சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French military White Paper plans escalating wars, great-power conflicts

பிரெஞ்சு இராணுவ வெள்ளைத்தாள் அறிக்கையானது போர்களை விரிவுபடுத்தும் மற்றும் பெரும் சக்திகளுக்கிடையேயான மோதல் திட்டங்களையும் கொண்டுள்ளது

By Kumaran Ira and Alex Lantier 
3 May 2013

use this version to print | Send feedback

ஏப்ரல் 29ம் தகிதி, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கமானது இராணுவ மூலோபாயம் தொடர்பான அதனுடைய வெள்ளைத்தாள் அறிக்கையை வெளியிட்டது. ஓராண்டிற்கு முன் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் புதிய வெள்ளைத் தாள் அறிக்கையை உருவாக்குவதற்கு ஓர் ஆணையத்தை நிறுவினார். அது முந்தைய 2008ம் ஆண்டு பிரெஞ்சு இராணுவ வெள்ளைத்தாள் அறிக்கை வெளியிடப்பட்ட பின் உலக அரசியல் நிலைமையில் ஏற்பட்டுள்ள மாறுதல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளமானது 2008ம் ஆண்டு வெள்ளைத் தாள் அறிக்கையைப் பகுப்பாய்வு செய்கையில், பிரான்சின் ஆளும் வர்க்கமானது போரை உலக ஏகாதிபத்தியத்தை பிடித்துள்ள முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சியாக மாற்ற முயல்கிறது என்று குறிப்பிட்டது. இப்பகுப்பாய்வு அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; அதாவது 2008 ஆண்டு பொருளாதார நெருக்கடி மற்றும் எகிப்தில் 2011ல் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நடவடிக்கைகளின் வெடிப்பிற்கு பின் பிரெஞ்சு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பானது வெடிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் பிரான்சானது லிபியா, ஐவரி கோஸ்ட் மற்றும் இப்பொழுது மாலி, சிரியா ஆகிய நாடுகளில் போர்களை நடத்தியுள்ளது, நடத்துகிறது.

தற்போதைய வெள்ளைத் தாள் அறிக்கையானது பிரான்சின் இராணுவ ஆக்கிரோஷமானது வெளிநாட்டில் பெருமளவில் தொடரப்படுவது மட்டும் இல்லாமல், விரிவாக்கவும் திட்டங்களை முன்வைக்கிறது. “மூலோபாய பின்னணியின் வளர்ச்சி நம் நாட்டை செயற்பாடுகளின் ஆரம்ப முயற்சிக்கு இட்டுச் செல்லும் என்பது மட்டுமின்றி, கடந்த காலத்தைவிட இன்னும் அதிகமாக இராணுவ நடவடிக்கை எடுக்க இருக்கும் பொறுப்புக்களில் கணிசமான விகிதங்களையும் மேற்கொள்ள வைக்கும்” என்று அது குறிப்பிடுகிறது,

இந்த வெள்ளைத்தாள் அதிர்ச்சியளிக்கும் வகையில் பரந்த இலக்குகளை அல்லது இலக்குத் திறன்களை பிரெஞ்சு இராணுவத்திற்கு தொகுத்துக் கொடுக்கிறது. ஆபிரிக்காவில் இன்னும் போர்களுக்கான வாய்ப்புக்கள், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் தரையிறக்க நிலைப்பாடுகள், ஈரான், சீனாவுடன் சாத்தியமான மோதல்கள், இன்னும் பரந்த முறையில் பிரெஞ்சு அணுசக்தி படைகளை நிலை கொள்ளச் செய்தல் ஆகியவற்றைப் பற்றி அது விவாதிக்கிறது.

PS அரசாங்கமானது வெள்ளைத் தாளை ஏற்றுள்ளது மற்றும் அதைச் செய்தி ஊடகங்கள் எதிர்கொண்டவிதம் ஆகியவை ஆளும் வர்க்கம் முற்றிலும் அறிவை இழந்து விட்டது என்பதற்கான அடையாளம் ஆகும். பிரெஞ்சுச் செய்தி ஊடகத் தகவல்கள் வெள்ளைத் தாளை தன்முனைப்பு கொண்ட இராணுவச் செயல்திட்டத்தைக் கோடிட்டுக் காட்டியதற்காகக் குறைகூறவில்லை; மாறாக இந்தப் போர்களை திறமையுடன் நடத்துவதற்கு பிரெஞ்சு இராணுவத்திற்கு ஆயுதங்கள் கொடுக்கப்படாததற்கு விமர்சித்துள்ளன.

