சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama, Cheney and Snowden’s revelations

ஒபாமா, ஷெனி மற்றும் ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியவைகள்

Bill Van Auken
19 June 2013

use this version to print | Send feedback

நவம்பர் 1973 இல் ஜனாதிபதி ரிச்சார்ட் எம். நிக்சன், வாட்டர்கேட் ஊழலில் ஆழமாக சிக்கியிருந்தார், அவரை எப்பொழுதும் நினைவில் வைக்கும் கீழ்க்கண்ட சொற்றொடரை அவர் பயன்படுத்தினார்: “நான் ஒரு வஞ்சகன் அல்ல.”

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின், ஜனாதிபதி பாரக் ஒபாமா திங்கள் இரவு தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றைப் பயன்படுத்தி இதே விடயம் பற்றிய தனது வகையறாவை முன்வைத்து, அமெரிக்க மக்களுக்குத் தான் ஒன்றும் டிக் ஷென்னி அல்ல என வலியுறுத்தினார்.

நிக்சன் மற்றும் அவருடைய சக சதியார்களைவிட மிகத்தீவிரமான குற்றங்கள் குறித்த அம்பலப்படுத்தல்களை எதிர்க்கும் விதத்தில்  ஒபாமா பேட்டியை வழங்கினார். கடந்த இரண்டு வாரங்களாக, ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டென் கசியவிட்டுள்ள தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தினுடைய (NSA) ஆவணங்கள் அமெரிக்க மக்களுக்கு தெரியாமலும், அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை மீறிய வகையில் அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை இலக்கு வைக்கும் அரச கண்காணிப்புத் திட்டங்கள் நடத்தப்பட்டதை கூறுகின்றன.

“ஒபாமா இவ்வாறான தீவிர தாராளவாதியாக முன்பு இருந்தவர். இப்பொழுது அவர் டிக் ஷென்னி” என சிலர் கூறுவது உங்களுக்குத் தெரியும் என PBS பேட்டியில் ஒபாமா கூறினார்.” “ஷென்னி சில சமயம் கூறலாம், ஆம், உங்களுக்குத் தெரியுமா? அவர் அனைத்தையும் எடுத்துக் கொண்டுவிட்டார். என்று. என்னுடைய கவலை எப்பொழுதுமே பயங்கரவாதத்தை தடுக்க உளவுத்தகவல்களை சேர்க்கக்கூடாது என்பதல்ல. மாறாக நாம் பரிசோதித்து, சமநிலைப்படுத்தும் ஒரு அமைப்புமுறையை நிறுவுகிறோம்.என்றார்.

ஒரு  இரகசிய வெளிநாட்டு உளவுத்துறைக் கண்காணிப்புச் சட்டத்தின் (FISA) கீழுள்ள நீதிமன்றம் உளவுத்துறைப் பிரிவுகளிடம் இருந்து வரும் ஒவ்வொரு வேண்டுகோளையும் அங்கீகரிக்கும் இந்த “பரிசோதிப்புக்கள் மற்றும் சமநிலைப்படுத்தல்கள்” உளவுத் திட்டத்தை “வெளிப்படையானதாக்கியுள்ளது” என்று ஒபாமா கூறுகிறார். இருட்டில் இருப்பவர்கள் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள்தான்இவர்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள், அவர்களுடைய அந்தரங்க, தடையற்ற பேச்சுரிமைகள் ஒரு பொலிஸ் அரசுடன் மரபார்ந்தமுறையில் தொடர்புடைய நடவடிக்கைகளால் கிழித்து எறியப்படுகின்றன.

“நம்பிக்கை” மற்றும் “மாற்றம்” ஆகியவற்றின் முன்னாள் வேட்பாளர் தனக்கு வாக்களித்தவர்களில் பலரால் பெருகிய முறையில் தான் டிக் ஷென்னியின் மறு அவதாரம் என கருதப்படுகிறார் என்ற சரியான காரணத்தினால்தான் அஞ்சுகின்றார். PRISM திட்டம் என ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியுள்ளது, யாகு, கூகிள், மைக்ரோசாப்ட் இன்னும் பிற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் NSA உடன் ஒத்துழைத்து நூற்றுக்கணக்கான மில்லியன்கள் மக்களை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உளவு பார்த்த திட்டமாகும். ஷென்னிக்கு உரித்தானது எனக்கூறப்பட்ட இதற்கு முன்னோடியான அனுமதியற்ற உளவுச் செயற்பாடுகளுக்கான TSP எனப்பட்ட பயங்கரவாதக் கண்காணிப்புத் திட்டத்தினை ஒரு கூட்டாட்சி நீதிமன்றம் அரசியலமைப்புக்கு மாறான மற்றும் சட்டவிரோதமானவை என்றது.

