சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

வாழ்க்கை நிலைமையை பாதுகாக்கும் போராட்டத்துக்கு சோசலிச வேலைத் திட்டம் அவசியம்

By Socialist Equality Party
20 May 2013

 use this version to print | Send feedback

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், சரவதேச நாணய நிதியத்தின் கட்டளையின்படி மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை மேலும் மேலும் உக்கிரமாக்குகிறது. அண்மையில் நூற்றுக்கு 60 வீதம் வரை மின் கட்டணத்தை அதிகரித்தமை இந்த தொடர் தாக்குதல்களில் கொடூரமானதாகும்.

தொழிலாள வர்க்கத்தினதும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், வர்க்கப் போராட்டம் அரசாங்கத்தை தூக்கி வீசும் சோசலிச வேலைத் திட்டத்தின் பக்கம் திரும்பக்கூடிய சாத்தியம் பற்றி பீதியடைந்துள்ள, அரசாங்கத்துக்கு அடிவருடும் தொழிற்சங்கங்களும் போலி இடதுசாரி மற்றும் போலி தீவிரவாத அமைப்புகளும், எதிர்ப்பு இயக்கங்கள் மூலம் வெகுஜன எதிர்ப்பை ஆவியாக்கிவிட செயற்படுகின்றன. கடந்த 15ம் திகதி நடந்த பேரணியும் 21ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் வேலை நிறுத்த இயக்கமும் இதையே இலக்காகக் கொண்டுள்ளன.

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதை, ஏனைய தாக்குதல்களில் இருந்து வேறுபடுத்தி முன்னெடுக்கும் எதிரப்பு நடவடிக்கைகள் மூலம் தொழிலாள வர்க்கத்தை கட்டுப்படுத்தி, வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனாநய உரிமைகளை பாதுகாக்கும் அவர்களின் போராட்டத்துக்கு குழிபறிக்கும் நனவான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), நவ சமசமாஜக் கட்சி (....), ஐக்கிய சோசலிசக் கட்சி (யூ.எஸ்.பீ.), இனவாத யுத்தத்தின் தலைவரான சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

வெகுஜன எதிர்ப்புக்காக அணிதிரளுமாறும் மின்சாரக் கட்டன அதிகரிப்புக்கு எதிரான வேலை நிறுத்தங்களில் பங்குபற்றுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) தொழிலாளர்களுக்கும் வறியவர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. அவ்வாறு அழைப்பு விடுக்கும் அதேவேளை, இந்த போராட்டம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள் மற்றும் அதற்கு அவசியமான தீர்வு வேலைத் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி சுட்டிக் காட்டுகின்றது.

எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கமைப்பதற்காக இப்போது இரண்டு முன்னணிகள் செயற்படுகின்றன. 15ம் திகதி பேரணியை ஏற்பாடு செய்த மின் கட்டண அதிகரிப்புக்கு எதிரான இயக்கம் அவற்றில் ஒன்றாகும். இது சுகாதார தொழிற்சங்க சம்மேளனம், இலங்கை வங்கிச் சேவையாளர் சங்கம் உட்பட அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளின் கூட்டாகும். மின்சாரக் கட்டணத்தை குறைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாக பேச்சாளர்கள் வாய்ச்சவடால் விட்டதுடன் அந்த எதிர்ப்பு இயக்கம் முடிவுக்கு வந்தது.

