சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US, Chinese presidents hold two-day discussion in California

அமெரிக்க, சீன ஜனாதிபதிகள் இரண்டு நாட்கள் விவாதங்களை கலிபோர்னியாவில் நடத்துகின்றனர்

By Joseph Santolan
8 June 2013

use this version to print | Send feedback

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இன்று தென் கலிபோர்னியாவில் முதல் இரண்டு நாட்கள் முறைசாராப் பேச்சுக்களுக்காகச் சந்தித்தனர். மார்ச் மாதம் ஜி சீன நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து இது இரு தலைவர்களுக்கும் இடையே முதல்கூட்டம் ஆகும்.

ஒபாமாவிற்கும் ஜிக்கும் இடையேயான ஆரம்பக் கூட்டம் முதலில் செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்க-சீன அழுத்தங்கள் விரைவில் பெருகுவதும் வாஷிங்டனில் ஜி மீது சீன சைபர் போர்முறை குற்றச்சாட்டுக்களுக்காக அழுத்தம் கொடுப்பதும், பெய்ஜிங் வட கொரியாவுடன் கொண்டுள்ள உறவுகள் பற்றியும் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் முன்னதாகவே ஜூன் 7-8 உச்சிமாநாட்டிற்கு வழிவகுத்தன.

அமெரிக்க வெளியுறவு நடைமுறையின் பிரிவுகளுக்குள் பெய்ஜிங் உடனான மோதல் என்பது கிட்டத்தட்ட இனி மாற்றமுடியாது என்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற உந்துதல் உள்ளது என்பதற்கான தெளிவான கவலை உள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” என்பது சீனவைச் சுற்றி அமெரிக்க தளங்களுக்கான உடன்பாடுகள், இராணுவப் பயிற்சிகள், வலிமையைக் காட்டல், இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் கயிற்றை கழுத்தைச் சுற்றி இருக்கும் வகையில் கணக்கிடப்பட்டு, ஆசிய-பசிபிக்கை பிராந்திய மோதல்களின் கொதிகலனாக மாற்றிவிட்டது.

முன்னாள் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர், ஹென்றி கிஸ்ஸிங்கர், ஒபாமா-ஜி இன் செவ்வாய் கிழமை உச்சி மாநாடு பற்றி கூறினார்: “பொதுவான ஒரு தொடர் பிரச்சினைகள் உள்ள நிலைமையில் நாம் இருக்கிறோம். கூட்டாக நாம் அதைத் தீர்க்க முடியவில்லை என்றல், உலகம் முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து மக்களுக்கு இடையே பிளவுகளில் நிற்கும்; ஏதேனும் ஒரு மாதிரியை அவர்கள் பின்பற்ற வேண்டி தள்ளப்படுவர். இது இருநாடுகளுக்கும் உலகிற்கும் பேரழிவு ஆகும்.”

சீனாவுடன் அழுத்தங்களைக் குறைப்பதற்கு முற்றிலும் மாறாக, உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஒபாமா தான் அமெரிக்காவின் பொருளாதார, மூலோபாய அழுத்தங்களை தொடர இருப்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் பகிரங்கமாக பெய்ஜிங் “அனைத்து நாடுகளும் மேற்கொண்டிருக்கும் அதே விதிகளை ஒட்டிய பொருளாதார ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று  அறிவித்தார்—சீனத் தலைமை அமெரிக்க நாணயத் திரித்தலை ஏற்க வேண்டும், அதன் பொருளாதாரத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு இன்னும் திறந்துவிட வேண்டும் என்பதற்குக் குறியீட்டுச்சொல்லாக.

ஒபாமா நிர்வாகம் ஜியுடனான அதன் விவாதத்தின் நிகழ்ச்சி நிரலில் முதல் விடயம் சீன அரசாங்கம் மற்றும் PLA மக்கள் விடுதலை இராணுவம் ஆகியவை அமெரிக்க அரசாங்கம் மற்றும் இராணுவ நிலையங்கள் தவிர, அமெரிக்க பெருநிறுவங்களின் கணினிகளையும் இசைவின்றி அணுகுதல் குறித்து இருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. இத்தலைப்பு வெள்ளை மாளிகையால் பல மாதங்களுக்கு முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது, இது பெய்ஜிங்கை பெரும் பொருளாதார, மூலோபாய சலுகைகளை கொடுக்க போலிக்காரணத்தை அளிக்கும்.

