சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The SPD celebrates its 150th anniversary

சமூக ஜனநாயகக் கட்சி தனது 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

By Peter Schwarz
23 May 2013

use this version to print | Send feedback

பாராளுமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு சமூக ஜனநாயகக் கட்சி அதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.  லைப்சிக் நகரில் நடைபெறும் விழா, நெருக்கடியான காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி ஆளும் வர்க்கத்தின் நலன்களை முற்றிலும் விசுவாசமாக பிரநிதித்துவப்படுத்தும் என்று ஆர்வத்துடன் உறுதிபடுத்துவதற்கு ஆளும் உயரடுக்கிற்கு அழைப்புவிட்டு  நடாத்தப்படுகின்றது.

கட்சித் தலைவர் என்னும் முறையில் சிக்மார் காப்ரியல் தன்னுடைய வலைத் தளத்தில் அழைக்கப்பட்ட 1,600 விருந்தாளிகளில் பத்து நாடுகளின் தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசாங்க பல துணைத் தலைவர்களும் தலைவர்களும், வெளியுறவு மந்திரிகள் மற்றும் ஐரோப்பிய ஆணையாளர்களும் அடங்குவதாக பெருமிதத்துடன் அறிவித்தார். ஜேர்மன் ஜனாதிபதி ஜொஹாயிம் கௌவ்க், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உட்பட ஜேர்மன் சான்ஸ்லரும், கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் தலைவருமான அங்கேலா மேர்க்கெலும் விழாவில் பங்கு பெறுவர்.

இதைத்தவிர அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர், தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ், இந்திய காங்கிரஸ் கட்சி, சீன ஆளும் கட்சி மற்றும் பிரேசிலின் PT இன் பிரதிநிதிகள் உட்பட கிட்டத்தட்ட 30 கட்சித் தலைவர்களும் பல மூத்த கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுவர்.

இக் கட்சிகளுள் பெரும்பாலானவை தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதில்  நீண்டகால பாரம்பரியத்தை கொண்டவை. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர் குற்றம் சார்ந்த ஏகாதிபத்திய போர்களுக்கும், ஆளில்லா விமானங்கள் மூலம் இலக்கு வைத்துப் படுகொலை செய்வதற்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கும் பொறுப்பு கொண்டவர்கள். தென்னாபிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) கடந்த ஆண்டு மரிக்கானா நகரில் டஜன் கணக்கான சுரங்கத் தொழிலாளர்களை படுகொலை செய்தது. சீன அரசாங்கம் சர்வாதிகார நடவடிக்கைகளை பயன்படுத்தி மனிதாபிமானமற்ற சுரண்டல் நிலைமைகளைச் செயல்படுத்துவதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களோ இளவரசர்கள்போல் தங்களைச் செல்வக் கொழிப்பில் ஆழ்த்திக் கொண்டுள்ளனர்.

இவர்கள் சமூக ஜனநாயகக் கட்சியின் பிறந்த நாள் ஆண்டு நிறைவு விழாவிற்கு பொருத்தமான பார்வையாளர்கள்தாம்!

சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் சிக்மார் காப்ரியல் சமீபத்தில் கொண்டாட்டத்திற்கான தயாரிப்பிற்கு அவருடைய சொந்த சமூக ஜனநாயகக் கட்சி வரலாறு குறித்த விளக்கத்தைக் கொடுத்தார். ஜேர்மனியின் முக்கிய வணிக செய்தித்தாளான Handelsblatt இற்கு அவர் ஒரூ நீண்ட பேட்டியைக் கொடுக்க தேர்வுசெய்தது ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல.

