சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What Edward Snowden has revealed

எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியது என்ன?

Joseph Kishore
11 June 2013

use this version to print | Send feedback

முன்னாள் CIA தகவல் தொழில்நுட்ப ஊழியரும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) உடைய ஒப்பந்தக்காரருமான எட்வார்ட் ஸ்னோவ்டென் மிக அடிப்படை அரசியல் உரிமைகளை மீறி இரகசியமாக செயல்பட்டு வந்த இராணுவ-உளவுத்துறை ஒற்று அமைப்பு மீது இருந்த மறைப்பை அகற்றியதன் மூலம் அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் மகத்தான பணியை செய்துள்ளார்.

உலக சோசலிச வலைத் தளம் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களை, இப்பொழுது அமெரிக்க அரசின் மூர்க்கமான தாக்குதலுக்கு இலக்காக உள்ள ஸ்னோவ்டெனை பாதுகாக்க முன்வருமாறு அழைப்புவிடுகின்றது.

தகவலை வெளியிட்டவர் நியாயமான வகையில் தன்னுடைய பாதுகாப்பிற்கு அஞ்சுகிறார். ஒபாமா நிர்வாகம் அவர்மீது குற்றச்சாட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், ஜனநாயக, குடியரசுக் கட்சியை சேர்ந்த முக்கிய அரசியல் பிரதிநிதிகள் அவருடைய நடவடிக்கையைதேசத் துரோகம்எனக் கண்டித்துள்ளனர். அரசியல் வித்துவான்கள் அவர் தூக்கிலிடப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். அமெரிக்க அரசாங்கம் அவரைக் கைப்பற்றி நாட்டிற்குக் கொண்டுவர முயலுகையில் அவர் தற்பொழுது தீவிரமாக உலகம் முழுவதும் தேடப்படுபவராக உள்ளார்.

கார்டியன் செய்தித்தாளின் கிளென் க்ரீன்வால்டுடன் ஒரு பரந்த பேட்டியில், அனைத்தும் கசியவிடுபவர் என்னும் முறையில் அவர் பலவற்றை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ஹொங்கொங் விடுதிக்கு தப்பிச்சென்று அங்கு மூன்று வார காலம் தங்கியிருக்கின்றார்.CIA என்னைக் கடத்திக் கொண்டு செல்லலாம். என்னை பின்தொடர்ந்து எவரும் வரக்கூடும்என்று அவர் கிரீன்வால்டிடம் கூறினார்; இதில் இருந்த அவர் தப்பிவருவது அவர்களை கறைபடிந்தவர்களாக ஆக்கும்என நம்புவதாகவும் கூறினார்.

கிரீன்வால்டிற்கு கொடுத்த பேட்டியில், ஸ்னோவ்டென் இதுவரை வெளிவந்துள்ள ஆவணங்களில் வெளிப்பட்டுள்ளதை விட மிக அதிகமானஒடுக்குமுறை செயற்பாடுகள்பற்றி சக்தி வாய்ந்த முறையிலும் சரளமாகவும் பேசியுள்ளார்.

அமெரிக்க ஆளும் வர்க்கதினுள் அல்லது அதன் அரசியல் அமைப்புக்குள்  ஜனநாயகத்திற்கு ஒரு ஆதரவு அடித்தளமும் இல்லை. ஆனால் ஸ்னோவ்டெனின் விமர்சன்களும் செயல்களும், சாதாரண அமெரிக்கர்களிடம் இருந்து அவர் பெற்றுள்ள சக்தி வாய்ந்த ஆதரவும், அமெரிக்க மக்களிடையே ஜனநாயகத்திற்கு ஆதரவு அடித்தளம் உள்ளது என்பதை  நிரூபிக்கின்றன.

ஒற்றுக்கேட்கும் திட்டங்களை வெளிப்படுத்திய முறையில், என்ன நடக்கிறது என்பதை அமெரிக்க மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்னும் உந்துதலால் தான் செயல்பட்டதாக ஸ்னோவ்டென் கூறுகிறார். “மக்களை அச்சுறுத்த முடியாது என்னும் தகவலை அரசாங்கத்திற்கு அனுப்புதல் முக்கியமானதுஎன்று அவர் அறிவித்தார். “இத்தகைய செயல்களைச் செய்யும் ஒரு சமூகத்தில் நான் வாழ விரும்பவில்லைஎன அவர் சேர்த்துக் கொண்டார். “நான் செய்வது, பேசுவது அனைத்தும் பதிவு செய்யப்படும் உலகில் நான் வாழ விரும்பவில்லை.” என்றார்.

