சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Braying for war against Syria

சிரியாவிற்கு எதிரான போருக்கான கடுந்தொனி

Bill Van Auken
30 April 2013

use this version to print | Send feedback

சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போர்த்தயாரிப்பில் வாஷிங்டனுடைய அரசியல் நடைமுறை மற்றும் பெருநிறுவன செய்தி ஊடகம் ஆகியவை பொய்கள் நிறைந்த பிரச்சாரத்தை முறையாக விரிவாக்குவதுடன், இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு என்பது குறித்த பிரச்சாரத்தையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

சிரியாவின் இரசாயன ஆயுதப் போர்முறை குறித்த பிரச்சாரம் முற்றிலும் ஆதாரமற்றதும், ஜேர்மனியின் நாஜி ஆட்சி அதன் போலந்து, செக்கோஸ்லோவாக்கியா குறித்த படையெடுப்புக்களை சித்தரிக்க, மனிதாபிமானத்திற்கானதும் தற்பாதுகாப்பிற்கானதும் என்று கூறியதில் இருந்ததுபோன்ற நம்பகத்தன்மையையே கொண்டுள்ளது.

 

பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள ஒரு தலையங்கம், சிட்டி ஆப் லண்டனுடைய நிதியத் தன்னலக்குழுவின் ஒலிக்குறிப்பின் சரியான வகைமாதிரியாகத்தான் உள்ளது. சிரிய அரசாங்கப் படைகள் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தின என்பதற்கு உறுதியான நிரூபணம் இல்லைஎன்பதை முதலில் ஒப்புக் கொண்ட பின்னர், தலையங்கம், “சிரிய மோதல் குறித்த நெருக்கமான கண்காணிப்பாளர்கள் நம்புகின்றபடி, கூற்றுக்கள் உண்மை என்றால்தான், இப்பொழுது நாம் நம்பக்கூடிய ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கை, வருங்காலத்தில் கொடூரங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு முடியும், ஹலப்ஜாவில் 1988ல் சதாம் ஹுசைனின் ஈராக்கிய ஆட்சி, அதன் எழுச்சி செய்த குர்திஷ் குடிமக்கள் 5,000 பேரை கொடிய வாயு மூலம் கொன்றதைப் போல் நடக்காமல் பார்ப்பதற்கு.” என்று அது கூறியுள்ளது.

இந்த முடிவு அபத்தமானது. கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம் கடுமையான நிபந்தனையின் பேரில் குறிப்பிட்டுள்ள சரின் எரிவாயுவை, சிரிய இராணுவம் சிறிய அளவுகூட பயன்படுத்தியது என்பதற்கு நிரூபணம் இல்லை என்று ஒப்புக் கொண்டபின், செய்தித்தாள் ஒருங்கிணைந்த நடவடிக்கை ஒன்றுதான்அதாவது இராணுவத் தலையீடுதான் இனவழிக் கொடூரங்களைத் தடுக்க இயலும் என்று கூறுகிறது.

யார் இந்த நெருக்கமான கண்காணிப்பாளர்கள்”? தலையங்கம் அது பற்றிக் கூறவில்லை, ஆனால் ஒன்று உறுதி, அவர்கள் எண்ணெய் நலன்களின் கூட்டில் இருக்க வேண்டும், சிரியாவில் இருந்து வெளியேறியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் மேற்கத்திய இராணுவ வாதிகளாக இருக்க வேண்டும். இவர்கள்தான் ஏதேனும் போலிக்காரணத்தை கொண்டு விரைவில் ஆயுதத் தலையீடு தேவை என்று கோரி வருகின்றனர். இந்தக் கூறுபாடுகளும் இவற்றை எதிரொலிக்கும் அமெரிக்க, பிரித்தானிய செய்தி ஊடகங்களில் இருக்கும் பொய்யர்கள் கூட்டமும் போரை விரைவாகக் கொண்டுவருவதற்கு எதையும் கூறுவர்.

சிரியாவின் நிலைமை பற்றி சிறிதளவு அறிவைக் கொண்ட நெருக்கமான  அவதானிப்பாளர்களும் மற்றும் நேர்மை கொஞ்சமேனும் இருப்பவர்களும், அலெப்போக்குப் புறத்தே சிரிய ஆட்சி சிறு அளவு சரின் எரிவாயுவை (அதில் ஒருசில சிரிய இராணுவத்தினர் பாதிக்கப்பட்டிருந்தனர்) ஒரு சில டஜன் மக்களைக் கொல்லப் பயன்படுத்தினர் என்ற கூற்றுக்களில் எதுவுமில்லை என்பதை ஒப்புக்கொள்ளுவர்.

