சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Defend Edward Snowden!              

எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகார்!

Barry Grey and David North
13 June 2013

use this version to print | Send feedback

உலக சோசலிச வலைத் தளமும், சோசலிச சமத்துவக் கட்சியும் அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் அனைத்துத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களை எட்வார்ட் ஸ்னோவ்டெனின் பாதுகாப்பிற்கு முன்வருமாறு அழைப்பு விடுகின்றது.

மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களையும் மற்றும் உலகெங்கிலும் இருப்பவர்களையும் இலக்குவைக்கும் இரகசிய, சட்டவிரோத கண்காணிப்புத் திட்டங்களை தைரியமாக வெளிப்படுத்தியதற்காக ஸ்னோவ்டென் அமெரிக்க அரசாங்கத்தால் பாரிய வேட்டையாடலுக்கு இலக்காகியுள்ளார். அவருடைய பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான விடயமாகவுள்ளது.

ஒபாமா நிர்வாகம் 29 வயது முன்னாள் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின்(NSA)  ஒப்பந்தக்காரர் மீது குற்றச்சாட்டு கொண்டுவர இருப்பதாக ஏற்கனவே கூறியுள்ளது. காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்கள், செய்தி ஊடக விமர்சகர்கள் ஆகியோர் அவரை தேசக் குற்றத்திற்காக கண்டித்து வாழ்நாள் முழுவதும் அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் அல்லது மரண தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

தேசத்துரோக குற்றச்சாட்டு என்பது ஒரு மோசமான இழிவுபடுத்தலாகும். உரிமைகள் பற்றிய சட்டத்தில் பொதிந்துள்ள ஜனநாயகக் கோட்பாடுகள் ஒன்றையும் ஸ்னோவ்டென் காட்டிக்கொடுக்கவில்லை. இந்த உரிமைகளுக்கு எதிரான சதித்திட்டத்தை அம்பலப்படுத்திய நிலையில், தன்னுடைய உத்தியோகம் மற்றும் ஒருவேளை வாழ்க்கையையும் இழக்கும் அபாயத்தில், அவர் அந்த உரிமைகளை பாதுகாக்கிறார்.

ஸ்னோவ்டென் அவருடைய வாழ்க்கை ஆபத்தில் உள்ளது எனக் கூறுகையில் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. ஒரு தகவல் அறிந்த மக்களிடம் தான் தனது பாதுகாப்பு உள்ளது என்பதை அவர் உணர்ந்ததால்தான் அவர் பகிரங்கப்படுத்தும் முடிவை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.  இல்லாவிடின் ஒபாமா நிர்வாகத்தின் படுகொலைத் திட்டத்தில் அடுத்த பாதிப்பாளராக அவர் இலக்கு வைக்கப்படலாம்.

காங்கிரஸ் மற்றும் செய்தி ஊடகத்தின் முழுச்சீற்றமும் கோபமும், அமெரிக்க அரசியல் அமைப்பின் மீது பாரிய மீறல்களை நடத்தியதற்கு பொறுப்பு கொண்டவர்களை நோக்கி இயக்கப்படவில்லை என்பதுதான் அசாதாரண நிகழ்வாக உள்ளது. மாறாக அந்த மீறல்களை அம்பலப்படுத்தியவருக்கு எதிராக கோபத்தைக் காட்டுகின்றன. ஒரு சில வாரங்கள் முன்புதான் தேசிய உளவுத்துறையின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், செனட் குழு ஒன்றின் கூட்டத்தில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பற்றி அமெரிக்க அரசாங்கம் தகவல் சேகரிக்கிறதா எனக் கேட்கப்பட்டதற்கு பொய்ச் சாட்சியம் கூறினார். அப்படியும் கூட அவர்மீது குற்றச்சாட்டு விசாரணை வேண்டும் என்று எந்த அதிகாரியும் செய்தித்தாளும் கோரவில்லை.

ஒபாமாவிற்கு எதிரான பதவிவிலக்கல் விசாரணை தேவை என்ற அழைப்புக்களும் வரவில்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி நடத்தும் செயல்களின் தீவிரமான நிலைமைக்கு அருகே கூட வராத ரிச்சார்ட் நிக்சன், பதவிவிலக்கல் விசாரணை வரும் என எதிர்பார்த்தார்.

ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியிருப்பதற்கு ஆளும்தட்டினது வெறித்தனமானதும் தீயதுமான பிரதிபலிப்பு எந்த அளவிற்கு ஜனநாயக விரோத, சர்வாதிகார ஏன் பாசிசக் கருத்துக்கள் கூட அமெரிக்க அரச மற்றும் செய்தி ஊடகத்தின் கண்ணோட்டத்தில் பொதுந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த அடுக்குகளுள், உரிமைகள் பற்றிய சட்டத்திற்கு பெருகிய எதிர்ப்புத்தன்மை உள்ளது. அதன் பின்னே அமெரிக்க மக்கள் மீதும் உள்ளது.

ஸ்னோவ்டென் மீது தேசத்துரோக குற்றம் சாட்டுபவர்களும் பிராட்லி மானிங் மற்றும் ஜூலியன் அசாஞ்சை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பவர்களும்தான் அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகளை காட்டிக்கொடுப்பவர்களாகும். சர்வாதிகாரத்தை சுமத்தும் சதியில் இவர்கள் உடந்தையாக உள்ளனர்.

NSA, CIA, FBI, பென்டகன் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகத்தின் பாரிய பிரச்சாரக் கருவி ஆகியவை ஸ்னோவ்டெனுக்கு எதிராக பொதுக்கருத்தை நச்சுப்படுத்த ஒபாமா நிர்வாகத்தின் பின்னே அணிதிரண்டு தீவிரமாக ஈடுபட்டுள்ளன. முக்கிய உதாரணம் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் அதன் கட்டுரையாளர் டேவிட் ப்ரூக்ஸ் ஆவர்.

ஸ்னோவ்டெனின் வயது குறித்து கவனம் காட்டியுள்ள பல விமர்சகர்களுள் ப்ரூக்ஸும் ஒருவராவார். “தங்கள் இருபதுகளில் இருக்கும் இளைஞர்களின் பெரும்பகுதியின்” பிரதிநிதியாக ஸ்னோவ்டென் உள்ளார் என எழுதியுள்ளார். அரசியல் அமைப்புமுறையும் செய்தி ஊடகமும் அச்சத்தில் உள்ளன. ஸ்னோவ்டெனை அவை சாதாரண தனிநபராகக் காணவில்லை, உத்தியோகபூர்வ அமைப்புகளில் இருந்து முற்றிலும் அந்நியப்பட்டுவிட்ட ஒரு முழுத் தலைமுறையின் பிரதிநிதியாகத்தான் சரியாக காண்கின்றன. ஜனநாயக உரிமைகளை இவை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை அத்தலைமுறைக்கு இல்லை.

செவ்வாயன்று “ஒற்றைக் கசிவாளர்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ப்ரூக்ஸ் 1930களில் பிராங்கோ, முசோலினி, ஹிட்லர்  போன்ற பாசிச சர்வாதிகாரிகளை பாதுகாத்த வாதங்களை போன்றவற்றை பயன்படுத்தி ஸ்னோவ்டெனையும் அரசியல் அமைப்புமுறை மீது நம்பிக்யைற்ற மில்லியன் கணக்கான பிற இளைஞர்களையும் கண்டிக்கிறார்.

குடும்பம், குடியிருப்புப்பகுதிகள், மத குழுக்கள், அரசு, தேசம், உலகம் என்ற “அதிகாரத்துவ கட்டமைப்புக்களின்” நல்லியல்புகளை அவர் வரவேற்கிறார். “நிறுவனங்களுக்கு மதிப்பும் பொதுவான வழக்கமுறைகளுக்கு மதிப்பும்” தேவை என உபதேசித்து, ஸ்னோவ்டென் “அதிகார உயர்மட்டங்களும் அமைப்புகளும் சந்தேகத்திற்கு உரியவை என்பதையும் உறுதியாக நம்புவதையும் மற்றும் அவர் வெளிப்படைத்தன்மைக்கு காட்டும் ஆழ்ந்த பற்று” குறித்தும் விமர்சிக்கின்றார்.

ஸ்னோவ்டென் “அரசியலமைப்பைக் காட்டிக் கொடுத்துவிட்டார்” என்னும் அபத்தமான குற்றச்சாட்டை முன்வைக்கையில், ப்ரூக்ஸ் விரோதப் போக்கை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அமெரிக்கக் குடியரசின் ஜனநாயக அஸ்திவாரங்களை பற்றிய முழு அறியாமையையும் புலப்படுத்துகிறார். அவர் எழுதுகிறார்: “ஓர் ஒற்றை 29 வயதுக்காரர் எது அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஒருதலைப்பட்ச முடிவெடுக்க அமரிக்காவை நிறுவியவர்கள் அதை தோற்றுவிக்கவில்லை.”

