சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Turkey at the crossroads

துருக்கி ஒரு திருப்புமுனையில்

Bill Van Auken
6 June 2013

use this version to print | Send feedback

நூறாயிரக்கணக்கான மக்கள் இஸ்தான்புலின் தக்சிம் சதுக்கத்தை நிறைத்து அங்காரா, இஸ்மிர் இன்னும் 65 நகரத் தெருக்களில் ஆர்ப்பாட்டம் நடாத்திய ஒரு வாரத்திற்குப் பின், ஜூன் 4ம் திகதி துருக்கிய ஜனாதிபதி அப்துல்லா குல், கவலை கொண்ட வணிகர்களுக்கு இந்நிகழ்வுகள் 2011ல் துனிசியா, எகிப்தில் வெடித்த புரட்சிகளுடன் ஒப்பிடப்படக்கூடியதல்ல என்ற உத்தரவாதத்தை வழங்கினார்.

இஸ்தான்புல் பங்குச் சந்தை மக்கள் எழுச்சியினால் 10.5% சரிவதற்கு ஒரு நாள் முன்புதான் குல், துருக்கியின் சர்வதேச முதலீட்டாளர்கள் சங்கத்தில் பேசினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றகாரணங்களால்தான் லண்டனில் கார்கள் எரிக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன என்றார் குல். ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடியினால் விளைந்த எழுச்சிகளின் போது மக்கள் சதுக்கங்களில் நிரம்பினர். வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு பல மாதங்கள் அமெரிக்காவில் தொடர்ந்தன. துருக்கியில் நடப்பதும் இந்நாடுகளில் நடந்தவற்றைப் போல்தான். என மேலும் கூறினார்.

இத்தகைய உறுதிகள், தொடர்ந்த சமூக எதிர்ப்புக்கள் தங்கள் மூலதனங்களை அச்சுறுத்துகின்றன என அஞ்சும் வணிகர்களுக்கு அதிகம் திருப்தியை தரப்போவதில்லை.

கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே திருப்புமுனையில் நிற்கும் துருக்கி, இரண்டின் வெடிப்புத் தன்மை உடைய முரண்பாடுகள் அனைத்தையும் தன்னிடத்தே இழுத்துள்ளது. பெரும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் தகுதி பெற துருக்கி முயல்கிறது; அதே நேரத்தில் அமெரிக்க ஆதரவுடைய சிரிய ஆட்சி மாற்றத்திற்கான குறுங்குழுவாத போரில் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

வாஷிங்டனின் கையாள் போல் செயல்படும் துருக்கிய பிரதம மந்திரி ரெசப் தயிப் எர்டோகான், ஆயுதமேந்திய எழுச்சியாளர்களை அடக்கும் அசாத், இராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோரினார். தன் மக்களையே கொல்லும் தலைவர் அனைத்து சட்டபூர்வதன்மையும் இழந்துவிட்டார் என்று அவர் அறிவித்தார். இதுவரை எர்டோகானின் அடக்குமுறைப் படைகள், மூன்று அமைதியான துருக்கிய எதிர்ப்பாளர்களை கொன்றுள்ளதுடன், 3,200க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றுள்ளதுடன் 3,300 பேருக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2011 இன் இரண்டு புரட்சிகள் மற்றும் ஜனாதிபதி குல் மேற்கோளிட்ட முன்னைய நிகழ்வுகளைப் போலவே, துருக்கியப் புரட்சி முதலாளித்துவ சமூகத்தின் கட்டமைப்பிலும் மற்றும் அதன் உலகளாவிய நெருக்கடியிலும் ஆழ்ந்த வேர்களைக் கொண்டுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக பிரதம மந்திரி எர்டோகான் மற்றும் அவருடைய இஸ்லாமியவாத AKP (நீதிக்கும் வளர்ச்சிக்குமான கட்சி) ஆட்சியில் துருக்கியில் முன்னோடியில்லாத அளவிற்கு பெருகியுள்ள சமூக சமத்துவமின்மையினால் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றது.

இஸ்தான்புலின் கெஜி பூங்காவை ஒரு வர்த்தக தொடர் மையமாக மாற்றுவதற்காக தகர்க்கும் முயற்சியை தடுக்க முற்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான எதிர்ப்பாளர்கள் அடக்கப்பட்டமை எப்படி இத்தகைய சக்திவாய்ந்த, நாடுதழுவிய எதிர்ப்பு இயக்கத்திற்கு எரியூட்டியதையும், நூறாயிரக்கணக்கான மக்கள் துருக்கிய பொலிஸ் கலகப்பிரிவுடன் மோத இட்டுச்சென்றது என்பதையும் வேறு எவ்வகையிலும் விளக்கிவிட முடியாது.

