சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek teachers defy military mobilisation orders

கிரேக்க ஆசிரியர்கள் இராணுவத்தின் அணிதிரள்வு உத்தரவுகளை மீறுகின்றனர்

By Christoph Dreier 
16 May 2013

use this version to print | Send feedback

கிரேக்கத்தின் ஆசிரியர்கள் அரசாங்கத்தின் அணிதிரள்வு உத்தரவை எதிர்ப்பது என்று வாக்களித்ததுடன், வெள்ளியன்று மாணவர்களின் ஆண்டு தேர்வுக்கால தொடக்கத்தை ஒட்டி வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கவுள்ளனர். அதே நேரத்தில் OLME ஆசிரியர்கள் தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் நடைபெறாமல் என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து கொண்டிருக்கிறது.

செவ்வாய் மாலை சங்கத்தின் பிராந்திய மாநாடுகள் நடைபெற்றன; இவற்றில் 95 சதவிகிதம் சமூகமளித்திருந்தவர்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்காக வாக்களித்திருந்தனர். மாநாட்டில் பங்கு பெற்றவர்கள் எண்ணிக்கை 10,000 முதல் 20,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தில் மொத்தமாக 88,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

மிகப் பெரும்பான்மை வாக்கில் ஆசிரியர்கள், அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளை மீறுவதற்கு ஆதரவு கொடுத்தனர், இது ஆசிரியர்களை இராணுவ சட்டத்தின் கீழ் இருத்துகிறது; அதையொட்டி சிவில் அணிதிரள்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு வரும் கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. வேலைநிறுத்தம் செய்யும் எந்த ஆசிரியரும் இப்பொழுது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பணிநீக்கத்தை எதிர்கொள்வர். கல்வி மந்திரி கான்ஸ்டான்டினோஸ் அர்வனிடோபௌலோஸ் (புதிய ஜனநாயகக் கட்சி-ND) புதனன்று திட்டமிட்டபடி வெள்ளியன்று தேர்வுகள் தொடங்கப்படுவதைத் தான் உறுதி செய்ய முற்பட இருப்பதாகக் கூறினார்.

இப்பொழுது கிரேக்க அரசாங்கம் வேலைநிறுத்தங்கள் குறித்துத் தடைகளை மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. ஜனவரி மாதம் அது இராணுவ சட்ட நடவடிக்கைகளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மெட்ரோ சாரதிகளுக்கு எதிராக அறிமுகப்படுத்தியது; பெப்ருவரி மாதம் அது கடற் தொழிலாளர்கள், பாக்கி ஊதியங்களுக்காக வேலைநிறுத்தம் செய்தவர்களுக்கு எதிராகக் கொண்டுவந்தது. இதுவரை அரசாங்கமானது தொழிற்சங்கங்கள் மற்றும் பொலிசுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வேலைநிறுத்தம் செய்பவர்களை மீண்டும் பணிக்குக் கட்டாயமாக வரச் செய்ய முடிந்துள்ளது.

ADEDY எனப்படும் பொதுப் பணித்துறைத் தொழிற்சங்கக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தையும் பகிரங்கமாக மீறும் முதல் உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் ஆவர்அதுவும் அவர்களுக்கு எதிராக அனைத்து அச்சுறுத்தல்களையும் மீறி. அவர்கள் அரசாங்கத்தின் திட்டமான அவர்களுடைய பணி நேரங்களை இரண்டு மணி நேரம் கூடுதல் ஊதியம் இன்றிக் கூட்டுதல், 10,000 ஆசிரியர்கள் வரை பணிநீக்கம் செய்தல், 4,000 ஆசிரியர்களை தொலைதூரத்தில் பணியில் இருத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள முற்படுகின்றனர்.

ஆசிரியர்கள் காட்டும் உறுதிப்பாடும், மீறும் தன்மையும் கிரேக்கத் தொழிலாளர்களிடையே அரசாங்கத்தின் சிக்கன ஆணைகளுக்கு எதிராக உள்ள பரந்த எதிர்ப்பின் வெளிப்பாடாகும். ஆசிரியர்களுக்கு ஏற்கனே பரந்த ஆதரவு கிடைத்துள்ளது.

தொழிலாளர்களின் பிற குழுக்களும் உத்தியோகத்தர்களும் உத்தியோகபூர்வமாக தங்கள் ஆதரவை அடையாளம் காட்டியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள ஆறு சுற்றுக்கள் சிக்கன நடவடிக்கைகள், கிரேக்கத்தில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த விகிதங்களுக்கு சமூகப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. பசியும் பட்டினியும் தெருக்களுக்கு மீண்டும் வந்துவிட்டன, உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம் 27 சதவிகிதத்திற்கும் அதிகமாகிவிட்டது. பல ஆசிரியர்கள் மாதம் ஒன்றிற்கு 585 யூரோக்களுக்கு மேல் சம்பாதிப்பது இல்லை.

தங்கள் போராட்டத்தில் கிரேக்க ஆசிரியர்கள் அரசாங்கத்தையும் அரசாங்கக் கருவியையும் மட்டும் முகங்கொடுக்கவில்லை; தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது பாதுகாவலர்களையும் எதிர்கொள்கின்றனர்.

ADEDY ஒழுங்குமுறையாக ஆசிரியர்களை தனிமைப்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் சங்கம் பிற பள்ளி ஊழியர்களை வேலைநிறுத்தத்திற்கு அழைக்கக் குரல் கொடுக்க வேண்டும் எனக்கூறியதை அது நிராகரித்துவிட்டது. மாறாக, தொழிற்சங்கக் கூட்டமைப்பு சிறு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, சில அடையாள நடவடிக்கைகளை மட்டும் தங்கள் காட்டிக் கொடுப்பை மறைப்பதற்குச் செய்துள்ளது.

