சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek government shuts public broadcast station

கிரேக்க அரசாங்கம் பொது ஒளிபரப்பு நிலையத்தை மூடுகிறது

By Christoph Dreier 
13 June 2013

use this version to print | Send feedback

ெவ்வாய் இரவு 11.11 மணியளவில் கிரேக்கப் பொலிஸ் படைகள், ERT எனப்படும் பொது ஒளிபரப்புச் சேவை நிலையத்தின் ஆன்டேனாக்களுக்கு மின்சக்தியை நிறுத்தியதின் மூலம் ஒளிபரப்பை நிறுத்தியது. இதை எதிர்கொள்ளும் வகையில், தொழிலாளர்கள் ஆதென்ஸ் புறநகர அகியாவிலுள்ள நிலையத்தின் பிரதான கட்டிடத்தை ஆக்கிரமித்து, எதிர்ப்பு நிகழ்வை துணைக்கோள், இணைய தளத்தின் மூலம் ஒளிபரப்பினர். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கட்டிடத்தின் முன் குவிந்தனர்.

கன்சர்வேட்டிவ் பிரதமர் ஆன்டோனிஸ் சமரஸால் (ND) கிரேக்கத்தின் மூன்று பொதுத் தொலைக் காட்சிகள் மற்றும் 26 பொது வானொலி நிலையங்கள் என ERT இன் கூறுபாடுகளை மூடுமாறு பொலிஸ் நடவடிக்கைக்கு உத்திரவிட்டார். நான்கு மணி நேரம் முன்புதான் அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் சைமோஸ் கெடிகோக்லௌ அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தை மூடும் திட்டத்தையும் 2,656 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் உடனடித் திட்டத்தையும் அறிவித்தார். இந்த ஆணை 75 ஆண்டுகளாக இருந்து வந்த ஒளி/ஒலிபரப்பு சேவைக்கு முடிவு கட்டிவிட்டது.

வரவிருக்கும் மாதங்களில் அரசாங்கம் ஒரு சிறிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையத்தை கிட்டத்தட்ட 1,000 தொழிலாளர்களுடன் மறுகட்டமைக்க உள்ளது; அது நேரடியாக அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும். ERT தொழிலாளர்கள் புதிய நிறுவனத்தில் மற்ற விண்ணப்பதாரர்களைப்போல் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். “ஒளிபுகாத்தன்மை, வீணடித்தல் என்னும் முகப்பை நாம் அகற்றுகிறோம்.” என்றார் சமரஸ்.

“இங்கு நடந்தது சர்வாதிகாரிகளால்தான் செய்யப்பட்டது” என்று ERT உடைய செய்தியாளர் யானிஸ் டரஸ் ஜேர்மனிய நாளேடு Süddeutsche Zeitung இடம் கூறினார். இல்லாவிடின், ஒரு ஜனநாயகம் அனைத்துப் பொது நிலையங்களையும் வியப்பைத் தரும் ஆட்சி மாற்ற முறையில் மூடியது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”

உண்மையில் இதேபோன்ற காட்சிகள் கிரேக்கத்தில் கடைசித் தடவையாக 1967 முதல் 1974 வரை இருந்த கேர்னல் சர்வாதிகாரத்தின் போதுதான் காணப்பட்டன.

மனித உரிமைகள் அமைப்பு Reporters Without Borders, வெளியிட்ட அறிக்கை ஒன்று, ERT மூடப்படும் முடிவை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் என்று கண்டித்தது. எல்லைகளற்ற பத்திரிகையாளர் செய்தித்துறை சுதந்திரக் குறியீட்டில், கிரேக்கம் கடந்த மூன்று ஆண்டில் கிட்டத்தட்ட 50 இடங்கள் நிருபர்கள் இல்லாமல் சரிந்துவிட்டது, இத்தகைய சரிவு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிற்கு குறைந்த காலத்தில் ஏற்பட்டதில்லை.” என்று அறிக்கை கூறியது.

ERT ஐ மூடியது – கிரேக்கத்தின் தனியார் ஒளிபரப்பாளர்களைவிட தகவலுக்கு முக்கிய ஆதாரம் எனக் கருதப்பட்டது— கிரேக்க அரசியலின் மிருகத்தனத்திற்கு சமீபத்திய உதாரணம் ஆகும். கடந்த ஐந்து மாதங்களில் கிரேக்க அரசாங்கம் இராணுவச் சட்டத்தை மூன்று முறை பயன்படுத்தி வேலைநிறுத்தங்களை பொலிஸால் நசுக்கிவிட்டது. ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக்களும் வாடிக்கையாக பொலிஸ் கலகப்பிரிவினால் தாக்கப்படுகின்றன, செய்தியாளர்கள் அவற்றைப் பற்றித் தகவல் கொடுப்பதில் இருந்து தடுக்கப்பட்டுவிடுகின்றனர்.