பூங்கா திட்டமே பொது இடத்தைத் தனியார்மயமாக்கி, AKP இன் முக்கிய அரசியல் அடித்ததளமாகவுள்ள ஒரு சிறு எண்ணிக்கையிலான முதலாளித்துவத்தினரை செல்வக் கொழிப்புடையவர்களாக ஆக்குவதுடன், அதே நேரத்தில் இஸ்தான்பூலை செல்வந்தர்கள் மற்றும் வசதி பெற்றவர்களுக்கு சிறந்த உறைவிடமாக தொழிலாள வர்க்கத்தை வெளியே விரட்டுவது என்பது எர்டோகான் அரசாங்கத்தின் ஆக்கிரோஷ மற்றும் பிற்போக்குத்தன சந்தைக் கொள்கைகளின் சின்னமாகும். இந்தப் பேரத்தில் எர்டோகான் தன்னுடைய இஸ்லாமிவாதப் பிற்போக்குத்தனத்தை முன்னெடுத்து, தக்சிம் சதுக்கத்தில் ஒரு மசூதி கட்டுவதாக அச்சுறுத்தியுள்ளார். அச்சதுக்கமோ பாரம்பரியமாக துருக்கிய தொழிலாளர் இயக்கம் கூடுமிடமாகும். அதேபோல் துருக்கியின் அலாவிச் சிறுபான்மையினரைக் கொன்று குவித்ததன்  மூலம் இழிபேர் பெற்ற ஒரு 16ம் நூற்றாண்டு ஒட்டோமான் சுல்தானின் பெயரை ஒரு பாலத்திற்கு வைக்க முன்வந்துள்ளார்.

துருக்கிய தொழிலாள வர்க்கம்தான் AKP அரசாங்கத்தின் தாக்குதல்களின் முக்கிய இலக்காகியுள்ளது. ஏனைய இடங்களைப் போலவே, துருக்கியில் இருக்கும் முதலாளித்துவத்தினரும் 2008 உலக நிதிய நெருக்கடியை பயன்படுத்தி ஊதியங்களைக் குறைக்கவும், தொழிலாளர் செலவுகளை குறைக்கவும் அதை ஒரு வாய்ப்பாக கொண்டுள்ளனர். 2009 ஆரம்பத்தில் வேலையின்மை 16% என உயர்ந்துவிட்டது. அதற்குப்பின் வளர்ச்சி புதிய வேலைகள் ஏதும் உருவாக்கப்படாமலே அடையப்பட்டுள்ளது. மாறாக, பணிநீக்கங்கள் என்னும் அச்சுறுத்தல்கள் வேலை செய்பவர்களை இன்னும் கடுமையாக வேலை செய்யவும், குறைந்த ஊதியங்களுக்கு கட்டாயப்படுத்த பயன்படுத்தவும் இன்னும் பல சந்தர்ப்பங்களில் பணிகள் துணை ஒப்பந்த முறைக்கு செல்வதுடன் தற்காலிகமாக வேலைக்கமர்த்தும் முறையையும் ஏற்க வைக்கப்படுகிறது.

2011ல் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின்படி, துருக்கி, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (OECD) 34 நாடுகளில் வருமான சமத்துவமின்மையில் இரண்டாம் உயர்ந்த நிலையில் உள்ளது. இப்புள்ளி விவரங்கள் மெக்சிகோவைவிடச் சற்றே உயர்வானதும், மூன்றாம் மிக அதிக சமத்துவமற்ற நாடான அமெரிக்காவை விட சற்றே மோசமானதுமாகும்.

கிரேக்கம் மற்றும் ஐரோப்பாவில் உள்ள பிற நாடுகளைப்போல், நாட்டை ஒரு குறைவூதியத் தொழிலாளர் அரங்காகவும் மற்றும் அதியுயர் இலாபத்திற்கான சிறந்த இடமாகவும் காணும் சர்வதேச வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் மிருகத்தனமான தாக்குதலை துருக்கித் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தொழிற்சங்கம் வழிநடத்தும் வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஜூன் 5 அன்று சேர்ந்தாலும், தொழிலாள வர்க்கம் முழுவதும் இனிமேல்தான் உறுதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. துருக்கிய தொழிற்சங்கங்கள் எர்டோகான் அரசாங்கத்துடன் போராட இதுவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அதன் 2008 நெருக்கடியை எதிர்கொள்ளும் முதலாளித்துவ சார்பு நடவடிக்கைகளுக்கு இசைவு கொடுத்து கூடுதலாக வாங்கவும் (Go shopping) என்னும் கோஷத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரத்தில் சேர்ந்துள்ளன.

