சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Bow Hill estate workers oppose privatization

போஹில் தோட்டத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

By M. Vasanthan

28 June 2013

use this version to print | Send feedback

அரசாங்கத்தின் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையினால் (ஜே.இ.டி.பி) தமது தோட்டம் துண்டாடப்பட்டு விற்கப்படுவதற்கு எதிராக நாவலப்பிட்டி போஹில் தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலை மற்றும் வீட்டு உரிமையை பாதுகாப்பதற்கு உறுதி பூண்டுள்ளார்கள்.

இத்தோட்டத்தின் 900 ஏக்கரில் 125 ஏக்கர்களை ஜே.இ.டி.பி. ஏற்கனவே மூன்று பேருக்கு விற்றுவிட்டதுடன், இந்த தனியார்மயமாக்கமானது தொழிலாளர்களின் தொழில்களுக்கு மாத்திரமன்றி இருப்பிடங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் மத்தியில் ஜே.இ.டி.பி. எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு நிலவுதுடன் உயிரைக் கொடுத்தாவது தமது வேலைகள், வீடுகளை பாதுகாக்க உறுதி பூண்டுள்ளதாக அவர்கள் உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பாகமாக, மே 23 ம் திகதி போஹில் தோட்டத் தொழிலாளர்கள் நாவலப்பிட்டி தலவாக்கலை வீதியில் அணிதிரண்டு, தோட்டத்தின் 50 ஏக்கரை விலைக்கு வாங்கியவரின் மகளான நில்மினி சிறியாணி இளயபெருமவை தோட்டத்திற்குள் நுளைய விடாது தடுத்தனர். அவள் அங்கு நீதிமன்ற பதிவாளர், பொலிசார், நில அளவையாளர் சகிதம் வந்திருந்தாள்.

சுமார் 20 தொழிலாளர்கள் தமது கையில் பெற்றோலுடன் நின்றதோடு, அவர்கள் தோட்டத்துக்குள்  நுழைந்தால் உயிர் தியாகம் செய்வதாக அச்சுறுத்தினர். பொலிஸ் பாதுகாப்புடன் நில்மினி சிறியாணி இளய பெரும அங்கு பிற்பல் 4 மணி வரை காத்திருந்த போதிலும், தொழிலாளர்களின் எதிர்ப்பின் காரணமாக திரும்பி செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆயினும், தான் மீண்டும் வந்து அவர்களுடைய வீடுகளுக்கு தீ மூட்டி, தொழிலாளர்களை வெளியேற்றுவதாக எச்சரித்தாள்.

தொழிலாளர்கள் கூறியவாறு, 2006ல் எடிசன் இளையப் பெருமவுக்கும் சதாசிவத்துக்கும் தனித்தனியே தலா 50 ஏக்கர்களாகவும் பேபி நோனாவுக்கு 25 ஏக்கருமாக மொத்தம்  125 ஏக்கர் விற்கப்பட்டுள்ளது. எப்படியிருந்த பொழுதிலும், 89 தொழிலாளர் குடும்பங்கள் தமது காணிகள் விற்கப்படுவதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் புதிய உரிமையாளர்கள் காணிகளை ஆக்கிரமிக்க முடியாது. ஆயினும், காணியை வாங்கியவர்கள் கொழும்பு நீதி மன்றத்தில் வேறு ஒரு வழக்கை தாக்கல் செய்து, அவர்கள் அந்தக்காணியில் குடியேறுவதற்கு சாதகமாக தீர்ப்பைப் பெற்றுக்கொண்டனர்.

இந்தக் கொடுக்கல் வாங்கல்களில், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபாடாது தடுப்பதில் முக்கிய வகிபாகத்தை ஆற்றியுள்ளன.

மே 23 திகதி போராட்டம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு புறம்பாக வெடித்தது. போஹில் தோட்டத் தொழிலாளர்கள் ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கமான அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர தொழிலாளர் காங்கிரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தொழிற்சங்கம் தொழிலாளர்களின் எதிர்ப்பை முதலாளித்துவ நீதி மன்றத்திற்குள் கட்டுப்படுத்துகின்றது.

தற்போதய அரசாங்கத்தின் பங்காளியான, ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தோ.கா) எந்தவித ஆதரவையும் கொடுக்க மறுத்துள்ளது. இ.தொ.கா. தனது நடவடிக்கையை நியாப்படுத்த, அந்த தொழிலாளர்கள் தமது சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கவில்லை என கூறியுள்ளது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. அரசாங்கமும் ஜே.இ.டி.பி.யும் எஞ்சியுள்ள அரசுக்கு சொந்தமான பெருந் தோட்டங்களையும் தனியார் மயமாக்குவதை இ.தோ.கா. ஆதரிப்பதுடன் அது 1990ம் ஆண்டிலிருந்து பதவிக்கு வந்த ஆரசாங்கங்கள் பெருந் தோட்டங்களை தனியார்மயமாக்குவதிலும் தோட்டத் தொழிலாளர்களின் வேலைகள், தொழில் நிலைமைகள், சம்பளங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதிலும் பிரதான வகிபாகம் ஆற்றியுள்ளது.

