சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The death of Ibragim Todashev

இப்ராகிம் ரூடாஷேவின் மரணம்

Tom Carter
3 June 2013

use this version to print | Send feedback

மே 22ம் திகதி, பாஸ்டன் மரதன் ஓட்ட போட்டி நிகழ்ச்சிக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்களில் ஒரு முக்கிய சாட்சியான இப்ராகிம் ரூடாஷேவ் ஒரு FBI  நபரினால் பிளோரிடாவில் அவருடைய வீட்டில் வைத்துக் கொல்லப்பட்டார். குண்டுத் தாக்குதலில் சந்தேகத்திற்குரிய டிஷோகர் மற்றும் டாமேர்லான் சார்நேவுவின்  நண்பர் என்று கருதப்பட்ட ரூடாஷேவ், நிராயுதபாணியாக வீட்டுக் காவலில் இருந்தபோது, ஒரு முறை தலையில் உட்பட இவர் 7 முறை சுடப்பட்டார்.

இந்த அசாதாரண நிகழ்வு, ஒரு மறைப்பு, ஏமாற்றுத்தனம், குற்றம் இவைகளின் துர்நாற்றத்தால் பெரியளவில் அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் புதைக்கப்பட்டுவிட்டது. நான்கு அல்லது ஐந்து முற்றிலும் வேறுபட்ட குறிப்புக்கள் கொலை தொடர்பாக அரசாங்கத்தினால் ஒரு வார காலத்திற்குள் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்றுகூட நம்பத்தகுந்ததாக இல்லை.

பாஸ்டன் மரதன் ஓட்டத்தின் முடிவு இடத்திற்கு அருகே இரண்டு குண்டுகள் வெடித்து 3 பேர் இறந்தும், 264 பேர் காயமுற்று ஒரு மாதத்திற்குப் பின்னர் ரூடாஷேவ் கொலையானது நடந்துள்ளது. ஒரு குறுகிய காலத்திற்குள் பொதுமக்களுக்கு அந்த குண்டுத் தாக்குதல் நிகழ்த்தியவர்கள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டது. விரைவில், 26 வயதுடைய டாமேர்லான் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு படகில் நிராயுதபாணியாக மறைந்திருந்தபோது, அவருடைய 19 வயதுச் சகோதரர் சுடப்பட்டு கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார்.

குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்த நாட்களில், பாஸ்டன் நகரம் திறமையாக இராணுவச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டது. ஒரு பாரிய, முன்னோடியில்லாத பொலிஸ்-இராணுவ நடவடிக்கையில், மக்கள் “அமைதியான இடத்தில்” இருக்குமாறு உத்தரவிடப்பட்டனர், கவச வாகனங்கள் தெருக்களில் பயன்படுத்தப்பட்டன, அதிக ஆயுதம் தாங்கிய SWAT குழுக்கள் வீட்டிற்கு வீடு சோதனைகளை அடிப்படை உரிமைகள் பற்றிப் பொருட்படுத்தாது நடத்தின.

பாஸ்டன் நிகழ்விற்குப் பின், கிட்டத்தட்ட இதேபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்ட அல்லது ஈடுபட முயற்சித்த ஒவ்வொரு நபரையும் போல், மூத்த சகோதரரான சார்நேவை உளவுத்துறைக்கு நீண்ட காலமாகத் தெரியும் என்பதும், அனேகமாக அவர்களுடன் தொடர்பு கொண்டிப்பதும் வெளிவந்துள்ளது. ரஷியாவினால் விபரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது; இந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. டாமர்லேனுடைய நெருக்கமான நண்பருடன், வேறு இருவரும் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின் 10ம் ஆண்டு நிறைவு நாளின்போது கொல்லப்பட்டனர் என்பதும் வெளிவந்துள்ளது; இது இத்தாக்குதல் நடப்பதற்கு ஒன்றரை ஆண்டுக்கு முன் நடந்தது.

