சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The 15,000 Dow

டோவ் ஜோன்ஸ் பங்குச் சந்தையின் சராசரிக்குறியீடு 15,000

Barry Grey
9 May 2013

use this version to print | Send feedback

செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஒரு புதிய மைல்கல் வெற்றியைக் கொண்டாடியது. டோவ்  ஜோன்ஸ் தொழிற்துறை சராசரி குறியீடு (Dow Jones Industrial Average) இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்ததை விட கிட்டத்தட்ட 15 சதவிகிதம் உயர்ந்து, 15,000 புள்ளிகள் மட்டத்தைக் கடந்து ஒரு  அடையாளக் குறியீடாக ஒரு கிறுகிறுக்க வைக்கும் மற்றொரு உயர்ந்த பதிவினை செய்தது.

செப்டம்பர் 2008இல் நிதியச் சரிவில் ஏற்பட்ட அனைத்து இழப்புக்களையும் மீட்டு 15,000 என்னும் மட்டத்தை அடையும் திறன் இரண்டு மாதத்திற்குள் டோவிற்கு ஏற்பட்டுவிட்டது. 14,000 புள்ளி மட்டத்திலிருந்து 66 நாட்களுக்குள் அது 1,000 புள்ளிளால் உயர்ந்தது.

ஸ்டாண்டர்ட் & பூவரின் 500 பங்குக் குறியீடும் ஜனவரி மாதத்திலிருந்து 199 புள்ளிகளை அதிகரிப்பாக அடைந்த அளவில், புதிய உயர் பதிவை செவ்வாய்கிழமையன்று அடைந்தது. நஸ்டாக் கூட்டுக் குறியீடும் அதனுடைய மிக உயர்ந்த அளவாக நவம்பர் 2000க்குப் பின்னர் என்ற நிலையை அடைந்தது. இப்படி பித்து வெறிபோல் அமெரிக்கப் பங்குகளின் ஏற்றம் உலகளாவிய நிகழ்வின் ஒரு பாகமாகும். FTSE All-World பங்குக் குறியீடு செவ்வாயன்று ஜூன் 2008க்குப் பின் மிக உயர்ந்த மட்டத்தை அடைந்தது.

தற்போதைய பங்குச் சந்தைகளின் வெடிப்பு இரண்டு அடிப்படைப் போக்குகளை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, பெருநிறுவன-நிதிய உயரடுக்கு செல்வத்தை குவிப்பதன் வழிவகைக்கும், பொருட்களை உற்பத்தி செய்வதின் மூலமும் உண்மை மதிப்பு ஏற்படுத்தப்படுவதற்கும் இடையேயுள்ள தொடர்பற்ற நிலையானது முன்னோடியில்லாத அளவிற்கு உயர்ந்துவிட்டது. ஒரு நிதியப் பிரபுத்துவம் தனது கைகளில் முற்றிலும் நிதிய ஊகம் மற்றும் தந்திரசூழ்ச்சிகளை அடித்தளமாகக் கொண்டு இழிந்தளவிலான தனிப்பட்ட சொத்துக் குவிப்பதில்  தன் கவனத்தை  காட்டுகையில் உண்மைப் பொருளாதாரம் தொடர்ந்து தேக்கமடைந்து, வீழ்ச்சியடைகின்றது.

பங்கு மற்றும் பத்திரச் சந்தைகளே பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தினதும் மற்றும் சமூகச் செல்வத்தை கீழிருந்து மேலே மாற்றும் மேலதிக வழிமுறையாக இருக்கின்றது.

இரண்டாவதாக, 146 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்ஸ் விளக்கியது போல், சமூகத்தில் ஒரு முனையில் செல்வத்தைக் குவித்தலையும், மறுமுனையில் வறுமை, துன்பம், சீரழிவு ஆகியவற்றை ஏற்படுத்துவது என்ற முதலாளித்துவத்தின் அடிப்படை உந்துதலானது கிட்டத்தட்ட தடையேதும் இன்றி செயல்பட்டு வருகிறது. தற்போதைய பங்குச் சந்தை ஏற்றமானது வர்க்க அழுத்தங்களாக வெடிப்புத்தன்மை பெறக்கூடிய தீவிரத்தன்மையை பிரதிபலிக்கிறது.

