சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Statement by the Socialist Equality Party of Germany (PSG) and the editorial board of the World Socialist Web Site

Opel workers: Vote no on the contract!

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) மற்றும் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுவின் அறிக்கை

ஓப்பல் தொழிலாளர்களே: ஒப்பந்த வாக்கெடுப்பில் “வேண்டாம்” என வாக்களிக்கவும்

15 March 2013

use this version to print | Send feedback

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் அனைத்து ஓப்பல் தொழிலாளர்களையும், முக்கியமாக IG Metall தொழிற்சங்க அங்கத்தவர்களையும், “Master Agreement” உறுதியாக நிராகரிக்குமாறு அழைப்பு விடுகிறது.

GM-Opel நிர்வாகத்திற்கும் IG Metall மற்றும் இணைந்த தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கும் இடையே வந்துள்ள “Master AgreementDrive 2022” எனப் பெயரிடப்பட்டுள்ள உடன்பாடு பல ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்க வைக்கும் நோக்கத்துடன் போஹும் ஆலை மூடப்படுவதை செயல்படுத்தவும் உள்ளது.

ருஸ்ஸல்ஸ்ஹெய்ம், ஐசனாக், கைசர்ஸ்லௌடர்ன் ஆகிய இடங்களில் உள்ள நிறுவனத்தின் ஆலைகள் உற்பத்தியை தக்கவைத்துக் கொள்வதற்கான உறுதிப்பாடு தெளிவற்றதாகவும், நுட்பமற்றதாகவும் உள்ளது. முன்வைக்கப்படும் ஒப்பந்தம் ருஸ்ஸல்ஸ்ஹெய்ம், ஐசனாக் ஆகியவற்றில் 2015க்குப் பின் குறைந்தப்பட்சம் 2 புதிய மாதிரிகள் தயாரிப்பிற்கு ஒதுக்கப்படலாம்எனக் கூறுகிறது. கைசர்ஸ்லௌடர்ன் இற்காக திட்டமிடப்படுவது ஒரு அபிவிருத்தித் திட்டத்தின் பகுதியாக ஒரு உள்ளடங்கிய மூலோபாயம்ஆகும்.

ஒப்பந்தத்தில் உள்ள ஒரே உறுதியான விடயங்கள் பின்வரும் இரண்டு பிரச்சினைகளுடன் தொடர்புடையவையாகும். அதாவது போஹும் ஆலை மூடல் மற்றும் தொழிலாளர்களுடைய வருமானங்களில் பாரிய வெட்டுக்கள் ஆகும்.

போஹுமை பொறுத்தவரை, ஒப்பந்தம் கூறுகிறது: “GM Opel குழுவின் தற்போதைய திட்டத்தின்படி, 2016 முடிவிற்குப் பின் வாகன உற்பத்தியின் நிறுத்தத்திற்குப் பதிலாக ஏதேனும் தொடர்ந்த தயாரிப்பு இருக்கும் என்பது அநேகமாக சாத்தியமற்றது.” “2016 இன் இறுதிக்குபின் சாத்தியமில்லைஎன்பதில் 2014 இலேயே போஹுமில் உற்பத்தி நிறுத்தப்படலாம் என்னும் புதுப்பிக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் அடங்கியுள்ளது.

போஹும் உற்பத்தி 2016 முடிவிற்குப் பின் வாகன உற்பத்தி நிறுத்தப்பட்ட பின்னும் திறந்திருக்கும் என்னும் உணர்வைத் தோற்றுவிப்பதற்கு இவ் ஒப்பந்தம், “மாற்று வழிவகைபற்றிக் குறிப்பிடுகிறது. இந்த மாற்று வழிவகை ஓப்பலினால் ஒழுங்கமைக்கப்படவோ அல்லது நிதியளிக்கப்படவோ மாட்டாது. மாறாக மாநில நிர்வாகமும் உள்ளூர் நிர்வாகமும் போஹும் முன்னோக்கு 2022” ஐ மார்ச் 31, 2013க்கு முன்னதாக தயாரிக்கும் என்று கூறுகிறது.