நவசமசமாஜக் கட்சியின் ஐக்கிய தொழிலாளர் சங்க சம்மேளனமும் ஐக்கிய சோசலிசக் கட்சியும் (யூ.எஸ்.பீ.) இந்த தொழிற்சங்க கூட்டமைப்புக்களுடனேயே அணிசேர்ந்துள்ளன. யூ.எஸ்.பீ.யின் செந்தாரகை பத்திரிகையில், பிரிந்து வேறுபட்டுக் கிடக்கின்ற தொழிற்சங்க இயக்கம் வர்க்கப் போராட்ட நடவடிக்கைக்காக ஐக்கியப்படும் சுப நேரம்என தொழிலாள வர்க்கத்துக்கு குழி பறிப்பதற்காக செயற்படும் இந்த தொழிற்சங்கங்க கூட்டு பற்றி மிகைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

ஜே.வி.பீ. சார்ந்த தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் இயக்குகின்ற தொழிற்சங்க இணைப்புக் குழு, இன்னொரு கூட்டணியாகும். தொழிற்சங்கங்களுக்கு மேலாக ஐ.தே.க., தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளையும் அதனுடன் இணைத்துக்கொள்வதற்கு கலந்துரையாடுவதாகவும் மே 21 அன்று பெரும் அடையாள வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதாகவும் இந்த தொழிற்சங்க இணைப்புக் குழு கூறுகின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் பிற்போக்கு பொருளாதார அரசியல் வேலைத் திட்டங்களை முழுமையாக ஆதிரிக்கும் அதன் நான்கு பங்காளிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் போலி சோசலிச கூட்டணியும் இந்த எதிர்ப்புக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளது.

ஐக்கிய தொழிற்சங்க முன்னணிகளுக்கு உள்ளும் மற்றும் அவற்றுக்கு இடையேயும், இப்போதே ஏற்பட்டுள்ள கோஷ்டி பிளவுகள் மூலம், வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கு குழி பறிப்பதற்கு இவர்கள் வேலையை பங்குபோட்டுக்கொண்டு செயற்படுகின்ற விதம் வெளிப்பட்டுள்ளது. தயாராவதற்கு காலம் போதாதுஎன மின் கட்டண அதிகரிப்புக்கு எதிரான இயக்கமும், கடந்த ஆண்டு நூறு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைவிடப்பட்ட கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கின்றதுஎன பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கமும் 21ம் திகதி வேலை நிறுத்தத்தில் இணையவில்லை என கூறியுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கம், மேற்கூறிய இரு கூட்டணிகளிலும் பிரதான பங்காளியாகும்.

அதற்கிடையில், 21ம் திகதிக்கு முன்னர் மின் கட்டணத்தை முன்னர் இருந்த மட்டத்துக்கே குறைக்காவிட்டால், கட்டாயமாக திட்டமிட்டவாறு வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்து தொழிற்சங்க இணைப்புக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த அச்சுறுத்தல்கள் வெற்றுத்தனமானவை என்பதை இராஜபக்ஷ நன்கு அறிவார். வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, இப்போது தொழிலாள வர்க்கத்தின் போராட்டம் வெடிக்குமாயின், அது ஏனைய ஒடுக்கப்பட்ட மக்கள் தட்டினரையும் உள்ளடக்கிய போராட்டமாக மாற்றமடையக் கூடிய சாத்தியத்தையும், அத்தகைய ஒரு போராட்டம் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு வெளியில் செல்லக்கூடிய சாத்தியத்தையும் பற்றி அரசாங்கத்தைப் போலவே சங்கத் தலைவர்களும் நன்கு அறிவர்.

இத்தகைய கூட்டணிகள் இந்தளவுக்கு பெரிதாவது, உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை பாதுகாக்கும் உண்மையான போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்வதற்காக அல்ல: அவை தொழிலாள வர்க்கத்தினுள் கொந்தளிக்கும் அமைதியின்மையை தணித்து அவர்களின் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதற்கு, முன்னர் இருந்த கூட்டணிகள் போதுமானதாக இல்லாததால், புதிதாக அமைக்கப்பட்ட பொறிகளாகும். அநேக உதாரணங்கள் இருந்தாலும், இந்த கூட்டணிகளின் தலைமையில் அமர்ந்திருக்கும் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்களின் மூலமே நூறு நாட்கள் இடம்பெற்ற பல்கலைக்கழக ஆசிரியர்களின் அண்மைய போராட்டங்கள் காட்டிக்கொடுக்கப்ட்டன என்பதை நினைவில் கொள்வதும் கூட, இந்த கூட்டணிகளின் உண்மையான குறிக்கோளை புரிந்துகொள்வதற்கு போதுமானதாக இருக்கும்.

