சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

policies heighten national divisions in Europe

சிக்கனக் கொள்கைகள் ஐரோப்பாவில் தேசியப் பிளவுகளை உயர்த்திக் காட்டுகின்றன

By Stefan Steinber
6 May 2013

use this version to print | Send feedback

ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதின் தகுதிகள் குறித்து சமீபத்திய வாரங்களில் அரசியல் வட்டங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விவாதத்தின் பின்னணியில் இருப்பது, ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி வேகமாக மோசமாகி வருவதும், சிக்கனக் கொள்கைகளுக்கு ஐரோப்பாவில் பரந்த எதிர்ப்பு வெளிப்பட்டிருப்பதும்தான்.

பெப்ருவரி மாதம் நடைபெற்ற இத்தாலிய தேர்தல்கள், சிக்கன நடவடிக்கைக்கு பெருகும் விரோதப் போக்கின் சமீபத்திய மிகத் தெளிவான வெளிப்பாடாகும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளின் ஆணையின்பேரில் பாரிய செலவுக் குறைப்புக்களை தொடர்ந்து நடத்திய தொழில்நுட்ப ரீதியான மரியோ மோன்டியின் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி பேரழிவுத் தோல்வியைச் சந்தித்தது. வலதுசாரி ஜனரஞ்சக நகைச்சுவை நடிகர் பேப்பே கிரில்லோ பரந்த அரசாங்க எதிர்ப்பு உணர்வில் ஆரம்ப ஆதாயத்தை பெற்றார்; மில்லியன் கணக்கான மக்கள் மோன்டி அரசாங்கத்திற்கு மட்டும் அல்லாமல், அனைத்து நடைமுறைக் கட்சிகளில் இருந்தும் விரோதப் போக்கை கொண்டுள்ளனர் என்பதை இத்தேர்தல் அம்பலப்படுத்தியுள்ளது.

இத்தாலியில் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான எழுச்சி, நாட்டின் இடது என அழைக்கப்படுவதின் திவால்தன்மையினால் முற்போக்கான வெளிப்பாட்டைக் காண முடியாத நிலையில், மற்ற ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகியவற்றிலும் பிரதிபலிக்கிறது. இங்கெல்லாம் மில்லியன் கணக்கான மக்கள் சமீபத்திய மாதங்களில் வேலைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்க்கைத்தரங்களைப் பாதுகாக்க தெருக்களுக்கு வந்து போராடியுள்ளனர்.

பொருளாதாரப் பேரழிவை முகங்கொடுக்கும் ஐரோப்பிய அரசியல் உயரடுக்கு பெருகிய முறையில் நிலைநோக்கற்ற தன்மையைத்தான் நிரூபிக்கிறது. தனிப்பட்ட தேசிய முதலாளித்துவங்களுக்கு இடையேயான மோதல்கள் பிரச்சினையை தீர்ப்பதை இயலாததாக்கிவிட்டன; குறிப்பாக 2008-09 சிதைவில் இருந்து சிக்கனக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ள ஜேர்மனிய அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்கள் பெருகிவிட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளில் உள்ள தாக்கங்கள் குறித்து ஏப்ரல் 22 அன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த விவாதம் ஒன்றில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் மானுவல் பரோசோ ஒப்புக் கொண்டார்: “நாம் காணும் வெளிப்பட்டுள்ள பிளவுகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன்: அரசியலில் தீவிர எதிர்முனைக் கருத்துக்கள் மற்றும் ஜனரஞ்சக திருப்திக்கான வழிவகை போன்றவை அரசியல் ஆதரவை அகற்றுகின்றன, சமூக இழையையும் கிழிக்கிறது; இவைதான் நெருக்கடியைத் தீர்க்க நமக்கு தேவையாகும்; ஐரோப்பாவின் மையத்தில் இருக்கும் பகுதிகளுக்கும் ஓரத்தில் இருக்கும் பகுதிகளுக்கும் இடையே வேற்றுமைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன; ஒரு புதிப்பிக்கப்பட்டுள்ள பிரிக்கும் கோடு வடக்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவிற்கும் இடையே போடப்பட்டுள்ளது; மீண்டும் ஒருதலைப்பட்சக் கருத்துக்கள் வெளிப்பட்டு நம் குடிமக்களை பிளவுபடுத்தியுள்ளன; சில நேரம் தேசிய ஒருதலைப்பட்சக் கருத்துக்கள் அறநெறிக் கண்ணோட்டத்தில் சிறிதும் ஏற்க முடியாதவையாகிவிட்டன.”

ஐரோப்பாவில் பெருகும் அழுத்தங்கள் குறித்த பரோசோவின் கருத்துக்கள் அவர் தலைமை தாங்கும் ஐரோப்பிய ஆணையம் தொடரும் சிக்கனக் கொள்கைகள் பற்றிய பேரழிவுக் குற்றச்சாட்டுக்கள், மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளால் தூண்டுதல் பெற்றவை.

