சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek workers in fourth general strike of 2013

2013இல் கிரேக்கத் தொழிலாளர்களின் நான்காவது பொது வேலைநிறுத்தம்

By Robert Stevens
17 July 2013

use this version to print | Send feedback

செவ்வாயன்று ஏதென்ஸில், கிரேக்க கூட்டணி அரசாங்கம் சமீபத்திய சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு எதிராக, ஒரு 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான கிரேக்க தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டில் நான்காவது பொது வேலைநிறுத்தமும், 2010ல் இருந்து இதே போன்ற டஜன் கணக்கான நிகழ்வுகளில் அண்மையானதுமாகும். கிட்டத்தட்ட 2.5 மில்லியன் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ADEDY, GSEE என்னும் பொது மற்றும் தனியார்துறை தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களால் அழைப்பு விடப்பட்டிருந்தது. வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக திங்கள் இரவு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறைத் தொழிலாளர்கள் பணிநீக்கம் மற்றும் பள்ளி மூடல்களுக்கு எதிராக எதிர்ப்புக்களை காட்டியிருந்தனர். கல்வித்துறைத் தொழிலாளர்களின் நடவடிக்கையானது, வேலையின்மை, ஊதிய வெட்டுக்கள் ஆழமான வறுமை இவற்றிற்கு எதிராக தொடர்ச்சியாக நடைபெறும் வேலைநிறுத்தங்கள் எதிர்ப்புக்களில் சமீபத்தியதாகும்.

இரயில்வே வலையமைப்பை தனியார்மயமாக்கும் திட்டங்களுக்கு எதிராகப் போராடும் இரயில்வே தொழிலாளர்கள், இரயில் பணிகளை நிறுத்தினர்; இதில் ப்ரோஸ்டியகோஸ் புறநகர் இரயில் சேவைகளும் அடங்கும். சுகாதாரத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தை ஆதரித்து இருந்ததால் மருத்துவமனைகள் அவசரகால அடிப்படையில்தான் இயங்கின. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நண்பகலில் இருந்து பிற்பகல் 4 மணிவரை சேவையில் ஈடுபடாததால் விமானப் பயணங்கள் தடைக்கு உட்பட்டன. குப்பைகள் சேகரிப்போர், பஸ் சாரதிகள், வங்கி ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கொடுத்தனர். ஏதென்ஸில் முக்கிய சுற்றுலா ஈர்ப்பான அக்ரோபோலிஸ் முன்னதாகவே மூடப்பட்டுவிட்டது.

தொழிலாளர்கள் பல எதிர்ப்பு அணிகளில் நாள் முழுவதும் பங்கு பெறுவதற்காக பேரூந்துகளும் டிராலி பேரூந்துகளும் இதையொட்டி இயங்கின.

ADEDY மற்றும் GSEE  உடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களுடன் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும், POE-OTA நகரசபைத் தொழிலாளர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களும் சின்டகமா சதுக்கத்திற்கு அணிவகுத்துச் செல்லுமுன் Klafthmonos சதுக்கத்தில் கூடினர். ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் (KKE) தொழிற்சங்கமான PAME ம் சின்டகமாகவில் குழுமியது.

அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களான, “முக்கூட்டை அகற்று”, “இன்னும் தியாகங்கள் கிடையாது”, “நாங்கள் மனிதர்கள்—எண்கள் அல்ல” போன்றவற்றை ஏந்தி தொழிலாளர்கள் ஆர்ப்பரித்தனர்.

58 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரும் இரு குழந்தைகளுக்கு தாயுமான போடோபொலோ “கிரேக்கம் இறந்துவிட்டது போலவும் கழுகுகள் அதன் பிணத்தின் மீது பறப்பதுபோலவும் உணர்வு உள்ளது என்றார். “நான் கோபப்படப்போவதில்லை எனக்கு வெறுப்புத்தான் ஏற்பட்டுள்ளது. நாம் திரும்பப் போராட வேண்டும்.”

வேலைநீக்கங்களை எதிர்பார்க்கும் நகரசபை பொலிஸ் உறுப்பினர்களும் ஏதென்ஸில் ஆர்ப்பாட்டம் செய்தனர். தேசிய அளவில், தெசலோனிகி மற்றும் சானியாவில் எதிர்ப்புக்களும் அணிவகுப்புக்களும் நடைபெற்றன.

வரிவசூல் அலுவலகங்களும் நகரசபை பணிகளும் வேலைநிறுத்தத்தின்போது மூடப்பட்டிருந்தன. திங்களன்று 24 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்திருந்த நகரசபைத் தொழிலாளர்கள் கடந்த வாரங்களில் எதிர்ப்புக்களில் ஈடுபட்டனர். இவற்றுள் பணியிட ஆக்கிரமிப்புக்களும் அடங்கும். அவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தை மாலை 6 மணிக்கு தொடங்கினர்; இதுவும் சின்டகமா சதுக்கத்தில் நடைபெற்றது.