இதற்கிடையில் போஹுமில் வேலை வெட்டுக்கள் உடனடியாக ஆரம்பிக்கின்றன. ஆலையில் மூன்றாம் பணிமுறை இன்னும் இரண்டு வாரங்களில் ஏப்ரல் ஆரம்பத்தில் அகற்றப்பட உள்ளது. இது 700 வேலைகளைக் குறைத்து விடும். “தாமாகவேபோதுமான அளவு தொழிலாளர்கள் வேலையை விட்டு நீங்கத் தயாராக இல்லை என்றால், அவர்கள் அடுத்த ஆண்டு இறுதியில் பணிநீக்கம் செய்யப்படுவர். இன்னும் 2,000 தொழிலாளர்கள் 2016 அளவில் தங்கள் வேலைகளை இழப்பர். ஊதிய அதிகரிப்புக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும். வழமையான ஒப்பந்தத்திற்கு மேலதிகமாக வழங்கப்படும் கொடுப்பனவுகள் அகற்றப்பட்டுவிடும்.

Master Agreement இன் நோக்கம் ஓப்பலின் போஹும் ஆலை மூடுவதைச் செயல்படுத்துவது ஆகும். எனவே இது நிராகரிக்கப்பட வேண்டும்!

ஓப்பல் நிர்வாகிகளும் அவர்களுடைய இணை மேலாளர்களான IG Metall  தொழிற்சங்க அதிகாரிகளும் போஹும் மூடலை ஒரு முன்னுதாரணமாக காட்ட முயல்கின்றனர். அதன் போர்க்குணத்திற்காக புகழ்பெற்ற தொழிலாளர் பிரிவு மண்டியிடச் செய்யப்படுகிறது. திட்டமிடப்பட்டுள்ள ஆலை மூடல் கார்த்தயாரிப்புத் துறையில் புதிய தொடர்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துவைக்கும். அவை தற்போதைய Master Agreement மற்றும் ஓப்பல் நிர்வாகம் கூறும் முடிவுகளுக்கும் அப்பால் செல்லும்.

GM Opel  இற்கு இது ஒரு கொள்கைப் பிரச்சினை ஆகும்! சர்வதேச நிதிய மற்றும் பொருளாதார நெருக்கடியின் செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட வேண்டும்.

IG Metall மற்றும் அதன் தொழிற்சாலை தொழிலாளர் குழு, வேலை இழப்புக்கள், ஆலை மூடல்கள் மற்றும் ஊதியக் குறைப்புக்கள் ஆகியவை கார்த்தயாரிப்பு தொழில்துறையின் தற்போதைய நெருக்கடி மற்றும் சர்வதேச போட்டித் தன்மையில் தவிர்க்க முடியாதவை என்றும் வாதிடுகின்றன. இந்த வாதம் தவறானது, நிராகரிக்கப்பட வேண்டும்.

பிரச்சினை கார்த்தயாரிப்புத் தொழிலின் கட்டுமான நெருக்கடி அல்ல  மாறாக இது அனைத்துத் தொழிலாளர்கள் மீதான பொதுத் தாக்குதலின் விளைவாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மன் அரசாங்கம் நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை வங்கிகளுக்கு கொடுத்து அவற்றை அவற்றின் சொந்த குற்றம்சார்ந்த ஊக நடவடிக்கைகளின் விளைவுகளில் இருந்து காப்பாற்றியது. இப்பொழுது அப்பணம் தொழிலாளர்களின் இழப்பில் இருந்து வசூலிக்கப்படுகிறது. கிரேக்கத்தில் ஆரம்பித்து, ஐரோப்பாவில் கடந்த 65 ஆண்டுகளில் தொழிலாளர்களால் அடையப்பட்ட சமூக நலன்கள் அனைத்தையும் தகர்க்கும் ஒரு திட்டமிட்ட தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

செல்வந்தர்களின் செல்வம் விரைவில் பெருகியுள்ளதை போலவே வறுமையும் பெருகியுள்ளது. பங்குச் சந்தையில் பங்குகளில் விலைகள் மிக உயர்ந்த அளவிற்குச் சென்றுவிட்டன. கார்த்தொழிலில் நெருக்கடி என்பது பலரும் ஒரு காரை வாங்க இயலா நிலைமை ஏற்பட்டுள்ளதின் நேரடி விளைவு ஆகும். இந்த நெருக்கடி ஓப்பல் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி மண்டியிட வைக்கவும், அலையென பணிநீக்கங்கள், ஆலை மூடல்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படுகிறது. ஓப்பல் நிர்வாகத்திற்கு முதலாளிகள் சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் முழு ஆதரவும் உள்ளது.