பாதுகாப்புச் செலவுகள் ஆண்டு ஒன்றிற்கு 31.4 பில்லியன் யூரோக்கள் என்று முடக்குவதற்கு வெள்ளைத் தாள் திட்டமிட்டுள்ளது. இது 24,000 இராணுவ வேலைகளை 2014 முதல் 2019 வரையிலான காலத்தில் குறைக்கும் என்பதுடன், வெளிநாடுகளுக்கு இப்பொழுது அனுப்பப்படும் பெயரளவு 30,000 துருப்புக்களையும் 15,000 எனக் குறைத்து விடும்.

ஆனால் பல இராணுவப் பகுப்பாய்வாளர்கள் இந்த வெட்டுக்களை அதிகம் பொருட்படுத்தாமல், இவை போருக்குத் தயாராகும்போது பிற வெட்டுக்கள் கொண்டுவரப்பட்டு மீட்கப்படும் என்று வலியுறுத்துகின்றனர். Jean-Dominique Merchet ,அனைத்து அடிப்படைகளும் தக்க வைக்கப்படும்.... புவி அரசியல் பின்னணி அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் கணிசமான மாற்றத்தைக் கண்டால், நாம் வேறுவகையில் செயற்படுவோம். மற்றவற்றை தியாகம் செய்து இன்னும் பெருமளவில் தலையிட வகை செய்வோம்” என்றார்.

உண்மையில், வெள்ளைத் தாளினால் கருதப்படும் போர்கள், அதுவும் ஐரோப்பியப் பொருளாதாரம் ஏற்கனவே மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளின் பாதிப்பில் சிதைந்து கொண்டிருக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது பேரழிவு தரும் தாக்குதல்கள் மூலம்தான் நிதி திரட்டப்பட முடியும். ஆழ்ந்த, அரசியல் வெடிப்பு எதிர்ப்பிற்கான சூழலுக்குரிய நிலைமைகள் தோற்றுவிக்கப்படுகின்றன; இவை தொழிலாள வர்க்கத்தை மையம்கொண்டுள்ளன; போர் மற்றும் சிக்கனக் கொள்கைகளில் உறுதியாகவும் அவைகள் அரசியல் ஸ்தாபனத்தினால் ஒருமனதாக ஆதரவும் பெறுகின்றன.

மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா, சாகேல், பேர்சிய வளைகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை பிரெஞ்சுத் தலையீட்டிற்கான அரங்குகள் என்று வெள்ளைத்தாள் பட்டியலிடுகிறது. ஆபிரிக்காவில் நான்கு தளங்களை வைத்துக் கொள்ளும் திட்டத்தை பிரான்ஸ் கொண்டுள்ளது. வெள்ளைத்தாள் தென் சீனக் கடலின் முக்கிய தன்மையையும் குறிப்பிடுகிறது அங்குதான் அமெரிக்காவானது சீனாவிற்கும் பிற பிராந்திய நாடுகளுக்கும் இடையே கடற்படை மோதல்களைத் தூண்டிவிடுகிறது; அதே போல் பிரெஞ்சு நலன்கள் கிழக்கு ஆசியாவில் இன்னும் பரந்த முறையில் இருக்க வேண்டியது பற்றியும் குறிப்பிடுகிறது.

