சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Europe on the eve of mass working class struggle

பாரிய தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் வாயிலில் ஐரோப்பா

Ulrich Rippert
7 May 2013

use this version to print | Send feedback

ஐரோப்பாவில் சமூக எதிர்புரட்சி தெளிவான வடிவங்களை எடுக்கின்றது. சமீபத்திய அறிக்கைகளின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்  26 மில்லியன் மக்கள் வேலையின்றி இருக்கின்றனர், ஸ்பெயினில் ஆறு மில்லியனாகவும், பிரான்சில் ஐந்து மில்லியனாகவும் இது உள்ளது. ஸ்பெயினிலும் கிரேக்கத்திலும் உத்தியோகபூர்வ வேலையின்மை 27 வீதம் ஆகும். இளைஞர்களிடையே இது கிட்டத்தட்ட 60 வீதத்தை நெருங்குகிறது.

ஜேர்மனியில் உத்தியோகபூர்வ வேலையின்மை 7 வீதம் தான்.  ஆனால் இது ஹார்ட்ஸ் சட்டங்கள் தோற்றுவித்துள்ள பெருகும் குறைவூதிய துறையை எப்போதும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. வேலையில்  இருக்கும் 42 மில்லியன் மக்களில் 29 மில்லியன் மக்கள்தான் சமூக காப்புறுதி உடையவர்களாக இருக்கின்றனர். மற்றவர்கள் எப்பொழுதும் பறிபோய்விடக்கூடிய வேலைகளில் உள்ளனர், 4 மில்லியன் மக்கள் மணித்தியாலம் ஒன்றிற்கு 7 யூரோக்களுக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.

இன்று ஐரோப்பாவிற்குள் இருக்கும் பிளவுகள் பேர்லின் சுவர் மற்றும்இரும்புத்திரை காலத்தில் இருந்ததைவிட இன்னும் ஆழ்ந்த தன்மையில் உள்ளன. செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே எப்பொழுதும் அதிகரிக்கும் பிளவு(வானது) கண்டம் முழுவதும் ஏற்பட்டுள்ளது. தங்களின் வாடகையைக் கொடுக்க முடியாதவர்கள், கல்விச் செலவை ஏற்க முடியாதவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டு செல்கிறது; ஆனால் ஒரு சிறிய, கீழ்த்தரமான செல்வக் குவிப்புடையவர்கள் தங்கள் விருப்பத்தை சமூகத்தின் மீது சுமத்துகின்றனர்.

ஒரு குற்றம்மிக்க நிதிய உயரடுக்கு கொள்கைகளை தீர்மானிக்கிறது. வரிசெலுத்துவோரின் பணமான மொத்த 1.6 டிரில்லியன் யூரோக்கள், பாதிக்கப்பட்டிருக்கும் வங்கிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. இதனால்  அரச கடன், பெரும் சமூகநலத் திட்டங்களான கல்வி மற்றும் ஓய்வூதிய நிதி ஒதுக்கீடுகளை துடைத்தழிக்கும் வெட்டுக்கள் என்னும் முறையில் மக்களின் இழப்பில் தீர்க்கப்படுகிறது.

1930களுக்குப் பின் மிகப் பாரிய பொருளாதார நெருக்கடி என்னும் பின்னணியில், ஐரோப்பிய ஒன்றியம் அதன் உண்மை முகத்தைக் காட்டுகிறது. நடைமுறை அரசியல் கட்சிகளின் பிரச்சாரகர்கள் கூறுவது போல் இது ஒன்றும்ஐரோப்பிய ஐக்கியத்தின்உருவகம் அல்ல, மாறாக ஐரோப்பா மீது நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரமாகும். ஆரம்பத்தில் முனைந்தமாதிரி, இது ஒன்றும் ஐரோப்பிய கூட்டிணைவிற்குள் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தை ஒருங்கிணைத்துக் கட்டுப்படுத்தவில்லைமாறாக நேரடியாகவும், வெளிப்படையாகவும் மிகப் பெரியதும் சக்திவாய்ந்ததுமான வங்கிகள், பெருநிறுவனங்கள் இவற்றின் கருவியாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளில் பெரும்பாலானவை ஜேர்மனியை அடித்தளமாக கொண்டவை.