புதிய ஜனநாயக-பிஏஎஸ்ஓகே (ND-PASOK) அரசாங்கம் கிரேக்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை முக்கூட்டான ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை சமீபத்தில் பரிசீலனை நடத்தியபின் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள வெட்டுக்களுக்கு வாக்களிக்கும். 5.8 பில்லியன் பவுண்டுகள், அதிக கடன்களாக முக்கூட்டில் இருந்து பெறுவதற்கு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டும்; இது பல்லாயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நகரசபைத் தொழிலாளர்களை பணியில் இருந்து அகற்றுவதைச் செயல்படுத்தும்.

ப்ளூம்பேர்க்கின் கருத்துப்படி, மூத்த யூரோப் பகுதி நிதிய அதிகாரிகள் ஜூலை 24ல் கிரேக்கம் இன்னும் கூடுதல் கடன்களுக்கு 240 பில்லியன் யூரோக்களுக்கு ($314 பில்லியன்) மொத்த கடன் உடன்படிக்கைப்படி தகுதி பெறுகிறதா என விவாதிக்க உள்ளனர் என ஒரு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி தெரிவித்தார்.

ஜூலை 19, சட்டமாக வேண்டும் என முக்கூட்டு குறித்திருக்கும் பல தொகுப்புகளை அடக்கியுள்ள சட்டம் 109 விதிகளை கொண்டுள்ளது, தனியார்மயமாக்குதல், சுகாதாரத்துறை செலவுகளிலும் வரிவிதிப்புக்களிலும் மாற்றங்கள் அடங்கியுள்ளன. இந்த ஆண்டு 4,000 அரச ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் குவிப்புக் காட்டுகிறது; இதில் ஆசிரியர்கள், ஒளிபரப்பு சேவை தொழிலாளர்கள், பொதுக் கட்டிடங்கள் பராமரிப்போர், நகரசபை பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர். இன்னும் 15,000 பேர் 2014 இறுதியில் நீக்கப்படுவர்; 25,000 பேர் ஒரு நகரும் திட்டத்தில் இருத்தப்படுவர் (4,200 பேர் ஜூலை இறுதியிலும் 12,500 பேர் இந்த ஆண்டு இடமாற்றத்திற்கும் உள்ளாக்கப்படுவார்கள்)

இத்திட்டத்தை ஒட்டி அகற்றப்படுபவர்களில் 1,000 மருத்துவமனை ஊழியர்களும் உள்ளனர்—இந்த நடவடிக்கை ஏற்கனவே சீர்குலைந்துள்ள பொதுச் சுகாதார நிலையில் இன்னும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தொழிலாளர்களை நீக்கும் இத்திட்டத்திற்கு நாசுக்காக வேறு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எட்டு மாத காலத்திற்கு 75 சதவிகித ஊதியத்தில் இருப்பார்கள். அதற்குப்பின், அவர்களுக்கு அளிக்கப்படும் எந்த வேலையையும் எடுத்துக் கொள்ள வேண்டும், அல்லது பொதுத்துறையில் வேறு பகுதியில் வேலை இல்லாவிட்டால், அவர்கள் அநேகமாக பணிநீக்கம் பெறவேண்டும்.

முக்கூட்டு/அரசாங்கத் திட்டங்களை பைனான்சியல் டைம்ஸ் வரவேற்று; இந்த வாரம் “கிரேக்கத்தின் ஆட்சித் துறை வெட்டுக்கள், கடந்த காலத்துடன் முறித்துக்கொண்டுள்ளதற்கு கட்டியம் கூறுகிறது.” என தெரிவித்துள்ளது.

பொதுத்துறை தொழிலாளர்களுக்கு “முடிவு வந்துவிட்டது” என கூறிய பைனான்சியல் டைம்ஸ், “இந்த ஆண்டு பணிநீக்கங்கள் ஆட்சித் துறைப் பட்டியலில் இருப்பவர்களில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றாலும், அவை நீண்டகாலமாக செய்யப்படக்கூடாது எனக் கருதப்பட்ட பொதுத்துறை ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என்ற தகவலை அனுப்பிவிட்டது என்று பொது நிர்வாகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மந்திரி கைரியகோஸ் மின்ஸோடகிஸ் கூறினார்; இவர் அரசியலில் நுழையுமுன் மக்கின்சேயில் ஆலோசகராக பணியாற்றினார்.”

