சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : வரலாறு

This week in history: June 3-9

வரலாற்றில் இந்த வாரம்

3 June 2013

use this version to print | Send feedback

வரலாற்றில் இந்த வாரம், இந்த வாரத்தில் ஆண்டு நிறைவை அடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சிறிய பொருட் சுருக்கத்தை வழங்குகிறது

25 ஆண்டுகளுக்கு முன்னர்: போபால் நிவராணக் கட்டணத்தில் 192 மில்லியன் டாலரை யூனியன் காபைட் கொடுக்கத் தவறியது

1988 ஜூன் 3 அன்று, அமெரிக்காவை தளமாகக் கொண்ட ராட்சத இரசாயனக் கம்பனியான யூனியன் காபைட், 1984ல் போபாலில் நடந்த வாயுக் கசிவு அழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நஷ்ட்ட ஈடான 192 மில்லியன் டாலரை கொடுக்க முடியாது என அறிவித்தது. இந்த இடைக்கால கொடுப்பனவை செலுத்துமாறு இந்திய உயர் நீதிமன்றமே கட்டளை பிறப்பித்திருந்தது. அறிக்கை ஒன்றை வெளியிட்ட யூனியன் காபைட், சகல விடயங்கள் சம்பந்தமாகவும் எடுக்கப்படும் கடைசித் தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் முழுமையாக அணுகப்படும் என தெரிவித்தது.



போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள்

1984 டிசம்பர் 3 போபால் வாயுக்கசிவு அழிவு நடந்ததில் இருந்தே, வரலாற்றில் இந்த மோசமான தொழிற்துறை விபத்தில் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கானவர்கள் பற்றி யூனியன் காபைட் அலட்சியத்தை பின்பற்றியது. பூச்சிக்கொல்லி உற்பத்தி செய்யப் பயன்படும், சுமார் 40 தொன்களுக்கும் அதிகமான நச்சுத்தனமான மீதைல் ஐசோசைனேட் வாயுவும் மற்றும் ஏனைய பெயர் தெரியாத நச்சுக்களும் போபால் தளத்தில் இருந்து வெளியேறின. அயல் பிரதேசம் முழுவதும் வாயுவால் நிரம்பியதோடு, சுமார் அரை மில்லியன் மக்கள் டொக்ஸிக் வாயுவால் தாக்கப்பட்டதுடன் உடனடியாக 8,000 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 170,000 குடியிருப்பாளர்கள் ஆஸ்பத்திரிகளிலும் தற்காலிக மருத்துவ நிலையங்களிலும் சிகிச்சை பெற்றனர்.

192 மில்லியன் டாலர் கட்டணத்தை காபைட் கொடுக்க மறுத்தமை, போபாலில் நடந்த அழிவில் தனது பொறுப்பை குறைத்துக்கொள்ளும் அதன் கூட்டுத்தாபன உபாயத்தின் ஒரு பகுதியாகும். இந்த பல்தேசியக் கூட்டுத்தாபனத்தினால் கோரப்பட்ட இறுதி தீர்மானம், மனித அழிவை மட்டுப்படுத்துமாறு இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டிருந்த அதேவேளை, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மாசடைவினால் இன்னமும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

கம்பனியின் அறிக்கை ஒன்று, எல்லா பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இறுதி தீர்மானத்தை தாமதப்படுத்துவதாக இந்திய அரசாங்கத்தை குற்றஞ்சாட்டியது. ஆயினும், தனது நிதிய மற்றும் குற்றவியல் பொறுப்பை மட்டுப்படுத்திக்கொள்வதன் பேரில், தலத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த டொக்ஸிக் இரசாயனங்களின் பட்டியலை வெளியிடக் கூட யூனியன் காபைட் மறுத்துவிட்டது.

டொமினிக் லபீரே (Dominique Lapierre), ஜாவிர் மொரோ (Javier Moro) ஆகியோர் எழுதி 2002ல் வெளியிட்ட ஃபைவ் பாஸ்ட் மிட்நைட் இன் போபால் (Five past Midnight in Bhopal) என்ற நூல் இந்த அழிவின் உடல்நலக் கேடுகளை விவரிக்கின்றது.

