சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Syrian war threatens regional sectarian bloodbath

சிரியப் போர் பிராந்திய குறுங்குழுவாத இரத்தக் களரி ஏற்படுத்த அச்சுறுத்துகிறது

Alex Lantier
21 June 2013

use this version to print | Send feedback

கடந்த சில வாரங்களாக மத்திய கிழக்கில் வாஷிங்டனின் மூலோபாயம் மிகத் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இது குறுங்குழுவாத பிளவுகளை பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது, குறிப்பாக சுன்னி, ஷியா முஸ்லிம்களிடேயே ஏற்படுத்தி மத்திய கிழக்கை தன்னுடைய நலன்களுக்கு ஏற்ப மறுகட்டமைக்க முயல்கிறது.

அமெரிக்கா, சுன்னி இஸ்லாமியவாத கெரில்லாப் படைகளை அணிதிரட்டியுள்ளது; இவை ஷியா அலவைட் தலைமையிலான சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போரிடுவதில் அல் கெய்டா தொடர்புடைய படைகள் முக்கிய பங்கை கொண்டுள்ளன. இப்பொழுது பிராந்தியத்தில் மத அழுத்தங்களை தூண்ட முற்படுதல் இன்னும் பரந்த தளத்தில் ஈரானைத் தனிமைப்படுத்தி இலக்கு கொள்வதற்கு சிறந்த தளமென அமெரிக்கா கருதுகிறது. ஈரான் ஒரு ஷியா மேலாதிக்கம் நிறைந்த நாடாகும், அத்தோடு ஷியாத் தலைமையிலான அரபு அரசு, சிரியா, ஈராக் மற்றும் லெபனிய ஷியா போராளிக் குழு ஹெஸ்புல்லா ஆகியவற்றுடன் கூட்டுக் கொண்டுள்ளது.

தனிமைப்படுத்தி இலக்கு கொள்வதற்கு கடந்த மாதம் சாட்சியாக இருப்பதாவது:

v  “எகிப்தின் இஸ்லாமியவாத ஜனாதிபதி முகம்மத் முர்சி, சிரியாவுடன் இந்த வாரம் தூதரக உறவுகளைத் துண்டித்தார், இது எகிப்து கெய்ரோவில் 70 சுன்னி மத அமைப்புக்களின் கூட்டத்தை நடத்தி “மனம், பணம், ஆயுதங்கள் என்று அனைத்து வகையிலும் ஜிகாத் தேவை”என அழைப்பு விடுத்துள்ளது.

v  “கட்டாரை தளமாகக் கொண்ட எகிப்திய மதகுருவான யூசுப் அல் கரதவி, கெய்ரோ கூட்டத்தில் கலந்து கொண்டவர், ஏற்கனவே உலகளாவிய முறையீடு ஒன்றை சிரியாவில் சுன்னிகள் புனிதப் போர் நடத்தவேண்டும் என வெளியிட்டார். “ஒவ்வொரு முஸ்லிமும், போரிடப் பயிற்சி பெற்றவர், செய்யத் தகுதியுடையவர், இதற்கு முன்வர வேண்டும்..... எப்படி 100 மில்லியன் ஷியாக்கள் 1.7 பில்லியன் சுன்னிக்களை தோற்கடிக்க முடியும்? சுன்னி முஸ்லிம்கள் வலுவற்று இருப்பதால்தான்” என்றார் அவர்.

v  “துருக்கியில் பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் தன்னுடைய இஸ்லாமியவாத அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை நசுக்குகையில் வாஷிங்டன் அவருக்கு ஆதரவளிக்கிறது — சிரியப் போருக்கு அரசாங்கம் காட்டும் ஆதரவை எதிர்ப்பது உட்பட உள்ளது.

v  “சௌதி அரேபியாவில், பல்லாயிரக்கணக்கான லெபனிய ஷியாக்கள் வசிக்கும் இடத்தில், ஹெஸ்புல்லா ஆதரவாளர்களை ஹெஸ்புல்லா அசாத்திற்கு ஆதரவு தருவதற்கு பதிலடியாக வெளியேற்ற முடியாட்சி திட்டமிட்டுள்ளது.

வாஷிங்டன் கொள்கையின் கொடூர உட்குறிப்புக்கள், யூகோஸ்லாவியாவின் முன்னாள் அமெரிக்க தூதரான பீட்டர் கால்பிரைத்தால் கூட அறியப்பட்டுள்ளது. அவர் கூறினார், “உலகின் அடுத்த இனப் படுகொலை சிரியாவில் அலவைட்டுக்களுக்கு எதிராக இருக்கலாம்.”

இரண்டு முக்கிய அக்கறைகள் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு உந்துதல் கொடுக்கின்றன: முதலாவது, பரந்த பிரிவுகள் தீவிரமயமாதலை தடுத்தல், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் ஒருங்கிணைவதை தடுத்தல்; அப்படித்தான் 2011ல் அமெரிக்க ஆதரவுடைய எகிப்து, துனிசிய சர்வாதிகாரங்களுக்கு எதிராக நடைபெற்றன. இரண்டாவதாக, கட்டாயமாக அதன் சவாலுக்கு இடமில்லாத மேலாதிக்கத்தை இந்த மூலோபாய எண்ணெய் வளமுடைய பிராந்தியத்தில் நிறுவுதல். அமெரிக்கா 2011ல் இருந்து முதலில் லிபியா, பின் சிரியா என இதற்காக போருக்குச் சென்றுள்ளது.

