சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Global capitalist crisis drives China’s pro-market reform

உலக முதலாளித்துவ நெருக்கடி சீனாவின் சந்தைச்-சார்பு சீர்திருத்தத்திற்கு உந்துதல் அளிக்கிறது

John Chan
5 June 2013

use this version to print | Send feedback

ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதம மந்திரி லி கெக்கியாங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP), அரசால் நடாத்தப்படும் பொருளாதாரத் துறைகளை உலக மூலதனத்திற்குத் திறந்து விடும் நோக்கத்தைக் கொண்ட ஒரு மூன்றாம் சந்தைச்-சார்பு சீர்திருத்த அலையை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் ஐரோப்பாவிற்கு பயணிக்கு முன், லி மிகத் தெளிவான தகவலை கொடுத்துள்ளார்; ஒரு சுவிஸ் செய்தித்தாளுக்கு “சந்தைச்-சார்பு சீர்திருத்தங்களை ஆழப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார். தேசிய சீர்திருத்த மற்றும் வளர்ச்சி ஆணையமும், முதலீட்டுத் திட்டங்கள் விரைந்து ஒப்புதல் பெறுதல், வட்டி, பரிமாற்ற விகிதங்கள் தாராளமயப்படுத்தப்படல், எல்லாவற்றிற்கும் மேலாக அரசு நடத்தும் நிதி, எரிசக்தி மற்றும் தொலைத் தொடர்பு போன்ற துறையகளில் தனியார் முதலீடு ஆகியவை குறித்த திட்டங்களையும் கோடிட்டிக் காட்டியுள்ளது. இக்கொள்கை இந்த இலையுதிர்காலத்தில் CCP இன் மத்திய குழுவிற்கு முன்வைக்கப்படும்.

உலகப் பொருளாதார நெருக்கடி கட்டவிழ்த்துள்ள பொருளாதார, பூகோள -அரசியல் அழுத்தங்கள் சீர்திருத்தத்திற்குப் பின்னால் உள்ள உந்து சக்திகளை தீவிரப்படுத்தியுள்ளன. சீனாவின் ஏற்றுமதிச் சந்தைகள், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மிருகத்தன சிக்கன நடவடிக்கைகள், ஊதியக் குறைப்புக்கள், பரந்த வேலையின்மை ஆகியவை தொழிலாளர்களின் வாங்கு திறனை தாக்கியதில் சரிந்துள்ளன. இது மிகப் பெரிய அளவில் சுரண்டப்படும் சீனத் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்படும் மலிவான நுகர்பொருட்களுக்கான உலகத் தேவையை குறைத்துள்ளது.

சீனாவில் “ஏற்றுமதி-வழியிலான” வளர்ச்சி மூலோபாயம் தோற்றுவிட்டது, அதன் பொருளாதாரம் நீடித்திருப்பதற்கு காரணமே, பெய்ஜிங் 2008ல் $650 பில்லியன் ஊக்கப் பொதியை கடன் கொடுக்கப் பெரிதும் விரிவாக்கம் செய்ததால்தான். இதையொட்டிப் பின்னர் வங்கிகள் கொடுத்த கடன் மொத்தச் செலவுகளை ட்ரில்லியன் கணக்கா டாலர்களாக மாற்றின—இது உள்ளூர் அரசாங்கங்களை 2 டிரில்லியன் டாலர்களுக்கும் மேலாக கடனில் ஆழ்த்தி, இலாப விகிதங்களை குறைத்து, ஒரு வீட்டுக் குமிழியை அதிகப்படுத்தியுள்ளது; இது சீனாவின் வங்கிமுறையை சூழ்ந்துவிடக்கூடியது.

வெள்ளமென மலிவான கடன் கிடைத்தபோதிலும்கூட, வளர்ச்சி  தொடர்ந்து தாமதமாகத்தான் உள்ளது. இது இந்த ஆண்டு 7% ஐ எட்டலாம்; இது வேலையின்மை உயர்வதை தடுக்கத் தேவையான 8% உயரும் என CCP நம்புவதைவிட மிகவும் குறைவாகும்.

ஒபாமா நிர்வாகத்தின் “ஆசிய முன்னிலை” என்பதன் மூலம் ஜி-லி தலைமை, வாஷிங்டனில் இருந்தும் அழுத்தத்தை எதிர்கொள்கிறது; அந்நாடு ஆக்கிரோஷமாக சீனாவை இராணுவரீதியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. இது சீனாவின் பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சி மேற்கு பசிபிக்கில் உள்ள வாஷிங்டனின் செல்வாக்கை சவால் விடும் அளவிற்கு அது அனுமதிக்குமுன், சீனாவைச் சுற்றிலும் விரோதப் போக்குடைய இராணுவ கூட்டணிகளையும், தளங்களையும் கொண்டுவரும் நோக்கத்தை கொண்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் CCP அதிகாரத்துவமும் உடன்படக்கூடிய ஒரு பகுதி தொழிலாள வர்க்கத்தின் மீது தடையற்ற சந்தைத் தாக்குதல்களை நடத்துவதுதான்: CCP அதிகாரிகளும் சீனாவில் உள்ள சர்வதேச நிறுவனங்களும் உற்பத்தித்திறனை அதிகரித்து இலாபங்களைப் பெருக்க விரும்புகின்றன. ஆளும் வட்டங்களில், சர்வதேச வணிகத்தை இந்தியாஅல்லது வியட்நாம் பக்கம் திருப்ப வகை செய்த, 2010 ஹோண்டா கார்த்தொழிலாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்த அலைப் போராட்டங்களால் CCP ஊதிய உயர்வுகள் கொடுக்க தள்ளப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாக அதிகரித்த அதிருப்தி உள்ளது.