இராசயனப் போர்முறை வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுபோல், அத்தகைய ஆயுதங்களை பயன்படுத்தும் நோக்கம் ஏராளமான இறப்புக்களை ஏற்படுத்துவதாகும். ஒரு இரசாயனத் தாக்குதல் ஏற்பட்டால் தலையீடு இருக்கும் என்று ஒபாமா நிர்வாகமும் மேலைச் சக்திகளும் கொடுத்துள்ள அச்சுறுத்தல்களுக்கு இடையே, சிரிய ஆட்சி அத்தகைய ஆயுதங்களை இவை கூறியுள்ளது போல் பயன்படுத்த ஆர்வம்கொண்டுள்ளது என்பது பொருளற்றதும் முரண்பாடானதாதும் ஆகும்.

ஆனால் மறுபக்கத்தில், இஸ்லாமியவாதிகள் மற்றும் மேற்கின் பினாமியாக ஆட்சி மாற்றத்திற்காக போராடும் அல்குவேடா தொடர்புடைய ஆயுதக்குழுக்கள், அத்தகைய தாக்குதலை நடத்த அக்கறை கொண்டு பின்னர் டமாஸ்கஸ் மீது பழிசுமத்தி மேற்கத்திய தாக்குதலை தூண்ட ஆர்வம் கொண்டவை. உண்மையில், கிளர்ச்சியாளர்கள் எனக் கூறப்படுவோர், தாம் இரசாயன ஆயுதங்கள் திறன் பெற்றிருப்பதாக பறைசாற்றியுள்ளதுடன் அவற்றைப் பயன்படுத்தத்தயார் என்றும் கூறியுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம்,  அவர்களுடைய இரசாயன ஆயுதக் கிடங்கையும், முயல்கள் மீது நச்சு வாயு சோதிக்கப்பட்டதையும் YouTube இல் ஒரு ஒளிப்பதிவில் காட்டினர்.

இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது என்ற பொய்யை தலையீட்டிற்கு ஒரு போலிக்காரணமாக பயன்படுத்த முயலுவதின் அடித்தளத்தில் இருப்பது  வாஷிங்டன், லண்டன் மற்றும் மேற்கு சக்திகள் அசாத் அரசாங்கத்தை பதவியகற்றுவதற்கு குறுங்குழுவாத அடித்தளத்திலான உள்நாட்டு யுத்தத்தில் கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்கள் எவ்வித மூலோபாய முன்னேற்றத்தையும் அடையாததில் இருந்து எழும் விரக்தியாகும். அண்மைய வாரங்களில், சிரிய அரசாங்கப்படைகள், எதிர்ப்புப் படையினருக்கு ஒருதொடர் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தன.

நேரடி மேற்கத்திய தலையீட்டிற்கான உந்துதலுடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் விரிவாக்கப்பட்டுள்ளதும் இணைந்து வந்துள்ளன. இதுதான் அல்குவேடா தொடர்புடைய கூறுபாடுகளின் தனிமுத்திரையாகும்; இவைதான் அமெரிக்க ஆதரவுடைய எழுச்சியாளர்களின்மையத்தில் உள்ளவை. திங்களன்று டமாஸ்கஸில் ஒரு கார்க்குண்டு வெடித்தது.  இது சிரியாவின் பிரதம மந்திரி வால் அல் ஹக்கியைக் கொல்லுவதற்கான முயற்சி ஆகும். அவர் காயமின்றித் தப்பித்தாலும், இந்த வெடித்தாக்குதல் பல சிரிய உயிர்களை காவுகொண்டதுடன் ஏற்கனவே அத்தகைய தாக்குதல்களால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை அன்று நியூ யோர்க் டைம்ஸ் ஒரு முன்பக்க கட்டுரையை வெளியிட்டு இறுதியில் அதுவும் பிற பெருநிறுவனச் செய்தி ஊடகங்களும் சிரிய உள்நாட்டுப் போர் குறித்து அவை பல தகவல்களை மறைக்கின்றன என்னும் கறைபடிந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. “சிரியாவில் எழுச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்த இடத்திலும் மதச்சார்பற்ற படைகள் என்று இல்லை எனலாம்என்று செய்தித்தாள் கூறியுள்ளது. இக்கட்டுரை அல் நுஸ்ரா முன்னணியை, அது முறையாக அல் குவேடாவுடன் இணைந்தது, இது மேலாதிக்கம் கொண்டுள்ளதுஅரசாங்கத்திடம் இருந்து பறிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்லாமிய நீதிமன்றங்களை நிறுவுவதாகவும் சித்தரித்துள்ளது.

மேலும் அச்சுறுத்தும் வகையில், திங்களன்று ஆட்சி எதிர்ப்பு கூறுகள், இரண்டு தரையில் இருந்து வானுக்கு ஏவும் ஏவுகணைகளை 200 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு ரஷ்ய பயணிகள் விமானத்தின் மீது ஏவியதாகவும் குறிப்பிட்டுள்ளது. அப்பயணிகள் பெரும்பாலும் சுற்றுலாவிற்கு வந்தவர்கள். விமானம் எகிப்தில் இருந்து மாஸ்கோவிற்குச் சென்று கொண்டு இருந்தது.

