சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Storm kills dozens of fishermen

இலங்கை: புயலில் டஜன் கணக்கான மீனவர்கள் கொல்லப்பட்டனர்

By our correspondents
14 June 2013

use this version to print | Send feedback

கடந்த சனிக்கிழமை, இலங்கை தென்மேற்கு கடற்கரை பகுதியில் தாக்கிய புயலினால் குறைந்தது 50 மீனவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இறந்த மீனவர்களின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை கடலில் இருந்து மீட்கப்பட்டன. இன்னும் 17 பேர் புதன் வரை காணாமல் போயிருப்பதால் இறப்பு எண்ணிக்கை உயரக் கூடும்.

தெற்கில் பேருவல, பலபிட்டிய, மற்றும் ஹிக்கடுவையிலும் மேல் மாகாணத்தில் தெஹிவலை, ரத்மலானை மற்றும் மொரட்டுவையிலும் மீனவ குடும்பங்களின் வீடுகளும் கூட மோசமாக சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்து திணைக்களத்தின் படி, சுமார் 1.433 பேர் இடம்பெயர்ந்துள்ளனர், 107 வீடுகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன, மற்றும் 2.228 வீடுகள் சேதமடைந்துள்ளன.

உலக சோசலிச வலைத் தள நிருபர்களுடன் பேசிய கோபமடைந்திருந்த மீனவர்கள், சரியான முன்னெச்சரிக்கை முறைமையை மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்காதமைக்கு அரசாங்கத்தை கண்டனம் செய்தனர். புயல் ஒரு இயற்கை பேரழிவாக இருந்தாலும், மக்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டிருந்தால், பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

வளிமண்டல திணைக்களத்தின் இயக்குனர் சுனில் ஜயசேகர நிருபர்களுடன் பேசியபோது, அவரது நிறுவனம் கடந்த சனிக்கிழமை வானிலை பற்றி அனைத்து முகவரமைப்புகளுக்கும் ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தெரிவித்தார். ஆனால், தனது நிறுவனத்திடம் வளிமண்டலத்தின் திடீர் மாற்றங்களை கண்காணிக்க அதிநவீன தொழில்நுட்பம் இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். அவரது உதவியாளர் லலித் சந்திரபால, திணைக்களத்தில் கடினமாக புயல் நிகழ்வுகளை சமாளிக்க முடியாதளவு, 17 வானிலை ஆய்வாளர்கள் மற்றும் 77 தொழில்நுட்ப அலுவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக கூறினார்.


Funeral for two fishermen

அரசாங்கம் உடனடியாக வளிமண்டலவியல் அதிகாரிகளை குற்றம் சாட்டியதோடு தனது பொறுப்பில் இருந்து கை கழுவிகொண்டது. அதன் ஏய்ப்பு மிகவும் அப்பட்டமான என ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலைப்பு கூறியது: "வழக்கமாக நடப்பது என்னவெனில், அரசியல்வாதிகள் அத்தகைய ஆறுதல்களை கூறிவிட்டு, அரச அதிகாரிகளின் செலவில் மக்களின் சீற்றத்தை திசை திருப்புவதுடன், ஆய்வு அறிக்கைகளை கிடப்பில் போட்டுவிடுகின்றனர்." அதிகரித்து வரும் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்புக்கு இந்தப் பேரழிவு இன்னும் எண்ணெய் வார்க்கின்றது என்பதையிட்டு இந்த ஊடக அமைப்பு கவலை தெரிவிக்கின்றது.

அரசாங்கம் சில தலைதப்பும் பாவனைகளை செய்தது. வழக்கம் போல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, பேரழிவு பற்றியும் வளிமண்டலவியல் திணைக்களத்தில் ஏதாவது கவனக் குறைவு நடந்துள்ளதா என்பது பற்றியும் விசாரிக்க ஒரு குழுவை நியமனம் செய்தார். அவர் இறந்தவர்களின் குடும்பக்களுக்கு வெறும் 100,000 ரூபாவும் (800 டொலர்) மரணச் சடங்கு செலவுகளுக்கு 15,000 ரூபாவும் குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கினார்.

