சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Edward Snowden charged with espionage

ஒற்றாடல் குற்றச்சாட்டிற்கு எட்வார்ட் ஸ்னோவ்டென் உட்படுத்தப்படுகிறார்

By Eric London and Joseph Kishore 
22 June 2013

use this version to print | Send feedback

தகவல் தெரிவிப்பவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் மீது உளவுபார்த்தல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை தாக்குதல் செய்யும் முடிவை உலக சோசலிச வலைத் தளம் ஐயத்திற்கிடமின்றி கண்டிக்கிறது.

வெள்ளி மாலை ஒபாமா நிர்வாகம், அமெரிக்க வேர்ஜீனியாவில் உள்ள, அலெக்சாந்திரியா மாவட்ட நீதிமன்றத்தில் ஜூன் 14 அன்று தான் மூன்று குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அவை அரசாங்க சொத்துக்களை திருடுதல், அனுமதியின்றி தேசிய பாதுகாப்பு தகவலை வெளியிடுதல், வேண்டுமென்றே இரகசியத் தகவலை பிறருக்கு கூறுதல் ஆகியவையாகும்.

இக்குற்றச்சாட்டுக்கள் மொத்தத்தில் அதிகப்பட்சம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை கொடுக்கும். எனினும் விசாரணையின் போக்கின்போது, கூடுதல் குற்றச்சாட்டுக்கள் சேர்க்கப்பட முடியும். முக்கிய ஜனநாயக, குடியரசுக் கட்சியினர் ஸ்னோவ்டெனை “தேசத்துரோகத்திற்காக” கண்டித்துள்ளனர்; அக்குற்றம் சாத்தியமான வகையில் மரணதண்டனையை பெற்றுத் தரக்கூடும்.

அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் மீது அரசாங்கம் சட்டவிரோதமாக மிகப் பெரியளவில் ஒற்றுக் கேட்கிறது என்னும் ஸ்னோவ்டெனின் ஆரம்ப வெளிப்பாடுகளுக்குப் பின், அமெரிக்க ஆளும் வர்க்கம், செய்தி ஊடகத்தின் உடந்தையுடன், அவருக்கு எதிரான திட்டமிட்ட இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (NSI) ஒற்றுத் திட்டம் பற்றி கசியவிட்டதற்கு தான்தான் ஆதாரம் என்று வெளிப்படுத்தியபின், ஸ்னோவ்டென் மிகவும் நியாயமான தன்னுடைய பாதுகாப்பிற்கு பயந்து தலைமறைவாகிவிட்டார்.

ஸ்னோவ்டெனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் சிறிதளவு சட்டபூர்வ தன்மை கூட இல்லை. அவர் ஒன்றும் குற்றவாளி அல்ல. மகத்தான தனிப்பட்ட ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலும், அமெரிக்க மக்களுக்கும் உலகிற்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான அரச சதி பற்றி வெளிப்படுத்த முற்பட்ட ஒரு தனிநபர் ஆவார்.

உண்மையான குற்றவாளிகள் குற்றம் சாட்டுபவர்கள்தான். எவ்வளவு சேற்றை வாரியிறைத்தாலும், பொய்களைக் கூறினாலும், ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியுள்ள குற்றத்தை மூடி மறைக்க முடியாது. இளம் தகவல் தெரிவிப்பவர் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய ஒற்றுச் செயலை வெளிப்படுத்தியதற்காக உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இன்றுவரை ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியுள்ள ஆவணங்கள், அமெரிக்காவில் தொலைபேசி அழைப்புக்கள் சான்றுகள் அனைத்தையும் பற்றும் ஒற்றுத் திட்டங்கள் குறித்தவை; இவை அரசாங்கம் விரைவில் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு நபரின் சமூக, அரசியல் தொடர்புகளை பற்றி தீர்மானிக்க அனுமதிக்கிறது. மற்ற திட்டங்கள், இவை பிடி ஆணையின்றி அமெரிக்க ஒற்று நிறுவனங்கள் மில்லியன் கணக்கான இணைய தள தொடர்புகளை குறுக்கிட்டுச் சேர்த்து, சேகரிக்க வகை செய்துள்ளன.

இத்திட்டங்கள் அமெரிக்க அரசியலமைப்பின் நான்காம் திருத்தத்தை மீறுபவை ஆகும்; அது ஆணையில்லாத சோதனைகள், பற்றி எடுத்தல் ஆகியவற்றைத் தடை செய்கிறது.

வெள்ளியன்று, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட அன்று, கார்டியன் புதிய ஆவணங்கள் குறித்து தகவல் கொடுத்தது; அது ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நேரடியாக தொடர்புகள், மின்னஞ்சல்கள், பேஸ்புக் தகவல்கள் மற்றும் பல மில்லியன் மக்களுடைய இணைய தள வரலாறு ஆகியவற்றை அணுகுவது குறித்து தெரிவிக்கிறது; இவை பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் அரசாங்க நிறுவனங்களால் சோதனைக்கு உட்படுகின்றன.

