சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkish police launch brutal crackdown on Taksim Square protests

துருக்கிய பொலிஸ் தக்சிம் சதுக்க எதிர்ப்புக்கள் மீது மிருகத்தன ஒடுக்குமுறையை மேற்கொள்கின்றன

By Alex Lantier 
12 June 2013

use this version to print | Send feedback



தக்சிம் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் கூட்டம்

நேற்று பிற்பகல் இஸ்தான்புலில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை கைதுசெய்து, தக்சிம் சதுக்கத்தில் இருந்து மக்களை அகற்றுவதற்கு துருக்கிய பொலிஸ் கலகப் பிரிவு மிருகத்தனமாக தாக்குகையில் வாஷிங்டன் துருக்கிய பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகனுடைய இஸ்லாமியவாத ஆட்சிக்கு தொடர்ந்த ஆதரவை அடையாளம் காட்டியது.

ஜூன் 1ம் திகதிக்குப் பின் பொலிசார் மீண்டும் தக்சிம் சதுக்கத்திற்கு வந்தது இதுதான் முதல் தடவையாகும், அப்பொழுது அருகே இருக்கும் கெஜி பூங்கா ஆக்கிரமிப்பை மிருகத்தனமாக பொலிஸ் அடங்கியதற்கு எதிர்ப்புக்கள் பெருகிபோது, துருக்கிய அதிகாரிகள் அப்பகுதியில் இருந்து பொலிசை விலக்க தள்ளப்பட்டனர். இந்த இயக்கம், இப்பொழுது எர்டோகனுக்கு எதிரான எழுச்சிபெறும் அதிருப்தி என்ற குவிப்பைக் காட்டுகிறது, அவர், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளுடைய மத்திய கிழக்கில் குறிப்பாக அண்டை சிரியாவில் நடத்தப்படும் பினாமிப்போரில் இருக்கும் முக்கிய நண்பர் ஆவார்.

அதிகாலையில் பொலிசார் சதுக்கத்தில் இருந்த ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை தாக்கத் தொடங்கினர். “பாதுகாப்பு படையினர் அசையும் எல்லாவற்றின் மீதும் மிளகுத் தோட்டக்களை இயக்குகின்றனர்” என்று ஜேர்மனியின் Der Spiegel  ஏட்டின் ஆசிரியர் Özlem Gezer சதுக்கத்தில் இருந்து தகவல் கொடுத்துள்ளார். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டினால் டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் தலைக்காயங்களை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட பிற்பகல் 2 மணிக்கு நீர் பீய்ச்சுதல் மற்றும் ஏராளமான கண்ணீர்ப்புகைக் குண்டுக்கள் தக்சிம் சதுக்கத்தில் போடப்பட்டன. எதிர்ப்பாளர்களுடன் மோதலுக்குப்பின் சதுக்கத்தை கண்ணீர்ப்புகை மேகங்கள் கனத்து மூடியிருந்தன. பொலிசார் எதிர்ப்பாளர்களை அருகில் இருந்த கெஜி பூங்காவிற்குள் தள்ளினர். அதன் பின் பொலிசார் முகாம்களையும் சதுக்கத்தில் எதிர்ப்பாளர்கள் நிறுவியிருந்த அமைப்புக்களையும் கிழித்தெறிந்தனர்.



தக்சிம் சதுக்கத்தில் பொலிசார் எதிர்ப்பாளர்களுடன் மோதுகின்றனர்

“ஒலிபெருக்கிகளில் இருந்து அடிக்கடி எதிர்ப்பாளர்களுக்கு தீமை ஏதும் இல்லை என்ற அறிவிப்புக்கள் வந்தவண்ணம் இருந்தன: “அன்புள்ள கெஜி நண்பர்களே, இந்நிலைமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. நாங்கள் உங்களை தாக்க விரும்பவில்லை. தயவு செய்து திரும்பிப் போய்விடுங்கள்.’...அதன் பின் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டு போடுவர், கூட்டத்திற்குள் நீர்பாய்ச்சுவர்” என்று Der Spiegel தகவல் கொடுத்துள்ளது.

கெஜி பூங்காவில் எதிர்ப்பாளர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பின், பொலிசார் ஆரம்பத்தில் அங்கிருந்த எதிர்ப்பாளர்களை தாக்கவில்லை, பூங்காவில் இருந்த முகாம்களை அகற்றவும் இல்லை. ஆனால் அன்று பின்னர் கெஜி பூங்காவில் இருந்த எதிர்ப்பாளர்ளை பொலிஸ் தாக்கியது.

இஸ்தான்பூலின் சில பகுதிகளில் மோதல்கள் வெடித்தன; பொலிசார் எதிர்ப்பாளர்களை தாக்கி, தடைகளையும் அகற்றினர். இஸ்தான்பூலின் காக்லய நீதிமன்றக் கட்டிடத்தில் பொலிஸ் மிருகத்தனத்தை எதிர்த்த வக்கீல்கள் பிரதிநிதிகள் குழு ஒன்றை பொலிஸ் கலகப் பிரிவினர் தாக்கி, அவர்களை அடித்து, 49 பேரைக் காவலில் வைத்தது.

