சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : ஈரான்

“Moderate” cleric wins Iranian presidential election

“மிதவாத’ மதகுரு ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்

By Peter Symonds 
17 June 2013

use this version to print | Send feedback

ஆழ்ந்த சமூகப் பொருளாதார நெருக்கடிக்கு நடுவே, ஹசான் ருஹானி ஈரானின் ஜனாதிபதித் தேர்தலில் கடந்த வெள்ளியன்று நேரடிப் பெரும்பான்மையான 50.7 சதவிகிதத்தில் வென்று, இரண்டாவது சுற்றுத் தேர்தலைத் தவிர்த்தார். ஒரு மதகுருவான ருஹானி ஆட்சியின் சீர்திருத்தப் பிரிவு எனப்படுவதன் முக்கிய நபர்களான முன்னாள் ஜனாதிபதிகள் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சனி மற்றும் மகம்மது ஹாட்டம் ஆகியோரின் ஆதரவைக் கொண்டிருந்தார்.

“அதிதீவிரவாதம் மற்றும் மோசமான நடத்தைக்கு” எதிராக “மிதவாதப் போக்கிற்கும்”, “முற்போக்கிற்கும்” கிடைத்துள்ள வெற்றிதான் தன்னுடைய வெற்றி என்று ருஹானி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பிரச்சாரத்தின் போது அவர் ஜனாதிபதி மகமது அஹமதினாஜாத்தை ஈரானின் அணுத்திட்டம் குறித்து கடுமையான அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடைகள் சுமத்தப்பட்டதை தடுப்பதில் தோல்வி அடைந்ததற்காக குறைகூறினார்; மேலும் “உலகத்துடன் உரையாடல், இடைத் தொடர்பு தேவை” என்றும் அழைப்பு விடுத்தார்.

ருஹானி தற்பொழுதுள்ள ஜனாதிபதி மகம்மத் அஹ்மதினாஜாத்திடமுள்ள பரந்த பொது விரோதப் போக்கைப் பயன்படுத்திக் கொண்டார்; முந்தையவர் 2009 தேர்தலின் முதல் சுற்றில் ஜனரஞ்சக உறுதிமொழிகளான வாழ்க்கைத் தரங்களை முன்னேற்றுவித்தல் என்பதனூடாக தெளிவான பெரும்பான்மையில் வெற்றி பெற்றார், ஆனால் பெரும் பணவீக்கத்திற்கு வழிவகுத்த விலைகளுக்கான உதவித் தொகைகளை வெட்டும் தொலை விளைவுடைய செயல்களை செயற்படுத்தினார்.

விரிவான தேர்தல் முடிவுகள் இன்னும் கிடைக்காத நிலையில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளின் பிரிவுகள் ருஹானிக்கு அவர் மோசமாகிக் கொண்டிருக்கும் சமூகப் பேரழிவைக் குறைப்பார் என்பதற்காக வாக்களித்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகள் மீது தடையொன்று சுமத்தப்பட்டதை அடுத்து அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு 50 சதவிகிதம் குறைந்து, ஆண்டு பணவீக்கம் 30 சதவிகிதத்தை எட்டியுள்ளது. குறைந்த பட்ச தேசிய ஊதியம் அமெரிக்க டாலருக்கு எதிராகச் சரிந்துவிட்டது, மாதம் 275 டொலர்களில் (300 ரியால்கள்) இருந்து 134 டொலர்கள் (ரியால்கள் 487) எனக் குறைந்து விட்டது.

உத்தியோகபூர்வ வேலையின்மை 14 சதவிகிதமாக உள்ளது; 20 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் 15-29 வயதுப் பிரிவில் இருப்பவர்கள், ஆனால் இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று பரந்த முறையில் கருதப்படுகிறது. தொழிலாள வர்க்கம் ஆலை மூடல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது; இவை அமெரிக்க பொருளாதாரத் தடைகளால் விளைந்தவை; அமெரிக்கா இம்மாதம் தடைகளை நாட்டின் கார்த்துறைக்கும் விரிவாக்கியது; மற்றும் நிதியச் செயற்பாடுகளின் மீதும் தடைகளை இறுக்கியுள்ளது.

ஆட்சியின் பழமைவாதப் பிரிவுகளிலுள்ள பிளவுகளாலும் ருஹானி ஆதாயத்தைப் பெற்றுள்ளார்; அது இசைவு பெற்ற வேட்பாளர்கள் 6 பேரில் 5 பேரை நிறுத்தியது; அஹ்மதிநாஜேத்துடன் தொடர்புடைய வேட்பாளர்களை ஓரங்கட்டியது. இருமுறை ஜனாதிபதியாக இருந்த காரணத்தால் அஹ்மதிநாஜேத் தேர்தலில் நிற்கத் தடைக்கு உட்பட்டார்; அவர் ஆதரவு கொடுத்த எஸ்ஃபான்டியர் ரஹிம் மஷீய் வேட்பாளர்களை பரிசீலிக்கும் பாதுகாவலர் சபையினால் ஒதுக்கப்பட்டார்.

