சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US expands global drone warfare

அமெரிக்கா பூகோள ட்ரோன் போர்முறையை விரிவாக்குகிறது

By Thomas Gaist
23 July 2013

use this version to print | Send feedback

“ட்ரோன்  போர்முறையில் அடுத்த கட்டம்” என்று வாஷிங்டன் போஸ்ட் விளக்கியிருப்பது, ஒபாமா நிர்வாகம் “பென்டகனுடைய வலுவான கண்காணிப்பு வலையமைப்புக்களை மரபார்ந்த, அறிவிக்கப்பட்ட போர்ப் பகுதிகளுக்கு அப்பால் விரிவாக்குவது” எனப் பொருளாகும். போஸ்ட்டின் கருத்துப்படி, வாஷிங்டன் ட்ரோன் கருவித் தொகுப்பை உலகில் புதிய பகுதிகளில் நிலைகொள்ள ஏற்பாடு செய்து கொள்ளவிருக்கிறது; அந்த இடங்களில் அது போதைப் பொருள் கடத்துபவர்கள், கடல் கொள்ளையை மற்றும் “அமெரிக்க அதிகாரிகளை கவலைக்கு உட்படுத்தும் பிற இலக்குகளை” கண்காணிக்கும்.

ஒரு பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் இராணுவமானது, ஆசியா, மற்றும் பசிபிக் பகுதி முழுவதும் ட்ரோன் செயற்பாடுகளை “பெருக்க உறுதி கொண்டுள்ளது” என்றார். போஸ்ட்டும் கொலம்பியாவை ஒரு போர் அரங்கு என்று மேற்கோளிட்டு அது கூடுதலான அமெரிக்க ட்ரோன்களின் பயன்பாட்டைக் காணக்கூடும், அமெரிக்க ட்ரோன்கள் ஏற்கனவே “போதைப்பொருள் பயங்கரவாதிகளுக்கு” எதிராக கொலம்பிய இராணுவத்துடன் இணைந்து செயல்படுகிறது என்று கூறியுள்ளது.

“கண்காணிப்பு ட்ரோன்கள் உண்மையில் நம்முடைய ஆளேற்றிப் பறக்கும் சொத்துக்களின் வேகம், தேய்மானம் இவற்றை எடுத்துக் கொண்டு நமக்கு உதவலாம்” என்று மரைன் ஜெனரல் ஜோன் எப்.கெல்லி, அமெரிக்கத் தெற்குக் கட்டுப்பாட்டின் தளபதி மார்ச் மாதம் கூறினார்.

“போர் அலை திரும்பிச் செல்கிறது” என்று ஒபாமா கூறினாலும், அமெரிக்க அரசாங்கம் உலகெங்கிலும் இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த தசாப்தத்தில் பென்டகன் நூற்றுக்கணக்கான அதிக உயரத்தில் பறக்கும் “ஆளில்லா ஆகாய வாகனங்களை” (UAVs) இணைத்துள்ளனர், இவை இப்பொழுது அன்றாடம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்களுக்குப் பணிபுரிகிறது. “பிரிடேட்டர்” ட்ரோன்  தொகுப்புக்கள் மட்டுமே குறைந்தப்பட்சம் 80,000 முறை போர்ப் பகுதிகளில் பறந்துள்ளன; இவற்றுள் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பொஸ்னியா, சேர்பியா, ஈராக், யேமன், லிபியா மற்றும் சோமாலியா ஆகியவைகள் அடங்குகின்றன.

“எத்தனை போர்களை அமெரிக்கா இப்பொழுது செய்துவருகிறது” என்ற தங்கள் 2013 கட்டுரையில், ஹார்வர்ட் கென்னடி அரசாங்கக் கூடத்தின் லிண்டா பில்மெஸும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மைக்கேல் இன்ட்ரிலிகேட்டரும் அமெரிக்க குறைந்தப்பட்சம் ஐந்து “அறிவிக்கப்படாத மற்றும் கூறப்படாத போர்களில் ஈடுபட்டுள்ளது”, இவை தானியங்கி ஆயுத முறைகள் மூலம் பெரும்பாலும் நடைபெறுகின்றன என்று கூறியுள்ளனர்.