வெள்ளைத் தாளை இயற்ற உதவிய கன்சர்வேடிவ் பிரதிநிதி Christophe Ghilloteau மாலியில் பிரெஞ்சுப் போரானது பிரான்சின் பாதுகாப்புக்கு முன்னுரிமையாக ஆபிரிக்கா தொடர உறுதிப்படுத்தும் என்றார். ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனலில் அவர் மாலிப் போரை அடுத்து சில மக்கள் நாம் பிரான்சை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள் அது நல்ல கருத்து அல்ல என்பதை உணர்ந்துவிட்டனர். முன்னரே நாம் சாட்டில் படைகளை வைத்திருக்கவில்லை என்றால், எல்லாவற்றிற்கும் மேலாக ஐவரி கோஸ்ட்டின் ஆபரேஷன் யூனிகார்ன் மூலம், இல்லாவிட்டால் மாலியிடம் இருந்து வந்த அழைப்பிற்கு நாம் இவ்வளவு விரைவில் விடையிறுத்திருக்க முடியாது.

Associate Africa Programme ஆராய்ச்சியாளரான லண்டனைத் தளமாகக் கொண்ட சாதாம் ஹௌஸ் சிந்தனைக் குழுவில் இருக்கும் Paul Melly விளக்கினார்: இந்த உதாரணம் [மாலித் தலையீட்டிற்கு] சரியாக வேலை செய்தால், அதுதான் இன்னும் பரந்த அளவில் விரிவாக்கப்பட முடியும். எனவே மாலி என்பது ஒரு சோதனைக்களம் போல்.

வாஷிங்டனுடன் பிரெஞ்சுப் உறவுப் பிணைப்பு, ஹாலண்டின் பழைமைவாத முன்னோடி நிக்கோலா சார்க்கோசி பிணைத்தது போல் இருக்க வேண்டும் என்பதை வெள்ளைத் தாள் உறுதிப்படுத்துகிறது. சார்க்கோசியின் கீழ் பிரான்ஸ் தன்னை மீண்டும் நேட்டோ இராணுவ கட்டுமானத்தில் 2009 முதல் ஒருங்கிணைத்துக் கொண்டு, 2011ல் அமெரிக்க தலைமையிலான போர்களில் ஈடுபட்டது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதலுக்கு வெள்ளைத் தாள் ஆதரவு கொடுக்கிறது; எந்த வித ஆதாரமும் இன்றி ஈரான் அணுவாயுதங்களை வளர்க்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. “பேர்சிய வளைகுடா குறிப்பிட்ட மூலோபாய முக்கியத்துவத்தை பெறுகிறது, [ஏனெனில்] ஈரான் அணுசக்தி இராணுவத் திறன்களை வளர்க்க முற்படுவது அணுவாயுதப் பரவலில் இடரை ஏற்படுத்துகிறது” என்று கூறுகிறது.

பிரான்ஸ் அதன் செல்வாக்கை இப்பிராந்தியத்தில் அதிகப்படுத்த வேண்டும் என்று வெள்ளைத்தாள் அழைப்பு விடுகிறது. அதற்கு அமெரிக்காவுடனும் அதன் பிராந்திய பினாமிகளுடனும் சேர்ந்து உழைக்க வேண்டும். அதன் நிலைப்பாட்டை பிரான்ஸ் அங்கு வலியுறுத்தியுள்ளது, அதன் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், குவைத், கட்டாருடன்கூடஇதில் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களின் தலைநகரான அபு தாபியில் இராணுவத் தளம் கட்டமைப்பதும் அடங்கும்.

ஆசியாவில் அமெரிக்காவின் ஆசிய முன்னிலை கருத்திற்கு வெள்ளைத்தாள் பாராட்டுத் தெரிவிக்கிறது; அந்த முன்னிலை சீனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே இராணுவ அழுத்தங்களை விரிவாக்கியுள்ளது. வாஷிங்டனைப் போலவே பாரிஸும் சீனாவின் எழுச்சி பெறும் செல்வாக்கை தன் புவி-மூலோபாய நலன்களுக்கு அச்சுறுத்தலாக, குறிப்பாக ஆபிரிக்காவில் என்று காண்கிறது.

அது கூறுகிறது: கிழக்கு ஆசியாவில் சமபலநிலை ஆழ்ந்த முறையில் சீனாவின் எழுச்சிச் சக்தியால் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. அப்பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நிலைப்பாடு ஆசியாவில் அழுத்தங்களை கட்டுப்படுத்த உதவும்.