ஐரோப்பாவில் ஒரு சமூகப் பிளவு, எழுச்சி பற்றிய பரோசோவின் எச்சரிக்கைகளை ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் முழுவதும் எதிரொலிக்கின்றன. “மற்றும் திடீரென ஒரு பெரும் ஒலி” என்ற தலைப்பில் ஐரோப்பாவில் பரந்த வேலையின்மை குறித்த சமீபத்திய பகுப்பாய்வில், Süddeutsche Zeitung  மக்கள் தெற்கு ஐரோப்பாவில், அரசாங்கங்களிடம் இருந்து போதுமான அளவு வேறுபட்டுவிட்டால் “எரியும் நிலைக்கு வந்துவிடும்” என்று கூறியதாக ஒரு சமூகவியல் வல்லுனரை மேற்கோளிட்டுள்ளது.

முக்கிய ஐரோப்பிய அரசியல் வாதிகள், அவர்களுடைய நாடுகளிலேயே அவர்களுடைய சிக்கனக் கொள்கைகள் வெகுஜன வேலையின்மையை தோற்றுவித்துள்ள நிலையில், இப்பொழுது சமூக எதிர்ப்பின் வெடிப்பு குறித்து அஞ்சுகின்றனர், தங்களை சிக்கன நடவடிக்கைகளில் இருந்து ஒதுக்கிவைத்துக் கொள்ள முற்படுகின்றனர்.

திங்களன்று இத்தாலிய பாராளுமன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையில், புதிய இத்தாலியப் பிரதம மந்திரி என்ரிக்கோ லெட்டா அறிவித்தார்: “நிதிய ஒருங்கிணைப்பினால் இத்தாலி மடிந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சிக் கொள்கைகள் இனியும் காத்திருக்க முடியாது.” இத்தாலிய, சர்வதேச செய்தி ஊடகத்தின் வர்ணனையாளர்கள் இக்கருத்துக்களை கொள்கையில் மாற்றம் தேவை எனக் கூறுவதாக விவரித்துள்ளனர்; ஜேர்மனிக்கு எதிராகவும் இதைக் கருதுகின்றனர்; ஏனெனில் அதுதான் ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கையை சுமத்தும் உந்துதலில் பிரதான சக்தியாக இருந்தது.

லெட்டாவின் கருத்துக்கள் மதிப்பற்றவை. பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய மறுதினம் அவர் ஜேர்மனிக்குப் பயணித்து, மேர்க்கெலுடன் பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவம் நிர்ணயித்துள்ள செலவு இலக்குகளில் சற்று நிவாரணத்தை நாடக் கோரினார். ஜேர்மனிய சான்ஸ்லரிடம் இருந்து சுமுக விடை வரவில்லை; அவர் இத்தாலி அதன் கடன்களை அடைப்பதுதான் வளர்ச்சிக்கு தேவையான முன் நிபந்தனை என்று வலியுறுத்தினார். புதன் அன்று லெட்டா தன்னுடைய வளர்ச்சி மந்திரம் குறித்து பாரிஸிலும் பிரஸ்ஸல்ஸிலும் கூறினார்; அதே நேரத்தில் தன்னை உபசரிக்கும் பரோசோ மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிடம் இத்தாலி கடன் திருப்பிக் கொடுக்கும் அட்டவணையை முறையாகப் பின்பற்றும் என்றும் உறுதியளித்தார்.

மற்ற முக்கிய ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஐரோப்பிய நெருக்கடிக்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் பங்கை மேலும் நேரடியாக குறைகூறினர்.

இந்த வாரத் தொடக்கத்தில், ஐரோப்பிய ஒன்றிய வேலையளிக்கும் துறைத் தலைவர் லாஸ்லோ ஆண்டோர், Süddeutsche Zeitung இற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் நேரடியாக ஜேர்மனிய அரசாங்கத்தின் கொள்கையை “ஊதியத்தைக் குறைக்கும் கொள்கை” என்று தாக்கினார். ஜேர்மனியில் குறைந்தப்பட்ச ஊதியம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஜேர்மனியும் பிற செல்வம் படைத்த வடக்கு நாடுகளும் தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், “நாணய ஒன்றியம் முறிந்துவிடும். சீரான தன்மை ஏற்கனவே பாதி இழக்கப்பட்டுவிட்டது” என்று அவர் எச்சரித்தார்.