1930களின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு நடுவே டோவ் 8,500 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து, மார்ச் 9, 2009ல் மிக அடிமட்டநிலையில் இருந்ததிலிருந்து இப்போது 130 சதவிகிதம் கிட்டத்தட்ட உயர்ந்துவிட்டது. அந்த மூன்று ஆண்டுகளும் இரண்டு மாத காலமும் மனிதகுலத்தின் பெரும்பான்மையினருக்கு தடையற்ற பேரழிவுக் காலம் ஆகும்; இதில் அமெரிக்காவில் பெரும்பாலான உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளும் அடங்கும்.

அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் பங்குகள் அவற்றின் வெறித்தன ஏற்றத்தை அடைகையில் இந்தச் சமூகப் பேரழிவு இந்த ஆண்டு இன்னும் மோசமாகிவிட்டது.  பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைகளைத் தோற்றுவித்தல் என்பது அமெரிக்காவில் ஏற்கனவே மிக நலிவடைந்த நிலையில் இருந்து இன்னமும் குறைந்துவிட்டது. இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் நிரந்தர வேலையின்மை அல்லது அடிமை உழைப்பு வேலைகளை வறுமை மட்ட ஊதியங்களில் ஏற்க வேண்டியுள்ளது.

ஐரோப்பாவில், ஏற்கனவே போருக்குப் பின் அதிகளவில் இருக்கும் வேலையின்மையானது தொடர்ந்து 1930களுக்குப் பின் காணப்படாத அளவிற்கு உயர்கிறது. கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதாரம் சுருக்கத்தை அடைந்துள்ள நிலையில், கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் இது உத்தியோகபூர்வமாக 27 சதவிகிதமாக உள்ளது. இளைஞர்களின் வேலையின்மை 60 சதவிகிதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவிலும் இன்னும் பிறவளர்ச்சி அடையும்நாடுகளிலும் அவற்றின் அரசாங்கங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாலும் மற்றும் மேற்கு நாடுகளுக்கான ஏற்றுமதிகளின் ஆழ்ந்த சரிவினாலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுவிட்டது.

வறுமை, வீடின்மை, பசி, விரக்தி ஆகியவற்றுடன் இணைந்த சமூக சமத்துவமின்மையின் அதிர்ச்சி தரும் வளர்ச்சியானது வெகுஜனங்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் பெருநிறுவன இலாபங்கள், தலைமை நிர்வாக அதிகாரிகளுடைய ஊதியங்கள் மற்றும் செல்வந்தர்களுடைய பங்குத் தொகுப்புக்கள் ஆகியவை இன்னும் உயர்ந்து செல்லுகின்றன. இது உலகெங்கிலும் அரசாங்கங்களால் நடத்தப்படும் மிருகத்தனமான வர்க்கப் போர் கொள்கைகளின் விளைவாகும்.

இக்கொள்கைகளுக்கு இரு பக்கங்கள் உள்ளன: இரக்கமற்ற வரவு-செலவுத்திட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஊதியக் குறைப்புக்களையும் கொண்டுள்ளதோடு, மற்றும் மத்திய வங்கிகள் சந்தைகளில் நிதிய உயரடுக்கின் நலன்களுக்காக டிரில்லியன் கணக்கான டாலர்களை உட்செலுத்துதல் என்பவையாகும். இந்த ஆண்டு ஒபாமா நிர்வாகம் 85 பில்லியன் டொலர்களைசெலவுகளை குறைக்கும்வெட்டுக்கள் என அழைக்கப்படுவதில் செயல்படுத்தப்படுவதை மேற்பார்வையிட்டுள்ளது. இதில் நீண்ட கால வேலையற்றோருக்கான நலன்களில் வெட்டுக்களும் அடங்கும். இவை 1930களில் இருந்து 1960கள் வரை சமூகநலத் திட்டங்களில் தளங்களைக் கொண்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்புப் பிரிவுகளில் வரலாற்றுத்தன்மை வாய்ந்த முதல் தவணை மாதிரியான வெட்டுத்தான்.