நீதிமன்றத்திற்கு வெளியே வக்கீல்கள் புதிய எதிர்ப்புக்களை தொடக்கியவுடன் காவலில் இருந்த வக்கீல்கள் பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் மாலையில் 45 வக்கீல்கள் கொண்ட ஒரு புதிய குழு கைது செய்யப்பட்டது.

முன் மாலை பொழுதில் எதிர்ப்பாளர்கள் தக்சிம் சதுக்கத்தில்அமைதியாகக் கூடினர். அவர்கள் மீண்டும் பொலிஸ் கலகப்பிரிவினரால் தாக்கப்பட்டனர்; அவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதாகவும் சதுக்கத்தில் கிட்டத்தட்ட இரவு 8.20 க்கு புதிய தாக்குதல்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மோதல்கள் இரவு வெகு நேரம்வரை தொடர்ந்தன.


பொலிஸ் தக்சிம் சதுக்க எதிர்ப்பாளர்களுடன் மோதுதல்

ஒருவர் தீவிர மூளைக் காயத்துடன் சேர்க்கப்பட்டது உட்பட குறைந்தப்பட்சம் 15 எதிர்ப்பாளர்கள் மோதலுக்குப்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உறுதிபடுத்தப்படாத தகவல்கள் ஒரு எதிர்ப்பாளர் தலையில் கண்ணீர்ப்புகை குண்டுக் கலத்தினால் அடிபட்டபின் இறந்துவிட்டதாகக் கூறுகின்றன. துருக்கிய மருத்துவ சங்கத்தின்படி, 4,947 பேர் எதிர்ப்புக்களின் போது பெற்ற காயத்திற்கு மருத்துவ சிகிச்சையை நாடியுள்ளனர்.

பொலிஸ் ஆத்திமூட்டலாளர்கள் தக்சிம் சதுக்க கூட்டத்திற்குள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் பரந்த வதந்திகள் வெளிவந்தன; இவை துருக்கிய எதிர்ப்பாளர்கள் பொலிசாருடன் மோதியதை ஒட்டி தொலைக்காட்சிகளில் வந்துள்ளன; இது பொதுக்கருத்தை எதிர்ப்புக்களுக்கு எதிராக மாற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. எதிர்ப்பாளர்கள், தம்முடன் இருந்த சில வயதான எதிர்ப்பாளர்களின் புகைப்படங்களை காட்டினர், அவர்கள் பொலிஸ் கொடுத்த கருவிகளான வாக்கி-டாக்கிகளுடன் பொலிசுடன் மோதுவது போல் காணப்படுகின்றனர்; இது அவர்கள் யார் என்பதற்கு ஒரு நிரூபணம்.

எர்டோகன் அரசாங்கம் வன்முறையை விரிவாக்கம் செய்வதாக உறுதியளித்து, நேரடியாக எதிர்ப்புக்களை நசுக்குவதாகவும் கூறியுள்ளது. “பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு” என அறிவித்த எர்டோகன் அவருடைய அரசாங்கம் எதிர்ப்புக்களை மிருகத்தனமாக அடக்குகிறது என்னும் குறைகூறல்களை உதறித்தள்ளினார். “இதை வன்முறை என்று நீங்கள் அழைத்தால், அதற்காக நான் வருந்துகிறேன், ஆனால் இந்த தயிப் எர்டோகன் மாறமாட்டான்.”

“நிகழ்வுகளைத் தொடர விரும்புவோருக்கு நான் கூறுகிறேன்: இது முடிந்து விட்டது. இப்பொழுதில் இருந்து அவர்களிடம் பொறுமை காட்டப்போவதில்லை. நடவடிக்கைகளை நிறுத்துவோம் என்பது மட்டுமின்றி, தூண்டிவிடுவோர், பயங்கரவாதிகளையும் தாக்குவோம், எவரும் தப்ப முடியாது. நான் வருந்துகிறேன், ஆனால் கெஜிப் பூங்கா நடந்து செல்வதற்காகவே ஒழிய, ஆக்கிரமிப்பிற்கு அல்ல.”

மற்றொரு வலதுசாரி நடவடிக்கையாக, துருக்கியின் இஸ்லாமியவாத ஜனாதிபதி அப்துல்லா குல் இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை மதுபான விற்பனையை தடை செய்யும் சட்டத்தில் நேற்று கையெழுத்திட்டார்; அதேபோல் மதுபானங்களுக்கான விளம்பரங்களை தடை செய்யும் சட்டத்திற்கும் ஒப்புதல் கொடுத்தார்.

ஒபாமா நிர்வாகம் உட்குறிப்பாக எர்டோகனின் நேற்றைய வன்முறைக்கு ஆதரவைக் கொடுத்து, எந்த உத்தியோகபூர்வக் கருத்தையும் வெளியிடவில்லை. இது மத்திய கிழக்கில் வாஷிங்டனுடைய கொள்கைக்கு துருக்கியை நம்பியிருப்பதைப் பிரதிபலிக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக சிரியாவில் நடக்கும் போருக்கு துருக்கியின் செயற்பாடுகளுக்கு; அங்கு எதிர்த்தரப்புச் சக்திகள் பெருமளவில் துருக்கி மூலம் செல்லும் ஆயுதங்களைப் பெறுகின்றன.