இன்று, இந்த துன்பத்தினால் 150,000 நாட்பட்ட நோயாளர்கள் போபாலில் உள்ளனர். 10 முதல் 15 வரையான நோயாளர்கள் மாதம் உயிரிழக்கின்றனர். சுவாச சிரமம், தொடர் இருமல், கண் எரிச்சல், இளம் வயது குருடு, ஊக்கமின்மை, மீண்டும் மீண்டும் வரும் காய்ச்சல், தோல் எரிச்சல், பலவீனம் மற்றும் மனத்தளர்ச்சியும் இன்னமும் அவர்களை வாட்டிவருகின்றன. தொடர்ச்சியான புற்று நோய் மற்றும் எலும்புருக்கி நோய் பற்றி குறிப்பிட வேண்டியதே இல்லை... இறுதியாக 14-18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மத்தியில் வளர்ச்சியின்மை அதிகரிக்கின்றது. அவர்கள் 10 வயதானவர்கள் போல் இருக்கின்றனர். டொக்ஸின் புகையின் சரியான செறிவை காபைட் வெளிப்படுத்தாத காரணத்தால், இன்று வரையும் மருத்துவ அதிகாரிகள் தக்க சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளனர்.    

470 மில்லியன் டாலர் கொடுப்பதாக 1989ல் நீதிமன்றத்திற்கு வெளியில் எடுக்கப்பட்ட முடிவை இந்திய உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த தொகை, ஆரம்பத்தில் இந்திய அரசாங்கம் கோரிய 3 பில்லியன் டாலரில், 16 வீதத்தையும் விடக் குறைவானதாகும். இந்த நஷ்ட்டஈடு இறுதியாக விநியோகிக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 12,000 ரூபாய் -500 அமெரிக்க டாலர்கள்- அற்ப தொகையையே பெற்றனர்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர்: கொமேனி கைது செய்யப்பட்ட பின்னர் ஈரானில் வன்முறைகள்

ஈரானின் ஷா

1963 ஜூன் 5 அன்று, அமெரிக்க-ஆதரவு சர்வாதிகாரியான ஷா மொஹமட் ரீஸா பாலவியை கடுமையாக கண்டனம் செய்து கூம் என்ற இடத்தில் உரையாற்றிய, மதகுரு அயதுல்லாஹ் ருஹுல்லாஹ் கொமேனி கைது செய்யப்பட்டதை அடுத்து, ஈரானில் இரண்டு நாள் வன்முறைகள் வெடித்தன. இராணுவச் சட்டத்தை பிரகடனம் செய்த ஷா, சுட்டுக் கொல்லும் கட்டளை பிறப்பித்தார். இராணுவமும் பொலிசும் வன்முறையை நசுக்கியபோது, 400க்கும் அதிகமானவர்களை கைது செய்ததோடு நூற்றுக்கணக்கானவர்களை, சிலவேளை ஆயிரக் கணக்கானவர்களை கொன்றன. கொமேனி ஆகஸ்ட்டில் விடுதலை செய்யப்பட்டதோடு அதன் பின்னர் உடனடியாக நாடுகடத்தப்பட்டார். அவர் அதிக காலம் ஈராக்கில் வாழ்ந்தார்.

1963 ஜனவரியில் ஷா புதிய சீர்திருத்த வேலைத் திட்டத்தை அறிவித்து அதற்கு வெள்ளைப் புரட்சி எனப் பெயரிட்டார். பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மற்றும் கல்வியை மேம்படுத்துதல் உட்பட குறிப்பிட்ட சில சமூக சீர்திருத்தங்களுடன் சேர்த்து, பிரபுத்துவ நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலங்களை வாங்கி விவசாயிகளுக்கு நில உரிமையை முன்னிலைப்படுத்துவதும் இதில் அடங்கும். தமது நெறிமுறை அதிகாரம் மற்றும் கல்வி மீதான அவர்களின் கட்டுப்பாட்டுக்கும் இந்த வேலைத்திட்டம் விடுக்கும் தெளிவான சவாலை சியைட் மதகுருக்கள் கசப்புடன் எதிர்த்தனர். மேலும், ஷாவின் சீர்திருத்தத்தால் சமரசம் செய்துகொள்ளப்பட்ட நிலவுடமை பிரபுத்துவ ஒழுங்கில் இருந்து பல உயர்-மட்ட மதகுருக்கள் வெளித்தள்ளப்பட்டனர். இறுதியாக, ஷா மீதான தொழிலாள வர்க்கத்தினதும் விவசாயிகளதும் எதிர்ப்பை திசை திருப்பும் முயற்சியில் கொமேனி முன்கூட்டி செயற்பட்டார்.