சீன அரசாங்கம் கணினிகளை அணுகுதல் குறித்த அதன் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க கணிசமான எந்த ஆதாரங்களையும் கொடுக்கில்லை. ஆயினும்கூட, ஒரு பெயரிடப்படாத வெள்ளை மாளிகை அதிகாரி யுனைட்டட் இன்டர்நேஷனல் பிரஸ்ஸிடம் செவ்வாயன்று ஜி சைபர் தாக்குதல்களுக்கான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள வேண்டும், ஏனெனில் “எவர் பொறுப்பு என்பதல்ல பிரச்சினை, நாடுகள் தங்கள் எல்லைகளுக்குள் இருந்து வெளிவருவதற்கு பொறுப்பை ஏற்க வேண்டும்” என ஒபாமா கோருவார் என்றார்.

சீனா சைபர் ஒற்று வேலை குறித்த ஆதாரமற்ற ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கள் பாசாங்குத்தனத்தை காட்டுகின்றன. சைபர் ஒற்றாடல் உலகம், தவறான மென்பொருட்கள் தாக்குதல் மூலம் நடத்தப்படுபவை, ஆன்லைன் கண்காணிப்பு ஆகியவை அவற்றின் மையத்தை வாஷிங்டனில் கொண்டுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் பலமுறையும் இதன் வழிக்கு வராத நாடுகளின் மீது சைபர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்; இதில் Stuxnet  கணினிக் கிருமியை ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்குவதற்கு வடிவமைத்து செயல்பட்டதும் அடங்கும்.

மேலும், கடந்த வாரங்களில் வெளிவந்த தகவல்கள் அமெரிக்க அரசாங்கம் அசோசியேட்டட் பிரஸ் மீது உளவுபார்த்தலை நடத்தியது, பல மில்லியன் அமெரிக்க மக்களுடைய தொலைப்பேசிப் பேச்சுகள் குறித்த தகவலை சேகரித்தது, மைக்ரோசாப்ட், யாகூ, கூகிள், பேஸ்புக், பால்டாக், AOL, யூட்யூப் மற்றும் ஆப்பிளின் மத்திய சேவைக் கருவிகளை நேரடியாக உளவு பார்த்தது, தனிப்பட்டோர் தகவலை அறிய என்று தெரிவிக்கின்றன. சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆதாரமற்ற சைபர் குற்றச்சாட்டுக்கள் இத்தாக்குதலுக்கு முன் மங்கிப்போகின்றன.

ஒபாமா ஜியுடன் முதல் பேச்சுக்களை நடத்திய அன்றே, கார்டியன் ஒரு கசியவிட்ட உயர்மட்ட ஜனாதிபதி இரகசிய உத்தரவை வெளியிட்டது; கடந்த ஆண்டு அக்டோபர் தேதி கொண்ட ஒரு கசிவில், ஒபாமா மூத்த தேசியப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை “அமெரிக்க சைபர் தாக்குதல்களுக்கு உரிய தகுதி கொண்ட வெளிநாட்டு இலக்குகளை” தோற்றுவிக்குமாறு பணித்துள்ளார்.

இத்தாக்குதல்கள் “உலகெங்கிலும் அமெரிக்க தேசிய இலக்குகளை” முன்னேற்றுவிக்கும் நோக்கம் உடையவை என உத்தரவுக் குறிப்பு கூறுகிறது: “பாதுகாப்பு மந்திரி, தேசிய உளவுத்துறை இயக்குனர் (DNI), CIA உடைய இயக்குனர்.... ஆகியோர் ஜனாதிபதி ஒப்புதலுக்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மூலம் ஒரு திட்டத்தை தயாரிக்க வேண்டும். அது முறைகள், வழிவகைகள் மற்றும் உள்கட்டுமானம் ஆகியவற்றின் திறன்களை அடையாளம் காணவேண்டும், இவற்றிற்கு எதிராக அமெரிக்க சைபர் விளைவு செயற்பாட்டுத் தாக்குதல் [Offensive Cyber Effects Operations-OCEO]  திறன்களை நிறுவிப் பராமரிக்க வேண்டும்.

இவை வெளிநாடுகளுக்கு எதிரான தவிர்க்க முடியாத தாக்குதல்கள் ஆகும். உள்நாட்டு சைபர் தாக்குதலை தொடங்க, ஜனாதிபதியின் ஒப்புதல் தேவை, “

ஒபாமா, ஜிக்கு அழுத்தம் கொடுக்க விரும்பும் மற்றொரு விடயம், சீனாவுடன் வட கொரியா கொண்டுள்ள உறவுகள் பற்றியது. வட கொரியாவின் கணிக்கக்கூடிய சீறியெழுதலை, தன்னுடைய “ஆசிய முன்னணியை” விரிவாக்க ஒரு போலிக்காரணமாக பயன்படுத்தமுடியும் என வாஷிங்டன் கருதுகிறது.