இத்தகைய எழுச்சியாளர்கள் எனப்படுவோரின் தோல்விகள், சந்தேகத்திற்கு இடமின்றி இக்கூறுகள் குறித்த சிரிய மக்களின் பெரும் பிரிவுகள் கொண்டுள்ள வெறுப்புடன் இணைந்தவை; மக்களோ அவர்கள் விருப்பத்திற்கு எதிராக குறுங்குழுவாத உள்நாட்டுப்போரில் இழுக்கப்பட்டுள்ளனர். அசாத் ஆட்சியை எதிர்ப்பவர்கள்கூட அல் நுஸ்ரா போன்ற கூறுபாடுகள்மீது கூடுதல் விரோதப் போக்கையும், ஒரு மேற்கத்தைய இராணுவத் தலையீடு அவர்கள் நாட்டில் வருவது குறித்து விரோதப் போக்கையும் கொண்டுள்ளனர்.

இத்தகைய தலையீட்டிற்கு அமெரிக்க அரசியல்வாதிகள் கொடுக்கும் ஆதரவு இழிந்தது ஆகும். அவர்கள் ஒரு புறம் வாஷிங்டன் எழுச்சியாளர்களுக்குஅதாவது இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கும் அமைப்புக்களுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்; பயன்படுத்தப்படாத இரசாயன ஆயுதங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசாத் ஆட்சிக்கு எதிராகப் போர் வேண்டும் எனக்கூறுகின்றனர். மறுபுறம், அவர்கள் அமெரிக்க படையெடுப்பு இல்லாமல் சிரியா ஒரு தோல்வியுற்ற நாடாகலாம்”, இது அல்குவேடாவிடம் அவர்கள் ஆயுதங்களை வலியக் கொடுக்கும் அமைப்பிடம்கட்டுப்பாட்டை கொடுக்கும், இதே இரசாயன ஆயுதங்களை அவை கைப்பற்ற இயலும்என்றும் கோருகின்றனர்.

இவ்வகையில் ஒன்றுக்கொன்று முரணான போலிக்காரணங்களில் உள்ள சீரற்ற தன்மை, ஆளும் நடைமுறை அமெரிக்க மக்கள்மீது கொண்டுள்ள இழிவுணர்வைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனது; மேலும் சிரியாவிற்கு எதிரான போர் உந்துதல் சிரிய மக்களுடைய நலன் பற்றியோ, பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் குறித்தோ கூறப்படும் கவலைகளுடன் எத்தொடர்பும் இல்லை என்ற உண்மையும் தெரியவருகிறது.

அமெரிக்கத் தலையீடு தேவை என உரக்க வாதிடுபவர்களில் ஒருவரான செனட்டர் லிண்சே கிரகாம், (தென் கரோலினா, குடியரசுக்கட்சி), கிட்டத்தட்ட இது பற்றிய உண்மையை ஞாயிறு தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வெளியிட்டார்; அமெரிக்கா சிரியா மீது தலையிடாவிட்டால், “நாம் ஈரானுடன் போரிடப் போகிறோம், நாம் சிரியாமீது நடவடிக்கை எடுக்காத தன்மையை, ஈரான் அதன் அணுசக்தி ஆயுதத்திட்டம் குறித்தும் தீவிரம் காட்டவில்லை என நினைக்கும்.” என்றார்.

இதில் உண்மை என்னவென்றால், சிரியாவில் தலையீடு என்பது, ஈரானுக்கு எதிரான இன்னும் மோசமான ஆபத்து நிறைந்த போருக்கான தயாரிப்பின் ஒரு பாகமாகும் என்பதுதான். இப்போர் உந்துதலின் அடித்தளத்தில் இருப்பது அமெரிக்க முதலாளித்துவம் அதன் ஆழ்ந்த பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட அதன் எஞ்சியுள்ள இராணுவ சக்தியை பயன்படுத்தி மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவின் பரந்த எரிசக்தி இருப்புக்கள்மீது கட்டுப்பாட்டை பெறுவது என்பதுதான்.

சிரியாவிற்கு எதிராகப் போர் என்று கடுந்தொனி எழுப்பும் கழுத்தை அறுப்பவர்கள், அதுவும் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்துக் கவலை உள்ளதாகக் காட்டுபவர்கள், ஏற்கனவே ஒரு மில்லியன் கணக்கான ஈராக்கியர்களையும் நூறாயிரக்கணக்கான ஆப்கானியர்களையும் கொன்று, இன்னும் பல மில்லியன் கணக்கான மக்களைக் கொலை செய்யத் தயாராகவும் இருப்பவர்கள் ஆவர்.