உண்மையில் ஆசியாவில் முன்னிலை என்பது ஆசியாவில் அழுத்தங்களை மிகப் பெரியளவில் விரிவாக்கி, கடந்த மாதம் வட கொரியாவில் பெரும் போருக்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. வெள்ளைத்தாள் பிரான்ஸ் ஒரு பெரும் பிராந்திய மோதலில் சேர முற்படும் என்பதைத் தெளிவுபடுத்தி, பிரான்ஸ் ஒரு வெளிப்படையான நெருக்கடி வந்தால், உரிய அளவிற்கு அரசியல், இராணுவ பங்களிப்பைக் கொடுக்கும் என உறுதியும் கொடுத்துள்ளது.

வெள்ளைத்தாள் பிரான்சின் அணுவாயுதங்களை, SN3G நீர்மூழ்கிக் கப்பல், M51 போன்ற ஏவுகணைத் திட்டங்கள் போன்றவற்றை; இவைகள் ஆண்டு ஒன்றிற்கு கிட்டத்தட்ட 3.5 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க $4.6 பில்லியன்) செலவுடையவற்றை பராமரிப்பதை பரிந்துரைக்கிறது. வெள்ளைத்தாள் பிரான்சின் அணுவாயுதத் திட்டம் முற்றிலும் பாதுகாப்பிற்காக என உறுதியளிக்கிறது; அது சேர்த்துக் கொள்வதாவது: அணு சக்தி சொத்துக்கள், குடியரசின் ஜனாதிபதியுடைய ஒப்புதலுடன் சில மரபார்ந்த செயற்பாடுகளில் பயன்படுத்தப்பட முடியும்,.

அணுவாயுத மற்றும் மரபுப் படைகளுக்கு இடையேயான தடுப்புக்களை முறித்தல் என்பது அணுவாயுதங்களைப் பயன்படுத்துவதில் மற்றொரு அடிவைப்பாகும் -- இந்த அச்சுறுத்தல் ஏற்கனவே பிரெஞ்சு அதிகாரிகளால் எழுப்பப்பட்டுள்ளது. 2006ல் அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக் பிரான்சின் மூலோபாய விநியோகங்களுக்கு அல்லது அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் பிரான்ஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல்களைத் தொடங்கலாம் என்று அறிவித்தார்.  (see French president Chirac threatens nuclear retaliation in the event of terrorist attacks).

குட்டி முதலாளித்துவ இடது முன்னணியின் தலைவரான ஜோன் லூக் மெலோன்ஷோன், வெள்ளைத் தாளில் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் பாதுகாப்புச் செலவுகளின் வெட்டுக்களை கண்டித்துள்ளார். சிக்கனம் மற்றும் அமெரிக்க கூட்டுக்கள் என்பவை இரண்டு பெரும் ஆபத்துக்களாக பிரான்சின் சுதந்திரத்திற்கும் இறைமைக்கும் உள்ளன என்று அவர் கண்டித்துள்ளார். ஒரு பிற்போக்குத்தன அமெரிக்க எதிர்ப்புக்கு அழைப்பை விடுகிறார்; அவர் ஆர்வத்துடன் பாரிஸ் வாஷிங்டனுடன் இணைந்து நடத்திய ஒவ்வொரு போருக்கும், லிபியாவில் இருந்து தற்போதைய மாலி, சிரியப் போர்கள் வரை ஆதரவு கொடுத்திருந்தாலும்கூட.

மெலென்ஷோனின் போர் சார்புக்கருத்துக்கள் முதலாளித்துவத்திற்கும் வசதி படைத்த போலி இடது அடுக்குகள் என்று இடது முன்னணி தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வரும் பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை பிரதிபலிக்கின்றன. தொழிலாள வர்க்கத்திற்கும், ஹாலண்டின் பிற்போக்குத்தன சமூக, இராணுவ செயற்பட்டியலுக்கும் இடையே உள்ள வளரும் போராட்டங்கள் குறித்துப் பெரும் அச்சத்தில் அவர்கள் இன்னும் கூடுதலான ஆதாரங்கள் போர் இயந்திரத்திற்குள் உட்செலுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர்.