சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: police commando crackdown against plantation workers’ strike

இலங்கை: பொலிஸ் கொமாண்டோக்கள் தோட்டத் தொழிலாளரின் வேலை நிறுத்தத்தின் மீது பாய்ந்தனர்

By M.Vasanthan

25 July 2013


use this version to print | Send feedback

ஜூலை 16 அன்று, இலங்கை மாவட்ட நீதிமன்றம் ஒன்று, கைது செசய்யப்பட்ட பம்பரகல தோட்டத் தொழிலாளர்கள் எட்டு பேர் மீது முன்னெப்போதும் இல்லாத பிணை நிபந்தனைகளை விதித்தது. அவர்கள் தமது வீடுகளுக்கு செல்வதற்கும், அவர்களது தோட்டம் அமைந்துள்ள லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு செல்வதற்கும் நீதிமன்றம் தடைவிதித்தது. 5,000 ரூபா காசுப் பிணை மற்றும் சரீரப் பிணைக்கும் மேலதிகமாகவே இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

சுமார் 590 கெக்டயர் பரப்பளவைக் கொண்ட பம்பரக்கல தோட்டம், இலங்கையின் தேயிலை தோட்டப் பிரதேசமான மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலைப் பகுதியில் அமைந்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கத் தலைவரான குட்டிமலை தோட்டப் பிரிவைச் சேர்ந்த எம். சுப்பிரமணியம், அதே தோட்டத்தைச் சேர்ந்த தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர். சன்முகராஜா, எம். சித்திரசெல்வன், எஃப். ஜேசுதாசன். கே. சதாசிவம், யு. உதயகுமார் மற்றும் காளிமுத்து ஆகியோரே கைதுசெய்யப்பட்ட தொழிலாளர்களாவர்.

45 நாட்கள் பம்பரக்கலவில் தொடர்ந்த நீண்ட வேலை நிறுத்தத்துடன் தொடர்புபட்ட சம்பவங்களுக்காகவே அவர்கள் ஜூலை 2 அன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். அன்று கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றத்தின் முன் நின்றபோதும், பயன் ஏதும் கிடைக்கவில்லை.

ஹொறண பிளாண்டேசன் கம்பனிக்கு சொந்தமான பம்பரக்கல தோட்டத்தின் சுமார் 1500 தொழிலாளர்கள், பாழடைந்த நிலையில் இருக்கின்ற தொழிலாளர்களின் வரிசை அறைகளை திருத்துதல்; 300 புதிய தொழிலாளர்களை வேலையில் சேர்த்துக் கொள்ளல், கைவிடப்பட்ட 97 ஹெக்டர் தேயிலை தோட்ட நிலங்களில் மீண்டும் பயிர் செய்தல், தோட்ட முகாமையாளர் பந்துல சில்வாவை இடம் மாற்றுதல் ஆகிய கோரிக்கைகள் உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் மே 13 அன்று வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள்.

பொலிசாரின் உதவியுடன் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தினால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டார்கள். வேலை நிறுத்தத்தின் மத்தியில்,னைய தொழிலாளர்களை வேலை செய்வதை தடுத்தார்கள் என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் 5 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான வழக்கு ஜூலை 30ம் திகதி நடைபெற இருக்கின்றது. ஜூலை 19 அன்று மேலும் 3 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்கள்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எத்தகைய நடவடிக்கையும் எடுக்காததனால், ஜூன் 25ம் திகதி வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் 2000 பேர் தோட்ட முகாமையாளரின் ஆடம்பர வாசஸ்தலத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பொலிஸ், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு சுமார் 150 கொமோண்டோக்கள் அனுப்பியது. அவர்கள் தொழிலாளர்களை அச்சுறுத்துவற்காக தோட்டப் பாடசாலை, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் இரண்டு நாட்களாக தங்கியிருந்ததுடன், இன்றுவரையும் பல பொலிசார் தோட்டத்தில் ரோந்து செல்கின்றனர்.

பம்பரக்கல தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்களின் எதிர்ப்புக்களையும் மீறியே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (.தொ.கா.), மலையக மக்கள் முன்ணனி (..மு.), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் பங்காளிகளாகும். தொழிலாளர்களின் உரிமை போராட்டங்களை கீழறுப்பதில் அவர்களுக்கு ஒரு வரலாறே உண்டு.

இ.தோ.கா. தலைவரும் அரசாங்க அமைச்சரவை அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான், தமது அங்கத்தவர்களை வேலை நிறுத்தத்தில் பங்குபற்ற வேண்டாம் என்று கட்டளையிட்டார். .தொ.கா. மத்திய தலைமைக்கு அறிவிக்காமல் வேலை நிறுத்தத்தில் பங்கு கொண்டார்கள் என்ற போலிக் காரணங்களின் அடிப்படையில் தமது தொழிற்சங்க கிளைத் தலைவர்களை பதவி நீக்கம் செய்தது. ஆனாலும் தொண்டமானின் கட்டளையும் மீறி பெரும்பான்மையான இ.தோ.கா. அங்கத்தவர்கள் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து பங்குபற்றினார்கள். இ.தோ.கா. தலைவர் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் ஆதரவுடனேயே பொலிஸ் கமோண்டோக்களை தோட்ட நிர்வாகம் அணுப்பியது என தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார்கள்.