யூரோ நாணயத்தையும் ஐரோப்பிய மத்திய வங்கியையும் (ECB)  ஜேர்மனிய அரசாங்கம் ஜேர்மனிக்குள் நேரடி மூலதனப் பாய்விற்குப் பயன்படுத்துவதுடன், ஐரோப்பாவில் இருக்கும் பலவீனமான நாடுகளைக் கொள்ளையடித்து, அவற்றின் மீது ஆதிக்கத்தையும் செலுத்துகின்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை அது இராஜிநாமா செய்யக் கட்டாயப்படுத்தி, அவற்றிற்கு பதிலாக தன் விருப்பப்படி தொழில் வல்லுனர்களைக் கொண்ட அரசாங்கங்களை நாடுகளில் அமைக்கிறது. பாராளுமன்ற முடிவுகளை அது ஒதுக்கி, சட்ட விதிமுறைகளையும் மீறுகின்றது.

பிரஸ்ஸல்ஸ் மற்றும் பேர்லினில் இருந்து வரும் கட்டளைகள் சமூகநலத் திட்டங்களை அழித்துவிட்டதுடன், மில்லியன் கணக்கான ஓய்வூதியம் பெறுவோரை அவர்கள் கடினமாக சேர்த்த சேமிப்புக்களை இழக்கச் செய்துவிட்டதுடன், கணக்கிலடங்கா குடும்பங்களை வறுமையிலும், இழிந்த நிலைக்கும் தள்ளிவிட்டன. 70 ஆண்டுகளுக்கு முன்பு நாஜிக்களும் வேஹ்ர்மாக்ட்டுக்களும் (ஜேர்மன் இராணுவம்) ஐரோப்பாவை பாரிய ஏழ்மையிலும் துன்பத்திலும் தள்ளின. இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின்முக்கூட்டும்ஜேர்மன் வங்கியும் அந்த வேலையை செய்கின்றன.

இச்சூழ்நிலையில் சமூகப் பதட்டங்கள் உக்கிரமடைந்துள்ளன. அதிருப்தியும், சீற்றமும் விரைவாக வளர்ந்து வருகின்றன. சமூகத் தாக்குதல்களுக்கு முடிவில்லாத தன்மையைக் காண்கையில், மக்களின் பரந்த அடுக்குகள் பொருளாதாரச் செயற்பாடுகள் மீதான நம்பகத்தன்மையிலும், முதலாளித்துவத்தின் அறநெறியின் பெறுமதியின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டனர். இப்பொழுது முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் வெளிப்படையாகவே ஐரோப்பாதீப்பிழம்பாகிவிடஇன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என விவாதிக்கின்றன.

கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில், தொழிற்சங்கங்களும் போலி இடது அமைப்புக்களும் பரந்த எதிர்ப்புக்களை ஒரு நாள் பொது வேலைநிறுத்தங்கள் எதிர்ப்புக்கள் என்பவற்றில் சீரழித்து, இவற்றின் மூலம் அணிதிரள்வுகள் பயனற்றவையாக போய்விடுவதை உறுதிப்படுத்துகின்றன, ஒருபோதும் பதவியில் இருக்கும் அரசாங்கங்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தை சவால் செய்வதில்லை.

ஐரோப்பாவின் உத்தியோகபூர்வ அரசியல் வாழ்வில்; தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வேலையற்றோர், ஓய்வூதியம் பெறுவோர் எத்தகைய வெளிப்பாட்டையும் காணவில்லை. ஆனால் மேற்பரப்பிற்குக் கீழே பாரிய சமூக மற்றும் அரசியல் புயல் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதை எதிர்கொள்கையில் அரசியல் கட்சிகள் தங்கள் வேற்றுமையை மறந்து ஒன்றாகச் செயல்படுகின்றன. அவை தங்களை கன்சர்வேடிவ், லிபரல், சமூக ஜனநாயகம், பசுமை அல்லது இடது என எப்படி அழைத்துக் கொண்டாலும், அனைத்து நடைமுறையிலுள்ள கட்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன உந்துதலுக்கு ஆதரவு கொடுத்து, மக்கள் எதிர்ப்பை வலதுசாரி, பேரினவாத திசைகளில் திருப்ப முயல்கின்றன.