இச்சூழலில்தான் சார்நேவ் சகோதரர்களுக்குத் தெரிந்த ஒரு நபரும் பிளோரிடாவில் இருப்பவருமான ஒருவரிடம் முக்கிய தகவல் இருந்தது தெரியவந்தது. ஆனால் இந்த முக்கியச் சாட்சி பகிரங்கமாக விசாரணைக்கு உட்படுத்துவற்கு முன், எந்தக் குற்றச்சாட்டும் அவர் மீது வைக்கப்படாத நிலையில், அவர் ஒரு FBI நபரினால் மிகுந்த சந்தேகத்திற்குரிய சூழலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரூடாஷேவின் மரண தினத்தன்று, ஒரு வழக்கறிஞ்ஞர் இல்லாத நிலையில், அவருடைய குற்றம்சாட்டப்பட முன்னர் வழக்கறிஞ்ஞரை அமர்த்தும் அல்லது மௌனம் சாதிக்கும் உரிமைகள் பற்றி பொருட்படுத்தாமலும், குறைந்தப்பட்சம் நான்கு கூட்டாட்சி மற்றும் உள்ளூர் FBI நபர்களினால் எட்டு மணி நேரம் அவருடன் அவருடைய வீட்டில் இருந்துகொண்டு, பாஸ்டன் மரதன் ஓட்டத்திற்கு முன்னர் கையொப்பமிட்ட கொலைக்குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற முயன்றதாக நம்பப்படுகிறது.

இந்த விசாரணைக்கு முன்பு ரூடாஷேவ் தன்னுடைய அறையில் உள்ள நண்பரிடம் (அவரும் விசாரணைக்கு உட்பட்டிருந்தார்), தான் தன் உயிருக்கு அஞ்சுவதாகத் தெரிவித்திருந்தார்.

மாஸ்கோவில் ஒரு சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில் ரூடாஷேவின் தந்தை பிரேதக் கிடங்குப் புகைப்படங்கள் குறைந்தப்பட்சம் சில துப்பாக்கிச் சூடுகள் அவருடைய மகன் தரையில் கிடந்தபோது சுடப்பட்டிருக்க வேண்டும் என்றும், சுட்டவர் அவர் மேலே நின்றிருக்க வேண்டும் என்றும் கூறினார். ரஷிய மொழியில் பேசிய அவர் தலையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டினால் "உறுதிப்படுத்தும் சுடுதல்அதாவது மாபியா முறையில் வெகு அருகே வைத்து சுடப்படுபவர் இறந்து விடுவதை உறுதி செய்யும் வகையில் சுடப்பட்டிருந்தது

சம்பவத்திற்குப் பின், ரூடாஷேவின் இறுதி கணங்களைப் பற்றி ஒன்றோடொன்று முரண்படும் உத்தியோகப்பூர்வக் குறிப்புக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன, அமெரிக்கச் செய்தி ஊடகத்தாலும் கடமையுணர்வுடன் வெளியிடப்பட்டன.

முதலாவதாகக் கூறப்பட்டது, அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டதைப்போல், “சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள் [ரூடாஷேவ்] ஒரு கத்தியுடன் FBI நபர் மீது பாய்ந்ததை அடுத்துக் கொல்லப்பட்டார்என்று கூறுகிறது. FBI  நபருக்கு உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்கள்” ஏற்பட்டது என்பதை உறுதிசெய்து கூறியது. ஆனால் பின்னர் கத்தி ஏதும் அங்கே இருக்கவில்லை என்று ஒப்புக்கொண்டது.

எதற்காக அதிகாரிகள் இல்லாத கத்தியைப் பற்றி தகவல் கொடுத்தனர் என்பது குறித்துத் தகவல் ஏதும் இல்லை. மாறாகத் தொடர்ச்சியான புதிய குறிப்புக்கள் அளிக்கப்பட்டன; ஒவ்வொன்றும் முந்தையதைவிட நம்பமுடியாமல் இருந்தன. ஓர்லண்டோ தொலைக்காட்சி நிலையம் கொடுத்த குறிப்பு ஒன்றின்படி, FBI நபரின் துப்பாக்கியை பறிக்க ரூடாஷேவ் பாய்ந்தார் என்று கூறியது. மற்றொன்றின்படி, ABC நியூஸ் தெரிவிப்பது, ரூடாஷேவ் ஒரு சமுராய் கத்தியை” எடுப்பதற்குப் பாய்ந்தார்; அது எப்படியோ அவரால் எடுக்கக்கூடியதிலிருந்து தள்ளியிருந்தது என்று அது தெரிவித்தது.

