சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

European powers lift embargo, move to arm Syrian opposition

ஐரோப்பிய சக்திகள் தடையை அகற்றுகின்றன, சிரிய எதிர்த்தரப்பிற்கு ஆயுதம் அளிக்க முயல்கின்றன

By Johannes Stern
28 May 2013


use this version to print | Send feedback

திங்களன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் பிரஸ்ஸல்ஸில் சந்தித்து சிரியாவிற்கு எதிரான ஆயுதத்தடையை புதுப்பிக்க வேண்டாம் என ஒப்புக் கொண்டனர். இதையொட்டி ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசத்தை அகற்றப் போரிடுவதற்கு சிரிய எதிர்த்தரப்புக்கு நேரடியாக ஆயுதம் கொடுக்க முடியும், முன்பு இது, ஓராண்டு ஐரோப்பிய ஒன்றிய தடையின் விதிகளை ஒட்டித் தடைக்கு உட்படுத்திருந்தது, இது வெள்ளியன்று முடிவடைகிறது.

ஐரோப்பாவின் முன்னாள் மத்தியக் கிழக்கு காலனித்துவ சக்திகளான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை சிரிய எழுச்சியாளர்களுக்கு நேரடியாக ஆயுதம் கொடுப்பதில் முன்னிலையில் உள்ளன.

பிரித்தானியாவின் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் இழிந்த முறையில் ஐரோப்பிய திட்டங்களை எழுச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுப்பதை  சிரியாவில் மோதலுக்கு ஒரு “அரசியல் தீர்வின்” பகுதி என்று காட்ட முற்பட்டார். “இறுதியில் ஒரே ஒரு அரசியல் மற்றும் இராஜதந்திர ஆதரவு பெற்ற தீர்வு ஒன்றுதான் உள்ளது” என்று கூறிய அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுதத் தடைகள் “இராஜதந்திரப் பணிக்கு ஆதரவு தரும் பகுதியாக இருந்தது” என்றார்.

பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Laurent Fabius சிரிய எழுச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுக்க அழுத்தம் கொடுக்கும் வகையில், சிரியா இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது, அதையொட்டி நேரடி இராணுவத் தலையீட்டிற்கு வழிவகுத்துள்ளது என்று போலித்தனமாகக் கூறினார்.

“உள்ளூர் மட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு பெருகிய முறையில் வலுவான சான்றுகள் உள்ளன” என்று Fabius கூறினார். “எத்தகைய உருப்படியான விளைவுகளை இதில் இருந்து நம்மால் பற்ற முடியும் என்பது குறித்து எமது பங்காளிகளுடன் நாம் ஆலோசித்து வருகிறோம்,” என்றார் அவர்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா பலமுறை சிரியாவில் இரசாயன ஆயுதப் பயன்பாடு என்பது “சிவப்புக் கோடாக” கருதப்படும், “விளையாட்டை மாற்றிவிடும்” என்று அச்சுறுத்தியுள்ளார்; இது ஆக்கிரோஷ விடையிறுப்பைக் கொடுக்கும் என்றார்.

மற்ற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் “பொது நிலைப்பாட்டை” காண வில்லியம் ஹேக் உறுதி எடுத்துக்கொண்டார்— எப்படியும் சிரிய எழுச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் கூட, பிரித்தானியா அதைச் செய்யும் என்றும் கூறினார். “சிரியாவில் சரியான செயல் செய்யப்படுவது என்பது ஐரோப்பிய ஒன்றியம் இது குறித்த ஒவ்வொரு கருத்திலும் ஒன்றாக இருக்கிறதா என்பதைவிட முக்கியமானதாகும்” என்றார் அவர்.

ஆஸ்திரியா, செக் குடியரசு, ஸ்வீடன், பின்லாந்து ஆகியவை சிரிய எழுச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுப்பதை எதிர்ப்பதாகக் கூறுகின்றன. ஆஸ்திரிய வெளியுறவு மந்திரி Michael Spindelegger அறிவித்தார்: “இப்பொழுதுதான் நாம் நோபல் சமாதானப் பரிசை பெற்றோம், உடனே வேண்டுமென்றே ஆயுதங்கள் வழங்கும் மோதலில் ஈடுபடுகிறோம், இது தவறு என நினைக்கிறேன்.”

இத்தகைய கருத்துக்கள், ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முற்றிலும் இழிந்த தன்மைக்கு உதாரணம் ஆகும். சிரியாவிற்கு எதிரான போர் ஐரோப்பா ஒரு சமாதான சக்தி இல்லை என்பதை துல்லியமாகக் காட்டுகிறது; கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது கேலிக்கூத்து என்பதைக் காட்டுகிறது.