மின் கட்டண அதிகரிப்பானது ஒரு தனியான பிரச்சினை அல்ல: அது 1930களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர், இப்போது உலக முதலாளித்துவம் எதிர்கொண்டுள்ள மேலும் மேலும் ஆழமடைந்து வருகின்ற உலக பொருளாதார நெருக்கடியினுள், பூகோள மூலதனத்தின் தேவைகளை நடைமுறைப்படுத்துவதன் பாகமாக, சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் கட்டளைகளின் கீழ், உலகின் எல்லா நாடுகளிலும் முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் அமுல்படுத்துகின்ற பொருளாதார மறு சீரமைப்பின் ஒரு அங்கமே ஆகும். சம்பள வெட்டு, சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயிகளுக்கான மானியங்கள் உட்பட சமூக சேவைகளை அகற்றுவதும் அரச நிறுவனங்களை சீர்திருத்துவதும் இந்த பொருளாதார மறுசீரமைப்பின் பாகமாகும். நாட்டினுள் பொருளாதார வீழ்ச்சிஒன்று ஏற்படுவதை தடுப்பதற்கே மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது என ஜனாதிபதி இராஜபக்ஷ ஊடகத் தலைவர்களின் சந்திப்பில் குறிப்பிட்டார். உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் செய்படுவது இதிலிருந்தே உறுதியாகின்றது.

மத்திய வங்கியில் இருந்து கிடைக்கும் சலுகைகளை நிறுத்தி, இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தையும் அவற்றின் வருமானத்திலேயே தங்கியிருக்கும் நிலைக்குக் கொண்டுவருவதானது, 2009ல் நாணய நிதியத்திடமிருந்து 2.6 மில்லியன் டொலர் கடன் பெறும் போது இராஜபக்ஷ அரசாங்கம் உடன்பட்ட நிபந்தனைகளில் ஒன்றாகும். நட்டத்தை ஈடுகட்டுவதற்காக, மின்சார சபைக்கு தானியங்கிவிலை சுட்டெண் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என நாணய நிதியம் அண்மையில் மீண்டும் அரசாங்கத்துக்கு சுட்டிக் காட்டியிருந்தது.

அரசாங்க நிறுவனங்களின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கம் பொறுப்பாளிகள் அல்ல. அது முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் பொருளாதார மறு சீரமைப்பு என சொல்லப்படுவதனால் உருவான ஒன்றாகும். வீண் விரயம், துஷ்பிரயோகம் மற்றும் அரசியல்வாதிகளினதும் உயர்மட்ட அரச அதிகாரிகளதும் சுரண்டல்களாலும் அந்த நிலைமை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

நாணய நிதியத்தால் பிரேரிக்கப்பட்டுள்ள அழிவுகரமான பொருளாதார மறுசீரமைப்பை நடைமுறைப்படுத்துவதைத் தவிர, நெருக்கடியில் இருந்து தப்புவதற்கு இராஜபக்ஷ அரசாங்கத்திடம் வேறு வழி கிடையாது.

நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கு தொழிற்சங்கங்கள் முன்நின்று செயற்பட வேண்டும் என இராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரான கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர மே 8 அன்று அரசாங்கத் துறை தொழிற்சங்கங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். அரசாங்க துறையின் தொழிற்சங்கங்கள், ஒன்று கடுமையான பொருளாதார மறுசீரமைப்புக்குஉந்துதல் கொடுக்க வேண்டும், இல்லையேல் அரச வருமானம் தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் விளைவுகளுக்குஅவை முகங்கொடுக்க வேண்டும் என அங்கு அவர் தெரிவித்துள்ளார்.