இது, 1940கள் மற்றும் 1950களின் ஆரம்பத்திலும் தொழிலாள வர்க்கத்தினுள் தீர்க்கமான செல்வாக்கைச் செலுத்திய ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சி அல்லது டுதே கட்சி (Tudeh Party) என்பதினாலேயே சாத்தியமானது. எவ்வாறெனினும், ஸ்ராலினி இரண்டு கட்ட புரட்சிக் கோட்பாட்டை அடுத்து, அது அதிகாரத்தை சவால் செய்வதற்கான சந்தர்ப்பங்களை தவறவிட்டு, 1953ல் சி.ஐ.ஏ. சதிப்புரட்சி மூலம் ஷாவை மீண்டும் ஆட்சிக்கு வரவைக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு நிலைமைகளை உருவாக்கிவிட்டது. 1960களின் ஆரம்பத்தில், இன்னும் வலது பக்கம் சென்ற டுதே கட்சி, ஷாவின் சொந்த ஆட்சியில் இருந்த எதிராளிகளுடன் கொடுக்கல் வாங்கலை எதிர்பார்த்தது.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: சீன-சோவியத் ஆக்கிரமிப்பு-தவிர்ப்பு உடன்படிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டது


1937
ல் சியாங் கேய்-சேக் துருப்புக்களை பார்வையிடுகிறார்.

தேசிய சட்ட சபையின் சீனத் தலைவர் சுன் போ, 1938ல் இந்த வாரம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்தமை, இரகசிய சீன-சோவியத் ஆக்கிரமிப்பு-தவிர்ப்பு உடன்படிக்கையின் விபரங்கள் பகிரங்கப்படும் சந்தர்ப்பமாக இருந்தது. சீனா மீது ஜப்பான் படையெடுத்த பின்னர், 1937 கோடை காலத்தின்போது இந்த இரு யூரோ ஏசியன் அரசுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு உத்தேச ஒப்பந்தம் அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திடப்பட்டது என, மாஸ்கோவில் உள்ள வெளியுறவு ஆணையாளர் முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.

இந்த உடன்படிக்கை, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு இடையிலான பாதையில், குறிப்பாக சீன குவாட்டர் மங்கோலியாவில் செயற்பாடுகள் சம்பந்தமான பெரும் உடன்படிக்கைகளை கொண்டுவந்ததாக லண்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. பிரிட்டிஷ் பத்திரிகையின் படி, செஞ்சேனை அதிகாரிகள் இந்தப் பிராந்தியத்தில் சீன தன்னார்வ தொண்டர்களின் இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டமை பகிரங்க இரகசியமாகும். ஒரு முறை பயிற்றப்பட்ட பின்னர், இந்த சிப்பாய்கள் சீனா கம்யூனி இராணுவத்தின் உறுப்பினர்களாக முன்னரங்குக்கு சென்றதாக இந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த இராணுவப் பிரிவின் பணிகளில் ஒன்று, ஜப்பானிய பிராந்தியத்தில், அடிக்கடி ஜப்பானிய நிலைகளுக்குப் பின்னால் இருந்து, விநியோகப் பாதைகளை இடையூறு செய்வதன் பேரிலும் படையெடுக்கும் இராணுவத்தின் மத்தியில் பதட்டத்தை உருவாக்கவும், விரிவான கொரில்லா யுத்த நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதும் முன்னெடுப்பதுமாக இருந்தது. சுமார் 200 வெவ்வேறு மோதல் பிரிவுகளை திட்டமிடும், சுமார் 300,000 பேரை தனது சேமிப்பில் வைத்திருப்பதாக சீன கம்யூனி இராணுவம் மிகைப்படுத்திக் கொண்டதாக மாஸ்கோ தகவல்கள் தெரிவித்தன.

இந்த உடன்படிக்கை, ஸ்ராலினும், சீனாவில் கோமின்டாங் அரசின் தலைவர் சியாங் கேய்-சேக்கும் வகித்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது. ஸ்ராலின், 1936ல் கைச்சாத்திடப்பட்ட கோமின்டாங்-விரோத உடன்படிக்கையில் நாஸி ஜேர்மனி மற்றும் பாசிச இத்தாலியுடன் கூட்டுச் சேர்ந்திருந்த ஜப்பானுடன், நேரடியாக சோவியத் இராணுவப் பகைமையை தவிர்த்துக்கொண்ட அதேவேளை, சீன கம்யூனி கொரில்லாப் படைகளை மொஸ்கோவுக்கு சாதகமான நெம்புகோலாகப் பலப்படுத்தினார்.