2004 டிசம்பரில் நடந்த ஆசிய சுனாமி அழிவின் பின்னர், இராஜபக்ஷவின் முன்னோடியான சந்திரிகா குமாரதுங்க, வானிலை எச்சரிக்கை அமைப்பு ஒன்றை நிறுவுவதாக வாக்குறுதி வழங்கினார். எனினும், இந்த அமைப்பு இன்னும் அதன் செயல்திறனை மதிப்பிட சோதனை செய்யப்படவில்லை. இலங்கையில் கிட்டத்தட்ட 40,000 பேர் கொல்லப்பட்ட சுனாமியால் மீனவர்கள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

2011ல், அரசாங்கம் வளிமண்டலவியல் திணைக்களத்தை நவீனப்படுத்த நிதி ஒதுக்குவதாக வாக்குறுதியளித்தது. எனினும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த திட்டம் 2014க்கு ஒத்தி வைக்கப்பட்டது என ஒப்புக்கொண்டார். இந்த ஒத்திவைப்பு அரசாங்கம் செலவுகளை வெட்டித்தள்ளுவதன் விளைவே ஆகும்.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் திங்களன்று தெஹிவளையில் கடலமத்த பகுதிக்கு சென்ற போது, நூற்றுக்கணக்கான மக்கள் மேலும் சடலங்கள் கிடைக்கின்றதா என்று பார்க்க கூடியிருந்தனர். கடலமத்த மூன்று கிலோமீட்டர் நீளமான, ஒரு குறுகிய கரையோர பகுதியாக காணப்படுகிறது.

சுமார் 1,000 குடும்பங்கள் கடல் மற்றும் ஒரு இரயில் பாதை இடையே இப் பகுதியில் வாழ்கின்றன. அநேகமான வீடுகள் மரப் பலகைகளால் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கு குழாய் தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. பெரும்பாலானவர்கள் மீன்பிடி மூலம் ஒரு சம்பாதிக்கின்றனர். மற்றவர்கள் காய்கறிகள் விற்கின்றனர் அல்லது கூலி வேலைகள் செய்கின்றனர்.

மீனவர்கள் இலங்கை சமூகத்தில் மிக வறிய தட்டினராவர். பொதுவாக, மூன்று மீனவர்கள் ஒரு இயந்திரம் பொருத்தப்பட்ட ஒரு சிறிய ஃபைபர் படகில் கடலுக்கு செல்வர். 7,000 ரூபா எரிபொருள் மற்றும் உணவு செலவுக்கு தேவை. எரிபொருள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் வலைகளுக்கான ஒதுக்கீடுகள் போக, அரை நாள் வருமானம் படகு உரிமையாளருக்கு செல்கிறது. அவர்களது மாத வருமானம் 10,000 முதல் 12,000 ரூபாய் வரை ஆகும்.

நாங்கள் புயலில் இறந்த சுதத் ரோஹனவின் விதவை மனைவியுடன் பேசினோம். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். 2004 சுனாமியின் போது தனது வீட்டை இழந்த ரோஹண, சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் பாணந்துறையில் ஒரு சிறிய வீட்டிற்கு நகர்ந்தார். அவர் ஒவ்வொரு நாளும் பயணம் செய்வது கடினமாக இருந்த காரணத்தால், அவர் மீன்பிடி கிராமத்தில் ஒரு சமூக மையத்தில் ஒரு அறையில் வசித்து வந்தார். தாம் ஒரு கடினமான வாழ்க்கை வாழ்ந்ததாகவும், இப்போது அவர் இறந்து விட்டதால் எதிர்காலத்தில் அது மிக மோசமாக இருக்கும் என அவரது மனைவி கூறினார்.

Sudath Rohana's widow and her two children

மீனவர் விமலசிறி புயலில் தப்பி பிழைத்தவர். "நாம் சற்றே தப்பி மிகவும் கஷ்டப்பட்டு கரைக்கு திரும்பினோம். தமது படகுகள் கரையில் இருந்து ஆழ்கடல் பகுதிக்குள் நுழையும் இடங்களில் உள்ள பாறைகளில் மோதியதால் அநேகமானவர்கள் இறந்தனர். நாங்கள் பல ஆண்டுகளாக இந்த நுழைவுப் பகுதியை அகலப்படுத்துமாறு கோரி வந்துள்ளோம். முன்னர் ஜனாதிபதி [இராஜபக்ஷ] மீன்பிடி அமைச்சராக இருந்தபோது, நாம் இந்த கோரிக்கையை அவரிடம் முன்வைத்தோம். ஒன்றும் நடக்கவில்லை, என்று அவர் விளக்கினார்.

"இந்த அரசாங்கம் நகரங்களை அழகுபடுத்த அதிவேகப் பாதைகளை உருவாக்குகிறது, விமான நிலையம் கட்ட பணம் செலவழிக்கிறது, ஆனால் சாதாரண மக்களின் உயிர்களை பாதுகாக்க எதுவும் செய்யவில்லை." என விமலசிறி மேலும் கூறினார்.