உண்மையில், ஐரோப்பிய ஒன்றியம் சிரிய எதிர்ப்பை தொடக்கத்தில் இருந்தே ஆதரவு கொடுத்துவருகிறது; நெருக்கமாக அமெரிக்கா , துருக்கி, வளைகுடா நாடுகளுடன் ஒத்துழைக்கிறது; இவை சிரிய எதிர்த்தரப்பினரான இஸ்லாமியவாத போராளிகளுக்கு நிறைய ஆயுதங்களைக் கொடுத்துள்ளன; பட்ரியட் ஏவுகணை எதிர்ப்பு முறைகளை துருக்கியின் சிரிய எல்லைக்கு அருகே நிறுத்தியுள்ளன

ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் அதன் சிரிய எண்ணெய் தடைகளையும் அகற்றியது. இது சிரிய மக்களுக்கு எதிராக கொடூரமான குற்றங்களை இழைத்துள்ள சிரிய எதிர்தரப்பு, அல்குவேடா பிணைப்புடைய எழுச்சிக் குழுவான அல் நுஸ்ரா முன்னணி உட்பட பலவற்றிற்கு நிதியளிக்க உதவுகிறது. (See also: European powers fund Al Qaeda looting of Syrian oil)

ஆப்கானிஸ்தான், ஈராக், லிபிய போர்களுக்குப் பின் –இவை சில ஐரோப்பிய நாடுகளால் ஓரளவு குறைகூறலுக்கு உட்பட்டன—ஐரோப்பிய சக்திகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய போர் ஒவ்வொன்றுக்கும் பின் துணையாக நிற்கின்றன—அவை மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் பரந்த மூலவள செழிப்புடைய பிராந்தியங்களை கொள்ளையடிக்கும் நோக்கம் கொண்டவை. அமெரிக்கவை போலவே ஐரோப்பிய சக்திகளும் அலவைட் ஆதிக்கம் நிறைந்த சிரியாவில் அசாத் ஆட்சியையும் அதன் முக்கிய பிராந்திய நட்பான ஷியைட் ஈரானையும் தங்கள் நலன்களை அடைவதில் முக்கிய தடைகளாக காண்கின்றன.

“மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட” ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை ஜேர்மனி சிரியாவிற்கு எதிரான இன்னும் ஆக்கிரோஷக் கொள்கைக்குப் பின் நிறுத்த முற்படுகிறது. “ஐரோப்பிய ஒன்றியத்தில் கருத்து வேறுபாடு என்பது, தவறான அடையாளத்தைக்காட்டி விடும்” என்று வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லே அறிவித்தார். “ஐரோப்பா இன்னும் ஒருங்கிணைந்து செயல்படுகையில், சிரியாவில் தற்பொழுதுள்ள வன்முறையை கடப்பதில் கூடுதல் செல்வாக்கைக் கொண்டிருப்போம்.”

Der Spigel அதே தினம் வெளிவந்த அறிக்கை ஒன்றின்படி, பேர்லின் ஜேர்மனியின் கூட்டாட்சி உளவுத்துறைப்பிரிவு (BND) “மருத்துவ உதவிப் போதிகளை” மீண்டும் அனுப்பும் என முடிவெடுத்துள்ளது. இதல் மருத்துவ அளிப்புக்களும் நூற்றுக்கணக்கான தோட்டா எதிர்ப்பு உடைகளும் உள்ளன; இவை சுதந்திர சிரிய இராணுவத்திற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ஒரு சில மாதங்கள் முன்புதான் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி BND ஐ இதை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தியது என்று Der Spiegel  எழுதியது.

துருக்கியும், மேற்கத்தைய ஆதரவு சிரிய எதிர்ப்பும்—சிரியாவில் நேரடி இராணுவத் தலையீட்டிற்கு ஆக்கிரோஷமாக அழுத்தம் கொடுப்பவை—ஐரோப்பிய ஒன்றியம் தடையை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. “சிரிய மக்களுக்கு எதிரான ஆயுதத்தடையை அகற்றுவதற்கு நான் உறுதியாக ஆதரவு தருகிறேன்” என்று துருக்கியின் வெளிநாட்டு மந்திரி அஹம்த் டவுடோக்லு பிரஸ்ஸல்ஸ் பேச்சுக்களில் பங்கு பெற்றபோது கூறினார்.

இஸ்தான்புல்லில் கலீல் அல் சலே, முக்கிய சிரிய எதிர்த்தரப்புக் கட்சியான தேசியக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்: “இந்த உண்மையின் கணத்திற்காகத்தான் நாங்கள் பல மாதங்களாக காத்திருந்தோம்.”

சிரிய மக்களிடம் பரந்த ஆதரவு ஏதும் இன்றி, சுன்னி இஸ்லாமியவாத எதிர்த்தரப்பு, சிரிய இராணுவத்திடம் தோல்வியைக் கண்டுவருகிறது. இராணுவம் இப்பொழுது லெபனிய ஷியா ஹெஸ்போல்லா போராளிகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. சமீபத்திய நாட்களில் சிரிய அரசாங்கம் முக்கிய மூலோபாய நகரான Qusayr ஐ மீண்டும் கைப்பற்ற தாக்குதல் நடத்துகிறது; இது லெபனிய எல்லைக்கு அருகே உள்ளது.