ஓப்பல் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்கு எழுந்துநின்று போராட வேண்டும். இதன் பொருள் முதலாளித்துவ அமைப்புமுறையின் தர்க்கத்தை நிராகரித்து, சந்தையில் போட்டியிடுவதற்காக சுமத்தப்படும் பாதிப்புக்களை மீறி, அடிப்படையானதும், பிரிக்கமுடியாததுமான  உரிமைகளான வேலைகளையும், நியாயமான ஊதியங்களையும் பாதுகாத்தலாகும்.

இலாப நோக்கு அமைப்புமுறையின் கட்டமைப்பினுள் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதல்ல பிரச்சினை. நிறுவனத்தின் நிர்வாகிகளும் அவர்களுடைய இணை மேலாளர்களாக தொழிற்சங்கத்தில், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களில் இருப்பவர்களும் தற்போதைய நிலையில் வேலைகள், ஊதியங்களை தக்க வைத்தல் முடியாது என அறிவிக்கையில், அவர்கள் முதலாளித்துவம் மக்களின் அடிப்படைத் தேவைகள், நலன்களுடன் இயைந்திருக்காது என்பதைத்தான் ஒப்புக் கொள்கின்றனர்.

பெருவணிகம் மற்றும் வங்கிகளின் இலாபக் கோரிக்கைகளுக்காக என்பதைவிட மக்களுடைய தேவைகளுடன் ஆரம்பிக்கும் அரசியல் முன்னோக்கத்தின் அடிப்படையில்தான் வேலைகள் பாதுகாக்கப்பட முடியும். அதாவது ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில். நவீன கார்த்தயாரிப்புத் துறையின் தன்மை அத்தகைய போராட்டத்திற்கு ஒரு சர்வதேச மூலோபாயம் தேவை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

IG Metall உடைய கொள்ளைக்கார வழிமுறைகளை எதிர்ப்பது முக்கியமாகும். இந்த அதிகாரத்துவ அமைப்பு அனைத்து ஆற்றலையும் கொண்டுள்ளது என நினைக்கிறது. ஏனெனில் அதன் தலைவர்கள் ஜேர்மன் அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்களில் இயக்குனர் குழுக்கள் மற்றும் அலுவலகங்களில் வரவேற்கப்பட்டு அவர்களுடைய சேவைக்காக நல்ல ஊதியமும் பெறுகின்றனர். IG Metall இன் தலைவர் பெர்த்தோல்ட் ஹீபர்தான் முன்னாள் வோக்ஸ்வாகெனுடைய நிர்வாகி கார்ல் தோமஸ் நியூமன்னை ஓப்பலை நடத்த தேர்ந்தெடுத்தார். தொழிற்சங்கம்தான் Master Agreement இயற்ற உதவியதுடன், அதை திணிக்க முயல்கின்றது.

உலகெங்கிலும் தொழிற்சங்கங்கள் இதே பங்கைத்தான் புரிகின்றன. அமெரிக்காவில் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் UAW- பராக் ஒபாமாவின் கார்த்தொழில் மறுகட்டமைப்பிற்கு ஆதரவு கொடுத்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பணிநீக்கங்கள் இருந்ததுடன், புதிதாகச் சேரும் தொழிலாளர்களின் ஊதியங்கள் அரைவாசியாக்கப்பட்டன. இதற்கு ஈடாக ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்திற்கு கார் நிறுவனங்களின் நிதியில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இக்காரணங்களுக்காக, வேண்டாம் என்று வாக்களிக்கவும்!

உலக சோசலிச வலைத் தளத்துடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை குழு ஒன்றை நிறுவி, வேலைகளையும் ஊதியங்களையும் பாதுகாக்க சர்வதேச அளவில் பொதுப் போராட்டத்திற்கு தயாரிக்கவும்.