ஒரு முக்கிய அமெரிக்க கோரிக்கை, சீனாவில் 120 மிகப்பெரிய “அரச ஏகபோகங்களை” தகர்ப்பதாகும்—இந்த இலக்கு சீனா 2030 என்னும் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது; கடந்த ஆண்டு இதை, உலக வங்கியின் உதவியுடன் லி இயற்றியிருந்தார். அரச நிறுவனங்கள், எரிசக்தி, தொலைத்தொடர்பு, இரயில்வேக்கள் போன்ற மூலோபாயத் துறைகள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை சொத்துக்களாக கொண்டிருக்கையில், அவற்றைத் தனியார்மயமாக்குவது உயர்மட்ட CCP அதிகாரத்துவத்தினருக்கு பணமழை போல் ஆகும்; தவிர, அவர்களுடைய வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கிகள் என்னும் வணிகப்பங்காளிகளுக்கும்.

அரசிற்கு சொந்தமான சொத்துக்கள், இருப்புக்கள்மீது ஊகம் நடத்தும் பல தற்போதைய மற்றும் முன்னாள் CCP தலைவர்களின் பிள்ளைகள், தனியார் பங்கு அல்லது முதலீட்டு வங்கி நிர்வாகிகளாக தீவிரமாக இருப்பவர்கள், புதிய தனியார்மயங்களில் பெரும் சொத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும்.

இக்கொள்கையை செயல்படுத்தும் ஜியும் லியும், 1980 களில் டெங் ஜியாவோபிங்கின் கீழ் முதலாளித்துவத்தின் மீட்பு முதல் CCP க்குள்ளே உருவான ஒட்டுண்ணித்தன சிவப்பு பிரபுத்துவத்தின் பொருத்தமான பிரதிநிதிகளாக உள்ளனர். சீனாவில் மிகவும் வெறுக்கப்படும் சமூகமாதிரிகள் ஒன்றைத்தான் ஜி பிரதிநிதித்துவப்படுத்துகிறார்ஒரு இளவரசர் போல்முந்தைய தலைமுறை உயர்மட்ட அதிகாரத்தவத்தினரின் குழந்தை; இவர்கள் முதலாளித்துவ மீட்பில் இருந்து ஏராளாமான அதிகாரத்தையும் செல்வத்தையும் சேர்த்துள்ளனர்.

முக்கிய தடையற்ற சந்தைப் பொருளாதார வல்லுனர் லி யினிங்கின் மாணவரான லி கெக்கியாங் உத்தியோகபூர்வ கொள்கையை 1990களில் வெளிப்படுத்த உதவினார்; இதுதான் பல மில்லியன் வேலைகளை அழித்த தனியார்மய கடைசி அலையை நியாயப்படுத்தியது.

CCP இன் அதிகாரவட்டத்துடன் நெருக்கமாக இணைந்துள்ள சீனாவின் வணிக உயரடுக்கு, எஞ்சியிருக்கும் அரச கட்டமைப்புக்களில் இருந்தும் முறித்துக்கொள்ள விரும்புகிறது. அதிலிருந்துத்தான் சொத்துக்களை சேர்த்தது. இருக்கும் தடையற்ற சந்தைக் கொள்கைகள், தொழிலாளர்களை தீவிரமாக சுரண்ட அனுமதித்து அதிக இலாப விகிதம் கொடுப்பதோடு, அவர்கள் சீனாவில் கட்டமைத்துள்ள முந்தைய செல்வங்களுக்கும் உறுதியான நிலைத்த அஸ்திவாரங்களையும் கொடுக்கிறது.

இத்தகைய கொள்கையை ஏற்பதின் மூலம், CCP தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதல் போக்கிற்கு தன்னை அமைத்துக்கொண்டுள்ளது. அதிக உற்பத்திக்கான அழுத்தங்கள், ஊதியக்குறைப்புக்கள் மற்றும் உயர் வேலையின்மை விகிதம் ஆகியவை ஏற்கனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் பொலிசையும் அடிக்கடி மோதலில் ஈடுபடுத்தியுள்ளன. சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி, பரந்த சம்பவங்கள் எனப்படுபவை 2005ல் 90,000த்தில் இருந்து 2010ல் 180,000 என இருமடங்காகியுள்ளன.

