சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

US diplomatic thuggery in pursuit of Snowden

ஸ்னோவ்டெனை பின்தொடர்வதில் அமெரிக்க இராஜதந்திர காடைத்தனம்

Peter Symonds
26 June 2013

use this version to print | Send feedback

NSA தகவல் தெரிவிப்பவரான எட்வார்ட் ஸ்னோவ்டெனை பிடிக்கும் முயற்சியில், ரஷ்யா, சீனா, ஹாங்காங் மற்றும் ஈக்வடோரை ஒபாமா நிர்வாகம் இராஜதந்திர முறையில் அச்சுறுத்துவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டமில்லாத தன்மையை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது. DONATE

வெள்ளை மாளிகை, ஸ்னோவ்டென் அமெரிக்காவில் ஒற்றாடல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால் அவருடைய ஒரே “குற்றம்” அமெரிக்க மக்கள் அனைவருக்கு எதிராகவும் உலகிலுள்ள மக்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு எதிராகவும் அமெரிக்க அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டத்தையும் மீறி நடக்கும் NSA இன் பாரிய மின்னியல் வேவு செயற்பாடுகளை அம்பலப்படுத்தியதுதான்.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலர், ஜோன் கெர்ரி திங்களன்று ரஷ்ய அரசாங்கம் “சட்டத்தின் தரங்களின்படி”நடந்து கொள்ள வேண்டும் என்று கோரினார்; மாஸ்கோ “நம் விருப்பங்களை மதிக்கவில்லை” என்றால், ஸ்னோவ்டென் “விமானத்தில் விருப்பத்தின்படி ஏற அனுமதிக்கப்பட்டால்” என்னவென்று குறிப்பிடாத “விளைவுகளை”, சந்திக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று இதற்கு விடையிறுக்கையில், அரசாங்கம் ஒரு தப்பியோடுபவருக்கு உதவுகிறது என்ற வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்களை “பிதற்றல்கள், அபத்தம்” என்று உதறித்தள்ளினார். அவர், மாஸ்கோ Sheremetyevo விமான நிலைய வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய போக்குவரத்து பகுதியில் தற்போது நிற்கும் ஸ்னோவ்டென் ரஷ்யாவிற்குள் நுழையவில்லை என்றும், எந்த ரஷ்ய சட்டத்தையும் மீறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமெரிக்கா, ரஷ்யாவுடன் குற்றவாளியை வெளிநாட்டிடம் ஒப்படைக்கும் உடன்பாடு எதையும் கொண்டிருக்கவில்லை.

அமெரிக்க கோரிக்கைகள் பெருகிய வெறித்தனம் மற்றும் அச்சுறுத்தல்களுடன் பொறுப்பற்ற முறையில் அத்தனை திசைகளிலும் வீசப்படுகின்றன. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே, அமெரிக்கப் பதிலடி கிடைக்கும் என சீனாவை எச்சரித்து, ஞாயிறன்று ஸ்னோவ்டெனை ஹாங்காங்கில் இருந்து மாஸ்கோவிற்குப் பறக்கவிட்டது, “கேள்விக்கிடமின்றி எதிர்மறை பாதிப்பை” உறவுகளில் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

நேற்று சீன வெளியுறவு அமைச்சரகம், அமெரிக்கக் குற்றச்சாட்டுக்களை “ஆதாரமற்றவை” என நிராகரித்து; ஹாங்காங் நிர்வாகம் சட்டப்படி செயல்பட்டது என்றும் வலியுறுத்தியுள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் People’s Daily கூறியது: “உலகம் எட்வார்ட் ஸ்னோவ்டெனை நினைவிற்கொள்ளும். அவருடைய அச்சமின்மைதான் வாஷிங்டனின் போலிப் புனித முகமூடியைக் கிழித்தெறிந்துள்ளது.”