இப்பிற்போக்குக் கொள்கைகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணயநிதியம் ஆகியவை ஆணையிட்டு கிரேக்க அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் மிருகத்தன சமூகத் தாக்குதல்களின் நேரடி விளைவு ஆகும். இக்கொள்கைகள் ஊதியங்களின் தரங்களை குறைத்து, பொதுச் சேவைகளை குறைத்து கிரேக்க வாழ்க்கைத் தரங்களை பல தசாப்தங்கள் பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளன.

இத்தகைய சமூக அழிப்பு என்பது, ஜனநாயக உரிமைகள் அல்லது செய்தி ஊடகச் சுதந்திரத்துடன் இயைந்திருக்க முடியாதது. கிரேக்கத்திலும் ஐரோப்பா முழுவதும் ஆளும் உயரடுக்குகள் சமூக அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன—சமீபத்திய எதிர்ப்புக்கள் துருக்கியில் பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு எதிராக வெடித்துள்ளது போல். இதை முகங்கொடுக்கும் வகையில் அவர்கள் செய்தி ஊடகத்தை தாக்கி எத்தகைய எதிர்ப்பையும் நசுக்குகின்றனர்.

ERT யின் மீதான தாக்குதல் நேரடியாக EU, IMF ன் நடவடிக்கைகளில் காண இயலும். ஏற்கனவே IMF 2011 ல் ERT யில் பெரும் வேலை குறைப்புக்களைக் கோரியது. புதன் அன்று ஐரோப்பிய பொருளாதாரப் பிரச்சினைகளின் ஆணையர் ஒல்லி ரெஹ்ன் ஆணையம் கிரேக்க அரசாங்கத்தின் செயற்பாடான கிரேக்கத்தில் பொதுத்துறை நிர்வாகத்தை வினாவிற்கு உட்படுத்தவில்லை” என்றார். ERT  ஐ மூடுவது ஒன்றும் ஆணையத்தின் முடிவு அல்ல என்றும் ரெஹ்ன் சேர்த்துக் கொண்டார். ஆனால் இந்த அறிக்கை நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

IMF, EU  இரண்டும் ஒவ்வொரு கிரேக்க அமைச்சரகத்திலும் பார்வையாளர்களை இருத்தியுள்ளது; அவர்கள் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிலும் தொடர்புடையவர்கள்அவர்கள் இப்பொழுதுதான் ஏதென்ஸ் 2,000 பொதுத்துறை ஊழியர்களை மாத இறுதிக்குள் பணிநீக்கம் செய்ய வேண்டும், அப்பொழுதுதான் அடுத்த கடன் உதவி வழங்கப்படும் எனக் கூறினர். கிட்டத்தட்ட 13,500க்கும் மேற்பட்டவர்கள் 2014 இறுதிக்குள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

இது பொதுத்துறையில் 150,000 வேலைகளை அழிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ERT ஐ மூடுவது என்பது ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

கன்சர்வேட்டிவ் புதிய ஜனநாயகக் கட்சி ND யின் இளைய பங்காளிகள், சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடது (DIMAR) ஆகியவை மூடலுக்குக் குறைந்த எதிர்ப்புக்களைத்தான் காட்டியுள்ளன. அவை பணிநீக்கத்திற்கு உடன்படுவதாகவும், ஆனால் ERT தொடர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும், மறுகட்டமைப்பு நடந்திருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தின. இரு கட்சிகளும் இதே போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக்களைப் பலமுறை தெரிவித்துள்ளன, ஆனால் ND உடனான கூட்டை முறிக்கச் செயல்படவில்லை.

PASOK, DIMAR  இரண்டும் ERT மீதான தாக்குதலுக்கு தங்கள் ஆதரவைத் திரும்ப பெற்றிருந்தால், ND பின்னர் பாசிச கோல்டன் டான் கட்சியை நம்பியிருக்கலாம். அதன் பிரதிநிதி, இலியஸ் பானஜயோடரோஸ், ட்வீட்டரில் கூறினார்: “ERT, அந்த சோசலிச கம்யூனிச கரடுமுரடான அமைப்பு இறுதியாக மூடப்படுகிறது.”