பாக்ஸ் நியூஸ் குறிப்பின்படி, ரூடாஷேவ் உண்மையில் சமுராய் கத்தியை எடுத்துக் கொண்டார் (உண்மையான கத்தி அல்ல, சுவரில் வைக்கப்படும் அலங்காரப் பொருள்), FBI நபரை நோக்கி அதைக் கொண்டு பாய்ந்தார் என்று தெரிவித்தது.

நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள, சமீபத்திய குறிப்பின்படி, ரூடாஷேவ் FBI நபரை உலோகத் தண்டினால்” (ஒருக்கால் விளக்குமாறாக இருக்கலாம்) தாக்கினார் என்று தெரிவித்தது.”

ஓர் ஆயுதத்தை எடுக்க முனைந்தது” என்ற கதை பொலிஸ் துறை “விசாரணைகளில்” நிராயுதபாணியான மக்களைக் கொல்லுவதை நியாயப்படுத்துவதற்கு சாதாகமான, அறிமுகமான முறையாகும்.

பிற விளக்கப்படாத, முரண்பாடான அறிக்கைகளும் உள்ளன. அதாவது வாஷிங்டன் போஸ்ட் மே 29 அன்று, சில விளக்கப்படமுடியாத காரணத்திற்றாக, FBI நபரைத் தனி அறையில் ரூடாஷேவுடன் விட்டுவிட்டு கொலைக்கு முன் மற்றய விசாரணையாளர்கள் நகர்ந்துவிட்டனர் என்று கூறியது.

மறுநாள் மற்றொரு ஆயுதம் வைத்திருக்காத FBI நபரை நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பானது அறையில் இருந்ததாக காட்டுகிறது. ஒரு உயர்மட்டத்தில் இருக்கும் அதிகாரியின் கூற்றை எதுவித விமர்சனமற்ற முறையில் டைம்ஸ் கூறுவது, இந்த FBI நபர் அவருடைய ஆயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தவில்லை, ஏனெனில் அவர் ஒருக்கால் தன் சக FBI நபர் காயப்பட்டுவிடுவாரோ எனக் கவலைப்பட்டார். இது ரூடாஷேவைக் கொன்ற நபர் குறித்த கவலையினால்அல்ல என்பதைக் காட்டுகிறது.

ரூடாஷேவைச் சுட்ட FBI நபரோ அல்லது வேறு தொடர்புடைய எவருமோ பகிரங்கமாக பெயரிடப்படவில்லை, விசாரணைக்காக நிறுத்தப்படவும் இல்லை.

செய்தி ஊடகத்தில் வந்துள்ள தற்காலிக நம்பவியலாத கதைகளைவிட ரூடாஷேவ் கொலைக்கு இன்னும் சரியான விளக்கம் உள்ளது. ரூடாஷேவ் பொஸ்டனில் குண்டுவைத்ததாக கூறப்படும்  டாமர்லான் சார்நேவ் குறித்துத் தகவலை சிலவேளை அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளுடன் அவருடைய உறவுகள் குறித்து வைத்திருந்திருக்கலாம் என நாம் உறுதியாக ஐயுறவுகொள்கின்றோம். இது உத்தியோகப்பூர்வ கதையை இல்லாதொழித்துவிடும்.  நீண்ட விசாரணையின் ஒரு கட்டத்தில் ஒர்லாண்டோவின் FBI நபர்கள் அநேகமாக வாஷிங்டனில் இருந்து எவரிடமோ ரூடாஷேவை மிகத்தீய எண்ணத்துடன்”  கொலை செய்யுமாறு உத்தரவுகளைப் பெற்றனர்.

