சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Hugo Chavez and socialism

ஹ்யூகோ ஷாவேஸும் சோசலிசமும்

Bill Van Auken
8 March 2013

use this version to print | Send feedback

ஜனாதிபதி ஹ்யூகோ ஷாவேஸின் உடலை இராணுவ பயிற்சி நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக ஆயிரக்கணக்கான வெனிசுவேலிய மக்கள் கராகசின் வீதிகளில் நிரம்பிவழிந்தனர். இந்த இராணுவ பயிற்சி நிலையத்தில் தான் அவர் தன்னுடைய தொழில் வாழ்கையை ஆரம்பித்திருந்தார். இன்றைய இறுதி மரணச்சடங்குகள் வரை அவரது உடல் அங்கே வைக்கப்பட்டுள்ளது.

அந்த முன்னாள் பாரசூட்பிரிவு லெப்டினன்ட் கேணல் 14 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருக்கு காட்டப்படும் உணர்ச்சிமிகு வெளிப்பாடு, மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், மறுப்பதற்கிடமின்றி அவரது ஆட்சியில் நாட்டிலிருந்த மிகவும் வறிய பிரிவினரின் சமூக நிலைமையில் வளர்ச்சியைக் கொண்டு வந்ததற்கான பரந்த ஆதரவை எடுத்துக்காட்டியது. இதில் இன்றும் இலத்தீன் அமெரிக்காவின் சராசரிக்கு அதிகமாக உள்ள வறுமை விகிதத்தைப் பாதியாக குறைத்ததும் உள்ளடங்கும்.

வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகம் ஒரு கவனமான அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், ஷாவேஸின் மரணம் ஒரு சவாலான காலகட்டம் என்றும் காரகாஸில் தலைமை மாற்றம் வெனிசுவேலிய அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான உறவை வளர்க்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

காங்கிரசில் குடியரசுக் கட்சித் தலைவர்கள் வெளிப்படையாக வெனிசுவேலியத் தலைவரின் மரணம் குறித்து மகிழ்ந்தனர். சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் எட் ரோய்ஸின் பிரதிபலிப்பு இதற்கு உதாரணமாகும்; இந்தச் சர்வாதிகாரி மறைந்தது நல்ல விடயமே என்று அவர் அறிவித்தார்.

ஷாவேஸின் தேசியவாத பகட்டாரவாரங்களான நாட்டின் நீண்டகால எண்ணெய் வளத்திலிருந்து வந்த வருமானங்களை சமூக உதவி திட்டங்களுக்கு அவரது அரசாங்கம் திருப்பிவிட்டமை மற்றும் சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்திக் கொண்டமை ஆகியவை வாஷிங்டன் மற்றும் வெனிசுவேலாவில் இருந்த ஒரு பாசிச ஆளும் வர்க்க பிரிவை வெறுத்தவர்களை இவர் பக்கம் திரும்பச்செய்தது. எவ்வாறிருந்த போதினும், இவை அவரும் அவரது போலி-இடது ஆதரவாளர்களும் கூறிக்கொண்டதைப் போல, சோசலிசத்திற்கான ஒரு பாதையைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

ஷாவேஸ் ஒரு முதலாளித்துவ தேசியவாதியாவார். அவரது அரசாங்கம், அவர் எங்கிருந்து வந்தாரோ அந்த இராணுவத்தின் மீது பலமாக தங்கியிருந்ததுடன், அது வெனிசூலா அரசின் விவகாரங்களில் முக்கிய ஒழுங்குபடுத்துவராக தொடர்ந்தும் சேவை செய்து வந்தது.

நாட்டின் வறிய மக்களை படுகொலை மற்றும் சித்திரவதை வழிமுறைகளை கொண்டு கையாள விரும்பிய வெனிசுவேலாவின் ஒரு பிற்போக்குத்தனமான தன்னல அடுக்குகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட போதினும், ஷாவேஸின் இலட்சியங்கள், அல்லது திட்டங்களான வாழ்க்கை தரங்கள், வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை முன்னேற்றுவது இலாப நலன்களுக்கு எவ்விதத்திலும் குழிபறிக்கவில்லை.

தனியார்துறை நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துதலும் மற்றும் தேசிய வருமானத்தின் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு செல்லுதல் என்பதற்குப் பதிலாக முதலாளிகளுக்கு செல்லுதல் என்பவையும்  ஷாவேஸ் பதவியேற்பதற்கு முன் இருந்ததைவிட அவரின்கீழ் அதிகமாயின. ஒரு முழு ஆளும் புதிய அடுக்கு (boliburguesia என அழைக்கப்பட்டது) ஷாவேஸிசத்திலும் (chavismo) படர்ந்திருந்தது. இத்தட்டு, அரசாங்க ஒப்பந்தங்கள், ஊழல், நிதிய ஊகம் ஆகியவற்றினால் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டது.

