சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Euro zone debt burden continues to rise

யூரோப் பகுதிக் கடன் சுமை தொடர்ந்து உயர்கிறத

By Stefan Steinberg
24 July 2013

use this version to print | Send feedback

மூன்று ஆண்டுகள் தீவிர சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து யூரோஸ்டாட் (Eurostat) புள்ளிவிவர நிறுவனத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் யூரோப்பகுதி முழுவதும் கடன் சுமை உயர்கிறது எனக் காட்டுகின்றன.

திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கை, 17 யூரோப்பகுதி நாடுகளின் கடன் சுமை இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில் மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளதை காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிவர அலுவலகக் கூற்றின்படி, அரசாங்கக் கடன் யூரோப்பகுதியில் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) விகிதத்தின் அடிப்படையில் 2013 முதல் காலாண்டில் மிக அதிக உயர்ந்த மட்டமான 92.2% அடைந்தது. இது முந்தைய காலாண்டின் 90.6% உடனும், ஓராண்டிற்கு முன் இதே காலகட்டத்தில் இருந்த 88.2% உடன் ஒப்பிடத்தக்கது.

2008 நெருக்கடிக்குப்பின் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட முதல் யூரோப்பகுதி நாடான கிரேக்கம் (ஏதென்ஸ் சமீபத்தில் அதன் ஏழாம் சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை இயற்றியது) யூரோப்பகுதியில் மிக அதிக கடன் சுமையைக் கொண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 160.5%. இது முந்தைய காலாண்டின் 156.9%யும் முந்தைய ஆண்டின் மட்டமான 136.5% ஐயும் விட அதிகமானதாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதப்படி இரண்டாம் அதிக கடன் சுமையை கொண்டுள்ள நாடு இத்தாலி ஆகும். இது 130.3% என இங்கு உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மொத்தக் கடன் உயர்ந்துள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 2012 நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2013 முதல் காலாண்டில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. 6 நாடுகள்தான் குறைந்துள்ள நிலையை பதிவு செய்துள்ளன.

மிக அதிக கடன் விகித உயர்வுகள் கடந்த காலாண்டில் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்புக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு உட்பட்ட இரண்டு நாடுகளான அயர்லாந்திலும் (+7.7%), ஸ்பெயினிலும் (+4.0%) பதிவாகியுள்ளதுடன் மற்றும் மூன்றாவது இடத்தில் பெல்ஜியம் (+4.7%) உள்ளது.

இத்தகவல்கள் சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய முக்கூட்டு 2009 இல் இருந்து பிரகடனப்படுத்திய நோக்கமான, ஐரோப்பிய நாடுகளின் நிதியங்களையும், வரவு-செலவுத் திட்டத்தையும் சீராக்குவது எனக்கூறுவதுடன் எந்தவித தொடர்புமற்றது என்பதை உறுதிப்படுத்துகின்றது. மாறாக, ஐரோப்பா முழுவதும் வேலைகளை குறைத்தல், சமூக நலச்செலவுகளை குறைத்தல் ஆகியவை வேலையின்மையையும் வறுமையையும் பல்லாயிரக்ணக்கான மில்லியன் மக்களுக்கு விளைவித்துள்ளன. இது அடிப்படையில் வர்க்க உறவுகளை மறுகட்டமைக்க வேண்டும் என்னும் வேண்டுமென்ற நோக்கத்தின் செயற்பாடாகும். இதன் ஒரு பெரும் முக்கிய விளைவு வங்கிகளின் செல்வம் மற்றும் அதிகாரத்தைப் பெருக்குதல் ஆகும்.

வங்கி இலாபங்கள் மீண்டும் அதிகமாகிவிட்டதுடன், முக்கிய பங்குச் சந்தைகள் ஐரோப்பா முழுவதும் 2007-08 அவை அடைந்த உயர்ந்த மட்டத்தை மீண்டும் அடைந்துள்ளன. வங்கிகள் அனுபவிக்கும் புதிய செல்வங்களுக்கு முக்கிய மூலாதாரம் அவற்றிற்கு ஐரோப்பிய மத்திய வங்கி உட்பட முக்கிய மத்திய வங்கிகள் கொடுக்கும் கிட்டத்தட்ட இலவசக் கடன்கள்தான்.

ஐரோப்பாவில் ஆழ்ந்த மந்தநிலைக்கு மற்றொரு அடையாளம் வங்கிகள் வணிகங்களுக்கு கடன்களை அதிகம் கொடுப்பதில்லை எனக்காட்டும் சமீபத்திய புள்ளிவிவரங்கள்தாம். வங்கிகள் தனியார்துறைக்கு யூரோப்பகுதியில் கொடுக்கும் கடன்கள் மே வரையிலான மூன்று மாதங்களில் 1.1% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. இது சராசரி சரிவான 3% விட அதிகமாகும். ஐரோப்பாவில் தேசிய வரவு-செலவுத் திட்டங்கள் குறையும் வரிவருமானத்தால் சுருங்குகையில், நிறுவனங்கள் விரிவாக்கம், வருங்கால உற்பத்திக்குத் தேவையான முதலீட்டைப் பெறுவதற்குக் கடன் பெறமுடியாமல் உள்ளன.

மாறாக, வங்கிகள் ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து சுலபக் கடன்களைப் பெற முடிகிறது. அவை பின்னர் இந்நிதிகளை அரசாங்க பங்குப்பத்திரங்களை வாங்கி விற்பதற்கு பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவற்றில் 6 முதல் 7% வட்டிவிகிதத்தில் வர்த்தகம் செய்கின்றன.