தொழிலாளர்கள் பொஹில் தோட்டம் துண்டாடியதன் விளைவாக தாம் எதிர்கொள்ளும் ஆபத்தை பற்றி உலக சோசலிச வலைத் தள நிருபர்களுக்கு கூறியதுடன் தொழிற் சங்கங்களின் மீதும், ஜே.இ.டி,பி மீதும் தமது கோபத்தை வெளிப்படுத்தின.

கே. கதிரேசன் தெரிவித்தாவது: ஐந்து தலைமுறையாக நாம் இந்த தோட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்பொழுது எங்களை இங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பல தொழிலாளர்கள் வங்கியில் கடன் எடுத்துதான் வீடு கட்டினார்கள்”. எந்தவொரு தொழிற்சங்கங்கமும் அரசியல் கட்சிகளும் தங்களை பாதுகாக்க வரவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.  “தொழிற்சங்கம் எங்களுக்கு விடயத்தை மூடி மறைத்திருக்காவிட்டால் ஜே.இ,டி.பி.யினால் காணிகளை விற்றிருக்க முடியாது என அவர் கூறினார். இங்கிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டால் எங்கே செல்வது. இதனால் எங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு எமது உயிரையும் தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கின்றோம், என அவர் மேலும் கூறினார்.

தோட்ட நிர்வாகம் 2006ம் ஆண்டிலிருந்தே ஊழியர் சேமலாப நிதியை மத்திய வங்கிக்கு அணுப்பவில்லை என தொழிலாளர்கள் கூறினார்கள். ஓய்வு பெற்றோருக்கு சேவைகாலப் பணம் வழங்கப்படவில்லை. புதியவர்களை வேலைக்கு சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாதங்களில் 15 நாட்கள் அல்லது அதிலும் குறைவாக வேலை வழங்கப்படுகின்றது.

ஓய்வு பெற்ற தொழிலாளியான முருகையா, தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமையில்லை என அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் எமது சொந்தப் பணத்தில் வீடுகளைக் கட்டினோம், 1990ம் ஆண்டிலிருந்து நாங்கள் மின்சாரக் கட்டணத்தை தொடர்ந்து கட்டி வருகின்றோம். இதில் 25 வீடுகள் கடன்பட்டுக் கட்டப்பட்டவை. தோட்ட நிர்வாகம் ஒவ்வொரு வீட்டுக்கும் 7 பேர்ச் காணி வழங்கியது. ஓவ்வொரு மாதமும் தொழிலாளரின் சம்பளத்திலிருந்து வீட்டுக் கடனுக்காக 490 ரூபாய் கழிக்கப்பட்டு வருகின்றது. அதனால் இந்த வீடுகளில் வசிப்பதற்கு எங்களுக்கு சட்டரீதியான உரிமை இருக்கின்றது, என கூறினார். ஏன் எங்களை இரண்டாம்தர பிரஜைகளாக கணிக்கின்றார்கள்?  என அவர் கேள்வி எளுப்பினார்.

 “எந்த ஒரு தொழிற்சங்கமோ அரசியல் கட்சியோ எங்களை பாதுகாக்க முன்வரவில்லை. இ.தோ.கா தலைவர் தொண்டமான் எங்களுக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டார். இது மேலிடத்தின் கட்டளை என்பதால் இ.தோ.கா. இதில் தலையிட முடியாது என அவர் கூறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடியதால்,தற்காலிகமாக பின்வாங்கி உள்ளார்கள். ஆனால் தொடர்ந்து போராடுவதற்கு எங்களுக்கு பல வழிகளிலும் ஆதரவு அவசியம். எமது தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள வெஸ்த்தோல், பார்கேபில், கடிலீனா தோட்டத் தொழிலாளர்கள் எமது போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியுள்ளார்கள்என மேலும் அவர் கூறினார்.

ஜே.இ.டி.பி. நிர்வாகத்தின் கீழ் உள்ள 17 ஜனவசம தோட்டங்களில், போஹில் தோட்டமும் ஒன்றாகும். இத்தோட்டங்கள் சகலதையும் துண்டாடி தனியாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் புதிய உரிமையாளர் வேலை வழங்க மறுத்தால் இங்கு வேலை செய்யும் 5200 தொழிலாளர்கள் வேலைகளையும் இருப்பிடத்தையும் இழப்பர்.