எதிர்த்தரப்பு படைப்பிரிவினர், நேட்டோ சிறப்புப்படைகள் மற்றும் போர் விமானங்களுடைய ஆதரவுடன், லிபிய ஆட்சியை கவிழ்த்து லிபிய கேர்னல் முயம்மர் கடாபியை கொலை செய்தபின், டமாஸ்கஸில் உள்ள அசாத் அரசாங்கம், இஸ்லாமியவாத போராளிகள் இந்த நிலையை கடப்பது மிகவும் கடினமானது என சக்தி வாய்ந்த வகையில் நிரூபித்துள்ளது.

குறுங்குழுவாத அழுத்தங்கள் தூண்டிவிடப்படுவது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஏராளமான தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் 15 சதவிகித அமெரிக்கர்கள்தான் சிரிய எதிர்த்தரப்பிற்கு உதவியை விரிவாக்குவதற்கு ஆதரவு கொடுக்கின்றனர், 28 சதவிகித துருக்கியர்கள்தான் எர்டோகனுடைய போர்க் கொள்கைக்கு ஆதரவு கொடுக்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன. கடந்த மாதம் Pew Research Center நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு லெபனானியர்களில் 80 சதவிகிதம் பேர் அமெரிக்கா சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் கொடுப்பதற்கு விரோதப் போக்கு காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் லெபனிய சுன்னிகள் 66 விகிதம் பேரும் அடங்கும்; இதைத் தவிர எகிப்தியர்களில் 59 சதவிகிதமும், துனிசியர்களில் 60 சதவிகிதம் பேரும் இதை எதிர்க்கின்றனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு மூலோபாயத்திற்கு அடித்தளமாக இருப்பது தொழிலாள வர்க்கத்தை போருக்கு எதிரான ஒரு பொதுப் புரட்சிகர போராட்டத்தில் ஐக்கியப்படுத்துவதுதான். 2011 ஆண்டு எகிப்து மற்றும் துனிசிய எழுச்சிகளினால் எதிர்பார்க்கப்பட்ட இப்போராட்டம், அனைத்து இன மற்றும் குறுங்குழுவாதங்களை கடந்து சோசலிசத்திற்கும் தொழிலாளர் அதிகாரத்திற்குமான ஒரு சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில்தான் தொடரமுடியும்.

மத்திய கிழக்கில் மத வெறுப்புகள்தான் மோதல்களுக்கு காரணம் என்று செய்தி ஊடக அறிக்கைகள் கூறுவதற்கு மாறாக, மத்திய கிழக்கில் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச போராட்டங்களுக்கு நீண்ட மரபார்ந்த செயற்பாடுகள் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், பிராந்தியத்தின் முக்கிய நாடுகளில், சிரியா, ஈராக், ஈரான், எகிப்து இன்னும் அப்பால் இருக்கும் நாடுகளில் பரந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. இதில் பெரும் துயராக இருப்பது, அந்த அனைத்துக் கட்சிகளும் ஸ்ராலினிசத் தலைமைகளின் மேலாதிக்கத்தில் இருந்து மத்திய கிழக்கிலுள்ள பூர்சுவா தேசியவாத தலைமைகளுடன்  எதிர் புரட்சிகர அரசியல் கூட்டுகளுக்குள் நுழைந்தன, அப்படிப்பட்ட ஆட்சிதான் சிரியாவில் அசாத்தின் பாதிஸ்ட் ஆட்சியாகும்.

இது ஒவ்வொரு நாட்டிலும் தொடர்ந்து பேரழிவிற்கு வழிவகுத்தது. வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய நட்பு நாடுகளும் இனவெறி, குறுங்குழுவாத அழுத்தங்களை ஊக்குவித்து வலதுசாரி இஸ்லாமியவாத சக்திகளுக்கு ஆதரவு கொடுக்கையில்—இதில் 1980 களில்  சோவியத் ஆப்கானியப் போரில் சுன்னி முஜஹெதினிலிருந்து—இதில் இருந்துதான் அல் கெய்டா தோன்றியது, அல் கெய்டா தொடர்புடைய இன்றைய லிபிய சிரியப் போர்களிலுள்ள இஸ்லாமியவாதிகள் வரை.

தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்துள்ள நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் புதிய சோசலிசத் தலைமைகளை கட்டியமைக்கும் வாய்ப்பு மீண்டும் எழுந்துள்ளது.

ஸ்ராலினிசத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) தொடரப்படுகிறது இது பிற்போக்குத்தன ஏகாதிபத்திய சார்பு போலி இடது அமைப்புக்களுக்கு எதிராகவும் உள்ளது—அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் கட்சி, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, பிரித்தானியாவின் சோசலிச தொழிலாளர் கட்சி, ஜேர்மனியின் இடது கட்சி, எகிப்தின் புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் என. இவைகள் எகிப்திலும் துனிசியிலும் எதிர்ப் புரட்சி இஸ்லாமியவாத ஆட்சிகள் நிறுவப்பட்டதை பாராட்டின; அவைகள் ஜனநாயகத்திற்கு முதல் படி என்றும், லிபியா, சிரியாவில் நடந்த, நடக்கும் ஏகாதிபத்திய போர்களை “புரட்சிகள்” என்று பாராட்டின.

இவைகள்தான் இப்பொழுது மத்திய கிழக்கை அச்சுறுத்தும் குறுங்குழுவாத தளமுடைய இரத்தக் களரிக்கு நேரடிப் பொறுப்பைக் கொண்டவைகளாகும். ஏகாதிபத்திய சார்பு அரசியலுக்கு எதிரான ICFI இன் போராட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய கிழக்கில் ஒரு சோசலிச இயக்கம் மறுகட்டமைக்கப்பட வேண்டும்.