறைக்கும் தீவிர விரோதப் போக்கை காட்டுகின்றனர்.

ஆளும் நடைமுறைக்குள் உள்ள, ஸ்னோவ்டெனுக்கு எதிரான வேட்டையாடலில் காட்டப்படும் வெறித்தன்மையும், பழிவாங்கும் தன்மையும், ஸ்னோவ்டெனுக்கு எதிராக என்று மட்டும் இல்லாமல், இன்னும் ஏராளமான தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என்று அவருடைய கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்ளுபவர்களுக்கு எதிராகவும் உள்ள ஆழ்ந்த அச்சத்தை பிரதிபலிக்கிறது. 

மக்களின் இந்த பரந்த தட்டிற்குள்தான், ஸ்னோவ்டென் சக்தி வாய்ந்த ஆதரவைக் கொண்டுள்ளார், அங்குதான் அவருக்கு உண்மையான பாதுகாப்பும் உள்ளது. இதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வளைந்து கொடுத்து தங்கள் வசதிகளை காக்கும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ள முதலாளித்துவ தேசியவாத அரசாங்கங்களின் கைகளில் விட்டுவிட முடியாது, அவை தங்கள் ஆளும் வர்க்கங்களின் நலன்களை அதிகப்படுத்தத்தான் முயலும். அதேபோல் மாஸ்கோவில் இருக்கும் விளாடிமிர் புட்டினின் ஊழல் மலிந்த ஆட்சியும் தன்னைத்தான் காத்துக் கொள்ள முயலும்.

அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம் ஒன்றுதான் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கான உண்மையான தளம் ஆகும். இது மட்டுமே, பரந்த சமூக சமத்துவமின்மை, பொருளாதார சுரண்டல் மற்றும் அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றால் குணாம்சப்படுத்தப்படும் ஒரு அமைப்பு முறையை பாதுகாக்க, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் ஆளும் செல்வம் கொழித்த தட்டுக்கள் தழுவியுள்ள பொலிஸ்-அரச நடவடிக்கைகளுக்கு ஒரு தாக்குப்பிடிக்கக்கூடிய எதிர்ப்பை முன்னெடுக்க கூடியது.

“ஸ்னோவ்டென் மீது கை வைக்காதே” என்ற கோரிக்கையை சூழ அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள பணியிடங்கள், பள்ளிகள், நகர்ப்புறப்பகுதிகளில் வெகுஜன ஆதரவு அணிதிரட்டப்பட வேண்டும். ஸ்னோவ்டெனுடைய பாதுகாப்பு, இவரைப் போலவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக அரச துன்புறுத்தலை எதிர்கொள்ளும் இராணுவ சிப்பாய் பிராட்லி மானிங் மற்றும் ஜூலியன் அசாஞ்ச் ஆகியோருடன் இணைக்கப்பட வேண்டும். இந்த இயக்கம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு மற்றும் போர், சர்வாதிகார அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும் முதலாளித்துவ இலா நோக்கு அமைப்பு முறைக்கு எதிரா போராட்டத்தின் முன்னணியாக இருக்க வேண்டும்.