2009 தேர்தலுக்குப் பின் அதிஉயர் தலைவர் அயோதொல்லா அலி காமனீய் உடன் பிணைந்துள்ள “முக்கிய” பிரிவிற்கும் அஹ்மதிநாஜேட்டிற்கும் இடையே வேறுபாடுகள் வெளிப்பட்டன – இவை அஹ்மதிநாஜேட் மறைமுகமாக மத நடைமுறையை குறைகூறியது, அவருடைய ஜனரஞ்சகப் பொருளாதாரக் கொள்கைகளால் விளைந்தவையாகும்.

ருஹானியிடம் தோற்ற இரண்டாவது இடத்தைப் பெற்ற தெஹ்ரான் மேயர் மகம்மது பகிர் கலிபாப் மொத்த வாக்குகளில் 16.6 சதவிகிதத்தைத்தான் பெற்றார்; அவரைத் தொடர்ந்து நாட்டின் உயர்மட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்தும் சயீத் ஜலாலி 11.3 சதவிகித வாக்குகள் பெற்றார். முன்னாள் ஈரானிய புரட்சிகர படைப்பிரிவின் தலைவரான மோசீன் ரேஜாய் 10.5 சதவிகித வாக்குகளை பெற்றார்; முன்னாள் வெளியுறவு மந்திரி அக்பர் வேலயதி 7.3 சதவிகிதத்தையும் முகம்மத் கார்ஜாய் 1.2 சதவிகிதத்தையும் பெற்றனர்.

வேட்பாளர்கள், அவர்களை ஆதரித்த அனைத்து பிரிவுகளும், ஷா ரேஜா பஹ்லவியை தூக்கியெறிந்த 1979 புரட்சியை நடத்திய தொழிலாள வர்க்கத்தை அடக்கியதை தொடர்ந்து வெளிப்பட்ட அரச கருவிகளுடன் தொடர்புடையவர்கள். அவற்றின் வேறுபாடுகளை ஈரானிய முதலாளித்துவத்தின் போட்டிப் பிரிவுகளுடைய நலன்களை பிரதிபலிக்கின்றன; இவை சர்வதேசப் பொருளாதாரத் தடைகள், பெருகும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் விளைவினால் மோசமடைந்துள்ளன.

ஜனாதிபதியாக 1989 முதல் 1997 வரை பதவியில் இருந்த பில்லியனர் வணிகர் ரப்சஞ்சனியுடன் ருஹானியுடன் நெருக்கமான பிணைப்புடையவர். அவர் ரப்சஞ்சனியின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்து, அதே பங்கை “சீர்திருத்தவாத” ஜனாதிபதி மகம்மது ஹடாமியின் கீழும் தொடர்ந்திருந்தார். அவர் நாட்டின் உயர்மட்ட அணுசக்தி பேச்சுக்களை நடத்துபவராக ஐரோப்பிய சக்திகளுடன் 2003ல் இருந்து 2005 வரை இருந்தார்.

அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் ஈரானிய அரசாங்கம் விரைவில் நாட்டின் அணுச்சக்தி திட்டம் குறித்து பேச்சுக்களை தொடருமாறு அழைப்பு விடுத்துள்ளன.

வாஷிங்டன் 2009ம் ஆண்டு வலதுசாரி பசுமை இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது; இப்பிரிவு அஹ்மதினாஜேட்டின் வெற்றியை சவாலுக்கு அழைத்த மத்தியதர வர்க்க உயர்மட்டச் சலுகை பெற்றவர்களை அடித்தளமாகக் கொண்டுள்ளது. ருஹானியின் வெற்றிக்கு அமெரிக்கா காட்டும் எதிர்கொள்ளல் முற்றிலும் மாறுபட்டது ஆகும்.

கடந்த வெள்ளி தேர்தலுக்கு முன்பு, வெளிவிவகார உதவிச் செயலர் வெண்டி ஷேர்மன் தேர்தலை “நியாயமற்றது, நேர்மையற்றது, பிரதிநிதித்துவ தன்மை அற்றது” என்று முத்திரை குத்தினார். ருஹானியின் வெற்றிக்குப்பின், வெள்ளை மாளிகை அதன் குரலை மாற்றிக் கொண்டு, “ஈரானிய மக்களின் வாக்களிப்பை மதிக்கும்” என உறுதி கூறி, புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபடத் தயார் என்று அறிவித்துள்ளது.