மற்றொரு மீனவர் முனசிங்க இராஜபக்ஷ, தான் கடந்த சனிக்கிழமை கடலுக்கு சென்று உயிர் பிழைத்தாலும் உடன் சென்ற திலக் உபதிஸ்ஸ உயிரழந்து விட்டார், என்று விளக்கினார். "நாம் அன்று மீன் பிடிக்கவில்லை. அலைகள் கடினமானதாக இருந்தன. திடீரென்று எங்கள் படகு மேலே சென்று பின்னர் தலைகீழாக கவிழ்ந்து விட்டது. உபதிஸ்ஸ உள்ளே சிக்கிக் கொண்டார்.

"அரசாங்கம் அனைத்து மீனவர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதாகவும், நாம் அவற்றை அணிய தவறும் பட்சத்தில் நமக்கு தண்டம் அறவிடுவதாகவும் இப்போது கூறுகிறது. ஆனால் எங்களுக்கு எந்த மானியம் கிடைப்பதில்லை, மற்றும் எரிபொருள் மானியம் மேலும் குறைக்கப்பட்டு வருகிறது, என இராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதுகாப்பு உபகரணங்களை அணியவில்லை என அரசாங்கம் குற்றம் சாட்டினாலும், எங்களால் உபகரணங்களை வாங்க முடியவில்லை என பலபிட்டியவைச் சேர்ந்த ஒரு மீனவர் எமது வலைத் தளத்திடம் கூறினார். மீன்பிடி தொடர்பாடல் உபகரணம் ஒன்றின் ஒரு பகுதியான ஒரு செட் லைட்டின் விலை, சமீபத்தில் 17,000 முதல் 30,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Munasinghe Rajapakse

பலபிட்டியவைச் சேர்ந்த மீனவர் ஒருவர்,
அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வெள்ளிக்கிழமை இரவு எச்சரிக்கைகள் விடுத்திருந்தால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று உலக சோசலிச வலை தள நிருபர்களிடம் கூறினார். படகுகள் திரும்பி கரைக்கு அருகே வந்த போதே கவிழ்ந்ததால் பெரும்பாலானவர்கள் இறந்தனர்.

பிலபிட்டியவில் உள்ள கிராம மீன்பிடி சங்கத்தின் தலைவர் ஆர்.ஜீ. கருணாரட்ன கூறியதாவது: "ஆறு மீனவர்கள் எமது கண் முன் மூழ்கினர். அடுத்த வந்த நான்கு படகுகள் துறைமுகம் அருகே கவிழ்ந்தன. மூன்று பேரால் மட்டுமே கரையை அடைய முடிந்தது."

முன்னேறிய தொடர்பு சாதனங்கள் மற்றும் பிற வசதிகள் கொண்ட துறைமுகங்களின் பற்றாக்குறை, அதிக இறப்பு விகிதத்துக்கு மற்றொரு காரணமாகும். ஜனாதிபதி இராஜபக்ஷ மீன்பிடி அமைச்சராக இருந்தபோது, அவர் பலபிட்டியவில் ஒரு துறைமுகத்தை கட்ட வாக்குறுதி அளித்தார், ஆனால் அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டது.

மீனவர்கள் தமது வறுமை காரணமாக தங்கள் உயிர்களை பணயம் வைக்கத் தள்ளப்பட்டுள்ளனர். தனது கணவர் புயலில் இறந்த பிறகு மூன்று குழந்தைகளுடன் இப்போது ஒரு விதவையாகி உள்ள நில்மினி நிலங்க விளக்கியதாவது: "அவர் பல மாதங்கள் சரியான வேலை இல்லாமல் இருந்தார். எங்கள் குடும்பம் பெரும்பாலான நேரம் பட்டினியில் கிடந்தது. சில சமயம் அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதற்கு உயர் வட்டி விகிதங்களில் கடன் எடுக்க வேண்டியிருந்தது. நான் அவரை பிரிந்து எப்படி வழ்வது என்று தெரியவில்லை."

உழைக்கும் மக்களின் நல்வாழ்வை அரசாங்கம் அலட்சியம் செய்வதானது, அது பெருநிறுவன உயரடுக்கின் சார்பில் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை செயல்படுத்த முயல்வதில் இருந்து எழுகின்றது. புயல் எச்சரிக்கை அமைப்பு உட்பட, மீனவர்களின் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமை, வேலைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மீதான பொது செலவுகளை வெட்டிக் குறைக்கும் அதன் பரந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சம் ஆகும்.