கடந்த வெள்ளியன்று ஐரோப்பா பற்றி வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தில், பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி வெளிப்படையாக ஜேர்மனிய சான்ஸ்லரின் “தன்னலப் பிடிவாதம்” குறித்துத் தாக்கியது; “வசதிக்கான கூட்டை” தற்போதைய பிரித்தானியப் பிரதமருடன் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத் திட்டத்தை “பெரும் பாதிப்பிற்கு உட்படுத்திவிட்டது” என்று அது கூறியுள்ளது. (பார்க்க, வேலைகள் சரிவின் மத்தியில் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கிறார்.

பெருகிய முறையில் பேர்லினை பிற ஐரோப்பியத் தலைவர்கள் பகிரங்கமாகக் குறைகூறுதல் கண்டம் நெடுகிலும் பெருகிய, அதிகமான பொருளாதாரப் பிளவுகளில் ஆழ்ந்த வேர்களைக் கொண்டுள்ளது. 2008 பொருளாதார நெருக்கடிக்கு பிந்தைய காலம் தனி நாடுகளில் மிகப் பெரிய சமூக சமத்துவமின்மை உயர்ந்திருப்பதைக் காண்பது மட்டுமின்றி, ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு இடையேயும் பெரும் பொருளாதார இடைவெளியையும் காட்டுகிறது.

முன்னாள் சமூக ஜனநாயக-பசுமைக் கட்சி கூட்டணியினால் 10 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட குறைவூதியத் துறையைத் தளம் கொண்டு, ஜேர்மனிய வணிகமும் நிதிய உயரடுக்கும் ஐரோப்பிய நெருக்கடியில் பெரும் ஆதாயங்களை அடைந்துள்ளன. ஜேர்மனியின் பொருளாதாரம் உண்மையில் விரிவடைந்துள்ளது; மொத்த உள்நாட்டு உற்பத்தி 2008 சரிவிற்குப் பின் 3% உயர்ந்துள்ளது. பிரெஞ்சுப் பொருளாதாரம் இதே காலத்தில் எத்தகைய முன்னேற்றத்தையும் பதிவு செய்யவில்லை; யூரோப்பகுதியில் மற்ற நாடுகள் 5.3% சுருக்கத்தைத்தான் பதிவு செய்துள்ளன.

ஜேர்மனிய வங்கி உயரடுக்கும் நெருக்கடியில் இருந்து, பெரும் இலாபங்களை ஈட்ட முடிந்துள்ளது. ஜேர்மனியின் Handelsblatt வணிகச் செய்தி ஏடு ஒரு சமீபத்திய கட்டுரையில் ஆரவாரத்துடன் குறிப்பிட்டது: “ஏதோ நாடு ஒரு மிகப் பெரிய ஒதுக்கு நிதித் தளம் போல் உள்ளது; நாம் அவ்வப்பொழுது நிர்ணயிக்கும் யூரோ விதிகளையொட்டி இலாபத்தைக் காண முடிந்தது.”

இக்கட்டுரை ஜேர்மனிக்கு பெரும் வெள்ளமென பாய்ந்துள்ள மூலதனத்தையும் குறிக்கிறது; இது கிட்டத்தட்ட பூஜ்ய விகிதக் கடன்கள் என்று ஜேர்மனியின் வங்கிகளுக்கு கிடைப்பதுடன் சேர்ந்து, நாட்டிற்கு ஒரு “சிறப்பு வளர்ச்சித்திட்டம்” போல் செயல்படுகிறது.

ஐரோப்பா முழுவதும் ஆளும் உயரடுக்குகள் பெருகிய முறையில் பேர்லின் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து மன உளைச்சல்களைக் கொண்டுள்ளன; சிக்கனம் குறித்த தங்கள் குறைகூறல்கள், தொழிலாள வர்க்கத்தின் சீற்றத்தைத் தணிக்கும் என்னும் நோக்கத்தோடு அச்சீற்றத்தை மீண்டும் தங்களுக்கு மூலதனம் வந்து பாயும் வகையில் மறு ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் கருதுகின்றன.

பேர்லின் குறித்த அவற்றின் எதிர்ப்புக்கள் முற்றிலும் இழிந்தவை. அவர்கள் “கடன் தடைக்கு”ஆதாவாக, பேர்லின் வாதிட்டதற்கு, வாக்களித்தனர்; அதுதான் தேசியக்கடன் மற்றும் செலவு இலக்குகளில் கடுமையான வரம்புகளை நிர்ணயித்தது. அவை அனைத்தும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் நெருக்கடிக்கு முழு விலையையும் கொடுக்க  உறுதிப்படுத்துவதில் ஒற்றுமைக உள்ளன. அதே நேரத்தில் அவர்கள் தெற்கு ஐரோப்பாவில் இருந்து ஜேர்மனிக்கு பணம் பாய்வது சீரமைக்கப்பட்டு எதிர்ப்புறம் நடக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

ஒரு விரிவான ஐரோப்பிய வங்கி ஒன்றியம் மற்றும் யூரோப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்னும் அவர்களுடைய அழைப்பின் பின் உள்ள நிலமையாகும்; அது ஜேர்மனியை வலுவற்ற ஐரோப்பியப் பொருளாதாரங்களுக்கு உதவித்தொகை அளிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர, அவர்கள் பேர்லினை இன்னும் அதிகப் பணத்தை பெரியளவு இணைப்புத் திட்டங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும், மற்ற நாடுகளில் இருக்கும் வேலையற்ற தன்மையை தளர்த்தும் வேலைத்திட்டங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும், அதையொட்டி தத்தம் தேசிய வாக்காளர் தொகுப்புக்களுக்கு திருப்தி கொடுக்க முடியும் என்றும் கருதுகின்றனர்.