“சட்டத்தின் தரங்கள்” மற்றும் சட்டவழிகைகளுக்கு ஒபாமா நிர்வாகத்தின் முறையீடுகள் என்பது, முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். வெள்ளை மாளிகை அங்கீகரிக்கும் ஒரே “சட்டம்” அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல், பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு உதவுவபவைதான். அதன் ஒருதலைப்பட்ச ஆணைகளுக்கு கீழ்ப்படியப்படவில்லை என்றால் “விளைவுகள்” இராஜதந்திர, பொருளாதார பதிலடி அல்லது இன்னும் மோசமாக இருக்கும். அது நிலைநிறுத்துவது ஒன்றும் சட்டத்தின் ஆட்சி அல்ல, காட்டாட்சி என்பதுதான் சரியாகும்.

சம்பவம் வேறுவகையில் இருந்திருந்தால்ஒரு சீன அல்லது ரஷ்ய அதிகாரி அமெரிக்காவிற்கு அந்நாடுகளில் இருக்கும் பொலிஸ் அரச நடவடிக்கைகளின் எல்லையை வெளிப்படுத்தும் தகவல்களை ஒரு கணனி முழுவதும் நிரப்பிக் கொண்டுவந்திருந்தால்ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பை கற்பனை செய்வது கடினம் அல்ல. அவனை அல்லது அவளை இருகைகள் நீட்டி வரவேற்றிருக்கும், வீரம் செறிந்த அரசியல் எதிர்க்கருத்துடையவர் எனப் பாராட்டி முழுப் பாதுகாப்பை வழங்கியிருக்கும்.

கெர்ரி, கார்னே இருவருமே ஸ்னோவ்டெனை ஜனநாயகச் சுதந்திரம் இல்லாத நாடுகளில் தஞ்சம் நாடுவதற்குக் கண்டித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவில் என்ன நடக்கிறது? ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியது ஒரு பாரிய பொலிஸ் அரச எந்திரம் நிறுவப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக, அரசியலமைப்பை மீறி எந்த அளவிற்கு செயல்பட்டு வருகிறது என்பதைத்தான். இதன் நோக்கம் ஒன்றும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பது அல்ல, ஒரு சிறிய பெரும் செல்வம் படைத்த நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதுதான்.

கார்னே ஒரு படி மேலே சென்று, ஸ்னோவ்டென் சீனாவையும் ரஷ்யாவையும் விமர்சிக்கத் தவறியது, “அவருடைய உண்மையான உந்துதல் எப்பொழுதும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவது என்பதுதான்” என்பதை நிரூபிக்கிறது என அறிவித்தார். ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளரும், ஸ்னோவ்டென் பற்றிய அமெரிக்க விமர்சகர்கள் அரசியல்வாதிகளின் எண்ணுக்கணக்கற்ற  “தேசத்துரோகி” கண்டனங்களுடன் சேர்ந்திருப்பது, வெள்ளை மாளிகையே அவர் அமெரிக்காவில் ஒரு நியாயமான விசாரணையைப் பெறுவார் என்னும் சாத்தியத்தை அகற்றிவிட்டது.

விக்கிலீக்ஸின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க்குற்றங்கள், இராஜதந்திர சதிகள் ஆகியற்றை அம்பலப்படுத்திய பிராட்லி மானிங் போல், ஸ்னோவ்டெனும் அமெரிக்காவில் நீதியைப் பெற மாட்டார். அவர் வினாவிற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் ஒரு நீண்ட சிறைத் தண்டனை பெறுவார் அல்லது கங்காரு நீதிமன்றம் மூலம் மரண தண்டனை பெறுவார். எவ்வாறான வரைமுறையின் கீழும், ஸ்னோவ்டென் ஓர் அரசியல் வேட்டையாடலில் இருந்து தப்பியோடுகின்றார். இது சர்வதேச சட்டத்தின்படி தஞ்சம் வழங்கப்படுவதற்கான ஓர் தகுதியாகும்.