பெரும்பாலும் அவர்களுடைய 20களின் கடைசி, 30களின் முற்பகுதியில் இருந்த நிறுவனர்கள், மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஒரு புரட்சியை நடத்தவும் ஒரு ஒடுக்குமுறை ஆட்சியை தூக்கிவீசவும்  “ஒருதலைப்பட்ச முடிவெடுத்தவர்களாவர்”. அவர்கள் அரசாங்கம், நம்பிக்கையை அடிப்படையாக கொள்ளாமல் “ஒழுங்கமைக்கப்பட்ட அவநம்பிக்கையை” அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும், இல்லாவிடில் ஒரு புதுவகை சர்வாதிகாரத்தின் வடிவத்திற்கு திரும்பிவிடும் என்ற அடிப்படையில் அரசியலமைப்பை வெளிப்படையாக நிறுவினர். எனவேதான் மக்களுடைய அரசாங்கம் என்றில்லாமல்  சட்டத்தின் அரசாங்கமாகவும் மற்றும் சட்டவாக்கம், நிறைவேற்றுதல், நீதித்துறை என்னும்  மூன்று கிளைகளுக்கும் இடையே ஒன்றை ஒன்று பரிசீலித்து சமப்படுத்துதல் என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

தன்னுடைய கட்டுரையை முடிக்கையில் ஸ்னோவ்டென் தகவல் சேகரிப்பில் மூழ்கிப்போயிருப்பதாகவும்”, “சமூக ஒழுங்கு முறைகளுக்கும் மற்றும் அவற்றை கண்ணுக்குத்தெரியாமல் பிணைந்துள்ள கூறுபாடுகளை சேதப்படுத்தியது குறித்து அறியவில்லை” என்றும் குற்றம் சாட்டுகிறார்.

ஸ்னோவ்டென் அவருடைய தலைமுறையின் அனுபவங்களின் வெளிப்பாடாவார். இத்தலைமுறை மில்லியன் கணக்கான மக்களை அரசியல்மயப்படுத்தி தீவிரமயப்படுத்தியுமுள்ளது. 1983ல் பிறந்த இவர், அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மையின் நிலைமையின் கீழும்  மற்றும் சமூக எதிர்ப்பின் அமைப்புக்களாக இருந்த தொழிற்சங்கங்கள்  உடைந்த நிலைமையின் கீழும் வளர்ந்துவந்தார்.

வயதுமுதிர்ந்த தன்மையை அணுகமுன் ஸ்னோவ்டெனின் முதல் அரசியல் அனுபவங்கள் 9/11 ம் “பயங்கரவாதத்தின் மீதான போர்” எனப்படுவதாகும். அரசியல் அனுபவம் இல்லாத நிலையில், அவருடைய ஆரம்ப பிரதிபலிப்பு உயர்சிந்தனை மற்றும் தேசப்பற்று என்பவற்றின் கபடமற்ற இணைந்த தன்மையாகும். முதலில் அவர் அமெரிக்க அரசாங்கத்தை நம்பினார். ஆனால் அடுத்த பத்து ஆண்டுகள், அவருடைய கற்பனைகளை சிதறடித்துவிட்டன.

அவர் இராணுவத்தில் சேர்ந்ததற்குக் காரணம் “ஒரு மனிதன் என்னும் முறையில் மற்ற மக்களை அடக்குமுறையில் இருந்து விடுவிக்க உதவ வேண்டும் என்ற உணர்வைப் பெற்றிருந்தேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் விரைவில் ஏமாற்றம் அடைந்தார்; ஏனெனில் ”எங்களுக்கு பயிற்சி கொடுத்த பெரும்பாலானோர் அரேபியர்களை கொல்லுவதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர், எவருக்கும் உதவுவதற்கு அல்ல.” மில்லியன் கணக்கான மற்றவர்களைப் போலவே, அவரும் ஈராக் போர் பாக்தாத் பேரழிவுகரமான ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்ற பொய்யை அடித்தளமாக கொண்டது என்பதை கண்டறிந்தார்.

ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் அமெரிக்கா ஈராக்கில் அபு கிரைப் மற்றும் அமெரிக்க கைதிமுகாமான குவான்டனாமோ குடாவில் கைதிகளை சித்தரவதை செய்வதைப் பார்த்தார். ஈராக்கிய நகரம் பல்லுஜா அழிக்கப்படுவதையும், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இன்னும் கணக்கற்ற போர்க் குற்றங்கள் நடத்தப்படுவதையும் பார்த்தார். விசாரணையின்றி காலவரையற்ற காவல் போன்ற பொலிஸ் அரச நடவடிக்கைகள், கடத்தல் மற்றும் உள்நாட்டு மக்கள் மீதான மிகப் பெரிய கண்காணிப்பு போன்றவற்றைக் கண்டார். ஈராக் போருக்குக் கூறப்பட்ட எதிர்ப்பு மற்றும் புஷ்ஷின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் பற்றிய பாரக் ஒபாமாவின் பிரச்சார உறுதிமொழிகளின் தாக்கத்திற்குள்ளானார். ஆனால் “ஜனாதிபதிகள் பதவியை பெறுவதற்கும் வெளிப்படையாக பொய்கூறுவதையும் விளைவு பற்றிக் கவலைப்படாமல் பகிரங்கமாக வாக்குறுதிகளை மீறுவதற்கும்” தயாராக உள்ளனர் என்பதையும் கண்டு அரசியல் அமைப்புமுறையிலிருந்து மேலும் அந்நியப்பட்டார்.

NSA திட்டங்கள் பற்றி கசியவிட்டதில் தன் நோக்கங்களை ஸ்னோவ்டென் சிறப்பாக சுருக்கிக் கூறி, பொறுப்பையும் ஏற்க முன்வந்துள்ளார். செவ்வாய் இரவு South China Morning Post பத்திரிகையிடம், “நான் இங்கு நீதியில் இருந்து மறைந்து கொள்ள வரவில்லை; குற்றத்தை வெளிப்படுத்த வந்துள்ளேன்.” என்றார்.

ஸ்னோவ்டெனின் நிகழ்வுகள் ஆளும் உயரடுக்கை பெரும் பீதியில் தள்ளியுள்ளது. அவர்கள் மதிப்பிழந்து கொண்டிருப்பதுடன் மக்களின் பரந்த பிரிவுகளின் நம்பிக்கையை இழந்துள்ளனர். இதை அவர்கள் நம்பச்செய்யும் நடவடிக்கைகளால் திரும்பபெற முடியாது என்பதால் அவர்கள் அச்சுறுத்தலிலும் பயங்கரவாதத்திலும் இறங்கியுள்ளனர். பிறரை அச்சுறுத்த ஸ்னோவ்டெனை உதாரணமாக்க விரும்புகின்றனர்.

அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் உழைக்கும் மக்களும் இளைஞர்களும் எட்வார்ட் ஸ்னோவ்டெனையும் அதேபோல் பிராட்லி மானிங், ஜூலியான் அசாஞ் இனையும் பாதுகாக்க வேண்டும். பணியிடங்கள், கல்லூரிகள், பள்ளிகள், உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் ஆதரவு திரட்டப்பட வேண்டும். அவர்களுடைய பாதுகாப்பு ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்காக ஒரு வெகுஜன இயக்கத்தின் அபிவிருத்தியின் முன்னணியில் இருக்க வேண்டும்.

இரு பெரிய காரணிகளின் கனத்தினால் அமெரிக்காவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது: இராணுவ வாதம் மற்றும் போரின் அதிகரிப்பும் மற்றும் சமுக சமத்துவின்மை அதிர்ச்சிதரும் அளவிற்கு பெருகுவதுமே அவ்விரு காரணிகளாகும். ஒரு சதவிகித மக்கள் நாட்டின் 40% செல்வத்தை கட்டுப்படுத்தும் ஒரு சமூகத்தில் ஜனநாயக நிகழ்ச்சிப் போக்கினை பாதுகாத்துக்கொள்வது இயலாத செயலாகும்.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், போருக்கான மூலகாரணமான முதலாளித்துவ அமைப்புமுறை, சமூக சமத்துவமின்மை, சர்வாதிகாரத்தினை நோக்கிய உந்துதல் ஆகியவற்றிற்கு எதிரான அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியில் இருந்து பிரிக்கப்பட முடியாதது.

இப்போரட்டத்தை எடுத்துக் கொள்ள விரும்புவோர் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலும் சேருமாறு நாங்கள் அழைப்புவிடுகிறோம்.