அரசாங்கத்துடன் ஓர் உறுதியான மோதலை தொழிற்சங்கங்கள் விரும்பவில்லை. ஏற்கனவே அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆலோசனைக் குழுக்களுடன் முற்றிலும் இணைந்துள்ளன. அவற்றிற்கு ஆதரவு கொடுக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூடிச்சென்று அண்டை நாடான கிரேக்கம் இன்னும் பல இடங்களில் சுமத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன.

எர்டோகனுடைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்க இயக்கம், இத்தொழிற்சங்கங்களுக்கு எதிராகவும் இவற்றிலிருந்து சுயாதீனமாக இருப்பதன் மூலம்தான் வெளிப்படப்பட முடியும்.

துருக்கிய நிகழ்வுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியையும் மற்றும் பாரசீக வளைகுடாவிலும், மத்திய ஆசியாவிலும் எண்ணெய் செழிப்புடைய பகுதிகளில் அதனுடைய இராணுவ ஆதிக்கம் செலுத்தும் பிரச்சாரத்தின் ஆழ்ந்த நெருக்கடியையும்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதில் ஒரு நேட்டோ அங்கத்துவ நாடான துருக்கி முக்கியமாக உதவுகிறது.

தற்போதைய இயக்கம் வெடிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் எர்டோகான், வாஷிங்டனில் ஒபாமாவுடன் அருகே நின்று கொண்டிருந்தார்; ஒபாமா இவரை பிராந்தியத்தில் மிகவும் வலுவான நண்பர் மட்டுமல்ல ஏன் உலகிலேயே கூட என்று புகழ்ந்திருந்தார். எர்டோகான் அரசாங்கத்தை வாஷிங்டன் மத்திய கிழக்கிற்கான ஒரு மாதிரி எனப் பாராட்டுகிறது. இதன் பொலிஸ் அரச முறையின் அரசியல் எதிர்ப்பாளர்கள் அடக்கப்படுவது, செய்தியாளர்கள், சிறுபான்மை இனத்தினர் அடக்கப்படுவது ஆகியவை இருந்தபோதிலும், எகிப்திலும் துனீசியாவிலும் புரட்சிகர மக்களுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவளித்துள்ள ஆட்சிகளைப்போல் இது ஒரு மிதவாத இஸ்லாமிய ஆட்சி எனக்கூறுகின்றது இப்பொழுது துருக்கிய மக்கள் இந்த மாதிரியை நிராகரித்துள்ளனர்.

துருக்கியை சிரியா, ஈரானை உறுதிகுலைக்கும் நடவடிக்கைகளில் ஒரு முன்னணித் தளமாகப் பயன்படுத்தும் வாஷிங்டன், துருக்கியையே உறுதிகுலைப்பதிலும் வெற்றி அடைந்துள்ளது; இங்கு பெரும்பாலான மக்கள் அல் குவைவேதா இஸ்லாமியப் போராளிகள் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றும் பினாமிப் போரில் பயன்படுத்தவதை எதிர்ப்பதுடன், இதேபோன்ற சக்திகள் தங்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்படும் என்று அஞ்சுகின்றனர்.

துருக்கி ஓர் திருப்புமுனையில் நிற்கிறது. போராட்டத்திற்கு முன்வரும் துருக்கிய தொழிலாளர்கள் ஒரு அப்பட்டமான தேர்வின் முன்நிற்கின்றனர். ஏகாதிபத்தியம் அதன் மூலோபாய, இலாப நலன்களுக்காக நடத்தும் ஈரான், அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் பிறசக்திகளை ஈடுபடுத்தும் ஒரு உலகப் போர் வெடிப்பிற்கான சாத்தியப்பாடு கொண்ட குருதி கொட்டும் குறுங்குழுவாத போர்களுக்குள் இன்னும் நேரடியாக இழுக்கப்பட்டுவிடுமா?

அல்லது கிராமப்புற ஏழைகளையும் ஒடுக்கப்படுபவர்களையும் தனக்குப் பின்னே அணிதிரட்டி ஏகாதிபத்தியத்திற்கும் மற்றும் மதசார்பற்ற, இஸ்லாமியவாத துருக்கி முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எதிராக ஒரு சுயாதீன புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் தொழிலாள வர்க்கம் தம் சொந்த சோசலிசத் தீர்வை முன்வைக்குமா?

இஸ்தான்புல் தெருக்களுக்கும் துருக்கியின் நகரத் தெருக்களுக்கும் வந்துவிட்ட எதிர்ப்பு இயக்கத்தின் உடனடித் தலைவிதி உறுதியற்றது. ஆனால் துருக்கியத் தொழிலாள வர்க்கம் போராட்டத்திற்குள் வருவது என்பது மத்திய கிழக்கு, ஐரோப்பா இன்னும் அப்பால் உள்ள பகுதிகளிலும் புரட்சிகர தாக்கங்கள் கொண்ட உலகளாவிய வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு கேள்வியாகும்.