TSP இன்னும் பிற உளவுத் திட்டங்களுடன் புதிய பெயருடனும் FISA  நீதிமன்ற ரப்பர் முத்திரையுடனும் தொடரப்பட்டது. இது புஷ்ஷிடம் இருந்து ஒபாமா நிர்வாகத்திற்கு வந்து சேர்ந்தது.

ஆண்டின் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அமெரிக்காவில் வாழ்பவரின் தொலைப்பேசிச் சான்றுகளை பதிவு செய்யும் NSA திட்டத்தையும் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஒபாமா பேட்டிக்கு ஒரு நாள் முன்புதான், ஷென்னியே தேசிய தொலைக்காட்சியில் தன்னால் உருவாக்கப்பட்ட திட்டத்தை பாதுகாக்கவும், ஸ்னோடவ்டெனை அமெரிக்க,  உலக மக்களுக்கு அம்பலப்படுத்தியதற்கு தீயவராகச் சித்தரிக்கவும் தோன்றினார்.

29 வயது முன்னாள் NSA ஒப்பந்தகாரர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கு ஷென்னி பின்வருமாறு கூறினார்: “அவர் ஒரு தேசத்துரோகி என நான் நினைக்கிறேன். அவர் இருந்த பதவியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்பாடுகளை மீறியதின் மூலம் நடைமுறையில் அவர் குற்றங்களைச் செய்துள்ளார்”. அவர் மேலும் கூறினார்: “எனது நினைவிற்கு தெரிந்தவரை இரகசியத் தகவலை அணுகும் வாய்ப்பு உடைய ஒருவர் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு நலன்களுக்கு மாபெரும் சேதத்தை விளைவித்த மோசமான சூழல்களில் இதுவும் ஒன்றாகும்.”

பிரித்தானிய நாளேடு கார்டியன் நடத்திய ஒரு வினா-விடை நிகழ்ச்சியில் ஸ்னோவ்டென் உரிய விடையிறுப்பைக் கொடுத்து, ஈராக் போர் ஆரம்பிக்கப்படுவதற்கு சட்டவிரோத உளவுச் செயல்களை செயல்படுத்தியதில் ஷென்னியின் பங்கு பற்றி பின்வருமாறு குறிப்பிட்டார். “டிக் ஷென்னியால் தேசத்துரோகி என அழைக்கப்படுவது அமெரிக்கர் ஒருவருக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய கௌரவம் ஆகும். அவரைப் போன்றவர்களிடம் இருந்து இன்னும் பீதிப் பேச்சைக் கேட்பது [ஜனநாயகக் கட்சி செனட்டர் டயான்] பீன்ஸ்டின், [குடியரசுப் பிரதிநிதி பீட்டர்] கிங் போன்றோரிடம் இருந்து கேட்பது, நம் அனைவருக்கும் நல்லதுதான். இவர்கள் ஒரு வகுப்பில் டிக் ஷென்னி கவலைப்படும் வகையிலான குடிமகன் பற்றி கற்பித்திருந்தால், நான் உயர்நிலைப்பள்ளியை முடித்திருப்பேன்.”

ஷென்னியால் குற்றம் சாட்டப்பட்டு, மற்றும் வலதுசாரி ஜனநாயகவாதிகள் பீன்ஸ்டின் அல்லது குடியரசுக் கட்சி கிங் போன்றவரால் தேசத்துரோகி எனப்படுவது கௌரவ விருது என அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் ஷென்னி சிறையில் இருக்க வேண்டும். இன்று அவர் பகிரங்கமாகத் தன் முகத்தைக் காட்ட முடிகிறது என்றால், அவரும் பிறரும் புஷ் நிர்வாகத்தில் பொறுப்பாக இருந்து செய்த குற்றங்களை ஒபாமா நிர்வாகம் திட்டமிட்ட முயற்சிகளால் மூடிமறைத்ததால் அவர்கள் எவ்வித தொந்தரவுமின்றி பாதுகாப்பை  பெற்றுவிட்டனர்.

அவருடைய செல்வாக்குத் தரம் அவர் பதவியை விட்டு விலகும்போது 13 சதவிகிதமாக இருந்த அமெரிக்க அரசியல் வாழ்வில் மிகவும் வெறுக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஷென்னியின் செல்வாக்கு இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புகள், நிதிய, பெருநிறுவனப் பிரபுத்துவம் மற்றும் குடியரசுக் கட்சியின் வலதுசாரிக் கூறுபாடுகளுடன் கொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளில் இருந்து வந்தது.