இவை வெறுமனே தொழிற்சங்கங்களுக்கு மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்துக்கும் விடுத்த அச்சுறுத்தலாகும். முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் சுமையை ஏற்றுக்கொள்! இல்லையேல் நாசமாய்ப் போ! என்றே அவர் தொழிலாள வர்க்கத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றார்.

மின் கட்டணம் உட்பட அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதை நியாப்படுத்துவதற்காக, மானியங்கள் கொடுத்து நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாதுஎன அரசாங்கம் இன்னொரு தர்க்கத்தை முன்வைக்கின்றது. மானியங்கள் என்பது அரசாங்கத்தின் பையில் இருந்து கொடுப்பதல்ல; தொழிலாளர்களே நாட்டின் தேசியப் பொருளாதாரத்தை உற்பத்தி செய்கின்ற அதே வேளை, அரச வருமானமாக சேகரிக்கப்படுகின்ற வரிப் பணம் தொழிலாள வர்க்கம் உட்பட வெகுஜனங்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதியாகும். இந்த நிதியில் பெரும் பகுதியை ஆளும் தட்டினரும் உயர்மட்ட அரச அதிகாரிகளும் தங்கள் பைகளுக்குள் போட்டுக்கொள்கின்றனர். அதேபோல், உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவது பற்றி ஆளும் வர்க்கம் பேசுவதில்லை. தேசிய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தேவையை திருப்திபடுத்துகின்ற அபிவிருத்தியைப் பற்றியே பேசுகின்றனர்.

மின் கட்டணத்தை உயர்த்துவது பற்றிய பிரச்சினையையே எடுத்துக்கொண்டால், மின் உற்பத்திச் செலவு பெருமளவில் அதிகரிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த தனியார் மின் உற்பத்தியாளர்கள் அன்றாடம் சுரண்டிக்கொள்கின்ற பிரமாண்டமான இலாப பொதியில் கை வைப்பதற்கு கூட அரசாங்கம் தயார் இல்லை. மின் அலகு ஒன்றை 40 ரூபா என்ற உயர்ந்த விலைக்கு மின்சார சபைக்கு விற்கின்ற இந்த தனியார் மின் உற்பத்தியாளர்கள் மக்களுக்கு எதிரான மாபியாக்கள் போல் செயற்படுகின்றனர் என்பது இப்போது பரந்த கருத்தாக காணப்படுகின்றது. அரசாங்கம் அவர்களின் இலாபத்தில் கை வைக்காமல் மின்சார சபையின் நட்டத்தை முழுமையாக மக்கள் மீது சுமத்தியுள்ளது.

ராஜபக்ஷ அரசாங்கம் பற்றிய அவர்களது போலி விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, அதன் பொருளாதார வேலைத்திட்டம் சம்பந்தமாக எதிர்க் கட்சிகளுக்கு, போலி இடதுசாரிகளுக்கு மற்றும் தொழிற்சங்ங்களுக்கு அடிப்படை வேறுபாடோ அல்லது மாற்று பொருளாதார அரசியல் வேலத் திட்டமோ கிடையாது. இவர்கள் அனைவரும் வீண்டிப்பையும் ஊழலையும் இல்லாதொழித்து சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே யோசனை தெரிவிக்கின்றனர்.

2002ல் யூ.என்.பீ. அரசாங்கம் முன்வைத்த இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்என்ற வேலைத் திட்டத்தையே இராஜபக்ஷ அரசாங்கம் மேலும் முன்னெடுக்கின்றது. ஜே.வி.பீ. இராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைவேலைத் திட்டத்தை ஆதரித்து அவரை ஆட்சிக்கு கொண்டு வந்தது.