Centre for Strategic and International Studies ல் துருக்கிய பகுப்பாய்வாளராக இருக்கும் ப்யூலென்ட் அலிரிசா கூறினார்: “இது எப்பொழுதுமே அமெரிக்க அரசாங்கத்திற்குச் சங்கடம். ஒரு நட்புநாட்டுடன் மிக நெருக்கமாகையில், அவற்றைக் குறைகூறுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

எர்டோகனுக்கு அமெரிக்க ஆதரவு தொடர்கிறது என்பது சிரியாவில் ஆட்சி மாற்றத்திகான அமெரிக்கத் தலைமையிலான பினாமிப் போரின் பாசாங்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒபாமா நிர்வாகமும் அதன் நட்பு அமைப்புக்களும் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை, அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன; இதற்கு போலிக்காரணம், சிரிய மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அமெரிக்க ஆதரவுடைய எதிர்ப்புக்கள்மீது அரசாங்க வன்முறை நடத்தப்படுகிறது என்பதாகும். ஆனால் நேட்டோ சக்திகளின் ஆதரவிற்குட்பட்ட ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புக்கள் வருகையில், வாஷிங்டன் அவற்றைக் குருதி கொட்டி அடக்குவதற்கு ஆதரவு கொடுக்கிறது.

மத்தியதர வகுப்பு எதிர்ப்பாளர்கள், இழிவுபடுத்தப்பட்ட சக்திகளான CHP கெமாலிய குடியரசு மக்கள் கட்சி, அதன் போலி இடது ஆதரவாளர்கள் தலைமையில் இயங்குவோர், அவருடைய இஸ்லாமியவாத நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சிக்கு AKP, எதிராக பரந்த ஆதரவைத் திரட்ட விருப்பம் காட்டவில்லை, இயலவும் முடியாது.

இது ஏகாதிபத்திய வட்டங்களில் சில கவலைகளை கொடுத்துள்ளது. அவர்கள் துருக்கி முழுவதும் அடக்குமுறை தொடர்வது எர்டோகனை இழிவுபடுத்தும் என்றும் AKP க்கு எதிராக இன்னும் ஆபத்தான இயக்கத்தை, 2011ல் எகிப்தில் தஹ்ரிர் சதுக்க எதிர்ப்புக்கள், பரந்த வேலைநிறுத்தங்களை தூண்டி, எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியை கவிழ்த்ததைப் போன்று, தொழிலாள வர்க்கத்தை அடித்தளமாகக் கொண்டு தூண்டும் என்று அஞ்சுகின்றனர்.

“துருக்கியில் எர்டோகனின் ஆபத்தான சூதாடல்” என்னும் தலைப்புடைய கட்டுரையில் பிரெஞ்சு நாளேடு Liberation, எர்டோகன் அவருடைய அரசாங்கம் குறைமதிப்பிற்கு உட்படக்கூடிய இடரை எடுத்துள்ளார் என்றது. “அழுத்தங்களின் விரிவாக்கம் விரைவில் கட்டுப்பாடு இல்லாமல் போகலாம்.

அது எழுதியது: “தெருக்களில் இருக்கும் இன்னொரு துருக்கி, சிறுபான்மையில்தான் இருக்கிறது. இதில் கெமாலிய உயரடுக்குகள், மேற்கத்தைய மயமான மத்தியதர வகுப்புக்கள், தங்கள் தனிப்பட்டவாழ்வில் அரசு தலையிடுவதை விரும்பாத இளைஞர்கள், அலாவிக்கள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மக்களில் 15-20% உள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி ஆகும். இது நிறைய மக்கட்தொகை கொண்டது, ஆனால் தேர்தலில் பெரும்பான்மை பெற போதாதது. 2007 வசந்த காலத்தில் AKP இஸ்லாமியவாத அமைப்புக்களின் எதிர்ப்புக்களையும் மீறி நூறாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி தேர்தல்களில் வெற்றி பெற்றது. இது எர்டோகனின் சூதாட்டம், இம்முறை தோற்கலாம்.

எர்டோகனுடைய கொள்கை குறித்து நிதியச்சந்தைகளில் பதட்ட அறிகுறிகள் உள்ளன. துருக்கிய நாணயத்தின் மதிப்பு 1.85 லிராவில் இருந்து 2 லிரா அமெரிக்க டாலருக்கு என சரிந்துள்ளது. நேற்று துருக்கியின் மத்திய வங்கி தலையிட்டு, 50 மில்லியன் அமெரிக்க டாலரை விற்று லிராவை வாங்கி நாட்டின் நாணய மதிப்பை நிதியச் சந்தைகளில் முட்டுக் கொடுத்து நிறுத்தியது.