தொழிற்சங்கங்கள் தம்மை மேலும் வெளிப்படையாக அரச அமைப்புகளுடன் ஒருங்கிணைத்துக் கொள்கின்றன. தங்களுடைய ஆளும் வர்க்கத்தின் தேசிய நலனை அவை பாதுகாத்து, வணிக ஒப்பந்தக்காரர்கள் போல் செயற்பட்டு பரந்த வேலை நீக்கங்கள் மற்றும் ஊதியங்கள், நலன்களில் வெட்டுக்களுக்கு உதவுகின்றன.

GM-Opel இல் IG Metall தொழிற் சங்கம் எவ்விதமான எதிர்ப்பையும் நசுக்கி, போஹும் தொழிற்சாலையை மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜேர்மனிய கார்த்தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதல் தடவையாக மூடப்படுவதற்கான பெருந்திட்டம் IG Metall தொழிற்சங்க தலைமையகத்தில்தான் உருவாக்கப்பட்டது. அதன் பின் தொழிற்சங்கம் அதைச் செயல்படுத்த உழைத்து, போஹும் தவிர அனைத்து ஜேர்மனிய ஓப்பல் ஆலையிலும் அதனை மூடுவதற்கான  ஒப்புதலைப் பெற்றது.

போஹும் தொழிலாளர்கள் திட்டமிட்டு IG Metall தொழிற்சங்கத்தால் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். ஆலையில் உள்ள தொழிற்சங்க அதிகாரிகள், தொழிற்சாலையின் காவலாளிகள் போல் பணிபுரிந்து தொழிலாளர் பிரிவின் எத்தகைய சுயாதீன இயக்கத்தையும் நெரிக்கின்றனர்.

ஜேர்மனியின் பொதுத்துறைப் பணித் தொழிற்சங்கம் வேர்டி (Verdi) இதேபோன்ற போக்கைத்தான் Lufthansa வில் தொடர்கிறது. ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ இரும்புப் பிடியில் இருந்து முறித்துக் கொள்ள முயன்று வருகின்றனர்.

ஆளும் வர்க்கம் பெருகிவரும் சமூக அழுத்தங்களை அது 80 ஆண்டுகளுக்கு முன்பு செய்தது போல் செயல்பட்டு எதிர்கொள்கிறது, ஜனநாகய உரிமைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன, உள்நாட்டில் அரச அமைப்புகளும், வெளிநாடுகளில் இராணுவவாதமும் வலுப்படுத்தப்படுகின்றது. ஜனநாயகத் தேர்தல்கள் அர்த்தமற்ற கேலிக்கூத்தாக சீரழிந்துவிட்டன.

வாக்காளர்களின் விருப்பம் எப்படி இருந்தபோதிலும்கூட, அரசாங்கத்தின் கொள்கை நிதியச் சந்தைகளாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. பெப்ருவரி மாதம், இத்தாலியின் வாக்காளர்கள் மோன்டி அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளை பெரிதும் நிராகரித்தனர்; ஆனால் இரண்டு மாதகாலம் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின் நடந்த பேரம்பேசல்களை தொடர்ந்து, ஒரு பெரும் கூட்டணி அரசாங்கம், முந்தைய போக்கை துல்லியமாகத் தொடர்வதற்கே உறுதி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில், செப்டம்பர் மாதத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் வணிக நலன்கள்தான் அடுத்த அரசாங்கத்தின் கொள்கையை தீர்மானிக்கும்.