செய்தித்தாள் குறிப்பிட்டிருப்பது போல், இப்போர்கள் “பல முந்தைய அமெரிக்க இரகசிய ஊடுருவல்கள்” நீண்டகாலமாக இருப்பவற்றின் ஒரு பகுதிதான். இவற்றுள் சிலி, கியூபா, நிக்கராகுவா இன்னும் பலநாடுகள் உள்ளன. நவீன இராணுவத் தொழில்நுட்பங்கள் இத்தகைய இரகசிய ஊடுருவல்கள் பாரிய விரிவாக்கம் காண உதவியுள்ளன என கட்டுரையாளர்கள் வாதிட்டுள்ளனர்; “தானியங்கி இயந்திரமுறைப் போர் அமெரிக்காவை உலகெங்கிலும் அதிக மோதல்களில் ஈடுபடுத்தியுள்ளது.”

நாளேடு கூறுகிறது: “இன்று அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் ஐந்து கண்டங்களிலும் ஏராளமான நாடுகளிலும் நடைபெறுகின்றன. அமெரிக்க இராணுவம் உலகின் மிகப்பெரிய இராணுவம், கணிசமான இராணுவ வசதிகளை உலகெங்கிலும் பல நாடுகளில் கொண்டுள்ளது, குறிப்பிடத்தக்க பிரசன்னத்தை பஹ்ரைன், டிஜிபுட்டி, துருக்கி, கட்டார், சௌதி அரேபியா, குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான், கோசோவோ, க்ரிகிஸ்தான் ஆகியவற்றில் கொண்டுள்ளது; இதைத்தவிர, நீண்ட காலமாக ஜேர்மனி, ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிலும் தளங்களைக் கொண்டுள்ளது.

இதைத்தவிர, அமெரிக்கா “ஏதேனும் ஒரு வகையில் இராணுவ பிரசன்னத்தை” கொலம்பியா, எகிப்து, ஈரான், ஜோர்டான், காஜக்ஸ்தான், லெபனான், ஓமன், பாக்கிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிரியா, டாஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் யேமனில் கொண்டுள்ளது.

பில்மெசும் இன்ட்ரிலிகேட்டரும் “துல்லிய, தொலைதூரக் கட்டுப்பாட்டிற்குள் செயல்படும் தானியங்கி விமானம் அமெரிக்காவை நிறைய இரகசிய, உத்தியோகபூர்வமற்ற தாக்குதல்களை வியத்தகு அளவில் விரிவாக்க உதவியுள்ளது; இது பொதுமக்களுக்கு எங்கு செயல்படுகிறது, எவ்வாறு இலக்குகளை தேர்ந்தெடுக்கிறது, எத்தனை பேரைக் கொன்றுள்ளது, நிரபராதி குடிமக்கள் (அருகே இருப்பவர்கள்) என்பது பற்றித் தகவல் கொடுக்காமல் செயல்படுகின்றது.

New America Foundation கொடுத்துள்ள புள்ளிவிவரங்கள் ட்ரோன்  தாக்குதல்கள் மிகப் பெரிய விகிதத்தில் விரிவாக்கம் அடைந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன. 2004 இருந்து 2007 வரை பாக்கிஸ்தான் மீது ஒன்பது ட்ரோன்  தாக்குதல்களைத்தான் மேற்கொண்டிருந்தது; இது 2010 ஐ ஒட்டி 118 ஆக அதிகரித்திருந்தன.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பல சிறிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் அதிகம் ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றன. முன்னாள் அமெரிக்க ஆபிரிக்க கட்டுப்பாட்டின் (AFRICOM) தளபதி ஜெனரல் கார்ட்டர்ஹாம் பெப்ருவரி மாதம் அவருடைய படைகளுக்கு 15 மடங்கு அதிக கண்காணிப்பு, முன்கூட்டிய கண்காணிப்புத்திறன்  ஆகியவை கண்டத்தில் தேவைப்படுவதாகத் தெரிவித்தார். அமெரிக்க விமானப் படை ட்ரோன்கள் ஏற்கனவே வட ஆபிரிக்காவில் பறக்கின்றன; அமெரிக்கா ஏற்கனவே ட்ரோன் தளங்களை டிஜிபுட்டி, எத்தியோப்பியா மற்றும் சேஷல்ஸில் கொண்டுள்ளது.

“Operation Nomad Shadow “ என்பதின் பகுதியான, ஒரு இரகசிய அமெரிக்க கண்காணிப்புத் திட்டம், அமெரிக்க இராணுவம் தற்பொழுது ட்ரோன்களை துருக்கியிலுள்ள இன்சர்க்ளிக் விமானத் தளத்திலிருந்து இயக்குகிறது; இது துருக்கிய இராணுவத்திற்கு பிரிவினைவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிராக நடத்தப்படுகிறது. ட்ரோன்கள் வடக்கு ஈராக்கில் பறந்து தகவல்களைச் சேகரித்து பின் அவற்றை பகுப்பாய்விற்காக அங்காராவிலுள்ள “இணைப்பு அறைக்கு” அனுப்புகிறது.