சமூக ஜனநாயகக் கட்சி ஆண்டு நிறைவு விழாவிற்கு தேர்ந்தெடுத்துள்ள திகதியும் முக்கியத்துவமானதுதான். ஜேர்மன் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் (ADAV) லைப்சிக்கில் பெர்டினான்ட் லஸ்ஸாலால் மே 23, 1863ல் நிறுவப்பட்டது. இது பொதுவாக சமூக ஜனநாயகக் கட்சியின் தோற்றத்தின் ஆரம்ப திகதி எனக் கருதப்படுகிறது. லஸ்ஸாலே தான் ஆதிக்கம் செலுத்திய சங்கத்தில் சர்ச்சைக்குரிய நபர்தான். இவர் இரகசியமாக ஜேர்மனிய சான்ஸ்லரான ஒட்டோ வொன் பிஸ்மார்க்கைச் சந்தித்தார். ஆனால் ஜேர்மன் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் நிறுவப்பட்ட ஓராண்டிற்குள் பயனற்ற மோதலில் இவர் கொல்லப்பட்டார். மிகவும் முக்கிய அரசியல் பணி அகுஸ்ட் பேபல் மற்றும் வில்ஹெல்ம் லீப்க்னெக்ட் ஆகியோரால் செய்யப்பட்டன.

அகுஸ்ட் பேபல் மற்றும் வில்ஹெல்ம் லீப்க்னெக்ட் இருவரும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருடனும் நெருக்கமான தொடர்பில் இருந்ததுடன், 1869இல் சமூக ஜனநாயக தொழிலாளர்கள் கட்சியை (SDAP) ஐஸநாக் நகரில் நிறுவினர். 1875ம் ஆண்டு, சமூக ஜனநாயகத் தொழிலாளர்கள் கட்சி, ஜேர்மன் பொதுத் தொழிலாளர்கள் சங்கம் இரண்டும் இணைந்ததைக் கண்ணுற்றது. லஸ்ஸாசலியர்கள் செல்வாக்கை விரைவில் இழந்தனர். பேபலும்  லிப்க்னெக்ட்டும் அமைப்பிற்குத் தலைமை தாங்கி அதை சக்திவாய்ந்த வெகுஜனக் கட்சியாகக் கட்டமைத்து, நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களை மார்க்சிசத்தில் பயிற்றுவித்தனர். எனவே 1869 அல்லது 1875 ஆம் ஆண்டு 1863ஐ விட சமூக ஜனநாயகக் கட்சி நிறுவப்பட்ட ஆண்டு என எடுத்துக் கொள்ளப்படலாம்.

காப்ரியல் Handelsblatt இடம் தான் ஏன் லஸ்ஸாலை விரும்பினார் எனக் கூறினார். லஸ்ஸாலிடம் இருந்து ஒருவர் ஒருவரின் அணுகுமுறை அவரின் சமூக அந்தஸ்துடன் தொடர்பற்றது என்பதை கற்றுக்கொள்ளலாம். லஸ்ஸால் வசதியானவரும் ஒரு தாராள மனப்பான்மை உடையவருமாவர். ஆயினும்கூட அவர் நிலக்கரிச் சுரங்கங்களின் முதுகுவளைந்த குழந்தைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சார்பில் போராடினார்.

இந்த கண்ணோட்டத்தின்படி, சமூக ஜனநாயகக் கட்சி ஒருபோதும் தொழிலாளர் கட்சியாக இருந்தது இல்லை, மாறாக தொழிலாளர்களின் மீது அக்கறை கொண்ட கட்சியாக இருந்தது எனலாம். அது ஒருபொழுதும் ஒரு தனித்த தொழிலாளர்கள் கட்சி அல்ல, ஆனால் எப்பொழுதும் அர்ப்பணித்த தொழிலாளர்கள், அறிவுவொளி சான்ற, மத்தியதர தாராளவாத வகுப்பு, இடது சாரி அறிவாளிகளின் கலவையாக இருந்தது என்று காப்ரியல் அறிவித்தார்.

இதன்பின், பேபல் சமூக ஜனநாயகக் கட்சியை முற்றிலும் தொழிலாளர்களின் கட்சியாக கருதினார் என்று Handelsblatt குறிப்பிட்டபோது, காப்ரியல் கட்சியின் நீண்டகாலத் தலைவரை கடுமையாக தாக்கினார். பேபலைச் சுற்றி இருந்த  சடவாதிகள் வாதிகள் வரலாற்று அவசியம் முதலாளித்துவத்தின் சரிவைக் கோரியது என நம்பினர். ... சடவாதத்தின் தீவிரமான வடிவம் பின்னர் லெனினிசத்தில் முடிவுற்றது. இதில் சோசலிசத்திற்கான பாதை பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சர்வாதிகாரத்தினால் விரைவுபடுத்தப்பட்டது.