இந்த ஜனநாயக, சமூக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு தங்கள் எதிர்ப்பை தொழிலாளர்கள் தெளிவாக்கியுள்ளனர். ERT தலைமை நிர்வாகி எமிலியோஸ் லாட்சியோஸ் ஊழியர்கள் ஒளிபரப்புக் கட்டிடங்களை விட்டு நீங்க வேண்டும் இல்லாவிடில் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முறையில் கைதாவர் எனக் கூறி உத்தரவை பிறப்பித்தும், ஏதென்ஸில் தொழிலாளர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளனர். பலரும் இன்னமும் கட்டிடத்தில் எதிர்ப்பு நிகழ்வை ஒளிபரப்பிக் கொண்டு உள்ளனர்.

செவ்வாய் இரவு இத்தகவல் ஒளிபரப்பப்பட்டபின், ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சில மணிநேரத்திற்குள் ERT உடைய முக்கிய ஏதென்ஸ் கட்டிடத்தைச் சூழ்ந்து இம்முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பலரும் இரவு முழுவதும் மற்றும் புதன் முழுவதும் அங்கேயே இருந்தனர்.

இவர்களுள் எதிர்ப்பாளர்களுக்காக பாடியவர்கள் உட்பட புகழ்பெற்ற பாடகர் Eleftheria Arvanitaki ம் இருந்தனர். ஒளிபரப்பாளரின் இசைக்குழு கட்டிடத்தில் சில நேரம் இசையை முழங்கியது, அவர்களுடைய இசை வெளியே இருந்த ஒலிபெருக்கிகளில் ஒலித்தது. ஒரு பெரிய கூட்டம் தெசலொனிகியில் ERT 3 கட்டிடத்திற்கு வெளியே நின்றது.

ஒரு தீவிர ERT தொழிலாளியான Anastasia Zigou, பிரித்தானிய நாளேடான கார்டியனிடம் கூறினார்: “எங்களில் பலர் 48 மணி நேரமாகத் தூங்கவில்லை, இதை விட்டுவிடமாட்டோம். குடிமக்களிடம் இருந்து வந்துள்ள பெரும் விடையிறுப்பினால் நாங்கள் இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கு மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும்.”

புதன் அன்று கிரேக்கத்தின் செய்தித்தாள் நிருபர்களும் ERT க்கு ஒற்றுமை உணர்வு காட்டும் வகையில் வேலையை நிறுத்தினர். தனியார் ஒளிபரப்பு நிலையங்கள் அனைத்து செய்திகளையும் செய்தி நிகழ்வில் நண்பகல் வரை தடுத்து நிறுத்தினர், பின்னர் ERT எதிர்ப்புக்களை மட்டும் பிந்தைய செய்தி நிகழ்ச்சிகளில் கூறின. சிலசெய்தியாளர்கள் தாங்கள் ERT திரும்பத் திறக்கப்படும் வரை வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகக் கூறினர்.

அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகள் குறித்து மக்கள் எதிர்ப்பு பெருகுகையில், தீவிர இடது கூட்டணி (சிரிசா) போன்ற போலி இடது கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு வளர்வதை தடுக்க அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன. சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் புதன் அன்று கிரேக்க ஜனாதிபதி காரோலோஸ் பாபௌலியஸைச் சந்தித்து ERT நெருக்கடி  குறித்து விவாதித்தார். அவர் ஜனாதிபதியை தலையீட்டு நிலைமையை உறுதிப்படுத்த பாராளுமன்ற விவாதத்தை தொடக்குமாறு கேட்டுக் கொண்டார்.

கிரேக்கத்தின் இரு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களான GSEE, ADEDY  இரண்டும் இன்று நடக்கவிருக்கும் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இத்தகைய வேலைநிறுத்தங்கள் கிரேக்கத்தில் நன்கு அறியப்பட்டுள்ளவை. தொழிற்சங்கங்கள் PASOK அரசாங்கத்துடன் நெருக்கமாக பிணைந்தவை, அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பவை சிக்கனக் கொள்கைகளுக்கு தடையை தவிர்க்க அவ்வப்பொழுது வேலைநிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்பவை. இப்பொழுது அவை வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்கின்றனவென்றால், அது தொழிலாளர்கள் போராட்டங்கள், அவை பாதுகாக்கும் அரசாங்கத்திற்கும் கிரேக்கத்தின் முதலாளித்துவ ஆட்சிக்கும் ஒரு நேரடி அரசியல் சவாலாக மாறுவதைத் தடுக்கும் முயற்சியேயாகும்.