ட்ரோன்  நடவடிக்கைகள் துருக்கியில் மக்களுடைய எதிர்ப்பைத் தூண்டியுள்ளன. 2012ல் எதிர்ப்புக்கள் துருக்கிய விமானிகள் வான் தாக்குதலை முகங்கொடுக்கையில், அமெரிக்க ட்ரோனை செயற்படுத்தியதன் மூலம், 34 குடிமக்களைக் கொன்றனர். அமெரிக்க ட்ரோன்  தவறான முறையில் PKK கெரில்லாக்கள் என்று குடிமக்கள் ஏற்றிச் செல்லப்படுவதைக் கூறியது. வியாழனன்று Pew Research Center வெளியிட்ட ஆய்வு ஒன்று துருக்கியர்களில் 82 சதவிகிதத்தினர் ஒபாமா நிர்வாகத்தின் உலகளாவிய ட்ரோன்  போரை எதிர்க்கின்றனர் எனக் கண்டறிந்துள்ளது.

வெளிநாடுகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் நேரத்திலேயே ஒபாமா நிர்வாகம் அமெரிக்காவிற்குள்ளும் ட்ரோன் பறத்தல்களை அதிகப்படுத்தியுள்ளது. உதாரணமாக, தேசிய மரைன் புகலிடங்களின் அலுவலகம் (ONMS) கடற்படை பயன்படுத்திய புமா ட்ரோன்களை வாங்கியுள்ளது. இவைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் கடலோரப் பகுதியில் செயல்படவுள்ளன.

ONMS தற்பொழுது மற்ற மாநிலங்களிலும் ஹவாய், பிளோரிடா, வாஷிங்டன் உட்பட ட்ரோன்  பறத்தல்களை விரிவாக்கத் தயாராகி வருகிறது. ஒரு புதிய 100 மில்லியன் டொலர்களுடைய ட்ரோன் தளம் கன்சாஸ் ரைலி போட்டில் திட்டமிடப்பட்டுள்ளது; ஒரு புதிய தளமும் விமான நிலையமும் டெக்சாஸ் ஹூட் போட்டில் வரவுள்ளன.

ட்ரோன் போர்முறை குடிமக்களை ஏராளமாகக் கொல்கிறது. கடந்த ஆண்டு விசாரணைச் செய்தி அலுவலகமானது (BIJ) மீட்பாளர்கள், இறப்பினால் துயருற்றிருப்பவர்கள், பிரேத ஊர்வலங்கள், ஆரம்ப தாக்குதல்களை தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடந்த இடங்களுக்கு வருபவர்கள் ஆகியோரை வேண்டுமென்றே இலக்கு வைத்தது குறித்து தகவல் கொடுத்துள்ளது. இது “இரட்டைப் பொறி” என அழைக்கப்படுகிறது. இத்தகைய ட்ரோன் தாக்குதல்கள் அடிக்கடி “நடத்தை முறைகள்” பகுப்பாய்வைத் தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படுகின்றன; இவைகள் சந்தேகத்திற்கு உரிய தனிநபர்களின் கூட்டங்கள், நடமாட்டங்கள் ஆகியவைகளை இலக்காகத் தேர்ந்தெடுக்கின்றன.

BIJ கூற்றுப்படி அமெரிக்க ட்ரோன்  தாக்குதல்கள் குறைந்தப்பட்சம் 3,500 இறப்புக்களுக்கு பொறுப்புடையவை; இதில் அமெரிக்க குடிமக்களும் அடங்குகின்றனர். இவர்கள் ஜனாதிபதி ஒபாமாவால் படுகொலை செய்யப்பட நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். BIJ ஆனது குறைந்தப்பட்சம் 555 நபர்கள் இறந்தவர்களில் குடிமக்கள் என உறுதிப்படுத்தியுள்ளது; இது செனட்டர் டயனே பீன்ஸ்டின் கூற்றான சிவிலிய இறப்புக்கள் “ஒற்றை எண்ணிக்கையில்தான்” உள்ளன என்பதை முரணாக்குகின்றன.