NUW மற்றும் ..மு. தலைவர்கள் தோட்ட நிர்வாகத்துடன் மே 22 அன்று கலந்துரையாடிய பின், நிர்வாகம் சில வாரங்களின் பின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டன. ஆனால் தொழிலாளர்கள் அடுத்தநாள் வேலைக்கு போக மறுத்ததுடன், ஜூன் 6ம் திகதி வரை வேலை நிறுத்தத்தை தொடர்ந்தார்கள். தொழிலாளர்கள் ஜூன் 6ம் திகதி வேலைக்கு சமூகமளித்திருந்த போதும் ஜூலை 2 வரை பல ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

கடந்த ஏப்பிரலில், இ.தொ.கா, வலதுசாரி ஐக்கி தேசியக் கட்சி சார்பான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் 22 தோட்டக் கம்பனிகளுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு வறுமை மட்டத்திலான சம்பளத்தை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்த. னை தொழிற் சங்கங்கள் உடன்படிக்கையை போலியாக விமர்சித்த போதிலும் பின்பு அதனை ஏற்றுக் கொண்ட.

ஒப்பந்தத்திற்கு பின்னர் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் முன்னரைவிட மேலும் மோசமடைந்து வருகின்றது. சில தோட்டங்களில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. தேயிலை கொழுந்து பறிக்கும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் அற்ப சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள். வாழ்க்கை செலவு அதிகரிப்பின் மத்தியில், தொழிலாளர்களின் சம்பளம் சாப்பாட்டுக்கு கூட போதாதது. வானளவில் உயர்ந்து செல்லுகின்ற வாழ்க்கை செலவு, வேலை வெட்டு மற்றும் வேலைப் ளு அதிகரிப்புக்கு எதிராகவும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் அமைதியற்ற நிலமை அதிகரித்து வருகின்றது.

பம்பரக்கல தோட்டத் தொழிலாளர்கள், உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு தமது நிலமைகளைப் பற்றி கூறினார்கள். செல்வராஜா கூறியதாவது:தோட்டத்தில் சகிக்க முடியாத நிலமையினலால் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். எமது வீடுகள் சேதமடைந்துள்ள. எமது வீட்டுக் கூரைகள் நீண்டகாலமாக மாற்றப்படவில்லை. மழைக் காலங்களில் நாங்கள் வீட்டில் இருக்கமுடியாது. எங்களுடைய பாதுகாப்புக்காக சிறிய குடிசையை அமைத்தால் நிர்வாகம் எங்களை வேலையிலிருந்து இடை நிறுத்தும். சரியான காரணங்கள் இல்லாமல் கிட்டத்தட்ட 35 தொழிலாளர்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளார்கள். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களே வேலை வழங்குகின்றார்கள். தேயிலை பறிப்பதற்கான இலக்கு எங்களுக்கு ஒரு நாளுக்கு 18 கிலோவாகும். ஒரு நாளைக்கு 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். அதற்கு குறைவாக எடுத்தால் அரைநாள் சம்பளமே வழங்கப்படும். வானளவில் உயரும் வாழ்க்கை செலவின் மத்தியில் எவ்வாறு இந்தச் சம்பளத்தில் உயிர் வாழ்வது?

தோட்டத்தின் குட்டிமலை பிரிவைச் சேர்ந்த மற்றுமொரு தொழிலாளியான அழகுதுரை கூறுகையில், எங்களுடைய தோட்டத்தின் வீதிகள் மோசமாக சேதமடைந்துள்ளன. முறையான போக்குவரத்து வசதிகள் இல்லை. முன்பு எமது தோட்டத்திற்கு ஊடாக பஸ் சேவை இருந்தது. அது இப்பொழுது நிர்வாகத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு பொருத்தமான வீட்டு வசதிகள், மல சல கூட வசதிகள், தண்ணீர் வசதிகள் இல்லை. புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு நிர்வாகம் மறுப்பதுடன் ஓயவு பெற்ற தொழிலாளர்களை குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்துகின்றது. எல்லா தொழிற்சங்களும் அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்கின்றன. யாரும் எங்களுடைய பிரச்சனைகள் பற்றி அக்கறை காட்டுவதில்லை. எங்களுக்கு சரியான தலமை இல்லை. தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு தமது கோரிக்கைகளை வென்றெடுக்க போராட வேண்டும், என்றார்.

பொலிசை ஆயுதங்களுடன் அனுப்பி, பம்பரக்கல தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் நசுக்கப்பட்டதானது தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டுமன்றி, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட வரும் னைய பகுதி தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசாங்கத்தினால் கட்டி எழுப்பட்ட இராணுவப் படைகள் இப்பொழுது தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன.