சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

Visiting Europe, Chinese premier demands Japan return

ஐரோப்பாவிற்கு வருகை புரிந்துள்ள சீனப் பிரதமர் ஜப்பானால் “திருடப்பட்ட” பகுதிகளை திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறார்

By John Chan
29 May 2013


use this version to print | Send feedback

தென் சீன கிழக்குக் கடலிலுள்ள டயாவோயு தீவுகளை (ஜப்பானில் சென்காகு என அறிப்படுவது) ஜப்பான் உரிமை கோரிச் சவால் விடும் முன்னோடியில்லாத நடவடிக்கையை, சீனப் பிரதமர் லீ கெக்கியாங் தனது முதலாவது ஜேர்மன் பயணத்தின்போது அப்பிரச்சினையை போட்ஸ்டாமிற்குக் கொண்டுவந்தார்.

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனி தோற்றபின், போட்ஸ்டாமில் கூட்டணி நாடுகளின் தலைவர்கள் ஜூலை-ஆகஸ்ட் 1945ல் போருக்குப் பிந்தைய உடன்பாட்டை வரையறுக்கவும் ஏகாதிபத்திய ஜப்பானுக்கு எதிரான போர் முயற்சியை விவாதிக்கவும் மாநாடு ஒன்றை நடத்தின.

போட்ஸ்டாம் மாநாட்டு இடத்தில் ஞாயிறன்று வழங்கிய லியின் உரையில், கூட்டணி நாடுகள் “ஜப்பானிய பாசிஸ்ட்டுகளுக்கு” இறுதி எச்சரிக்கையை கொடுத்த 20 நாட்களுக்குப் பின், ஜப்பானியர்கள் சரணடைந்தனர், “அது சீன மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு பெரும் வெற்றி ஆகும்” என்றார்.

போஸ்ட்டாம் அறிக்கையின் 8 வது விதியை அவர் வலியுறுத்திப் பேசினார்; அது 1943ம் ஆண்டு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் சீனா வெளியிட்ட கெய்ரோ அறிக்கையைச் செயற்படுத்தியது: அதில் ஜப்பான் முதல் உலகப் போருக்குப் பின் எடுத்துக் கொண்ட சீனப் பகுதிகள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும், மஞ்சூரியா, தைவான் மற்றும் பெங்கு தீவுகள் ஆகிய “திருடப்பட்ட பகுதிகள்” சீனாவினால் மீட்கப்பட வேண்டும் என்றும் டோக்கியோவின் நிலப்பகுதி ஜப்பானியத் தீவுக் கூட்டங்களுடன் வரம்பிடப்பட்டது என்றும் கூறினார்.

“எல்லா நேரங்களிலும் நாம் சமாதானத்தையும் போருக்குப் பிந்தைய ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டும், அவை பல மில்லியன் உயிர்களை விலையாகக் கொடுத்துப் பெறப்பட்டவை” என்றார் லி.

சமாதானம்” என்ற சொல் இழிந்த முறையில் கூறப்பட்டாலும், இது ஜப்பானின் டயாவோயு/சென்காகு தீவுகள் மீதான உரிமைக்கு வெளிப்படையான சவால் என்பது மட்டுமின்றி, ஓகினாவாவிற்கும் பொருந்தும். இது சீன-ஜப்பானிய பதட்டங்களை இன்னும் அதிகமாகத்தான் எரியூட்டும்.

லியின் வாதம் இரண்டு சீன கல்வியாளர்களால் சமீபத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழல் ஏடான People’s Daily இல் முன்வைக்கப்பட்ட கருத்தான ஓகினாவா மீது ஜப்பானிய இறைமை வினாவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதைத்தான் எதிரொலிக்கின்றன. (See: China challenges Japanese sovereignty over Okinawa)

(See: China challenges Japanese sovereignty over Okinawa)

அந்த நேரத்தில் சீன அரசாங்கம் டோக்கியோவின் எதிர்ப்புக்களை உதறித்தள்ளி, இவை கல்விக்கூட ஆய்வுகள் என வாதிட்டுள்ளது. ஆனால் இப்பொழுது லி வெளிப்படையாக இது சீனாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

சீனா அரசால் நடாத்தப்படும் ஜின்ஹுவா செய்தி நிறுவனம் உடனடியாக லியின் உரையை “ஜப்பானால் திருடப்பட்ட பகுதிகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் லி கெக்கியாங் கோருகிறார்” என்ற தலைப்பில் வெளியிட்டது. ஜேர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் பத்திரிகைகள் இதேபோன்ற முறையிலேயே விளக்கம் கொடுத்தது, அதாவது, பெய்ஜிங் இப்பொழுது ஜப்பான் இத்தீவுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறது என.

பிரதம மந்திரி ஷின்சோ ஏபெ இன் பெயரைக் குறிப்பிடாமல், லி ஜப்பானிய தலைவர்களை ஜப்பானிய போர்க் குற்றங்களை மறுப்பதற்காக குறை கூறியுள்ளார். லி கூறினார்: “போர்க்கால ஆக்கிரமிப்பு குறித்து மறுத்தல் அல்லது பெருமைப்படுத்தும் எந்த முயற்சியும், இந்த ஆண்டு முழுவதும், சர்வதேச நீதிக்கு ஒரு சவால் என்பதைத்தவிர வேறு ஒன்றுமில்லை; இது சீன மக்களால் பொறுத்துக் கொள்ள முடியாதது; உலகெங்கிலும் இருக்கும் மக்களாலும் கண்டிக்கப்படும்.

ஜப்பானிய அரசாங்கம் சீற்றத்துடன் இதை முகங்கொடுத்தது. லியின் கருத்துக்கள் வரலாற்றை முற்றிலும் புறக்கணித்துள்ளன” என்று தலைமை காபினெட் செயலர் யோஷிஹிடா சுகா அறிவித்தார்.

“சென்காகுத் தீவுகள் எங்கள் நிலப்பகுதி, வரலாற்றளவிலும், சர்வதேச சட்டத்தின்படியும், நாங்கள் அவற்றின் மீது நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளோம்” என வலியுறுத்தினார்.

குன்றுகள் நிறைந்த சென்காகு தீவுகள் மீதான மோதல் கடந்த தசாப்தமாக வெளிப்பட்டுள்ளன; முதலில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே கடல் எல்லைகள் தொடர்பானதாக இது இருந்தது. இங்கு ஏராளமான கடலடி எண்ணெய், எரிபொருள் இருப்புக்களை பெரும் மூலோபாய தென் சீனக் கடல் பகுதிகளில் பங்கிட்டுப் பிரித்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் நேரடி உட்குறிப்புக்களை கொண்டுள்ளன.

ஒபாமா நிர்வாகமானது ஆசியாவில் அதனுடைய புதிய நிலைப்பாடான “முன்னிலை” மூலோபாயத்தின் பகுதியாகக் கொள்வதற்காக, சீனா மீது இராஜதந்திர, மூலோபாய அழுத்தங்களைக் கொடுக்க முடிவெடுத்துள்ளது. 2010ல் இரு நாடுகளுக்கு இடையே பெரிதாகிவிட்ட இம்மோதல், ஜப்பானிய கடலோரப் படைகள் சீன மீன்பிடிக்கும் கப்பல் காப்டன் ஒருவரைக் கைப்பற்றியபின் விரிவாகிவிட்டது.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை பலமுறையும் டயாவோயு/சென்காக்கு தீவுகள் குறித்த இறுதி இறைமை பற்றி அது ஒரு தரப்பினர் பக்கத்திலும் சேரவில்லை என்று பல முறை வலியுறுத்தினாலும், சீனாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையில், இந்த மூன்று குன்றுகள் நிறைந்த தீவுகள் குறித்து போர் ஏற்பட்டால் அது அமெரிக்க-ஜப்பானிய உடன்பாட்டை பின்பற்றக் கடமைப்பட்டுள்ளது.

அமெரிக்காவானது 2010ல் டோக்கியோவிற்கு ஒரு புதிய “பாதுகாப்பு வழிகாட்டி நெறியை” தயாரிக்க ஊக்கம் அளித்தது; அதில் ஜப்பானின் மூலோபாயக் குவிப்பை வடக்கே ஹொக்கைடாவில் இருந்து தள்ளி வரையறை செய்து, “தென் மேற்குத் தீவுத் தொடர்கூட்டம்” என வரையறுக்குமாறு கோரப்பட்டது—அதில் டயவோயு/சென்காகு தீவுகளும் அடங்கும்.