ஐரோப்பா முழுவதும் அரச எந்திரங்கள் வலுப்படுத்தப்படுவதுடன், அரச கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜேர்மனியில் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம், பொலிஸ், உளவுத்துறைப் பிரிவுகள் தனித்தியங்குவதைப் பெரிதும் அகற்றிவிட்டு, நாட்டின் எல்லைக்குள் இராணுவம் போர் முயற்சிகளில் ஈடுபடுவதையும் நெறிப்படுத்திவிட்டது. இதன் அடையாள மாதிரி அமெரிக்காதான்; அங்கு செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின் அரசாங்கம் சக்தி வாய்ந்த உளவு, பொலிஸ் கருவியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை என்ற பெயரில் கட்டமைத்துள்ளது.

முதலாளித்துவ ஒழுங்கமைப்பை பாதுகாத்தல், தொழிலாளர்களை அரசியல்ரீதியாக அடக்குதல் என்னும் குறிப்பான தீய பங்கை இடதுகட்சிகள் எனக் கூறப்படுபவற்றாலும், அவற்றின் போலி இடது ஆதரவாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிரேக்கத்தின் சிரிசா, பிரான்சில் இடது கட்சி, இத்தாலியில் கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷன், ஜேர்மனியில் இடது கட்சி ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.

இவை அனைத்தும், ஐரோப்பாவில் உள்ள மிக முக்கிய எதிர்ப்புரட்சிக்கான கருவியான ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாக்கின்றன. இக்கட்சிகள் அரசாங்கத்தில் இடம் பெற்றவுடன், அவை செலவுகளைக் குறைத்து அரச எந்திரத்தை வலுப்படுத்துகின்றன.

பேர்லின் செனட்டில் சமூக ஜனநாயகக் கட்சி பத்து ஆண்டுகால ஆட்சி நடத்துகையில், அதனுடன் இணைந்த இடது கட்சிதான் பாரிய சமூகநலத் தாக்குதல்களுக்கு பொறுப்பு என்பது மட்டுமின்றி, மாநிலத்தின் பொலிஸ் சட்டத்தை வலுப்படுத்துவதற்கும் பொறுப்பு கொண்டிருந்தது. பிரண்டென்பேர்க் மாநிலத்தில், இடது கட்சி மூன்று ஆண்டுகாலமாக நிதிமந்திரிப் பொறுப்பை கொண்டிருக்கையில், அது சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதிலும் 8,000 பொதுத்துறை வேலைகளை இல்லாதொழித்ததிலும் முக்கிய பங்கை கொண்டிருந்தது.

இக்கட்சிகளின் பிற்போக்குத்தன கொள்கைகளுக்கு ஆழமான புறநிலை வேர்கள் உள்ளன. அவை சமூகத்தின் செல்வம் படைத்த தட்டின் நலன்களுக்காக வாதிடுகின்றன. அவைதான் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலில் இருந்து பயனடைந்து, அதன் சுரண்டும் தன்மையையும் தீவிரப்படுத்தியதால் பொருளாதாய ரீதியாக  இலாபமடைந்தது. இவை இடதுமுத்திரை பதித்திருந்தபோலும், அவை தொழிலாள வர்க்கத்தின் மீது விரோதப் போக்கைக் காட்டும் வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகள்தாம்.

ஜேர்மனிக்கான மாற்றீடு (Alternative for Germany) என்னும் கட்சியின் பிற்போக்குத்தனமான தேசியவாத யூரோ எதிர்ப்பு போக்கிற்கு அடிபணிவதன் மூலம் இடது கட்சித் தலைவர்கள் ஒஸ்கார் லா பொன்டைன், சாரா வாகென்கெனெக்ட் போன்றவர்கள் இந்த இரு அமைப்புக்களுக்கு இடையிலான அரசியல் உறவைத் தெளிவுபடுத்துகின்றனர்.

மிகத்தீவிர சமூக அரசியல் நெருக்கடி உள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமை கட்டமைக்கப்படுவது உடனடி அவசரத்தேவையாகிறது. இந்தப் பணியை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்ட அஸ்திவாரங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும். இதுதான் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளின் வேலைத்திட்டத்திற்கான போராட்டம் என்பதின் மையத்தில் உள்ளது.