ஆனால் மறுபுறம் பேர்ன்ஸ்ரைனைச் சுற்றி இருந்த உயர் சிந்தனையாளர்கள்ஜனநாயக, சமூக விடுதலையை அடையும் மக்களின் இயலுமையை நம்பினர்.

யதார்த்தத்தில், எட்வார்ட் பேர்ன்ஸ்ரைனின் முதலாளித்துவத்தை ஒரு  அமைதியான முறையில் சீர்திருத்தம் செய்வது என்னும் கருத்தாய்வு முதலாம் உலகப்போரின் குருதி கொட்டிய புதைகுழிகளில் முடிந்தது. முதலாளித்துவம் அதன் சொந்த முரண்பாடுகளின் அடிப்படையில் வீழ்ச்சியடையும் என்பதை போர் நிரூபித்தது. மார்க்சிசத்தின் மீதான பேர்ன்ஸ்ரைனின் தாக்குதல்தான் அந்த முழு நூற்றாண்டையும் வடிவமைத்த 1914ல் சமூக ஜனநாயகக் கட்சியின் காட்டிக் கொடுப்பிற்கு தயாரிப்பாயிற்று. சமூக ஜனநாயகக் கட்சி மில்லியன் கணக்கான இளைஞர்களின் உயிர்களை ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு தியாகம் செய்த போரை ஆதரித்தது.

1914 ல் முதலாம் உலகப் போருக்கு ஆதரவு கொடுத்தமை சமூக ஜனநாயகக் கட்சி முதலாளித்தவ பிற்போக்கு முகாமிற்கு முற்றிலும் மாறியதைக் குறித்தது. 1918ம் ஆண்டு நவம்பர் புரட்சி இரண்டாம் வில்ஹெல்ம் உடைய ஆட்சியை அகற்றியபோது, சமூக ஜனநாயகக் கட்சிதான் சிதறிப்போயிருந்த படையினரை தீவிர வலது ஆயுத குழுக்களாக்கி தொழிலாளர்களின் எழுச்சிகளை அடக்குவதை ஒழுங்கமைத்தது. இதன்பின் சமூக ஜனநாயகக் கட்சி அரசு, இராணுவம், பெருவணிகம் மற்றும் பெருநிலவுடமையாளர்கள் என்ற பிற்போக்கு சக்திகளின் பலமற்ற ஜனநாயக மூடுதிரையின் பின்னே 15 ஆண்டிற்குப்பின் ஹிட்லரைப் பதவிக்கு கொண்டுவந்த ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்கியது

காப்ரியலின் ஆழ்ந்த வெறுப்புமனப்பான்மை, மிகத் தெளிவாக அவர் ஹிட்லரின் அதிகாரத்தை வழங்கும் சட்டத்திற்கு எதிராக சமூக ஜனநாயக் கட்சியின் பாராளுமன்றக் குழு மார்ச் 1933ல் வாக்களித்ததை வெளிப்படுத்தும்போது தெரியவருகிறது: இதுதான்  சமூக ஜனநாயக் கட்சியின் வரலாற்றில் மிகப் பெருமிதம் வாய்ந்த கணமாக இருக்கலாம். என்றார் அவர்.

முந்தைய ஆண்டுகளில் சமூக ஜனநாயக் கட்சி ஹிட்லருக்கு எதிராகப் போராட விரும்பிய தொழிலாளர்களின் கைகளை கட்டிப்போடுவதில் முக்கிய பொறுப்பைக் கொண்டிருந்தது. பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் சான்ஸ்லர் ப்ரூனிங் வெளியிட்ட தொழிலாள வர்க்க விரோத அவசரகால ஆணைகளுக்கு ஆதரவு கொடுத்ததின் மூலம் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு நீண்டகாலம் முன்னரே அது ஜனநாயகத்தை கிட்டத்தட்ட இல்லாதொழித்திருந்தது. 1932ல் சமூக ஜனநாயக் கட்சி, பௌல் வொன் ஹிண்டன்பேர்க் குடியரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆதரவு கொடுத்தது. அவர்தான் ஹிட்லரை சான்ஸ்லராக நியமித்தார். வலதுசாரியினர் ஆட்சிச்சதியை நடாத்தி அதே ஆண்டு பிரஷ்ஷியாவில் இருந்து அதிகாரத்தை எடுத்துக்கொண்டபோது, கட்சி எவ்வித போராட்டமுமின்றி சரணடைந்தது.

