சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds May Day meeting

இலங்கை சோசலிச சமத்துவ கட்சி மே தின கூட்டத்தை நடத்தியது

By our correspondents
9 May 2013

use this version to print | Send feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் மே 1 அன்று கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளையில் உள்ள எஸ்.டி.எஸ். ஜயசிங்க மண்டபத்தில் பரந்த வருகையுடன் ஒரு பொது கூட்டத்தை நடத்தின. கொழும்பு, மலையகத் தோட்டப் புறங்கள் மற்றும் வடக்கில் யாழ்ப்பாண குடாநாடு உட்பட தீவின் பல பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்நிபுணர்களும் சர்வதேச தொழிலாளர் தினத்தை குறிக்க இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


கொழும்பு மேதினக் கூட்டத்தின் ஒரு பகுதியினர்

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழுவினதும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவினதும் உறுப்பினரான கே. ரட்னாயக்க, "அமெரிக்க ஏகாதிபத்திய போர் முயற்சியை தோற்கடிக்க சர்வதேச சோசலிசத்திற்காகப் போராடுவோம்" என்ற கூட்டத்தின் தலைப்புக்கும், ஏகாதிபத்தியத்தையும் நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையையும் பாதுகாக்க அர்ப்பணித்துக்கொண்டுள்ள பல்வேறு போலி இடது மற்றும் தேசியவாத கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டங்கள் அனைத்துக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் விலானி பீரிஸ் உரையாற்றும் போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பின் பின்னர், இப்போது சிரியாவில் தலையீடு செய்வதுடன் ஈரானை அச்சுறுத்திவரும் அதேவேளை, சீனாவிற்கு எதிராக யுத்தத்துக்குத் தயார் செய்கின்றது என்று விளக்கினார். சோசலிச சமத்துவக் கட்சி, 1940களில் இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வீரம் மிக்க போராட்டத்தை நடத்திய ட்ரொட்ஸ்கிச நான்காம் அகிலத்தின் தெற்காசியப் பகுதியான, இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் பாரம்பரியத்தில் காலூன்றிக்கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார்.

தமிழில் உரையாற்றிய சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, கடந்த மாதம் தோட்டத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் முதுகுக்கு பின்னால், தோட்ட நிறுவனங்களுடன் ஒரு பிற்போக்குத்தனமான புதிய சம்பள ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன என்று சுட்டிக்காட்டினார். அவர் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தும் சாக்கில், ஏகாதிபத்திய சக்திகளதும் இந்திய முதலாளித்துவத்தினதும் தலையீட்டை பெறமுயலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட நாட்டின் வடக்கில் உள்ள தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் பாத்திரத்தையும் அம்பலப்படுத்தினார்.

சமூக சமத்துவத்துக்கான இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் அழைப்பாளர் கபில பெர்னான்டோ, இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறித்து விளக்கினார். அண்மையில் வெளியான உலக வங்கி அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், 20-25 வயதானவர்களின் உத்தியோகபூர்வ வேலையின்மை 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார். பெண்கள் எண்ணிக்கை 17.5 சதவீதமாகும். மாணவர்களில் செலவில் கல்வியை தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சி பற்றியும் பெர்னாண்டோ பேசினார். "சர்வதேச அளவில், கல்வி பெருகிய முறையில் இலாபம் பெரும் தொழிலாக மாற்றப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை அதற்கு விதிவிலக்கல்ல. அரசாங்கம் மற்றும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும், கல்வி சந்தையை தகவமைவுப்படுத்தி இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்," என்று அவர் விளக்கினார்.

இறுதி பேச்சாளரான சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான விஜே டயஸ் தெரிவித்ததாவது: "அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏற்கனவே ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா போன்ற பல நாடுகளில் உக்கிரமான இராணுவத் தலையீடுகளை முன்னெடுத்துள்ளது. இப்போது இயற்கை வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் அதன் நாட்டத்தின் பகுதியாக, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதை ஒத்த தலையீடுகள் மூலம் சிரியா, ஈரான் மற்றும் வட கொரியாவை அச்சுறுத்துகின்றது. ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் மையங்கொள்ளல் என்ற கொள்கையை பிரகடனப்படுத்தியதுடன் இலங்கை உட்பட இந்த பிராந்தியம், மேலோங்கும் போர் பதட்டத்தின் மத்தியில் சிக்கியுள்ளது. பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் தேசிய முதலாளித்துவத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஏகாதிபத்திய நகரவை எதிர்க்க, ஒரு மாற்றீட்டுடன்அனைத்துலக சோசலிச வேலைத் திட்டத்துடன் தொழிலாள வர்க்கம் தயாராக வேண்டும்."