ஜே.வி.பீ. சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர் சங்கம், சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவை ஊழியர்கள் சங்கம் உட்பட தொழிற்சங்க இணைப்புக் குழுவின் முக்கியமான 7 சங்கங்கள், மின் கட்டணத்தை குறைக்கும் முறை சம்பந்தமாக 2013 ஏப்பிரல் 28 அன்று மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு யோசனை ஒன்றை அனுப்பியுள்ளன. அது முழு தொழிற்சங்கங்க அதிகாரத்துவத்தினதும் வங்குரோத்தான பிற்போக்கான தேசியவாதத்தை அம்பலப்படுத்தும் பெரும் எடுத்துக் காட்டாகும். அரசாங்கம் மாற்று மின்உற்பத்தி சாதனங்கள் மற்றும் மிகவும் விரைவான விநியாகம் மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமாக அக்கறை காட்டவில்லை என குற்றம் சாட்டும் அவர்கள், நாட்டின் மின் உற்பத்திக்கும் பயன்பாட்டுக்கும் இடையில், செயற்பாடான மற்றும் இலாபகரமானஇணைப்பு இருக்க வேண்டும் என ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றனர். அதன்படி, செயற்பாடான மற்றும் இலாபகரமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய திட்டத்தை அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் தொழிற்சங்கங்களுக்கும் சாதாரண பயன்பாட்டாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடலுக்கு முன்வைக்குமாறு அவை கோருகின்றன.

தொழிற்சங்கங்களின் இந்த யோசனை, நாணய நிதியத்தின் கட்டளையின்படி அரசாங்கம் இப்போது நடைமுறைப்படுத்தி வருகின்ற, மின்சார சபையை துரிதமாக இயங்க வைக்கும் மற்றும் இலாபகரமானதாக்கும் வேலைத் திட்டத்துடன் சமமானதாக இருக்கின்றது.

தொழிலாள வர்க்கம் இந்த பிற்போக்கு தேசியவாத வேலைத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும். நட்டம், சுறுசுறுப்பின்மை மற்றும் அராஜக நிலைமையும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட நெருக்கடியான முதலாளித்துவ உற்பத்தி முறையின் பிரதிபலன்களாகும். ஒரு சிலரின் இலாபத்துக்காக இயங்கும் முதலளித்துவ உற்பத்தி முறையை தூக்கி வீசி, சமுதாயத்தின் பெரும்பான்மையான வெகுஜனங்களின் தேவைக்கு ஏற்றவாறு திட்டமிடப்பட்ட உற்பத்தி முறையின் மூலம் மட்டுமே, அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் உட்பட வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை தோற்கடிக்க, தொழிலாள வர்க்கத்தினதும் ஒடுக்கப்பட்ட மக்களதும் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

அது அனைத்துலக தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, சர்வதேச சோசலிசத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்துடன் இணைந்துள்ளது. இலங்கையில், அது சர்வதேச மூலதனத்தின் கைத்தேங்காயாக செயற்படும் ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டமாகும். அதாவது, ராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைமையிலான முதலாளித்துவ வர்க்க ஆட்சியைத் தூக்கி வீசி, சோசலிச வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காக, தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அணிதிரட்டி போராட வேண்டும். அதற்காக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீமான அரசியல் இயக்கம் ஒன்றை கட்டியெழுப்புவது தொழிலாள வர்க்கத்தின் இன்றைய பணியாக உள்ளது. அத்தகைய அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்காக, முதலாளித்துவ மற்றும் போலி இடது கட்சிகளில் இருந்தும் தொழிற்சங்கங்களில் இருந்தும் பிரிந்து சென்று, வேலைத் தளங்களிலும் குடியிருப்பு பிரதேசங்களிலும் கட்டியெழுப்பும் நடவடிக்கை குழுக்கள் ஊடாக, தொழிலாள வர்க்கம் தலைமைத்துவம் வகிக்க வேண்டும்.

இந்த முன்நோக்கின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்துக்குள் புதிய புரட்சிகர தலைமைத்துவத்தை ஸ்தாபிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போராடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சி வேலைத் திட்டத்தை படித்து, அதனுடன் இணைந்து தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்ப ஐக்கியப்படுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.