அதே நேரத்தில் கருவூலப் பத்திரங்களையும் அடைமான ஆதரவுடைய பத்திரங்களையும் வாங்குவதற்கு மத்திய வங்கிக்கைட்டமைப்பு (பெடரல் ரிசர்வ்) ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் டாலர்களை அச்சடிக்கிறது. அத்துடன் வட்டி விகிதங்களையும் கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில் வைத்துள்ளது. இதேபோன்ற நடவடிக்கைகள் இப்பொழுது ஐரோப்பிய மத்திய வங்கி, பாங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பாங்க் ஆப் ஜப்பான் ஆகியவற்றாலும் பின்பற்றப்படுகின்றன. இக்கொள்கை ஊக நிதிகளைப் பங்குச் சந்தைகளில் செலுத்தும் நோக்கத்தை உடையவையும், பங்கு விலைகளை அதிகரிக்கச் செய்பவையுமாகும். இதனால் செல்வந்தர்களும், மிகப் பெரிய செல்வந்தர்களுக்குப் பாரிய இலாபங்கள் உத்தரவாதம் செய்யப்படுகின்றன; அவர்கள்தான் இத்தகைய சொத்துக்களில் பெரும் பகுதியைக் கொண்டுள்ளனர்.

வோல் ஸ்ட்ரீட் சரிவில் இருந்து அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தொடரும் அடிப்படைக் கொள்கையின் தொடர்ச்சியும், தீவிரப்படுத்துதலும்தான் இது. அவை தங்கள் முயற்சிகள் அனைத்தையும் ஆளும் வர்க்கங்களின் செல்வத்தைப் பாதுகாப்பதில் கவனத்தை காட்டுவதுடன் மற்றும் இவர்களுடைய பொறுப்பற்ற தன்மை, பேராசையினால் விளைந்த பொருளாதாரக் கரைப்பில் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் இப்பொழுது பலமடங்கிற்கும் அதிகமாக ஈடுசெய்யப்பட்டுவிட்டன.

அரசாங்க கருவூலங்கள் வங்கிகளின் செலுத்தமுடியாத கடன்களைக் கொடுக்கப் சூறையாடப்பட்டன. ஏராளமான பணநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் சமூகநலத் திட்டங்களின் மீதான தாக்குதல்கள் இதன் விலையை தொழிலாள வர்க்கம் கொடுக்க வேண்டும் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டன. தற்போதைய வோல் ஸ்ட்ரீட் ஏற்றம் இன்றுவரை இத்திட்டமான சமூக எதிர்ப்புரட்சியின் நிகழ்போக்கை பிரதிபலிக்கிறது. உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் எதிர்த்துப் போராட முயல்கின்றன. ஆனால் அது தடைக்குட்பட்டு தொழிற்சங்கங்களால் சேதங்களுக்கும் உட்படுகிறது. தொழிற்சங்கங்கள் தங்களால் இயன்ற அளவிற்கு எதிர்ப்பைக் கரைத்து, அது சுயாதீன, புரட்சிகர வடிவம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. தொழிற்சங்கங்கள் பல போலி இடது அமைப்புக்களின் உதவியை பெறுவதுடன், அவை தொழிலாளர்கள் வலதுசாரி பெருநிறுவன அமைப்புகளின் பொறிக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கோருகின்றன.

ஆனால் பரபரப்பான முறையில் பங்குகளின் விலைகள் உயர்வது அதன் வழியில், நெருக்கடியின் இந்தக் கட்டம் ஒரு முடிவிற்கு வருகிறது என்பதற்கு அடையாளமாகும். ஊதி வீக்கப்படுத்தப்பட்டுள்ள நிதியக் குமிழி நிலைத்திருக்க முடியாது. டாட்.காம் குமிழி 1999-2000, பிணையற்ற வீட்டுஅடைமான குமிழியாக 2008 ல் வெடித்தது போன்ற முந்தைய குமிழிகளைப் போலவே  இந்த பாரிய குமிழி வெடித்தே தீரவேண்டும். இதனால்  ஒரு புதிய, இன்னும் பேரழிவு தரும் நிதிய நெருக்கடி தோற்றுவிக்கப்படும்.