1933ம் ஆண்டு சமூக ஜனநாயக் கட்சி, அதிகாரத்தை வழங்கும் சட்டத்திற்கு ஆதரவு கொடுக்கத் தயாராக இருக்கவில்லை என்ற உண்மை கூட, இதனால் தன் மரண ஆணைக்கே கையெழுத்திட்டது என்பது ஒரு பெருமிதமான நிகழ்வு என்று அரிதாகத்தான் கருதப்பட முடியும்.

இரண்டாம் உலப் போருக்குப்பின், முதலாளித்துவ அரசை உறுதிப்படுத்துவதில் சமூக ஜனநாயகக் கட்சி மீண்டும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டது. இந்த அரசின்கீழ் பல முன்னாள் நாஜிக்கள் தங்கள் உத்தியோகத்தை தொடர்ந்ததுடன், கட்டாய உழைப்பு மூலம் தங்களை செல்வச் செழிப்புடையவர்களாக செய்து கொண்ட ஹிட்லருக்கு நிதியளித்த அதே தொழில்துறையினர் தங்கள் சொத்துக்களையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

போருக்குப் பிந்தைய மூன்று சமூக ஜனநாயகக் கட்சி சான்ஸ்லர்கள் வில்லி பிராண்ட், ஹெல்முட் ஷிமிட் மற்றும் ஹெகார்ட் ஷ்ரோடர் ஆகியோரின் உறுதியான மரபியம் பற்றிக் கேட்கப்பட்டதற்கு காப்ரியல், கடினமான நேரங்களில் பொறுப்பை ஏற்றது என்றார்.

மூவருமே, மக்களினதும் மற்றும் கட்சிக்குள்ளும் இருந்த வந்த அழுத்தத்தையும் மீறி முதலாளித்துவ ஒழுங்கமைப்பை பாதுகாத்தனர் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். வில்லி பிராண்டை பொறுத்தவரை அது முதல் பெரிய பொருளாதார நெருக்கடிக் காலத்திலும் பின்னர்  ஷ்மித்தை பொறுத்தைவரை முக்கிய எண்ணெய் நெருக்கடி காலத்திலும் பயங்கரவாதத்தின் காலகட்டத்திலும் மற்றும் செயற்பட்டியல் 2010 மற்றும் ஈராக் போருக்கு எதிரான காலகட்டத்தில் ஷ்ரோரும் இதை செய்தனர்.  சந்தேகம் வரும்போது சமூக ஜனநாயக சான்ஸ்லர்கள் பிராண்ட், ஷ்மித் மற்றும் ஷ்ரோடர் நாட்டின் நலன்தான் கட்சியின் நலனைவிட உயர்ந்தது என வரையறுத்தனர்.

இதன் பின் காப்ரியல் கசப்புடன், தற்போதைய கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தினதும் மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சியினரினதும் ஆளும் கூட்டணி, அவர்களை ஒரு முதலாளித்துவக் கூட்டணி எனக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர் என்று குறைகூறி, சமூக ஜனநாயகக் கட்சியை முதலாளித்துவ சமூகத்திற்கு வெளியே நிற்கும் கட்சி என்று சித்தரிக்க முயல்கின்றன என்றார். ஆனால் எப்பொழுதுமே சமூக ஜனநாயகக் கட்சி முதலாளித்துவ ஒழுங்கமைப்பைத்தான் பாதுகாக்கிறது.