தன்னுடைய பங்கிற்கு ஜேர்மனிய அரசாங்கமும், நிதி மந்திரி வொல்ஃப்காங் ஷொய்பிள வும் தற்போதைய கொள்கையில் தாங்கள் அடிப்படை மாற்றம் எதையும் ஏற்பதற்கில்லை என்பதை தெளிவுபடுத்தி, இன்னும் கூடுதலான வரவு-செலவுத் திட்ட குறைப்புக்கள், தொலை விளைவு கொடுக்கும் கட்டுமானச் சீர்திருத்தங்கள் ஆகியவை ஐரோப்பாவை ஒரு குறைவூதியத் தொழிலாளர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தேவை என்று அழைப்பும் கொடுத்துள்ளனர்.

சிக்கனத்தின் “எதிராளிகள்” எனப்படுவோரைப் பொறுத்தவரை, அவர்கள் மீண்டும் விரைவில் பின்வாங்கும் நிலைக்குத்தான் செல்கின்றனர். பிரஸ்ஸல்ஸில் பரோசோவின் கருத்துக்களுக்குப் பின்னர், ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அக்கருத்துக்கள் ஐரோப்பாவின் சிக்கன உந்துதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என விளக்கம் காணப்படக்கூடாது என்றார்.

இத்தாலியில் லெட்டா மத்திய வங்கியாளர் பாப்ரிஜியோ சாக்கோமன்னியை தன் புதிய நிதி மந்திரியாக நியமித்துள்ளது நிதியச் சந்தைகளுக்கு ஊதியங்கள், வேலைகள் மற்றும் இத்தாலியத் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் தொடர்ந்து குறையாமல் தாக்கப்படும் என்பதற்கான தெளிவான அடையாளம் ஆகும்.

ஜேர்மனியில், ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகளின் பாராளுமன்றப் பிரிவைச் சேர்ந்த பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர், பிரெஞ்சு சோசலிஸட் கட்சியின் (PS) ஜேர்மனிய கன்சர்வேடிவ் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பற்றிய விமர்சனத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஜேர்மனிய SPD தொடர்ந்து ஜேர்மனிய அரசாங்கம் செயல்படுத்தி வந்துள்ள அனைத்துச் சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஆதரவைக் கொடுத்து வந்துள்ளது.

கடந்த வாரம், மேர்க்கெல் குறித்த வலதுசாரித் தன்மை நிறைந்த விமர்சனத்தை விளக்கிய SPD இன் ஸ்ரைன்மையர், பிரான்சின் PS தலைவர்தான் மேர்க்கெல் மற்றும் வங்கிகள் கோரும் சமூகத் தாக்குதல் வகைகளை நடத்துவதற்கு குறிப்பாக மக்கள் இடையே செல்வாக்கற்ற முடிவுகளை” செயல்படுத்தத் தகுதி உடையவர் என்றார்.

தற்போதைய சிக்கன நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் தொடர்புடைய எந்த சக்திகளும் தொழிலாள வர்க்கம் வெளியேற எத்தகைய முற்போக்கான பாதையையும் காட்டவில்லை. சமூக ஜனநாயகவாதிகளும் மற்றும் தொழிற்சங்களிலும், போலி இடது குழுக்களிலும் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களும் வங்கிகளுக்கும் நிதிய உயரடுக்கிற்கும்தான் தங்கள் பணிகளை வழங்குகின்றனர்; அதையொட்டி தொழிலாள வர்க்கத்தின் மீது மேலும் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

அதே நேரத்தில் ஆழமடையும் மந்தநிலைப் பின்னணியில், ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகளை சுமத்தும் உந்துதல் தேசியவாதப் பிளவுகள் வெடிப்பதற்கு எரியூட்டுகின்றன. நெருக்கடிக்கு ஒரே முற்போக்கான தீர்வு, கண்டத்தின் உழைக்கும் மக்கட்தொகுப்பு முழுவதும் ஒரு புதிய சோசலிச தலைமையின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் நிறுவனங்களை தூக்கியெறியும் போராட்டத்தில் ஐக்கியப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளை நிறுவுவதில் ஈடுபடுவதுதான்.