இப்பின்னணியில் சிரியப் போர் லெபனானுக்கும் ஈராக்கிற்கும் பரவுகையில், ஏகாதிபத்திய சக்திகள் சிரியாவிலும் முழு மத்திய கிழக்கிலும் தங்கள் தலையீட்டை விரிவாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க வெளிவிவகாரச் செயலர், ஜோன் கெர்ரி மற்றும் செனட்டர்கள் ஜோர் மக்கெயின், பாப் மெனென்டெஸ் அடங்கிய அமெரிக்க பிரதிநிதிகள் குழு லிபிய மாதிரியிலான தலையீடு வரும் என, கடந்த சனியன்று உலகப் பொருளாதார அரங்கு ஜோர்டானில் நடக்கையில் அச்சுறுத்தியுள்ளன.

அமெரிக்க செனட்டின் ஆயுதப்படைகள் மற்றும் வெளியுறவுக் குழுக்களில் உறுப்பினராக இருக்கும் மக்கெயின், ஜோடான் டைம்ஸிடம் கூறினார். “ஜோர்டானிய ஆட்சி, அதன் மக்கள், மற்றும் நிலப்பகுதியின் உறுதிப்பாட்டைக் காக்க ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க நாங்கள் தயார்; பட்ரியாட் ஏவுகணைகள் தொகுப்பு கொடுப்பது இதன் கீழ்த்தான் வருகிறது”.

ஏவுகணைகளை அனுப்பி வைத்தல் சிரியாவில் பறக்க கூடாது பகுதி நிறுவுவதற்கு “முதல் படியாக” இருக்கலாம் என்று அவர் விளக்கினார். “பட்ரியாட் ஏவுகணைகளைப் பயன்படுத்துவதின் மூலம் நாம் பறக்கக்கூடாது பகுதியை நிறுவி, செயல்படுத்தி, லிபியாவில் எதிர்த்தரப்பிற்கு போரை மாற்றியது போன்ற போக்கை ஏற்படுத்துவோம்.” என்றார்.

நேற்று மக்கெயின் குறுகிய கால பயணத்தை துருக்கியில் இருந்து சிரிவிற்குள் மேற்கொண்டார், இவருடன் FSA தலைமை இராணுவக் குழுத் தலைவர் தளபதி சலேம் இட்ரிஸும் இருந்தார்; இவர்கள் சிரியா நெடுகிலும் இருக்கும் 18 எதிர்த்தரப்பு போராளித் தலைவர்களை சந்தித்தனர். மெக்கெயினிடம் அவர்கள் கூடுதலான அமெரிக்க ஆதரவு, கனரக ஆயுதங்கள் மற்றும் சிரியா மீதான வான் தாக்குதல்கள் தேவை எனக் கோரியுள்ளனர்.

சௌதி அரேபியா, கட்டார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் என்னும் வளைகுடா முடியாட்சிகளுடன், ஜோர்டானின் ஹாஷெமைட் முடியாட்சியும் ஏகாதிபத்தியத்தின் முக்கிய மூலோபாய நட்பு நாடுகளில் ஒன்றாக இப்பிராந்தியத்தில் உள்ளது. Jewish Chronicle ல் வந்துள்ள அறிக்கை ஒன்றின்படி, ஒரு மூத்த ஜோர்டானிய அதிகாரி, ஜோர்டானிய அரசர் அப்துல்லாவிற்கு நெருக்கமானவர், ஜோர்டான் அதன் வான்வழியே இஸ்ரேலின் ஆளில்லா டிரோன் விமானங்கள் செல்ல அனுமதித்துள்ளதாகவும் அது சிரிய நிலையைக் கண்காணிக்கும் என்றும் கூறினார்.

தேவை ஏற்பட்டால், “நாம் ஜோர்டானிய வான் பகுதியை இஸ்ரேல் சிரியா மீது மற்றொரு தாக்குதல் நடத்த அனுமதிப்போம்” என்றும் அவர் கூறினார்.

கடந்த மாதம் இஸ்ரேல் ஏற்கனவே மூன்று நேரடித் தாக்குதல்களை சிரியா மீது இயக்கியது; இன்னும் மிகப் பெரிய தலையீட்டிற்குத் தயாரித்து வருகிறது.

திங்களன்று, இஸ்ரேல் ஒரு பாரிய இராணுவப் பயிற்சியை இரசாயன ஆயுதங்களை சமாளித்தல் குறித்து நடத்தியது. இது ஒரு வாரகால நாடுதழுவிய பயிற்சியின் பாகமாகும், இதன் சிறப்புப் பெயர் “Home front Eitan 1 ஆகும். இது குடிமக்களுக்கும், நெருக்கடி பணியாளர்களுக்கும் போருக்கான பயிற்சியைக் கொடுக்கிறது. இதில் ஏராளமான எண்ணிக்கையில் இஸ்ரேலை ஏவுகணைகள் தாக்கினால் என்ன செய்வது என்ற பயிற்சி இருக்கும்.