சியாங் கேய்-சேக், ஜப்பானுக்கு எதிரான கோமின்டாங் அரசுக்கு மொஸ்கோவின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதன் பேரில், சீனாவுக்குள் தனது அரசியல் எதிரிகளான சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவியும் பயிற்சியும் வழங்க உடன்பட்டார். நிலப்பிரபு வர்க்கத்தில் வேரூன்றி, விவசாயிகளை திட்டமிட்டு ஒடுக்கிக்கொண்டிருந்த அவரது ஊழல் மிக்க அரசாங்கம், ஜப்பானியர்களுக்கு எதிரான மோதல்களில் போலவே சி.சி.பீ. தலைமையிலான கொரில்லா படைகளுக்கு எதிரான பல மோதல்களில் ஈடுபட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: சம்பள உயர்வு கோரிய சுரங்க தொழிற்சங்க அலுவலர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்


ஜோன்
ஷேர்மன்

1913 ஜூன் 7 அன்று, தலைவர் ஜோன் வைட் உட்பட அமெரிக்க ஐக்கிய சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் (UMW) அலுவலர்கள், ஷேர்மன்னின் நம்பிக்கை-விரோத சட்டத்தை மீறியதாக, மேற்கு வேர்ஜினியாவில் சார்லஸ்டனில் பெடரல் உயர் ஜூரியினால் குற்றஞ்சாட்டப்பட்டனர். மேற்கத்தைய சந்தைகளில் ஏனைய மாநிலங்களுடன் போட்டியிடுவதை தவிர்ப்பதன் பேரில் மேற்கு வேர்ஜினியாவில் சம்பளத்தை அதிகரிக்க மேற்கு பென்சில்வேனியா, ஒஹியோ, இலினொய்ஸ் மற்றும் இன்டியானா நிலக்கரி இயக்குனர்களுடன் சதி செய்ததாக தொழிற்சங்க அதிகாரிகள் மீது இந்த தொழிலாளர் விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

விலை நிர்ணயம், சந்தைகளையும் உற்பத்தி ஒதுக்கீடுகளையும் பங்கிடுவதற்கான இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற போட்டியை கட்டுப்படுத்துவதற்காக, வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத சூழ்ச்சிகளை தடை செய்வதன் மூலம், ரொக்பெல்லரின் ஸ்டன்டர்ட் ஒயில் றஸ்ட் (Standard Oil Trust) போன்ற கூட்டுத்தாபன ஏகபோக உரிமையாளர்களின் அதிகாரத்துக்கு வெளிவேடமாக கடிவாளமிடவே 1890ல் ஷேர்மன்னின் நம்பிக்கை விரோத சட்டம் நிறைவேற்றப்பட்டது. தொழிற்சங்கங்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தை பயன்படுத்தியமை பிற்போக்கானதும் சட்ட ரீதியில் கேள்விக்குரியதுமாகும்.

அப்போது வன்முறையினதும் தொழிற்சங்க-விரோத நிலக்கரி நிறுவனங்களதும் அரனாக இருந்த மேற்கு வேர்ஜினியாவில், சுரங்கத் தொழிலாளர்களை அணிதிரட்டி அவர்களது சம்பளத்தை கூட்டுவதற்கு முயற்சித்தது என்ற UMW மீதான பெடரல் நீதிபதிகளின் குற்றச்சாட்டு, ஒரு குற்றவியல் சதியை உள்ளடக்கியுள்ளது. UMW உறுப்பினர்களும் அதிகாரிகளும், தொழிற்சங்கம் அமைத்து மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களிலும் அதனைச் சூழவும் தொழில் செய்த தொழிலாளர்களை அந்த அமைப்புக்குள் அங்கத்தவர்களாக்கும் நோக்குடனும் இலக்குடனும் சட்டவிரோதமாக கூட்டுச் சேர்ந்து சதி செய்துள்ளனர், என்று அந்த அவதூறு குற்றஞ் சாட்டியது.

தொழிற்சங்கத்தின் தலைவர் வைட் மற்றும் பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலர்கள் 19 பேரும் குற்றம் சாட்டப்பட்டமை, ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வூட்ரோ வில்சனின் கீழ் குவிக்கப்பட்ட இந்த முயற்சிகளின் குறிக்கோளை அடிக்கோடிட்டுக் காட்டியது. அதாவது, முந்தைய தசாப்தங்கள் பூராவும் பல கசப்பான போராட்டங்களின் களமான மேற்கு வேர்ஜினியா நிலக்கரி சுரங்கங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தாக்கங்களுடன் சட்ட விரோதமாக்குவதாகும்.