மேற்கத்தைய செய்தி ஊடகத்தில் எழுதிய CCP அது எதிர்பார்க்கும் ஆபத்துக்களையும் தெளிவாக்கியுள்ளது. CPP யின் மத்திய கட்சி பள்ளியின் முன்னாள் துணைத்தலைவரான டெங் யுவென், பைனான்சியல் டைம்ஸில், அரசாங்கம் ஏதேனும் பெரும் கொள்கைத் தவறை இழைத்தால், புரட்சி ஏற்படாது என எவரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. மேலும் ஒரு தேசிய எழுச்சி தவிர்க்கப்பட்டாலும், கடுமையான சமூகக் கொந்தளிப்பு உள்ளூரளவில் ஏற்படும். ஆளும் கட்சி இந்த எழுச்சிகளை சமாளிக்க தவறினால், இது ஒரு புரட்சியாக உருவெடுக்கும்.” 

தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டங்கள் பற்றிய தகவல்கள், 1949 புரட்சிக்குப் பின் தனிநாட்டில் சோசலிசத்தை கட்டமைத்தல்” என்ற CCP இன் ஸ்ராலினிச முன்னோக்கின் வரலாற்றுத் திவால்தன்மையைத்தான் காட்டுகின்றது. இறுதிப்பகுப்பாய்வில், 1970களின் சமூக மோதல்கள் மற்றும் தொழிலாள வர்க்க போராட்டங்களின் மத்தியில் CCP அதிகாரத்துவம் மீண்டும் முதலாளித்துவத்தை நிறுவிக்கொண்டுள்ளது, ஏனெனில் மாபெரும் மார்க்சிசவாதியான லியோன் ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளபடி, எந்த ஒரு தனிநாட்டிற்குள்ளும் உள்ள வளங்களை கொண்டு ஒரு சோசலிச சமுதாயத்தை கட்டமைப்பது என்பது சாத்தியமில்லாதது.

மூன்று தசாப்தங்களுக்கு பின், சீனாவில் தோற்றுவிக்கப்பட்டுள்ள சமுதாயம், மேற்கத்தைய மூலதன உறவுகள் மூலம் உலகப் பொருளாதாரத்தை அணுகிய அதன் சொந்த முரண்பாடுகளினால் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. CCP வெளியில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போர் என்னும் எழுச்சி பெறும் ஆபத்தைக் காண்கிறது; உள்நாட்டில் தொழிலாள வர்க்க அதிருப்தி என்னும் எழுச்சி பெறும் அச்சுறுத்தலையும் புரட்சியையும் காண்கிறது.

விமர்சன ரீதியான பணி, திவாலான முதலாளித்துவ ஒழுங்கிற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட, அரசியல் சுயாதீனமான போராட்டத்தின் அபிவிருத்தியில் தங்கியுள்ளது.

சீனத் தொழிலாளர்கள், சந்தைச்-சார்பு சீர்திருத்தங்களை குறைகூறுகின்ற, சீனா நவ- ஏகாதிபத்தியத்தால் எடுத்துக் கொள்ளப்படும் அபாயத்தைப் பற்றி எச்சரிக்கின்ற, CCP இன் பல போலி இடது அல்லது “கன்சர்வேடிவ்” பிரிவுகளை நம்பக்கூடாது. அவர்கள் ஒரு சோசலிச நிலைப்பாட்டில் இருந்தல்ல, பிற்போக்குத்தன பொருளாதார தேசியவாதத்தில் தான் தளம் கொள்கின்றனர். மிகப் பெரிய அரச நிறுவனகளை தேசிய முன்னிலை அமைப்புக்கள் என்று தென் கொரியாவில் இருக்கும் சாம்சுங், யுண்டாய்போல் மாற்ற விரும்புகின்றன. இதில் CCP தலைவர்களுடைய குடும்பங்கள்தான் முக்கிய உரிமையாளர்களாக இருப்பர்.

சீனத் தொழிலாளர்கள், அமெரிக்கா, ஆசிய-பசிபிக் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தமது வர்க்க சகோதரர்களுடன் இணைந்து, கொத்தடிமைமுறை சுரண்டல், மந்த நிலை, போர் அதாவது முதலாளித்துவம் மற்றும் தேசிய அரசு அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க சுயாதீனாமாக போராட வேண்டும். இதன் பொருள், சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தின் பாகமாக, முதலாளித்துவ CCP ஆட்சியை அகற்றிடவும், உண்மையான தொழிலாளர் அரசாங்கத்தை அமைத்திடவும் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதாகும்.

அத்தகைய போராட்டத்தை மேற்கொள்ளும் திறனுடைய ஒரு அரசியல் தலைமையை வளர்த்தெடுக்க அத்தியாவசியமான நடவடிக்கை, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் சீன பகுதியை கட்டமைப்பதுதான்.