பாக்கிஸ்தானிய அரசாங்கத்தின் மதிப்பீடுகள் அண்மையில் கசியவிடப்பட்ட உள் ஆவணம் ஒன்றில் “நேட்டோப் படைகள்/FATA இல் பிரிடேட்டர் தாக்குதல் பற்றிய விவரங்கள்” குறைந்தபட்சம் அமெரிக்க ட்ரோன்களால் 2006 மற்றும் 2009க்கு இடையே கொல்லப்பட்ட 746 பேர்களில் 147 பேர் குடிமக்கள் எனக் காட்டுகின்றன. ஸ்டான்போர்ட் மற்றும் நியூ யோர்க் பல்கலைக்கழக சட்டக்கூடங்கள் வெளியிட்ட அறிக்கை ஒன்று கடந்த ஆண்டு ஒவ்வொரு உறுதியான “எழுச்சியாளர்” எனக் கூறப்பட்ட தாக்குதல்களால் கொல்லப்படுபவருக்கு 50 குடிமக்களும் அதனுடன் பலியாகின்றனர் எனக் கூறியுள்ளது.

போஸ்ட் குறிப்பிட்டுள்ளதுபோல், ஒபாமா நிர்வாகம் “அதன் உலகளாவிய ட்ரோன்  தாக்குதல் திட்டங்கள் குறித்து பெரும் மௌனத்தை கடைப்பிடிக்கிறது”. இவை இரகசியமாகச் செயல்படுகின்றன, இரகசியச் சட்டங்களுக்கு உட்பட்டு, மற்றும் உலகெங்கும் இலக்கு வைத்துக் கொல்லப்படும் படுகொலைகளை நிறுவனமயமாக நெறிப்படுத்துகின்றன.

மே மாதம் ஒபாமா ட்ரோன்  தாக்குதல்களைத் தான் பயன்படுத்துவது குறித்து வலுவாகக் பாதுகாத்துப் பேசினார்; அவருடைய நிர்வாகத்தின் ட்ரோன் கொள்கைகள் ஒரு புதிய “ஜனாதிபதி கொள்கை வழிகாட்டி ஆவணத்தில்” நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். ஒபாமா கூறினார்: “உலகின் மறுபகுதியில் இருப்பவர் மீது தாக்குதல் நடத்தும் தொழில்நுட்ப முன்னேற்றம் என்னும் மனித முன்னேற்றத்தின் அடிப்படை, அந்தச் சக்தியை கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் கோருகிறது; அல்லது அது தவறாகப்போகும் என்னும் இடர் உள்ளது. எனவேதான் கடந்த நான்கு ஆண்டுகளாக என் நிர்வாகம் கடுமையாக உழைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான சக்தி பயன்படுத்தப்படுவதை கையாளும் வடிவமைப்பை நிறுவியுள்ளது; தெளிவான வழிகாட்டி முறைகள், மேற்பார்வை, பொறுப்பு என்று இப்பொழுது ஜனாதிபதியின் கொள்கை வழிகாட்டி முறையில், நான் நேற்று கையெழுத்திட்டதில் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.”

ஜனாதிபதியின் கொள்கை வழிகாட்டி ஆவணம் (PPD) ஜனாதிபதியின் கொள்கை இயக்க நெறிகள் (PPG) 20ல் ஒன்றாகும். இவை ஒபாமா நிர்வாகத்தால் பிரகடனப்படுத்தப்பட்டவை, பொதுமக்கள் பார்வையில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. www.allgov.com கருத்துப்படி, PPD என்பது “ஜனாதிபதி நிறைவேற்றுக் கிளைக்கு இயக்கும் அறிக்கையாகும், இது குறிப்பிட்ட சட்டபூர்வ வடிவமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும், எந்தச் சட்டம் அல்லது திட்டத்தைச் சுற்றி அபிவிருத்தி செய்யலாம்.”

PPG ஆனது இலக்கு வைத்து உலகெங்கும் நடத்தப்படும் கொலைகளுக்கு சட்ட மறைப்பை தவறாக அளித்து அதை நிறுவனமுறைப்படுத்துகிறது. அதிகாரத்தின் மீது தடை என ஒபாமா அளிப்பது, உண்மையில் உலகில் ஒவ்வொரு மனிதனிடம் இருந்து அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் கூறினால் கொல்லப்படுவதிலிருந்து கொலைத்தடுப்பு உரிமையை அகற்றிவிடுகிறது.

உலகளாவிய ட்ரோன் போர்முறை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் முக்கிய கருவியாகிவிட்டது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் போலி மறைப்பின் கீழ் இது நடத்தப்படுகிறது; அமெரிக்காவை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு என்று இல்லாமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரையும் மூலோபாய மேலாதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தை கொண்ட விரிவான இராணுவ செயற்பாட்டின் ஒரு பகுதியாகும்.