இந்த வெளிப்பாடுகள், இரு நாடுகளிலும் உள்ள உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் —ஜனாதிபதி ஒபாமா உட்பட— வேண்டுமென்றே பலமுறையும் பொய் கூறியுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. குற்றச்சாட்டு விசாரணைக்குத் தேவையான சான்றுகளையும்விட அதிகமாகவே இவற்றில் உள்ளது.

அரசாங்கம் ஸ்னோவ்டெனை கைப்பற்றிக் கொண்டுவர மற்றும் சிறையிட அல்லது கொல்ல விரைகிறது; ஏனெனில் இதுவரை அவர் மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டிருக்கும் பொலிஸ் அரச கருவிச் செயல்களின் ஒரு பகுதியை மட்டும்தான் வெளியிட்டிருக்கிறார் என்பதை அது அறியும்.

உளவுபார்த்தல் குற்றச்சாட்டைக கொண்டுவரும் அதே நிர்வாகம்தான் அமெரிக்க மக்களை பிடி ஆணை இல்லாமல், விசாரணை நடத்தாமல் கொல்லுகிறது, கைதிகளை காலவரையின்றி சிறையில் வைக்கிறது முறையான வழிவகையின்றி, செய்தி ஊடகம் மற்றும் பொதுமக்களின் தொடர்புகள் குறித்து உளவு பார்க்கிறது.

பிற்போக்குத்தன ஒற்றாடல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஸ்னோவ்டென் பிற அரச அடக்குமுறை இலக்குக்குள்ளான எதெல், ஜூலியஸ் ரோசன்பேர்க், விக்டர் பெர்ஜேர், ஜாகப் ஆப்ராம்ஸ், டேனியல் எல்ஸ்பெர்க், ஆன்டனி ருசோ, தோமஸ் டிரேக் மற்றும் பிராட்லி மானிங் உடன் சேர்கிறார். ஒபாமா நிர்வாகத்தால் ஒற்றாடல் குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்படும் ஏழாம் நபர் இவர்—இது முந்தைய நிர்வாகங்கள் அனைத்தும் உட்படுத்திய எண்ணிக்கையை விட அதிகம் ஆகும்.

அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலின் அடித்தளத்தில், சக்திவாய்ந்த வரலாற்று, சமூக வழிவகைகள் உள்ளன. முடிவிலாப் போர் மற்றும் முன்னோடியில்லாத சமூக சமத்துவமின்மை தரங்களுடன் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் இயைந்தது அல்ல.

அதன் பிற்போக்குத்தன கொள்கைக்கு எதிராக பரந்த தொழிலாள வர்க்கம் தயாராகையில், அமெரிக்க ஆளும் வர்க்கம், “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போலி மறைப்பில் அமெரிக்க அரசியல் அமைப்பையும் அதன் உரிமைகள் சட்டத்தையும் செயலற்றதாக ஆக்கிவிட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியும், உலக சோசலிச வலைத் தளமும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் பிராட்லி மானிங் பாதுகாப்புடன்  இணைந்த வகையில் ஸ்னோவ்டெனை பாதுகாக்க அழைப்பு விடுகிறது; அவர் இப்பொழுது பெரும் குற்றமான “விரோதிக்கு உதவுதல்” என்னும் மரண தண்டனை வாய்ப்புடையதை எதிர்கொள்கிறார், விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் ஓராண்டிற்கும் மேலாக பிரித்தானியாவில் ஈக்வடோர் தூதரகத்தில் அடைக்கலம் நாடி உள்ளார்.

அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தின் அனைத்துப் பிரிவுகளும்—“தாராளவாதம்” மற்றும் கன்சர்வேட்டிவ், ஜனநாயக, குடியரசுக் கட்சிகள் என— NSA, CIA, பென்டகன் ஆகியவற்றை பாதுகாப்பதோடு, ஸ்னோவ்டென் சூனிய வேட்டைக்கு உட்படுத்தப்படுவதில் இணைந்துள்ளன. அரசியலமைப்பின்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள குடியுரிமைகள் பாரியளவு மீறப்படுவது குறித்து இவற்றின் முற்றிலும்  அலட்சிய தன்மை, ஆளும் வர்க்கத்திற்குள் ஜனநாயக உரிமைகளுக்கு எந்த தீவிர ஈடுபாடும் இல்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஜனநாயக உரிமைகளைக் காக்கும் சமூகத் தளம் அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். இந்த உரிமைகள், போர், சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வாதிகார உந்துதலுக்கு மூலமான முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வின் மூலம் மட்டுமே பாதுகாக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொள்ளவும், இவற்றில் ஈடுபடவும் இங்கே கிளிக் செய்யவும்.