ரூடாஷேவின் கொலையானது போஸ்டன் நிகழ்வுகள் குறித்த முழு உத்தியோகப்பூர்வத் தகவல் குறித்து இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த வாரம் ரஷியக் கூட்டாட்சி பாதுகாப்புத் துறையானது அமெரிக்க அதிகாரிகளுக்கு போதுமான தகவலை போஸ்டன் தாக்குதல்களைத் தடுக்கக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்த உண்மை அமெரிக்கத் தூதர் வில்லியம் ஆர் கீட்டிங்கினால் மாஸ்கோ பயணத்திற்குப் பின் ஒப்புக்கொள்ளப்பட்டது.

மாஸ்கோவில் அவருடைய அறிக்கைகளில், ரஷிய உளவுத்துறைப் பிரிவுகள் மீது சார்நேவ்  ரஷியாவிற்கு வருகைபுரிந்தால் தகவல் கொடுக்குமாறு கீட்டிங் கூறினார். அமெரிக்கப் பிரிவுகள் தாம் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பற்றி விளக்கவில்லை. அதேபோல் சர்நேவை அமெரிக்காவிலிருந்து போகவும் மீண்டும் வரவும் எவ்வித கேள்வியுமற்று  ஏன் அனுமதித்தனர் என்றும் விளக்கவில்லை.

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் நடந்த            12 ஆண்டுகளுக்கு முன்பை போல், அமெரிக்க உளவுத்துறை பிரிவுகளின் நடத்தை சம்பவங்களை இணைத்துப்பார்க்கத்தவறியதுஎன்று விளக்கிவிட முடியாது. பயங்கரவாதத்தின் மீதான போரைதொடர்ந்து நிதி பெறும் இத்தகைய அமைப்புகள்  தங்களின் மூக்கின் முன்னே என்ன நடக்கின்றது  என்பதைப் பற்றி முற்றிலும் அறியவில்லை என்பது எவ்விதமான நம்பகத்தன்மையையும் கொண்டதல்ல. மேலும் அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களுக்குள் எவரேனும் சந்தர்ப்பத்தை கைவிட்டிருந்தால்,  பின் ராஜிநாமாக்கள் , பதவி நீக்கங்கள் மற்றும் குற்றவிசாரணைகள் கூட எதிர்பார்க்கப்படலாம் . மாறாக எவரும் பெயரிடப்படவில்லை, எவரும் பதவியில் இருந்து இறங்கவில்லை.உண்மைகள் உறுதியானவை. நமக்கு உறுதியாகத் தெரிந்தது என்னவென்றால் போஸ்டன் குண்டுத் தாக்குதலில் தொடர்புடைய ஒரு முக்கிய சாட்சி அரசினால் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்பதுதான். இந்தச் சாட்சி, தன் உயிருக்கு ஆபத்து என்பதைத் தெரிவித்தவர், இரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று எவரோ கொடுத்த சில தகவலை வைத்திருக்க வேண்டும்.

ரூடாஷேவ் கொலைசெய்யப்பட்டது, அரசியல் ஸ்தாபனத்திற்குள் எதிர்ப்பு எதையும் தூண்டவில்லை. செய்தி ஊடகம் அதன் வழக்கமான இழிந்த, தாழ்ந்த மூடிமுறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட்டில் ஒற்றைத் தலையங்கமானது ரூடாஷேவின் மரணம் “பயங்கர சதித் திட்டங்கள் குறித்து எரியூட்டும்” என்று வெளியிட்ட கவலையைத் தவிர, செய்தி ஊடகத்திலோ, கூட்டாட்சி, மாநில, உள்ளூர் அமைப்புக்களிலோ என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமோ விசாரணையோ கோரப்படவில்லை.

அன்வர் அல்-அவ்லகி என்னும் அமெரிக்கக் குடிமகனும் ஒரு முஸ்லிம் மதகுருவும் யேமனில் செப்டம்பர் 2011 இல் கொல்லப்பட்ட பின், அமெரிக்காவிற்குள் படுகொலைகள் நிகழ்தல் குறித்த சாத்தியப்பாடு பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. இது இப்பொழுது நடந்துவிட்டது எனத் தோன்றுகிறது. பொலிஸ் அரசு நோக்கிச் செல்லுதற்கான பாதைக்குள் இன்னும் மற்றொரு வழி கடக்கப்பட்டுவிட்டது.