கசிவுகளை அரசியல் மற்றும் செய்தி ஊடக அமைப்புகள் சீற்றத்துடன் எதிர்கொண்ட விதம் ஒவ்வொரு புதிய தகவல் வெளிப்பாட்டுடனும் அமெரிக்க அரசாங்கத்தினதும் மற்றும் முழு அரச எந்திரத்தினதும் சட்டபூர்வத்தன்மை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுகிறது என்ற அதன் நியாயமான கவலையை காட்டுகின்றது, ஆளும் வர்க்கம் ஒரு பொலிஸ் அரசினை நோக்கிச் செல்கின்றது. ஆனால் இன்னமும் அதனிடம் அப்படிப்பட்ட ஒன்று இல்லை. அதன் ஆட்சியின் ஸ்திரத்தன்மை பற்றி அது அஞ்சுகிறது.

ஸ்னோவ்டெனின் நடவடிக்கைகள் தைரியமானவை, கொள்கைப்பிடிப்பானவை, ஆனால் ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது தனிநபரின் நடவடிக்கைகளால் மட்டும் முடியாது என்பதையே வரலாற்று அனுபவங்கள் காட்டுகிறது. அதற்கு ஜனநாயகத்தின் நெருக்கடி, அமெரிக்க, உலக முதலாளித்துவத்தின் வர்க்க அமைப்பில் வேரைக் கொண்டுள்ளது என்பதை விளங்கிக்கொண்டதை அடித்தளமாக கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சமூக இயக்கம் தேவைப்படுகிறது.

ஒருபுறத்தில் நிதியப் பிரபுத்துவம் உள்ளது. இது அதன் சமூக உள்ளுணர்வுகளிலும் அரசியல் பார்வையிலும் சர்வாதிகாரத்தன்மை கொண்டது. மக்கள் அனைவரையுமே அது ஒரு விரோத சக்தியாகவும் ஒவ்வொரு குடிமகனையும் அரசியல் விரோதி எனவும் பார்க்கிறது. அதற்குக் காரணமும் உண்டு. பெருநிறுவன, நிதிய உயரடுக்குகளுக்கு அவை வழிநடத்தும் கொள்கைகள் மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்தவை என்பது நன்கு தெரியும்.

அதன் நோக்கம் முழுச் சமூகத்தையும் கொள்ளையடித்தலும், அச்சுறுத்துதலும் என உள்ளது. ஸ்னோவ்டென் குறிப்பிட்டுள்ளதுபோல், அரசு நிரந்தர அடிப்படையில் ஒவ்வொருவரிடம் இருந்தும் தகவலைச் சேகரித்தபின், “இறுதியில் நீங்கள் ஒரு தவறான தொலைப்பேசி அழைப்பு மூலம்கூட எவருடைய சந்தேகத்தின் கீழாவது வருவீர்கள். அதன் பின் அவர்கள் இம்முறையைப் பயன்படுத்தி பின்னோக்கி சென்று நீங்கள் எப்போதாவது முன்னர் எடுத்த ஒவ்வொரு முடிவை பற்றியும் மற்றும் நீங்கள் ஏதேனும் விவாதித்த ஒவ்வொரு நண்பரைக் குறித்தும் ஆராயலாம்.”

இத்தகைய வழிமுறைகள், எந்த மற்றும் அனைத்து அரசியல் எதிர்த்தரப்பிற்கும் எதிராக பயன்படுத்தப்படமுடியும். ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள தகவலைக் கொண்டு, அரசாங்கம் எளிதில் அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு நபர் பற்றியும் விரிவான சமூக, அரசியல் வாழ்க்கை குறிப்பை தயாராக கட்டமைக்க முடியும்.

அமெரிக்க தொழிலாள வர்க்கம் மட்டும் இலக்காக இல்லை.எல்லையற்ற தகவல் கொடுப்பவர் என்ற தகவல் திரட்டும் கருவியின்படி உலகெங்கிலும் கிட்டத்தட்ட 97 பில்லியன் உளவுத் தகவல்கள் ஒரு NSA திட்டத்தின் மூலம் மார்ச் 2013ல் மட்டும் சேகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் 3 பில்லியன் உளவுத் தகவல்கள் தவிர, ஈரானில் இருந்து 14 பில்லியன் உளவுத்தகவல்கள், பாக்கிஸ்தானில் இருந்து 13.5 பில்லியன் உளவுத் தகவல்கள், ஜோர்டானில் இருந்து 12.7 பில்லியன் உளவுத் தகவல்கள், எகிப்தில் இருந்து 7.6 பில்லியன் உளவுத் தகவல்கள், இந்தியாவில் இருந்து 6.3 பில்லியன் உளவுத்தகவல்கள், ஐரோப்பாவில் இருந்து 3 பில்லியன் உளவுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நிதியப் பிரபுத்துவம் ஒபாமா நிர்வாகத்தில் இருந்து, இரு கட்சிகள், காங்கிரஸ் மற்றும் நீதிமன்றங்கள் வரை முழு அரசியல் அமைப்புமுறையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது. அமெரிக்க குடிமக்களை முறையான விசாரணை வழிவகை இன்றிப் படுகொலை செய்யும் உரிமை உட்பட ஏனைய ஜனநாயக விரோத நடவடிக்கைகள் உட்பட ஒற்றுக்கேட்கும் திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கையில், ஒபாமா பலமுறையும் தான் தனியே இல்லை, காங்கிரசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். இது உண்மைதான்.