இதற்கிடையில் பொலிவேரியன் புரட்சி ஏகாதிபத்தியத்தில் தங்கியிருப்பதும் மற்றும் அதனால் ஒடுக்கப்பட்ட ஒரு தேசம் என்ற வெனிசுவேலாவின் நிலைமையை மாற்ற எதுவும் செய்யவில்லை. நாட்டின் பொருளாதாரம் இன்னமும் எண்ணெய் ஏற்றுமதியைத்தான் முற்றிலும் நம்பியுள்ளது (அதிக பங்கு அமெரிக்காவிற்குச் செல்லுகிறது). இதைத்தவிர மூலதனமும் மற்றும் நுகர்வோர் பொருட்களும் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஷாவேஸ் பகிரங்கமாக செல்வந்தர்கள், சலுகை பெற்றவர்களுடைய ஆதரவை நாடி, அவருடைய கொள்கைகள் சமூக அமைதி மற்றும் உறுதியை வளர்க்கின்றன என்றும் உள்நாட்டுப் போர் என்னும் ஆபத்தைத் தவிர்க்கின்றன என்றும் வலியுறுத்தினார்.

ஒரு தெளிவாக வரையறுக்கப்படாத 21ம் நூற்றாண்டு சோசலிசம் என்னும் இடது வார்த்தைஜாலத்தை தன்னுடைய கொள்கைகளை முன்னெடுக்க ஷாவேஸிற்குப் போதுமான காரணங்கள் இருந்தன. முதலிலும் முக்கியமானதுமாக இதன் நோக்கமானது வெனிசுவேலியத் தொழிலாளர்களின் போர்க்குணத்தை திசைதிருப்பி அடக்குவதாகும். அவர்களுடைய போராட்டங்கள் ஓரளவிற்கு ஆளும் வெனிசுவேலியா ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி (PSUC) மற்றும் அத்துடன் இணைந்துள்ள பொலிவேரியன் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறிச்செல்ல முயன்றால் பல தடவைகள் இப்போராட்டங்கள் எதிர்ப்புரட்சி என முத்திரையிடப்படுகின்றன.

ஆனால், கடந்த காலத்தில் தங்களை ட்ரொட்ஸ்கிசவாதிகள் என்று காட்டிக் கொண்ட அமைப்புக்களும் தனிநபர்களும் உட்பட சர்வதேசப் போலி இடதுகளின் முழுப்பிரிவினரும், இந்த சோசலிச வார்த்தைஜாலங்களுக்கு நம்பகத்தன்மை கொடுக்க முற்பட்டனர். இது உதாரணமாக ஷாவேஸ் ஓர் ஐந்தாம் அகிலத்திற்கு அழைப்பு விடுத்ததைப் பாராட்டும் அளவிற்கு மிக கேலிக்கூத்தான தரங்களை அடைந்தது. நவம்பர் 2009ல் காரகாஸில் இடது கட்சிகள் கூட்டம் ஒன்றில் இக்கருத்து ஒரு பொருத்தமற்ற உரையில் வெளிப்பட்டது. அக்கூட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரேசிலிய தொழிலாளர்கள் கட்சி, ஆர்ஜென்ரீனாவின் பெரோனிச Partido Justicialista, மெக்ஸிக்கோவின்  PRI ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கு பெற்றிருந்தனர்.

பப்லோவாத அகிலம் (Pabloite international) மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் முக்கிய உறுப்பினரான பிரான்சுவா சபடோவின் பிரதிபலிப்பு சரியான உதாரணம் ஆகும். இக்கூட்டமானது இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல், உலகம் முழுவதும் உள்ள வலதுசாரி, தொழிலாள வர்க்க எதிர்ப்பு ஆளும் கட்சிகளை  எதிர்க்கும் முக்கிய அமைப்பாக கொண்டுவரும் என்றார். மேலும் அரசியல் வேறுபாடுகள் கடக்கப்படலாம் என்றும், வித்தியாசமான போக்குகளில் வரலாற்று இருப்புநிலைக் குறிப்புக்களை விவாதிக்கத் தேவையில்லை என்றும் வலியுறுத்தினார்.

இத்தகைய இருப்பு நிலைக் குறிப்புக்கள் மட்டுமே தன் நீண்ட, சோகம் ததும்பிய வரலாற்று அனுபவத்தை, குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் அப்பட்டமாக எடுத்துக்காட்ட முடியும். போலி அரசியல்வாதியான சபடோ போன்றவர்கள் முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளை புரட்சிகரமானது, சோசலிஸ்ட் என்று சித்தரித்து, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை அவற்றிற்கு அடிபணியவைத்தனர்.