சந்தேகத்திற்கு இடமின்றி, ஒபாமா நிர்வாகம் நிலைமையை பயன்படுத்தி தெஹ்ரானிடம் இருந்து முடிந்தளவு சலுகைகளை பிழிந்தெடுப்பதும்; அதற்கு ஈடாக எதையும் கொடுக்காது அல்லது குறைந்த அளவைத்தான் கொடுக்கும். 2003ல் இருந்து அமெரிக்காவானது ஈரான் அணுவாயுதங்களை கட்டமைத்து வருகிறது எனக் கூறப்படும் ஆதாரமற்ற கருத்துக்களை எரியூட்டி அவற்றை பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்கு போலிக் காரணமாகப் பயன்படுத்தி வருகிறது. ஈரானிய பொருளாதாரத்தை, தடைகள் மூலம் முடக்கிய பின், அமெரிக்கா தெஹ்ரானிடம் இருந்து முழு சரணாகதியைத் தவிர வேறு எதையும் ஏற்காது—இதன் நோக்கம் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் சிரிய ஆட்சிக்கு ஈரானிய ஆதரவு நிறுத்தப்பட வேண்டும், ஈரானிய அணுத் திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பவை தொடக்க கோரிக்கைகளாக இருக்கும்.

ருஹானி அமெரிக்காவுடன் சமரசத்தை நாட முற்பட்டாலும், இந்த இரண்டு கோரிக்கைகளில் எதுவும் ஈரானிய ஆட்சியின் எந்தப் பிரிவிற்கும் ஏற்புடையது அல்ல; அது அமெரிக்காவிடம் இருந்து ஒரு வகையான நிலைமை சீர்படுதல் குறித்த வெளிப்படையாக கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதைத்தான் பலமுறையும் கண்டுள்ளது. அதுவும் குறிப்பாக 2000 தொடக்க ஆண்டுகளில் ஜனாதிபதி ஹடாமியின் கீழ் ஈரான் தனிப்பட்ட முறையில் அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய, ஈராக் மீதான படையெடுப்புக்களுக்கு ஆதரவு கொடுத்தும், புஷ் நிர்வாகத்திடம் இருந்து அதன் அணுத்திட்டம் குறித்து பெருகிய அழுத்தத்தை பெற்றது. புஷ் ஈரானை ஈராக், வட கொரியாவுடன் இணைத்து “தீமையின் அச்சு” என்று முத்திரை குத்தினார்.

ஈரானின் உயர்மட்ட அணுச்சக்தி பேச்சுக்கள் நடத்துபவர் என்னும் முறையில் ருஹானி நேரடியாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய EU-3 என அழைக்கப்பட்ட நாடுகளுடனான பேச்சுக்களில் ஈடுபட்டவர்அதிஉயர் தலைவர் காமனீயின் ஆதரவுடன் யுரேனிய செறிவாக்கலை தற்காலிகமாக நிறுத்த உடன்பட்டார். அமெரிக்க ஆதரவு இல்லாமல், ஒரு விரிவான பொருளாதார மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்த ஐரோப்பிய உறுதிமொழிகள் ஏமாற்றத்தை அளித்தன; இதையொட்டி அஹ்மதினாஜேட் மற்றும் அவருடைய கடின நிலைப்பாட்டிற்கு 2005 தேர்தலில் வெற்றி கிடைக்க வகை செய்யப்பட்டது.

2005ல் அஹ்மனிநாஜேட்டின் வெற்றிக்கு வழிவகுத்த மற்றொரு காரணி தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளிடையே சந்தைச் சார்புடைய மறுகட்டமைப்புக் கொள்கைகள் ரப்சஞ்சனி மற்றும் ஹடாமி நிர்வாகங்கள் செயல்படுத்தப்பட்டதின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த விரோதப் போக்காகும்; இவை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடைய பிளவை அதிகப்படுத்தின. அஹ்மதினெஜாட் ரப்சஞ்சனியை இரண்டாம் சுற்றில் பெருமளவு வித்தியாசத்தில் தோற்கடித்தார்; ஏனெனில் அவர் உயரும் எண்ணெய் விலைகள் தோற்றுவிக்கும் செல்வமானது வறுமையை அகற்ற பயன்படுத்தப்படும் என்றார்.

சமீபத்திய தேர்தல் பிரச்சாரத்தில், ஆறு வேட்பாளர்களும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அஹ்மனினாஜேட்டைக் குற்றம் சாட்டினர். “பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்படுகிறது” என்னும் அவர்களுடைய குற்றச்சாட்டு பொதுச் செலவுகளை அவர் குறைக்கப் போதுமானவற்றை செய்யவில்லை, தொழிலாள வர்க்கத்தின் மீது புதிய சுமைகளை சுமத்தவில்லை என்பதாகும். IMF கோரிக்கைகளை ஒட்டி அஹ்மதினாஜேட் விலைகளுக்கான உதவித் தொகைகளை அகற்றினார், ஆனால் மக்களின் மிக வறிய தட்டுக்களுக்கு குறைந்த அளவில் நலன்களை கொடுத்ததற்கு பெரிதும் குறைகூறப்பட்டார்.

புதிய ஈரானிய நிர்வாகமானது அமெரிக்க தலைமையிலான பொருளாதார தடைகளை குறைக்க முற்படும்; எல்லாவற்றிற்கும் மேலாக அது அஹ்மதினாஜேட் தொடக்கிய சிக்கன நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்; இது புதிய அரசியல் நெருக்கடி விரைவாக வெளிப்பட வழிவகுக்கும்.