கண்டியில் கந்தானை தோட்டம், ஆடம்பர ஹோட்டல்கள் மற்றும் தனியார் வைத்திய சாலைகள் கட்டுவதற்காக ஜே.இ.டி.பி.யினால் விற்கப்பட்டுள்ளது. 2011ல் தொழிலாளர்கள் அதற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். இந்த எதிர்ப்பின் காரணமாக கட்டிட வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ், அரச தோட்ட நிறுவனங்கள் உட்பட அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைப்பதை விரைவுபடுத்தும் மற்றும் தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் பரந்த திட்டத்தின் ஒரு பாகமாகவே ஜே.இ.டி,பி. தோட்டங்கள் துண்டாடப்பட்டு வருகின்றன.

2012 வரவு-செலவு திட்ட உரையில், ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ 37,000 ஹெக்டயர் பெருந்தோட்டங்களை துண்டாடி விநியோகிப்பதாக அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற வகையில், இ.தொ.கா. மலயக மக்கள் முன்னணி (ம,,மு), தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தே.ச) மற்றும் எதிர்க்கட்சி தொழிற் சங்கமான மனோ கணேசன் தலமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தோ.கா) உட்பட அமைப்புகள், துண்டாடப்பட்ட நிலங்களை தோட்ட இளைஞர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி இத்திட்டத்தை ஆதரிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச வங்கிகளதும் முதலாளித்துவ அரசினதும் நேரடி முகவர்களாக இந்த தொழிற்சங்கங்கள் தொழிற்படுகின்றன.

தோட்ட இளைஞர்களுக்கு நிலம் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல. மாறாக இந்த நிலங்களை தனியார் மயமாக்குவதில் இரண்டு பிற்போக்கு நோக்கங்கள் உள்ளன: இலங்கையில் தனிப்பெரும் தொழிற்துறை சக்தியாக விளங்குகின்ற தோட்டத் தொழிலாளர்களை வலுவிழக்கச் செய்வதும், சிங்கள இனவாத சக்திகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நிலை நிறுத்துவதற்காகும்.

தமது உரிமைகளைப் பாதுகாக்க போஹில் தொழிலாளர்கள் எடுத்த முன்முயற்சியையும், திடசங்கற்பத்தையும் பராட்ட வேண்டும். ஆயினும், அவர்கள் முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு தீவிரமும் திடசங்கற்பமும் மாத்திரமும் போதாது என்பதை சொல்லியாக வேண்டும். சில போஹில் தொழிலாளர்கள் மே 23 ம் திகதி போராட்டத்தில் செய்ய முயற்சித்ததுபோல், தாங்களே தீமூட்டி உயிர் தியாகம் செய்வது தொழிலாளர் போராட்ட விதிமுறையல்ல என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிற் சங்கங்களின் காடிக்கொடுப்பினால் தொழிலாளர் மத்தியில் உருவாகியுள்ள ஆற்றோனா நிலமையையே இது எடுத்துக் காட்டுகின்றது.

 “அவர்கள் வந்தாள் மீண்டும் நாங்கள் போராடுவோம்என்ற கருத்துடன் அவர்களால் அமைதியாக இருக்கமுடியாது. அத்தகைய நிலைப்பாடு, மீண்டும் பிரச்சனைகளை முகம்கொடுக்கும் போது தயாரிப்பற்ற நிலமையையே உருவாக்கும். அவர்கள் நிச்சயமாக மீண்டும் வருவார்கள். இந்த தனியார் மயமாக்கல் நடவடிக்கையில் ஜே.இ.டி.பி, அரசாங்கம், தனியார் உரிமையாளர்கள், பொலிசார், முதலாளித்துவ நீதி மன்றம் என்பனவும் அவகளுக்கு எதிராக தொழிற்படும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தற்கொலை செய்யும் அவநம்பிக்கையான முயற்சிகளுக்கு மாறாக, போஹில் தொழிலாளர்கள் சக்தி வாய்த போராட்டத்திற்கு ஒழுங்கு செய்ய வேண்டும். ஜே.இ.டி.பி.யின் தனியார் மயமாக்மத்திற்கு எதிராகவும், வாழ்க்கை நிலமைகள்  மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் போராடுவதற்காக, தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு முதலாவதாக அவர்கள் தொழிற்சங்களில் இருந்து நனவுப் பூர்வமாக விலகி, நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டும்.

அத்தகைய போராட்டம், ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்கும் அரசியல் முன்னோக்கை அடிப்படையாக கொண்டிருப்பதுடன், தோட்டங்களை தேசியமயமாக்குவது உட்பட்ட சோசலிச கொள்கைகளை அமுல்படுத்தும் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை ஆட்சியில் இறுத்தும் முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.