1970களில் Nahuel Moreno இனால் தலைமை தாங்கப்பட்ட அரசியல் போக்கானது ஆர்ஜென்டினாவின் தொழிலாள வர்க்கத்தை பெரோனிசம், காஸ்ட்ரோயிசம் இரண்டிற்கும் அடிபணியவைக்கும் வடிவத்தை எடுத்து 1976 காட்டுமிராண்டித்தன இராணுவ ஆட்சி மாற்றத்தின்போது அதை அரசியல்ரீதியாக நிராயுதபாணியாக்கிவிட்டது. இதேபோன்ற பங்குதான் 1971ல் பொலிவியாவில் Guillermo Lora உடைய கட்சி இடது தளபதியான J.J. Torresஐ பொறுத்தவரை கொண்டிருந்தது. அவருடைய ஜனாதிபதி பதவிக்காலம் ஜெனரல் Hugo Banzer இன் வலதுசாரி இராணுவ ஆட்சிசதியால் முடிவுற்றது.

இதேபோன்ற அடிபணிவுகள் பெருவில் ஜெனரல் Velasco Alvarado, பனாமாவில் ஜெனரல் Omar Torrijos ஆகியோரின் ஆட்சியாலும் செய்யப்பட்டன. இவை இந்நாடுகளில் கண்டம் முழுவதும் காஸ்ட்ரோயிசம், குவேராயிசம் ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்று தொழிலாள வர்க்கத்தின் காட்டிக் கொடுப்புக்களுக்கு வழிவகுத்து அவற்றை தோல்விக்கு இட்டுச்சென்றன.

ஷாவேஸிசத்திற்கு இன்றைய போலி இடதுகள் சோசலிச வண்ணங்களை தீட்டுவது, இந்த வரலாற்றுப் படிப்பினைகளை எடுத்துக்கொள்ள தவறியதில் மட்டுமல்லாது, ஆழமாக வேரூன்றிய வர்க்க நலன்களில் தங்கியுள்ளன. இவை ஷாவேஸின் 21ம் நூற்றாண்டு சோசலிசம் என்பதின்பால் ஈர்க்கப்படுவதற்குக் காரணம் ஒரு சோசலிச மாற்றம் என்பது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டி அதிகாரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொள்ளும் சுயாதீன, முழு நனவுடனான போராட்டத்தின் மூலம்தான் என்ற மார்க்சிச கருத்தாய்விற்குக் அவர்கள் கொண்டுள்ள துல்லியமான விரோதப் போக்காகும். மாறாக, இக் குட்டி முதலாளித்துவ அரசியல் பிரிவுகள் முதலாளித்துவத்தை புரட்சியில் இருந்து பாதுகாப்பதை வரையறுக்கும் மேலிருந்து கீழாக மக்களை ஈர்க்கும் தளபதியால் சுமத்தப்படும் ஒரு கொள்கையால் ஈர்க்கப்படுகின்றன. இந்த அடுக்குகள் 1960களிலும் 1970களிலும் காஸ்ட்ரோயிசத்திற்கு அடிபணிந்திருந்த உச்சகட்டத்திற்கு பின் மிகவும் வலதுபக்கம் நகர்ந்து விட்டன. உண்மையில் அவருடைய இறப்பிற்கு முன், ஷாவேஸைப் பாராட்டியவர்களில் சிலர் அவருக்கு எதிராகத் திரும்பினர். ஏனெனில் தம்மை ஏற்கெனவே ஏகாதிபத்தியத்துடன் அரவணைத்துக்கொண்டுள்ள லிபியாவிலும் சிரியாவிலும் ஆட்சிமாற்றத்திற்கான அமெரிக்க போர்களுக்கு அவர் தனது எதிர்ப்பை காட்டியதாலாகும்

ஷாவேஸ் இல்லாத ஒரு புதிய ஷாவேஸிசத்தை அமைக்கும் பரந்த முயற்சிகளின் உடனடி தலைவிதி எப்படி இருந்தாலும், வெனிசுவேலாவிலும் இலத்தீன் அமெரிக்கா முழுவதும் வர்க்கப் போராட்டம் ஆழமடையும் உலக முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பால் தீவிரமடையும். இதில் முக்கிய பிரச்சினை முதலாளித்துவத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பாகமாக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலுக்கு போராட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை ஒரு புதிய, சுயாதீனமான புரட்சிகரக் கட்சிகளாக கட்டமைப்பதுதான்.