இச்செயல்களூடாக தன் பங்கிற்கு ஐரோப்பிய மத்திய வங்கி  நல்ல இலாபத்தை எதிர்பார்க்கலாம். செவ்வாயன்றுபிணையெடுப்புக்கள் மத்திய வங்கிகளுக்கு இலாபத்தை கொடுக்கலாம்என்ற தலைப்பில் வந்துள்ள பைனான்சியல் டைம்ஸ் கட்டுரை ஒன்று ஐரோப்பிய மத்திய வங்கி, தெற்கு ஐரோப்பாவில் இதுவரையிலான முதலீடுகளுக்கு நிகர இலாபமாக 70 முதல் 80 பில்லியன் யூரோக்களை எதிர்பார்க்கலாம் எனக் கூறுகிறது. கிட்டத்தட்ட 9 பில்லியன் யூரோக்கள் இலாபம் கிரேக்கத்தின் கடனுக்கான அதன் முதலீட்டில் இருந்து பெறப்படும்.

ஐரோப்பாவில் பெருகும் மந்தநிலைப் போக்குகள், ஐரோப்பாவின் பெரும் பொருளாதாரமான ஜேர்மனியில் பெரிதும் செய்தி ஊடகத்தால் புறக்கணிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் வருகையில், எந்த முக்கிய கட்சியும் வெடிப்புத்தன்மை உடைய பொருளாதார அரசியல் விளைவுகள் யூரோ நெருக்கடியால் புதிதாக ஏற்படக்கூடும் என்பதைக் குறித்து பேசத் தயாராக இல்லை.

மற்ற செய்தி ஊடகங்கள் அவ்வளவு தயக்கம் காட்டவில்லை. சமீபத்திய ஒரு CNBN கட்டுரையூரோப்பகுதியில் சரியான புயல் உருவாகிக் கொண்டிருக்கிறதா? என்ற தலைப்பில் வந்தது, சிலமுக்கிய நாடுகளின் அரசியல் நெருக்கடிகளால் ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது என்றும்இது செப்டம்பர் ஜேர்மானிய தேர்தல்களுக்கு பின்னர் கண்டத்தில் புதிய உறுதியற்ற நிலைக்கு புத்துயிர்ப்பு கொடுக்க இட்டுச்செல்லலாம்எனக் குறிப்பிடுகிறது.

இக்கட்டுரை பின் ஐரோப்பிய நாடுகள், அரசியல் கொந்தளிப்பால் சேதமுற்று, தங்கள் மக்களின் பெரும்பகுதியுடைய எதிர்ப்பை முகங்கொடுப்பதையும் பட்டியலிடுகிறது.

பழமைவாத பிரதம மந்திரி ரஜோய் மற்றும் அவருடைய மக்கள் கட்சியும் ஆழ்ந்த முறையில் சட்டவிரோத நிதியில் பங்கு கொண்டுள்ளனர் என்ற தகவல்கள் வந்துள்ள நிலையில் ஸ்பெயின் அரசாங்கத்தின் விதி அந்தரத்தில் உள்ளது. அதே நேரத்தில் நாட்டின் மற்ற பகுதிகளில் அது மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளைச் சுமத்தியுள்ளது.

போர்த்துக்கல்லில் அரசாங்கம் ஆளும் கூட்டணிக்கும் சோசலிச கட்சிக்கும்நாட்டை பாதுகாப்பதில் உடன்பாடுகாணமுடியாததால், அதாவது இன்னும் சிக்கன நடவடிக்கையை செயற்படுத்த முடியாததால் பேச்சுக்கள் முறிந்து அரசாங்கம் நூலிழையில் ஊஞ்சலாடுகிறது.

கிரேக்க அரசாங்கமும் மிகக்குறைந்த பெரும்பான்மையை கொண்டு, ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்களை பணிநீக்கும் திட்டங்களுக்கான பெருகிய எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்கிறது. நாட்டின் மோசமான கடன் சுமை அது ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து ஆண்டு இறுதிக்குள் கூடுதல் நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம். சைப்ரஸும் முக்கூட்டில் இருந்து வாங்கியிருக்கும் கடன்களைத் திருப்பிக் கொடுக்கையில் பெருகிய பிரச்சினைகளை முகங்கொடுக்கிறது.

ஒரு மூத்த ஐரோப்பிய பொருளாதார வல்லுனர் மார்ஷெல் அலெக்சாண்ட்ரோவிச் CNBC இடம் ஐரோப்பாவில் நிலைமைசெயற்கையாக அமைதியாக உள்ளது என்றார். “இத்தாலி, ஸ்பெயினில் அரசாங்கங்கள் சரியும் ஆபத்து குறித்து தான் மிகவும் கவலை கொண்டுள்ளதாகதெரிவித்தார். வங்கிகள் இன்னும் அதிக சிக்கனத்தை கோரி அழுத்தம் கொடுப்பதால் என்ரிகோ லெட்டா தலைமையில் இருக்கும் ஜனநாயகக் கட்சியும் மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனியின் மக்கள் சுதந்திரக் கட்சியும் சமீபத்தில் அமைத்த இத்தாலிய ஆளும் கூட்டணிக்குள்ளும் பிளவுகள் உள்ளன.

மேலே பட்டியலிடப்பட்டுள்ள நாடுகள் கூட்டாக யூரோப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50%க்கும் மேலாக உற்பத்தி செய்கின்றன. பொருளாதார மற்றும் அல்லது அரசியல் நெருக்கடி இவற்றுள் எதிலேனும் ஏற்பட்டால் அது அரசாங்கப் பத்திர வட்டி விகிதங்களில் புதிய ஏற்றத்திற்கு வகை செய்யும். அது அனைத்து தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும் எதிர்மறையான தொடர் விளைவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளன.