சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

More questions about MI5’s relations with Woolwich killers

M15 ன் வுல்விச் கொலைகாரர்களுடனான உறவுகள் பற்றிக் கூடுதல் வினாக்கள்

By Julie Hyland 
29 May 2013

use this version to print | Send feedback

பாதுகாப்புப் பிரிவுகள் தென்கிழக்கு லண்டன் வுல்விச்சில் ட்ரம் வாசிக்கும் லீ ரிக்பியைக் கொன்ற இரு கொலைகாரர்களுடன் கொண்டிருந்த பரிச்சயம் குறித்து வினாக்கள் தொடர்ந்து குவிகின்றன.

வுல்விச்சில் பொதுநெடுஞ்சாலையில் இராணுவ முகாம்களுக்கு அருகே ரிக்பி கொலையுண்டார். அவரைக் கொன்றவர்கள், மைக்கேல் அடெபோலஜோ, மற்றும் மைக்கேல் அடெகோவலே இருவரும் இடத்தை விட்டு தப்பியோட முயலவில்லை; மாறாக பொதுமக்களிடம் பேசினர், தங்கள் மிருகத்தனத் தாக்குதலை நியாயப்படுத்தி வீடியோ அறிக்கைகளை வெளியிட்டனர், அது பிரித்தானிய இராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களைக் கொல்வதற்கு பழிவாங்கும் செயல் என நியாயப்படுத்தினர்.

பல நாட்களுக்கு செய்தி ஊடகமும் அரசியல் உயரடுக்கும் அவர்களுடைய கொடூரத் தாக்குதல்கள் பிரித்தானிய வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடையது என்பதை மறுக்க முற்பட்டன. ஆரம்பத்தில் அவையும், இருவரும் பாதுகாப்புப் படையினருக்கு தெரிந்தவர்கள் என்பதை மறுத்தனர், அவர்களை “தூய தோல் உடையவர்கள்” எனச் சித்தரித்தனர்.

இது விரைவில் மாறி வெளிப்பட்டது. இருவரும் பல ஆண்டுகளாக கண்காணிப்பில் இருந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது—அடெபோலஜோவைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 2005ல் இருந்து எனத் தெரிகிறது. இதைத்தவிர, வார இறுதியில், கென்ய அதிகாரிகள் நவம்பர் 2010ல் அடெபோலஜோவை எல்லை கடந்து சோமாலியாவிற்கு செல்ல முயற்சிக்கும் குழு ஒன்றில் இருப்பவர் எனக் காவலில் வைத்ததை ஒப்புக் கொண்டது; அக்குழு அல் குவேடா பிணைப்புடைய அல்-சஹாபாப் (al-Shabaab) ஆகும்.

ஓர் அறிக்கையில் கென்ய அரசாங்கம் Michael Olemindis Ndemolajo என்ற பெயரில் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் பிரித்தானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்; அதன் பின் “அவர் லண்டனுக்கு சென்றிருக்க வேண்டும். கென்ய அரசாங்கம் பிரித்தானிய அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தபின் நடந்தவற்றிற்குப் பொறுப்பேற்க முடியாது.”

அடெபோலஜோவின் கைது பற்றிய விவரங்கள், முதலில் பிபிசியின் கடந்த வார நியூஸ்நைட் நிகழ்வுப் பேட்டி ஒன்றில் அடெபோலஜோவின் நெருக்கமான நண்பரான அபு நுசய்பா கொடுத்தபின் வெளிச்சத்திற்கு வந்தது. அவர், கென்னியாவில் அடெபோலஜோ கைது செய்யப்பட்டு, ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன் உடல்ரீதியாகவும் பாலியலளவிலும் சித்திரவதை செய்ய்பட்டார் என்றார். அவர் திரும்பி வந்தபின், M15 பலமுறை அடெல்போஜோவை அணுகியதாகவும் அவரை ஐக்கிய இராச்சியத்தில் இருக்கும் ஜிஹாதிக் குழுக்களில் ஊடுருவ வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கூறினார்.

ஓர் அசாதாரணமான முறையில், நுசய்பா புலனாய்வுத்துறை அதிகாரிகளால் அவருடைய பேட்டி பதிவு செய்யப்பட்டு முடிந்தவுடன் பிபிசி ஸ்டூடியோவில் வைத்து கைது செய்யப்பட்டு, குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுக்களில் காவலில் உள்ளார்.

ITV News இடம் பேசிய நுசய்பா கொடுத்த குறிப்பு அடெபோலஜோவின் மனைவியின் சகோதரரால் உறுதிப்படுத்தப்பட்டது. கென்யாவில் இவருடைய கைது பற்றிக் கேள்விப்பட்டவுடன், குடும்பம் “பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டது, அடிப்படையில் அவர்கள் எதையும் செய்ய மறுத்துவிட்டனர், கென்யர்கள் அவரை தலையை சீவி கொல்லப் போவதாகக் கூறினர்,” என்றார். “அவர் சித்திரவதை செய்யப்பட்டார் ... வன்முறை பயன்படுத்தப்பட்டது, பாலியல் ரீதியாவும் என்பதற்கு எங்களிடம் தெளிவான நிரூபணம் உண்டு.”

திரும்பியபின், அடெபோலஜோ மாறிவிட்டு, “அதிகம் அமைதியாகவும் கசப்புணர்வுடனும் எவரிடம் இருந்தும் தனக்கு உதவி கிடைக்கவில்லை என்ற உண்மை பற்றி இருந்தார்” என்று அவருடைய மனைவியின் சகோதரர் தொடர்ந்தார். “பிரித்தானிய அதிகாரிகள் அவர்கள் செய்ததைவிட முற்றிலும் எதிரிடையாகத்தான் செய்தனர். அவர்களுக்கு உதவி தேவை என்றால் [ஜிஹாதிஸ்ட்டுக்கள் பற்றிய தகவல்], அவருக்கு முதலில் ஆதரவை கொடுத்திருக்க வேண்டுமல்லவா?”

பாதுகாப்புப் பிரிவினர் அடெபோலஜோவை அவர்களுக்காக உழைக்க அணுகினர், என்று அவருடைய மனைவியின் சகோதரர் தொடர்ந்தார். “அவர்களுக்காக ஒற்றுவேலை பார்ப்பாரா என்று அவரை வெளிப்படையாகக் கேட்டனர். ... ஒருவேளை நீங்கள் எதிர்பார்க்கலாம், ‘நீங்கள் கென்யா பற்றிக் கூறமுடியுமா, நாங்கள் உங்களுக்கு ஏதேனும் செய்ய முடியுமா?’ என அவர்கள் கூறுவர் என்று. ஆனால் மாறாக அவர் உளரீதியான பாதிப்பில் இருந்து மீள முயன்ற நிலையில் அவர்கள் அடிப்படையில் பல ஆண்டுகளாக துன்புறுத்தினர்.”

M15 அடெபோலஜோவை துன்புறுத்தியது” என்னும் குற்றச்சாட்டுக்கள் கார்டியனுடைய ஆதரவையும் கொண்டுள்ளது; அது, கடந்த ஆண்டு Adebolajo சில வக்கீல்களை பார்த்து பாதுகாப்புப் பிரிவினரின் துன்புறுத்தல் பற்றிப் புகார் கூறியதை குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இண்டிபென்டன்ட் கருத்துப்படி, அவர் கென்ய அதிகாரிகளால் காவலில் வைத்திருக்கப்பட்டிருக்கையிலே பிரித்தானியாவின் பாதுகாப்புப் பிரிவினர், அடெபோலஜோவை “சேர்த்துக்கொள்ள முயன்றனர்”. வெளியுறவு அலுவலகம் அவருக்கு “தூதரக உதவி அளிக்கப்பட்டது, பொதுவாக பிரித்தானியக் குடிமக்கள் காவலில் இருப்பதுபோல் அளிக்கப்படுவதுதான்.” என்று உறுதிப்படுத்தியது.

அடெபோலஜோ பல நாட்கள் மோம்பாசாவில் காவலில் இருந்தார். நீதிமன்றத்தில் தோன்றியபோது அவர் கடுமையாக நடத்தப்பட்டது குறித்துப் புகார் கூறினார்; அதில் பலநாட்கள் உணவு அளிக்கப்படாததும் அடங்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இன்டிபென்டன்ட் கூறுபவை உண்மையானால், பிரித்தானிய அதிகாரிகளுக்கு அவர் தவறாகப் பயன்படுத்தப்படுவது நன்கு தெரியும், அதை நிறுத்த ஏதும் செய்யவில்லை. பாதுகாப்புப் பிரிவினர் அவரை சேர்த்துக்கொள்ள முயன்றனர் என்ற குற்றச்சாட்டுக்கள் இருக்கையில், அத்தகைய தவறான நடவடிக்கை அவரின் உறுதியைக் குலைத்து இவர்கள் அணுக வாய்ப்பைக் கொடுக்கும் என்று நம்பியிருக்க வேண்டும்.

கென்யாவில் அவருடைய சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, அடெபோலஜோ தொடர்ந்த விசாரணை ஏதும் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்கு திரும்பினார். இன்டிபென்டன்ட்Whitehall ஆதாரங்களை” மேற்கோளிட்டு அடெபோலஜோ “கடந்த ஆண்டு இரண்டாம் முறை சோமாலியாவிற்கு பயணிக்க முற்பட்டார், ஆனால் மீண்டும் கென்யர்களால் கைது செய்யப்படுவார் என எச்சரித்து M15 அவரை நிறுத்தியது”.

இத்தகைய குறிப்புக்கள், எட்டு ஆண்டு கண்காணிப்பு இருந்தபோதிலும்கூட, இரு முறை அவர்  பயங்கரவாத தொடர்புடைய செயல்களில் தீவிரமாக ஈடுபட தன்னை அர்ப்பணித்துக்கொள்ள முன்வந்தார் என்ற கூற்றை மறுக்கிறது. அடெபோலஜோ “ஒரு ஒதுங்கி நின்ற நபர்” அல்லது “ஆபத்து அற்றவர்” எனக் கருதப்பட்டார். இக்கூற்றும் சந்தேகத்திற்கு உரியது, ஏனெனில் ஆளும் உயரடுக்கு தொடர்ந்து சோமாலியாவில் பயங்கரவாதச் செயல்கள் ஒரு பெரும் அச்சுறுத்தல் என மேற்கோளிட்டுள்ளது; அதையொட்டி பிரித்தானிய ஈடுபாடு வறிய ஆபிரிக்க நாட்டில் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளது.

மே 7ம் தேதி தான் பிரதம மந்திரி காமெரோன் இரண்டாம் “ஐக்கிய இராச்சிய-சோமாலிய மாநாட்டை” லண்டனில் கூட்டினார். அதில் அவர் சோமாலியா மீது அக்கறை உண்டு, “ஏனெனில் இளம் உள்ளங்கள் தீவிரவாதத்தால் நச்சுட்டப்படுகின்றன, அவர்கள் பயங்கரவாதத்தையும், தீவிரவாதத்தையும், இறக்குமதி செய்கின்றர், உலகின் பாதுகாப்பே மொத்தமாக இடரில் உள்ளது” என்றார்.

அடெபோவலேயை பொறுத்தவரை, ஒரு 12 வயது பள்ளிச் சிறுவனை ஜிஹாதிய அரசியலில் ஈடுபடுத்த முயன்றதற்காக உள்ளூர் கடைக்காரர் ஒருவரால் சமீபத்தில் பொலிசில் புகார்கொடுக்கப்பட்டது, என்று Sky News வெளிப்படுத்தியுள்ளது. பெயரை வெளியிட விரும்பாத கடைக்காரர் அடெபோவலே பாதுகாப்புப் பிரிவுகளின் கண்காணிப்பில் உள்ளார் என்றும் அவருடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன என்றும் கூறினார்.

வுல்விச் கொலைகாரர்களுடன் M15 தொடர்பின் பரப்பு மறைக்கப்படுகையில், கொடூரக் கொலை தோற்றுவித்த வெறுப்புணர்வு, சிவில் உரிமைகள் இன்னும் தாக்கப்படுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கூட்டுத் தண்டனை வடிவத்தைக் கொண்ட இத்தாக்குதலின் பரந்த நோக்கம் அனைத்து உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருந்தபோதிலும்கூட, முஸ்லிம்களை தாக்கும் இலக்கைக் கொண்டுள்ளது.

உள்துறைச் செயலர் Theresa May "பிரிட்டிஷ் முஸ்லிம்கள் தீவிரமயமாதலை" தடுக்க நடவடிக்கைகள் புதியவற்றை நிர்ணயித்தார்; இவற்றுள் இணைய தளம் “முதலே தடுத்து” தணிக்கைக்கு உட்படும், தீவிர முஸ்லிம் குழுக்கள் தடைக்கு உட்படும், அவை பயங்கரவாதம், வன்முறையைக் கைவிட்டாலும் மற்றும் பேச்சுரிமை பாதிக்கப்படும், குறிப்பாக பல்கலைக்கழக வளாகங்களில் இவை அடங்கும்.

துல்லியமான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் எடுக்க இருக்கும் நடவடிக்கைகளின் தன்மை முடிவற்று இருக்கும் என்ற குறிப்பு உள்ளது. “இணைய தளத்தின் மூலம் மக்கள் காணும் விடயங்கள் தீவிரமயமாதலுக்கு வழிவகுக்கலாம் என்பதில் சந்தேகம் இல்லை” என May வாதிட்டார்.

தான் தகவல் தொடர்பு சட்டவரைவை புதிப்பிக்க இருப்பதாக May தெளிவுபடுத்தினார்; இது “பதுங்கிச் செயல்படுவோர் பட்டயம்” என்று கேலி செய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அது அனைத்து மின்னணு தகவல் தொடர்பை இடைமறிக்க போலீஸ், பாதுகாப்பு சேவைகள் மற்றும் அதிகாரிகளுக்கு பரந்த அதிகாரங்களைக் கொடுக்க முற்படுகிறது

குடியுரிமை சுதந்திர அரைப்புக்கள் மற்றும் அதன் கூட்டணியில் இருக்கும் தாராளவாத டெமக்ராட்டுக்களின் பிரிவுகள் எதிர்ப்புத் தெரிவித்தபின் கன்சர்வேடிவ் கட்சி சட்டவரைவில் இருந்து பின்வாங்க நேர்ந்தது. ஆனால் இரண்டு முன்னாள் தொழிற் கட்சி உள்துறை மந்திரிகள் ரீட் பிரபு மற்றும் ஆலன் ஜோன்சர் ஆகியோர் நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்; முன்னாள் கன்சர்வேடிவ் உள்துறை மந்திரி ஹோவர்ட் பிரபு காமெரோனையும் மேயையும் சந்தித்து தொழிற் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து பாராளுமன்றத்தில் நடவடிக்கைகளை இயற்ற அழைப்பு விடுத்தார்.