இம்முறை இது தனிப்பட்ட பெருநிறுவனங்கள் அல்லது வங்கிகள் அல்லது தனிப்பட்ட இறைமை பெற்ற நாடுகள் சரிவை எதிர்கொள்ளவில்லை, மாறாக ஆளும் உயரடுக்கானது சமூகத்தைக் கொள்ளையடிக்க வசதியளிக்கும் பெறுமதியற்ற  டாலர்கள், பவுண்டுகள், யூரோக்கள், யென் என்பவற்றை அச்சடிக்கும் மத்திய வங்கிகள் சரிவடையும். இந்த வழிமுறையூடாக அவை உலக நாணய முறைக்கு குழிபறித்துள்ளதுடன், ஒரு தொடர் எதிர்விளைவுகளையும் உண்மையான பொருளாதாரத்தில் இன்னும் சரிவுக்கு ஏற்படுத்தும் வணிகப் போர்களுக்கு இட்டுச்செல்லும்.

தொழிலாள வர்க்க எதிர்ப்பும் சீற்றமும் இன்னும் தீவிரமாகியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுக் காலமான பரந்துபட்டமக்களுக்கான மந்தநிலையும் பெருநிறுவன உயரடுக்குகளுக்கு மிகப் பெரிய இலாபங்கள் என்ற நிலை வீணே போய்விடவில்லை. முழு அமைப்புமுறையும் பொருளாதார அளவில் நீடிக்காது, அதேபோல் இது இயல்பாகவே அநீதியானது, அறநெறிப்படி பாதுகாக்க இயலாதது என்ற பெருகிய உணர்வு உள்ளது. அதாவது முதலாளித்துவம் தோற்றுவிட்டது, அது பதிலீடு செய்யப்பட வேண்டும் என்னும் உணர்வு வந்துள்ளது.

தொழிற்சங்கங்கள், வலதுசாரிதொழிலாளர்கள்மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகள், மத்தியதர வர்க்க உயரடுக்கை சேர்ந்த இவைகளை ஆதரிக்கும் போலி இடது அமைப்புக்களான கிரேக்கத்தில் சிரிசா, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, ஜேர்மனியில் இடது கட்சி, பிரித்தானியாவில் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி, அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு போன்றவைகளானது ஆளும் வர்க்கத்தின் முகவர் அமைப்புக்களாக இருப்பது அம்பலப்படுத்தப்பட்டு, தொழிலாளர்களின் பார்வையில் மதிப்பிழந்து விட்டன.
 

முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைமுறிவு என்னும் இந்த வரலாற்றுக் காலகட்டத்திலிருந்து ஒரு புதிய சமூகப் புரட்சிக் காலகட்டம் தோன்றுகிறது. தற்போதைய அவசர பணி சோசலிசச் சமத்துவக் கட்சியைக் கட்டமைப்பதாகும். இது, தொழிலாள வர்க்கத்திற்குப் புதிய தலைமையை கொடுத்து வரவிருக்கும் போராட்டங்களுக்கு ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் அவர்களை ஆயுதபாணியாக்கும்.

அதனுடைய குறிக்கோள் வோல் ஸ்ட்ரீட்டைஆக்கிரமிப்பதுஅல்ல. அது இழுத்து மூடப்பட வேண்டும், அதன் பரந்த வளங்கள், பெரும் சூதாட்ட  செயல்களுக்கு வீணாக்கப்படும் பணம் சமூகத் தேவைகளை நிறைவு செய்ய பயன்படுத்த எடுக்கப்பட வேண்டும். வங்கிகளும் பெருநிறுவனங்களும் தனியார் கைகளில் இருந்து அகற்றப்பட்டு, சமூகத்தின் நலனுக்காக ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும்.