இலங்கை தொழிலாள வர்க்கமும் ஏழைகளும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு போராட்ட காலத்துக்குள் நுழைந்துள்ளனர் என்று டயஸ் விளக்கினார். அவர், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக, உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பல்வேறு போராட்டங்களை பற்றி ஒரு மதிப்பீட்டை கொடுத்தார். "தாங்க முடியாத மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்களோடு, தங்கள் உற்பத்திகளுக்கு நல்ல விலை கோரி, காய்கறி விவசாயிகள் ஆர்ப்பாட்டங்கள் செய்கின்றனர். நாட்டின் வடக்கில் தமிழ் மக்கள் இராணுவத்தால் தங்கள் நிலங்கள் கைப்பற்றப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் அதேவேளை, மாணவர்கள் கல்வி வெட்டுக்களுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றனர்,” என அவர் தெரிவித்தார்.

நவ சமசமாஜக் கட்சி போன்ற பல்வேறு போலி இடது கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் பிற்போக்கு அரசியலை டயஸ் அம்பலப்படுத்தினார்.  கிரேக்கம், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் எல்லா இடங்களிலும் உள்ள அவர்களுடைய சமதரப்பினரைப் போன்றே, அவர்களது பாத்திரமும் தொழிலாள வர்க்கத்தின் முன் எழுந்துள்ள முக்கியமான அரசியல் பிரச்சினையை மூடி மறைப்பதே ஆகும்: அதாவது அழுகிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பு முறையை தூக்கியெறியும் வரலாற்றுத் தேவையை மூடிமறைப்பதே ஆகும்," என்று அவர் கூறினார். முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களாக, "இடதுகள்" மற்றும் தொழிற்சங்கங்கள் நவ காலனித்துவ ஆக்கிரமிப்பை நோக்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இழுத்துச் செல்லும் உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியை மூடி மறைக்க அவர்கள் அர்ப்பணித்துக்கொண்டுள்ளனர், என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள போலி இடதுகள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது, இராஜபக்ஷவின் அரசாங்கம் செய்த குற்றங்களை பயன்படுத்திக்கொள்ள பாசாங்குத்தனமாக அமெரிக்கா எடுக்கும் முயற்சிக்கு பின்னால் அணிதிரண்டுள்ளனர், என்று சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விளக்கினார். இந்த பிரச்சாரம், இராஜபக்ஷவை பெய்ஜிங்கில் இருந்து தூர விலகியிருக்கவும் மற்றும் மாறாக சீனாவிற்கு எதிரான அமெரிக்கவின் ஆசியாவில்  மையங்கொள்ளல்கொள்கையுடன் இணைந்து கொள்ளவும் அழுத்தம் கொடுக்க உருவாக்கப்பட்டதே ஆகும்.


Wije Dias

இந்த ஏகாதிபத்திய சார்பு கொள்கையின் வழியில், நவ சமசமாஜக் கட்சியானது பாரம்பரிய வலதுசாரி முதலாளித்துவ யூ.என்.பி. [ஐக்கிய தேசியக் கட்சி] உடன் ஒரு பிற்போக்கு கூட்டணியை உருவாக்கிக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டணியை நியாயப்படுத்த, சோசலிசத்துக்கான கோரிக்கை இன்றைக்குப் பொருத்தமானது அல்ல, போராட்டங்கள் ஜனநாயக கோரிக்கைகளுக்காக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நவ சமசமாஜக் கட்சி வாதிடுகிறது. ஐக்கிய சோசலிச கட்சி மற்றும் முன்னணி சோசலிஸ்ட் கட்சியும் முன்னிலைப்படுத்தும் வழியும் இதுவே. யூ.என்.பீ. உடன் அணிசேர்வதன் மூலம் ஜனநாயகத்துக்காகப் போராட முடியும் என்ற நவ சமசமாஜக் கட்சியின் கொள்கையின் கெடுநோக்கான பண்பு, யூ.என்.பீ.யின் சாதனைகளில் இருந்து தெளிவாகின்றது. 1983 ல் ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை தொடக்கியமை, இரண்டாம் உலக போரின் போது, சோசலிஸ்டுகள் மற்றும் போர் எதிர்ப்பு போராளிகளை சிறையில் அடைப்பதில் ஏகாதிபத்தியத்திற்கு உதவியமையும் இவற்றில் அடங்கும்,” என டயஸ் விளக்கினார்.

ஏகாதிபத்திய போர் முயற்சிகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்த அணிதிரட்டப் போராடும் ஒரே இயக்கம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு மட்டுமே என கூறி டயஸ் உரையை முடித்தார். அதன் இலங்கை பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சியின், சர்வதேசிய சோசலிச வேலைத்திட்டத்துக்கு இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் தொழிலாள வர்க்கத்தை மற்றும் இளைஞர்களை வெற்றிகொள்ளப் போராடுகின்றது. தெற்கு ஆசியாவில் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கை விவரித்த டயஸ், சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அந்த போராட்டத்தை அபிவிருத்தி செய்ய உதவ வருமாறு அழைப்பு விடுத்தார்.