திங்கள் செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கா அதன் போர் விமானங்களைப் பயன்படுத்தி, ஸ்னோவ்டெனை ஏற்றிச் செல்லும் ரஷ்யாவின் பயணிகள் ஜெட் விமானத்தை கட்டாயமாக நிறுத்தி அவரைக் கொடுக்குமாறு வற்புறுத்துமா எனக் கேட்கப்பட்டதற்கு, கார்னே கொடுத்த பதில் ஒபாமா நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஸ்னோவ்டென் திங்களன்று அக்காரணத்தினால் கியூப விமானத்தில் ஏறவில்லை என ரஷ்ய ஊடக அறிக்கைகளில் எழுதியிருந்தது பற்றி கருத்து தெரிவிக்குமாறு வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மூன்று முறை கேட்கப்பட்டார். கார்னே அந்த விருப்பத் தேர்வை நிராகரிக்கவில்லை.

வெள்ளை மாளிகையில் இருக்கும் குண்டர்கள் மீறாத எந்தச் சட்ட வழிகளும் கிடையாது. அமெரிக்கா, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போலிப்பிரச்சாரத்தின் கீழ், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா மீது ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தியுள்ளது, இப்பொழுது சிரியா, ஈரானுக்கு எதிராக அதையே செய்ய தயரிப்புக்களை மேற்கொண்டுள்ளதுஇக்குற்றத்திற்காகத்தான் நாஜித் தலைவர்கள் இரண்டாம் உலகப் போருக்குப்பின் விசாரணைக்கு உட்பட்டு தண்டிக்கப்பட்டனர். குவான்டநாமோ குடாவில் கைதிகள் காலவரையற்று விசாரணையின்றிக் காவலில் வைத்திருப்பது அடிப்படை ஜனநாயக உரிமைகள் பற்றிய எத்தகைய கருத்தாய்வையும் மீறுவது ஆகும்.

மோசமனது ஏற்படலாம் என்று ஸ்னோவ்டென் அஞ்சுவதற்கு தக்க காரணம் உள்ளது. அமெரிக்க நலன்களுக்கு அச்சுறுத்தல் என அது கருதும் எவரையும் தேடிக் கொலை செய்யும் உரிமையை ஒபாமா நிர்வாகம் தனக்கே எடுத்துக் கொண்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், யேமன் இன்னும் உலகின் பல பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேச சட்டத்திற்கும் தேசிய இறைமைக்கும் காட்டப்படும் இதே இழிவுணர்வுதான் ஸ்னோவ்டெனை ஒப்படைக்குமாறு ரஷ்யா, சீனாவை மிரட்டும் முயற்சிகளிலும் வெளிப்படையாக உள்ளது. கருத்துப் பரிமாற்றங்களில் இருக்கும் சீற்றங்கள், மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு தலையீடுகள் தோற்றுவித்துள்ள தீவிர அழுத்தங்களுக்கு நிரூபணம் ஆகும்.  அவற்றை அமெரிக்கா செய்வதற்குக் காரணம் அதன் உலக மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும் சீனா, ரஷ்யா எனக் குறிப்பாக அதன் போட்டி நாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் விரும்புகிறது. ஸ்னோவ்டென் குறித்த மோதல், அமெரிக்கா எத்தகைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாது என்பதற்கும், தன் நலனுக்காக உலகைப் போரில் தள்ளவும் தயாராக உள்ளது என்பதற்கும் மற்றொரு எச்சரிக்கை ஆகும்

அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஸ்னோவ்டெனையும் அதேபோல் மானிங், விக்கிலீக்ஸின் நிறுவனர் அசாஞ்சே ஆகியோரையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். பணியிடங்கள், பல்கலைக்கழகங்கள, பள்ளிகள் மற்றும் தொழிலாள வர்க்க மக்கள் வாழும் இடங்களில் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆதரவு கட்டமைக்கப்பட வேண்டும்; ஸ்னோவ்டெனுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட வேண்டும் மற்றும் அமெரிக்க ஒற்று நடவடிக்கைகள் குறித்த அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட வேண்டும்.

அடிப்படை ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பது, போர், சிக்கனம் மற்றும் சர்வாதிகார காட்டுமிராண்டித்தனத்தை விளைவாக்கும் திவாலான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு சோசலிச மாற்றீட்டை வளங்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டமைக்கும் பரந்த போராட்டத்துடன் பிணைந்துள்ளது.