தன்னுடைய பங்கிற்கு பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் அரசில் அதன் துணைக்கருவிபோல் செயல்படுகிறது. ஸ்னோவ்டென் போன்ற தனிநபர்கள் அரசாங்கத்தின் குற்றத்தை வெளியிட தம்மால் முடிந்ததை செய்ய வேண்டியிருக்கின்றது. ஏனெனில் வெகுஜன செய்தி ஊடகம் இதைச் செய்ய மறுப்பதுடன் அமெரிக்க மக்கள் தகவல் பெறுவதையும் தீவிரமாக தடுக்க முற்படுகிறது.

ஸ்னோவ்டென் தகவல்களை வெளிப்படுத்தியபோது, செய்தி ஊடகம் அதன் இயல்பான பன்றித்தனப் பங்கைத்தான் செய்துள்ளது. “துரோகியா, வீரனா?” என்னும் வினாதான் செய்திக் குறிப்புக்களில் மேலாதிக்கம் கொண்டுள்ளது; வெற்றுத்தனமாக கதைக்கும் தலைமைகளும் CIA  ஆதரவாளர்களும், விமர்சகர்கள் எனப்படுபவர்களும், பொதுவாகதுரோகிஎன்று கூறும் கட்சியில் சேர்ந்துள்ளனர்.

ஸ்னோவ்டெனுக்கு விடையிறுக்கையில், செய்தி ஊடகம் தன் பிரதிபலிப்பை படையினரான பிராட்லி மானிங் நடவடிக்கையை ஒட்டி விக்கிலீக்ஸ் மற்றும் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ் வெளியிட்ட ஆவணங்களுக்குக் காட்டிய எதிர்கொள்ளலைத்தான் காட்டுகிறது. மானிங் தற்பொழுதுவிரோதிக்கு உதவினார்என்னும் குற்றச்சாட்டை அதாவது அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய குற்றங்களை வெளிப்படுத்தியதற்கு எதிர்கொண்டிருக்கிறார். நியூயோர்க் டைம்ஸ், அதன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் பில் கெல்லர் உட்பட அமெரிக்கச் செய்தி ஊடகம் விக்கி லீக்ஸ் வெளியீடுகளை அவதூறு, தவறாக உரைத்தல், நபரின் குணநலன்களை இழிவுபடுத்துதல் என்பவற்றின் ஒரு கூட்டாக எதிர்கொண்டது.

இந்த நிதியப் பிரபுத்துவம் மற்றும் அதன் நிறுவனங்களுக்கு எதிராக  தொழிலாள வர்க்கம் அதன் சக்திவாய்ந்த ஜனநாயக மரபுகளுடன் உள்ளது. ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் குறித்துப் பெருகும் அமைதியின்மை உள்ளது. இது வெளிநாட்டில் தொடர்ச்சியான போர்கள், அமெரிக்காவிற்குள் சமூகப் பிற்போக்குத்தனம் ஆகியவை குறித்த சீற்றத்துடன் பிணைந்துள்ளது.

இந்த ஒற்றுத் திட்டங்கள் இரகசியமாக துல்லியமாக நடத்தப்படுகின்றன. ஏனெனி ஆளும் வர்க்கத்திற்கு இதற்கு பரந்த மக்கள் ஆதரவு கிடையாது என்பது நன்கு தெரியும். தன் பேட்டியில் ஸ்னோவ்டென் குறிப்பிட்டது போல், ஆவணங்கள்தேசிய உளவுத்துறை அமைப்பு [மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளும்] அமெரிக்கக் கண்காணிப்பின் பரப்பளவு பற்றி வாடிக்கையாக காங்கிரஸ் குழு விசாரணைகளில் பொய்களை கூறுகின்றர்.” தலைமைப் பொய்யர் ஒபாமாவேதான்.

பொய்கள் கூறும் அரசாங்கத்திற்கு இரகசியம் துல்லியமாக அவசியமாகவுள்ளது. ஏனெனில் அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக நலன்கள் பெரும்பாலான மக்கட்திரளுடன் சமரசத்திற்கு இடமில்லாது மோதுகின்றன. இத்தகைய ஒரு சமூக அமைப்புமுறை ஜனநாயக வழியிலான ஆட்சியுடன் இயைந்து இருக்க முடியாது.

நிதியப் பிரபுத்துவம், இராணுவ உளவுத்துறை அமைப்பு மற்றும் அவற்றின் அரசியல் நிறுவனங்களின் அதிகாரத்திற்கு முடிவுகட்டப்படப்பட முடியும். ஆனால் அது பரந்த சமூகப் போராட்டத்தின் மூலம்தான் முடியும். ஸ்னோவ்டென் மற்றும் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுடன் இணைக்கப்பட வேண்டும்.