இத்தகைய அமெரிக்க ஆதரவுடன், கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பானிய ஜனநாயகக் கட்சிப் பிரதம மந்திரி யோஷிஹிகோ நோடா ஒரு ஆத்திரமூட்டும் வகையான நடவடிக்கையை எடுக்கும் வகையில், தீவுகளை அதன் தனிச் சொந்தக்காரர்களிடம் இருந்து கடந்த ஆண்டு “விலைக்கு வாங்கியது”. ஆரம்பத்தில் இம்முயற்சிக்கு, முன்னாள் டோக்கியோ கவர்னர் ஷின்டரோ இஷிஹராவின் தலைமையில் அதிதீவிர-தேசியவாத சக்திகளால் ஆதரவுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

சீனா இதற்கு விடையிறுக்கும் வகையில் கடற்படை பொலிஸ் கப்பல்களையும் போர் விமானங்களையும் பலமுறை கூட தீவுகள் மீது ஜப்பானிய கட்டுப்பாட்டை சவால் விடுவதற்கு அனுப்பி வைத்தது; அதே நேரத்தில் உள்நாட்டில் ஜப்பானிய எதிர்ப்புப் பிரச்சார ஆர்ப்பாட்டங்களுக்கு தூண்டுதல் கொடுத்தது.

போட்ஸ்டாமில் லி தன் கோரிக்கைகளை முன்வைத்தபோது, டயவொயு/சென்காகு தீவுகளில் நேரடி மோதல் ஒன்று ஏற்பட்டது. ஜப்பானிய கடலோரப் பாதுகாப்புக் கப்பல்கள் கொடுத்த எச்சரிக்கையும் மீறி, மூன்று சீனக் கடற்படைக் கண்காணிப்புக் கப்பல்கள் 12 கடல் மைல் வேகத்திற்குள்ளாக சென்காக்கு கடல்நிலைக்கு வந்து, தீவுக்குள் புக முயன்ற ஜப்பானிய வலதுசாரி செயற்பாட்டாளர்களின் குழுவை “வெளியேற்ற” முற்பட்டன. டோக்கியோவானது ஜப்பானில் இருக்கும் சீனத் தூதரகத்தில் ஒரு “வலுவான எதிர்ப்பை” இதற்குத் தெரிவித்தது.

மற்றொரு முன்னணி அரங்கான சீனாவின் தென் சீன ஸ்ப்ராட்லி தீவுகளிலுள்ள இரண்டாம் தோமஸு ஷோல் குறித்து பிலிப்பைன்ஸுடன் மோதலுக்கு வந்திருக்கிறது; அங்கு நிலைகொண்டுள்ள 12 பிலிப்பினோ மரைன்களுக்கு உணவளிக்கும் மணிலாவின் முயற்சியைத் தடைக்கு உட்படுத்தும் வகையிலேயே இது சம்பவித்தது.

USS Nimitz என்னும் அணுசக்தியில் இயங்கும் விமானத் தளத்தை கொண்ட போர்க் கப்பல் குழுவை அமெரிக்கா அனுப்பிவைத்து, பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்க ஆதரவை நிரூபிக்கும் வகையிலான பயிற்சிகளான Reef defending ஐ நடத்தியது. இதை எதிர்கொள்ளும் வகையில் சீனாவும் ஓர் அபூர்வமான பயிற்சியை, அதன் மூன்று கடற்படைப் பிரிவுகளும் கலந்து கொண்ட பயிற்சியை, சாதாரண கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் என்பன இதில் ஈடுபடுத்தப்பட்டனஅமெரிக்கா USS George Washington என்ற கப்பலை 2010ல் மஞ்சள் கடலுக்கு அனுப்பியதற்குப் பின் முதல் தடவையாக இதைச் செய்துள்ளது.

லியின் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு எதிரான கடின நிலைப்பாட்டின் பின்னணியில், நிலம் தொடர்பான மோதல்கள் கொண்ட அனைத்து தரப்பு நாடுகளுமே சோவினிச வெறியைத் தூண்டி தொழிலாள வர்க்கத்தைப் பிரித்துப் பயன்படுத்துகின்றன.

ஐரோப்பாவிற்கு லி வரும் முன்னதாக, ஒரு முழு அளவிலான திறந்த சந்தை மறுகட்டமைப்பை சீன ஆட்சி அறிவித்துள்ளது; இது பொருளாதாரத்தில் அரச மேலாதிக்கம் உடைய பிரிவுகள் தனியார் மூலதனத்திற்கு திறந்துவிடப்படும் நோக்கத்தைக் கொண்டவை. ஜப்பான் “முதலாவது வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்” என்று கண்டித்து லியும் சீன தேசியவாதத்தை தூண்டிவிடுகிறார்; இது வாழ்க்கைத் தரங்களின் சரிவு மற்றும் வேலைகள் அழிப்பிபின் உட்குறிப்புக்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகும்.