அமெரிக்க மக்களை பொய்களின் அடிப்படையிலும், தயாரிக்கப்பட்ட உளவுத்துறை தகவல்களினாலும் இல்லாத பேரழிவுகரமான ஆயுதங்கள், பாக்தாத்திற்கும் அல் கொய்தாவிற்கும் தொடர்புகள் போன்ற பொய்களின் அடிப்படையில் ஈராக்கில் நடத்தப்பட்ட குற்றம்மிக்க போரில் தள்ளியதற்குப் பொறுப்பானவர்களில் ஷென்னியும் ஒருவர் ஆவார். தன்னுடைய சொந்த உளவுத்துறைத் திட்டத்தை அமைத்து போலித்தன “சான்றுகளை” தயாரித்து பின்னர் அவற்றைப் பயன்படுத்தி அமெரிக்க மக்களிடம் ஈராக் தவிர்க்க முடியாத அணுசக்தி, உயிரியல், இரசாயனத் தாக்குதல்கள் ஆபத்தைக் கொடுக்கிறது எனக் கூறினார். இவருடைய குற்றங்களின் விளைவுகள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கிய உயிர்களின் இழப்பு மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்பினர் உயிரிழப்பு, உடல் உறுப்புக்கள் இழப்பு ஆகியவையாகும்.

புஷ் நிர்வாகம் இவர் கூறிய “இருண்ட பக்கத்திற்கு” செல்லுவதை, திட்டமிட்ட சித்திரவதை, அசாதாரணக் கடத்தல் மற்றும் குற்றச்சாட்டு இல்லாமல் காவலில் வைத்தல் என்று குவாண்டநாமோ, அபு கிரைப் மற்றும் உலகெங்கிலும் இருந்த CIA இருண்ட சிறைகளில் நிகழ்ந்த கொடூரங்களை உண்டாக்கி செய்ததில் தான் கொண்டிருந்த முக்கிய பங்கை ஷென்னி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார், பாதுகாத்துள்ளார்.

முன்னாள் ஊழல்படிந்த Halliburton உடைய தலைமை நிர்வாக அதிகாரி அமெரிக்க மக்கள் மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான நிரந்தர குற்றச் சதித்திட்டத்தைச் செயல்படுத்தும் அமெரிக்க ஆளும் அரசியல் வர்க்கத்தை உருவகப்படுத்தி நின்றார்.

ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஷென்னியின் கருத்துக்கள் எவ்வகையிலும் விதிவிலக்கான  ஒன்றல்ல. இவை மூத்த ஜனநாயகவாதிகளுடைய கருத்துக்களுடனும் மற்றும் அமெரிக்காவிற்கும் உலக மக்களுக்கும் மாபெரும் உளவுச் செயற்பாடுகளைத் தெரிவித்ததற்காகக் இப்பொழுது ஸ்னோவ்டெனை தேசத்துரோகி என்று கூறுபவர்களுடைய கருத்துக்களுடனும் இணைந்துள்ளது.

கார்டியனுக்குக் கொடுத்த வினா-விடை பேட்டியில் ஸ்னோவ்டென் அவர் அம்பலப்படுத்தியது “நேர்மை, அரசியலமைப்புக் கொள்கைக்கும், மனிதர்கள் ஆட்சி என்று இல்லாமல் சட்டத்தின் ஆட்சி இவற்றிற்கு திரும்புவதற்கு ஒபாமாவிற்கு ஒரு வாய்ப்பை அளிக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.”

ஒரு சிலமணி நேரங்களுக்குள் ஒபாமா தன் தொலைக்காட்சிப் பேட்டியில் தான் அப்படி எதையும் செய்வதாக இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். மாறாக, உள்நாட்டு உளவு நடவடிக்கைகளும் அமெரிக்க அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதால் அவை நடத்தப்படுவதும் தடையற்றுத் தொடரும்.

இவருக்கு முன்னால் இருந்த ஷென்னியையும் விட, ஒபாமா அமெரிக்க அரசின் மீது இராணுவ, உளவுத்துறை அமைப்புகள் மற்றும் நிதியத் தன்னலக் குழுவின் கட்டுப்பாடு உறுதிப்படுத்தப்படுவதை உருவகப்படுத்தி நிற்கிறார். பெரும்பாலான மக்கள் எதிர்க்கும் கொள்கையை செயல்படுத்தும் நிலையில், புதிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களை தொடங்குவது உட்பட, சமூக சமத்துவமின்மையை கண்டும் பொருளாதார இழப்பினால் கீழிருந்து வரக்கூடிய எழுச்சியைக் கண்டு அஞ்சியும், இச்சக்திகள் ஒரு பொலிஸ் அரச சர்வாதிகார அமைப்பை விரிவுபடுத்தி தக்க வைக்க உறுதி கொண்டுள்ளன.

ஜனநாயக உரிமைகளிற்கான பாதுகாப்பு முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரள்வின் மூலம்தான் எதிர்க்கப்பட முடியும். இந்த இயக்கம் எட்வார்ட் ஸ்னோவ்டென், பிராட்லி மானிங், ஜூலியன் அசாஞ் ஆகியோரை அதன் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக வஞ்சம் தீர்க்க விரும்பும் அரசிற்கு எதிராக போராடுவதை முன்னணியில் இருத்த வேண்டும்.