இந்த நடவடிக்கைகளும் போதுமானவை அல்ல என்று பைனான்சியல் டைம்ஸ் புகார் கூறுகிறது. “வாழ்க்கை முழுவதும் வேலை என்பது இனியும் உத்தரவாதப்படுத்த முடியாது என்பதால், பணிநீக்கம்செய்யும் வழிவகைகள் நீண்ட காலம் இழுத்தடிக்கப்படலாம். அவர்கள் நீதிமன்றத்தில் பணிநீக்கத்திற்கு எதிராகப் போராடுகையில், தற்காலிக ஒப்பந்தங்கள் முடிந்துவிட்ட ஜானிடர்கள், துப்புறவுத் தொழிலாளர்கள், தோட்ட வேலை செய்வோர் என 6000 அரச ஊழியர்களுக்கு முழுச் சம்பளமும் கொடுக்கப்படுகின்றது. அரசாங்கம் அத்தகைய பூசல்களை இந்த ஆண்டிற்குள் தீர்ப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய வேலையின்மை புள்ளிவிவரங்கள் 1.3 மில்லியன் மக்கள் வேலையின்மையில் இருப்பதுடன் மற்றும் ஒரு 3.3 மில்லியன் “பொருளாதார அளவில் செயலற்று உள்ளனர்” எனக் கூறுகின்றன. ஏப்ரல் 2008ல், உலகப் பொருளாதார நெருக்கடிக்கு சற்று முன், கிரேக்க மக்கள் மீதான வாழ்க்கைத் தரத்தில் மிருகத்தன தாக்குதல்கள் தொடங்குமுன், 380,775 பேர் வேலையற்றோர் என பதிவு செய்திருந்தனர். ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் வேலையற்றோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வருங்காலம் பற்றிய உணர்வு குறித்து கார்டியனின் கிரேக்க நிருபர் ஹெலினா ஸ்மித் கூறுகிறார்: “கிரேக்கம் ஒரு மூழ்கும் கட்டத்தில் உள்ளது என்பதற்கான பெருகிய அடையாளங்கள் உள்ளன. வேலையின்மை 27 சதவிகிதம் என்ற நிலையில் இன்னும் 25,000 ஆட்சித் துறை அலுவலர்களை பணிநீக்கம் செய்வது என்பது—எந்தச் சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டாலும், மறைப்பதற்கு, இதுதான் விளைவு—இது மிக அதிக எண்ணிக்கை என்றுதான் உள்ளது.”

பெரும்பாலான கிரேக்க மக்களுடைய வாழ்வு மோசமாகையில், தொழிற்சங்கங்கள் இன்னும் ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன; இது அவர்கள் சீற்றத்தை வெளிப்படுத்த அனுமதிக்கும். முன்பு போல் இவைகள் ஆளும் பெருவணிகக் கட்சிகள் அவற்றின் போக்கை மாற்ற அழுத்தம் கொடுக்கப்படலாம் என்னும் போலித் தோற்றத்திற்கு விதையூன்றுபவை ஆகும். ADEDY உடைய துணைத் தலைவர், “பாராளுமன்ற உறுப்பினர்களை சட்டத்திற்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்கிறோம், ஏனெனில் அது பெரும் சோகம் ததும்பிய தவறாகிவிடும்” என்றார்.

GSEE தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் கூறினார்: “எம்.பி.க்கள் முகங்கொடுக்கும் சங்கடம், முக்கூட்டு அறிவிப்புக்களுடன் செல்வதா அல்லது மக்களுடனா என்பதாகும்.”

பயனற்ற தொடர்ச்சியான பெயரளவு வேலைநிறுத்தங்கள் மூலம், ஒரு சிக்கன நடவடிக்கையை அடுத்து மற்றொன்றிற்கு வழிவகுத்த தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு, நகரசபைகளின் மத்திய ஒன்றியத்தின் எதிர்ப்புக்காட்டும் தலைவர் கோஸ்டாஸ் ஆஸ்கௌனிஸால் சுருக்கமாக கூறப்பட்டது. “நாம் ஒன்றும் சீர்திருத்தத்தை எதிர்க்கவில்லை” என்று கூறிய அவர் வறுமையில் தள்ளப்படும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடைய விதி அல்லது இளைஞர்களில் 64 சதவிகிதம் பற்றி எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக அவர் கூறினார்: “நாம் எதிர்ப்பது நகரசபை பொலிஸ், ஊழியர்கள் அரச பள்ளிகளை காக்க மொத்தமான நிறுவனங்களை அகற்றுவதைத்தான்.”

தீவிர இடது கூட்டணியான போலி இடது கட்சியான சிரிசா, தன்னைத்தானே அரசாங்கத்திற்கு “விசுவாசமான எதிர்த்தரப்பு” என செயல்படுவது, செவ்வாய் எதிர்ப்புக்களை பயன்படுத்தி கழைக்கூத்தாடித்தனத்தை செய்துள்ளது. கட்சியின் எம்.பிக்கள் பாராளுமன்றக் கட்டிடத்தில் இருந்து, “அரசாங்கத்தை நாம் நீக்குவோம். அரசு அல்லது தனியார் துறையில் பணிநீக்கம் கூடாது” என்ற ஒரு கோஷ அட்டையுடன் வெளியே வந்தனர்.