இறுதியாக காப்ரியல், ஷ்ரோடர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய செயற்பட்டியல் 2010  குறித்துத் தன் பெருமிதத்தை வெளிப்படுத்தினார். சமூக ஜனநாயகக் கட்சி இறுதியில் முட்டாள்த்தனமான வேலையற்றோருக்கான உதவி, சமூக உதவி முறைகளை முடிவிற்கு கொண்டுவர காட்டிய தைரியம் குறித்த நான் பெருமைப்படுகிறேன். என்று கூறுகிறார். மேலும் ஆனால் குறைவூதியத் துறையின் வளர்ச்சி தவறு, அது நம் சமூகத்தின் உழைப்பு பற்றிய நெறிமுறைகளை அழிக்கிறது. என்றார்.

இறுதியான ஒரு கபடமான கருத்தைக் கூறி கட்சியின் சுவடுகளை மறைக்க காப்ரியல் தீவிரமாக முயல்கிறார். உண்மையில் செயற்பட்டியல் 2010 இன் முழு நோக்கமும் பெரும் குறைவூதியத் துறையைத் தோற்றுவிப்பதாகும். இதுதான் ஏனைய பிரிவுகளிலும் தொழிலாளர்களின் ஊதியக் குறைப்பிற்கு அழுத்தம் கொடுத்தது. இன்று வேலையிழந்த ஒருவர் ஓராண்டிற்குப் பின் எத்தகைய வேலையற்றோருக்கான உதவி நலன்களுக்கும் உரிமை கொண்டாட முடியாது. அதன்பின் அவர் தன்னுடைய சேமிப்புக்கள் அனைத்தையும் செலவழித்த பின்னரே பரிதாபத்திற்குரிய Hartz IV பண உதவி பெறத் தகுதி உடையவராகின்றார். இந்த நலன்கள் அனைத்தையும் இழக்காதிருக்க வேண்டுமானால் அவருக்கு வழங்கப்படும் எவ்விதமான மிக வறிய ஊதிய பணிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

செயற்பட்டியல் 2010 பற்றி பெருமிதத்தைக் காட்டுவதோடு காப்ரியல் நின்றுவிடவில்லை. இந்த இலையுதிர்காலத்தில் அரசாங்கத்தை அது எடுத்துக் கொண்டால் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு புதிய செயற்பட்டியலை அவர் அறிவிக்கிறார். அதை அவர் மத்தியில் உள்ள தொழில்புரிவோருக்கான திட்டம் ("program for the working middle") என்று குறிப்பிடுகிறார். இது செல்வம் படைத்த மத்தியதர வர்க்கத்தினருக்கு மற்றொரு பெயர் ஆகும். இவர்கள் ஒரு தனித் தொழிலாளரைவிட பல மடங்கு அதிகம் பெறுவதுடன் ஆனால் வருமான பிரமிட்டின் உச்சக்கட்டத்தில் இருப்பவர்களுக்குக் கொடுக்கப்படும் மில்லியன்களை தமது கைகளில் பெறாதவர்களாவர். ஒரு புதிய சமூக சமநிலைக்கு காப்ரியல் உறுதியளிக்கிறார்.

ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி, பெரும்பாலான மக்களின் நலன்கள் பற்றிய தனது அக்கறையை முற்றிலும் இழந்துவிட்டது. பிற கட்சிகள் அனைத்தையும் போல் இதுவும் செல்வம் அதிகம் படைத்த 10% மேற்தட்டினரின் தயவைத்தான் நாடி நிற்கிறது.

போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்ற காலத்தின்போது, சமூக ஜனநாயகக் கட்சி அதன் முதலாளித்துவக் கொள்கையுடன் தொழிலாள வர்க்கத்திற்கு சலுகைகளையும் இணைக்க முடிந்தது. இதனால் குறிப்பாக 1960களிலும் 1970களிலும் தொழிலாளர்கள், இளைஞர்களிடையே ஆதரவைப் பெற முடிந்தது. ஆனால் இன்று 1930களுக்கு பின்னரான மிகப்பெரிய முதலாளித்துவ நெருக்கடி காலத்தில், இது ஏகாதிபத்தியத்தினதும், சமூக பிற்போக்கினதும் பாதுகாப்பு அரணாக உள்ளது.