பல மாதங்களுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஒரு “செயற்பாட்டு அறிக்கையை” பின்பற்றி, வாஷிங்டன் வேண்டுமென்ற பியோங்யாக் மற்றும் பெய்ஜிங்கை மார்ச் மாதம் அணுசக்தித்திறன் உடைய B52, B2 குண்டுகள் கொண்டவற்றுடன் தாக்குதல் பயிற்சிகளை நடத்தியது. ஒரு ஏவுகணையை விடப்போவதாக வட கொரியா அச்சுறுத்தியபோது, வாஷிங்டன் இதைப் பற்றி எடுத்து பிராந்தியத்தில் தன் இராணுவ நிலைப்பாட்டை அதிகரித்து, தன் பாலிஸ்டிக் ஏவுகணை காப்புமுறையையும் விரிவாக்கி, பெய்ஜிங்கிற்கு பியோங்யாங்குடன் பொருளாதார, அரசியல் பிணைப்புக்களை முறித்துக் கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்தது. சீனா நீண்டநாட்களாகவே வட கொரியாவை தனக்கும் தென் கொரியாவிற்கும் இடையே இடைத்தடை நாடாக இருத்த விரும்புகிறது; தென் கொரியாவோ இப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் நட்பு நாடாகும்.

வாஷிங்டன் கிழக்கு ஆசியாவில் தன் இராணுவ நிலைப்பாட்டை விரிவாக்க, கொந்தளிப்பு நிறைந்த வட கொரிய ஆட்சியின் வனப்புரையை போலிக்காரணமாக எடுத்துக் கொண்டிருக்கையில், பெய்ஜிங்கின் தலைமையின் சிலபிரிவுகள் பியோங்யாங்கில் இருந்து தம்மை ஒதுக்கி வைக்க முயல்கின்றன. அவர்கள், வட கொரியாவின் மிகப் பெரிய வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற வங்கியுடன் இருந்த நிதியத் தொடர்புகளை வெட்டிவிட்டனர்; கிம் ஜோங் உன்னிற்குப் பதிலான மாற்றுத் திட்டத்தை ஜேர்மனிய செய்தி ஊடகத்திற்குக் கசிய விட்டனர்.

வாஷிங்டனுடைய அழுத்தத்திற்கு பெய்ஜிங் பணியக்கூடும் என்று அச்சமுற்ற பியோங்யாக், வியாழன் அன்று சியோலுடன் உடன்பாடுகளுக்காக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுக்களை தொடக்க முன்வந்து, மார்ச் மோதல் போது மூடிவைத்த அவசரத் தொடர்பு முறையையும் மீண்டும் திறக்க முன்வந்துள்ளது.

கலிபோர்னியா உச்சிமாநாட்டில் ஒபாமா நிர்வாகம், சீனா மீது இராணுவ அழுத்தத்தைக் காட்டும் எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. பெய்ஜிங்கிற்கு எதிரான திட்டமிட்ட அச்சுறுத்தல் ஒன்றில், பென்டகன் ஜப்பானுடன் கூட்டுப் பயிற்சிகளை தெற்கு கலிபோர்னியாவில் ஜியுடன் உச்சிமாநாடு முடிந்து நான்கு நாட்களுக்குப் பின் நடத்த உள்ளது. இப்பயிற்சிகளில் உண்மையான கருவிகள் கொண்ட செயல்களும், மைன்ஸ் செயற்பாடுகளும் உள்ளன; அதில் சான் கிளெமென்ட்ஸ் தீவின் மீது நீர் நிலம் இரண்டிலுமான தாக்குதலும் அடங்கும். இது சென்காக்கு/டயவோயு தீவுகளை ஒத்துள்ளது; அவற்றின் மீதுதான் ஜப்பானும் சீனாவும் நீண்டகால கடற்படை, இராஜதந்திர மோதலில் பிணைந்துள்ளன.

சீன அரசாங்கம், பயிற்சியை நிறுத்துமாறு வாஷிங்டனை கேட்டுக் கொண்டுள்ளது; ஆனால் ஒபாமா நிர்வாகம் குறிப்பாக மறுத்தவிட்டது. இம்முடிவு அமெரிக்க ஏகாதிபத்தியம் பிராந்தியம் முழுவதும் கொண்டிருக்கும் மிக அதிக தூண்டிவிடும் தன்மையைத்தான் பிரதிபலிக்கிறது – இது ஜப்பானையும் மற்றநாடுகளையும் சீனாவுடனான நிலப்பூசல்களுக்கு ஊக்கம் அளிக்கிறது.