புதனன்று பிராந்திய தொழிற்சங்க ஆசிரியர் அமைப்புக்கள் வாக்கெடுப்பு முடிவுகளை மதிப்பீடு செய்யவும் தங்கள் அடுத்த நடவடிக்கைகளை விவாதிக்கவும் கூடினர். விவாதங்கள் பற்றிய விவரங்கள் இன்னும் பகிரங்கமாக்கப்படவில்லை. பல தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீண்டும் ADEDY ஐயும் தனியார் பிரிவு தொழிற்சங்க கூட்டமைப்பான GSEE  ஐயும் வெள்ளியன்று நடக்கவிருக்கும் தங்கள் வேலைநிறுத்தத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். இத்தகைய பயனற்ற அழைப்புக்கள் ஆசிரியர்களின் முடிவான வேலைநிறுத்தத்தின் மதிப்பைக் குறைக்கும் என நம்புகின்றனர்.

OLME ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தேசிய நிர்வாகக் குழு வேலைநிறுத்தத்திற்கான அதன் உறுப்பினர்களின் வாக்கிற்கு விடையிறுக்கும் வகையில், உடனடியாக அரசாங்கத்துடனும் எதிர்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் வகைகளை விவாதித்தது.

புதனன்று OLME உடைய தலைவர் நிக்கோஸ் பாபஹ்ரிஸ்டோஸ், கன்சர்வேடிவ் ஆளும் கட்சியான ND உடைய பிரதிநிதிகளை சந்தித்தார்; பின் அதன் சமூக ஜனநாயகக் கட்சிப் பங்காளியான PASOK உடைய பிரதிநிதிகளையும் சந்தித்தார். பாபஹ்ரிஸ்டோஸ் இரு கட்சிகளும் OLME  கோரிக்கைகளை கல்வி அமைச்சரகத்திற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்துள்ளன.

பாபஹ்ரிஸ்டோஸ் ஒரு ND உறுப்பினராக ஒரு வாரம் முன்பு அவர் வெளியேற்றப்படும் வரை இருந்தார்; அவருடைய சங்கத்தின் வேலைநிறுத்த அச்சுறுத்தலுக்காக அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் வேலைநிறுத்தத் தடைக்கு முன் அவர் தொழிற்சங்கள் அதன்படி நடக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் சீற்றமிகு ஆசிரியர்களை எதிர்கொள்வதற்காக, அவர் இப்பொழுது பின்பக்க வழியே வேலைநிறுத்தத்தைத் தடுக்க முயல்கிறார்.

ND மற்றும் PASOK ஐச் சந்தித்த பின் அவர் அரசாங்கம் தடையை திரும்பப் பெற்றால் தான் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அணிதிரள்வு உத்தரவு இரத்து செய்யப்பட்டு, வெளிப்படையான உரையாடல் நடத்தப்பட்டால், நாங்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடுகிறோம்என்றார் அவர்.

OLME  உடையவெளிப்படையான உரையாடலுக்குஅழைப்பு என்பதற்கு முக்கிய எதிர்க்கட்சியான சிரிசா (தீவிர இடது கூட்டணி) உடைய ஆதரவு உள்ளது. பாபஹ்ரிஸ்டோஸ், ஏற்கனவே சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸை செவ்வாயன்று சந்தித்தார். வாரத் தொடக்கத்தில் சிரிசாவானது அரசாங்கம் அதன் அணிதிரள்வு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும், OLME  உடன் புதிய பேச்சுக்களை பரீட்சைக்கு பின் நடத்த வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தது. இல்லாவிடின்சட்டம் மற்றும் ஒழுங்குபிரச்சினைகள் இடருக்கு உட்பட்டுவிடும் என்று சிப்ரஸ் கூறினார்.

உண்மையில் ஒருவெளிப்படையான உரையாடல்அரசாங்கத்துடன் என்பது பரீட்சைகளுக்குப் பின் ஆசிரியர்கள் மீது தாக்குதல் என்பதைத் தாமதப்படுத்தத்தான் செய்யும்.

ADEDY, OLME மற்றும் SYRISA  ஆகியவை எதிர்கொண்டுள்ளவிதம் இந்த அமைப்புக்களின் பிற்போக்குத்தன பங்கைத்தான் சித்தரிக்கின்றன. நிதிய உயரடுக்கிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே மோதல்கள் உயருகையில், தொழிற்சங்கங்கங்கள் இன்னும் என்றுமில்லாத வகையில் நெருக்கமாக அரச எந்திரத்திடம் நகர்கின்றன.

தன்னுடைய கட்சியின் வர்க்க நிலைப்பாட்டை ஆசிரியர் அணிதிரள்வு ஆணையைப் பெறும்போது பேசுகையில் சிப்ரஸ் தெளிவுபடுத்தினார். SEV  எனப்படும் ஹெலெனிக் நிறுவனங்களின் கூட்டமைப்பில் திங்களன்று நடத்திய உரையில் அவர்அரசியல் முகாம்களுக்கு இடையே சமரசத்திற்கு அழைப்பு விடுத்து அனைத்துத் தரப்பினரும் நாட்டிற்கும் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.

வேலைநிறுத்த நடவடிக்கைக்கு OLME அழைப்பு விடுத்தாலும், அது ஏற்கனவே ஆசிரியர்களை தனிமைப்படுத்த, வேலைநிறுத்தத்தை கைவிட முதல் வாய்ப்பை நாடும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, தொழிலாளர்கள், இரும்புக் கவசங்கள் போன்ற தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொள்ள வேண்டும்; அதுதான் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தை அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமின்றி அதனுடைய போலி இடது ஆதரவாளர்களிடம் இருந்தும் பரந்த அணிதிரள்விற்கு வழிவகுக்கும்.