சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : லிபியா

Two years since the end of the US-NATO war in Libya

லிபியாவில் அமெரிக்க-நேட்டோப் போர் முடிவின் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்

Bill Van Auken
31 October 2013

Use this version to printSend feedback

இன்று அக்டோபர் 31, 2013, லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக நடந்த அமெரிக்க நேட்டோ போரின் இரண்டு ஆண்டுகள் முடிவை உத்தியோகபூர்வமாக குறிக்கிறது. இந்த இரண்டாம் ஆண்டு நிறைவு வாஷிங்னிலோ, மேற்கு ஐரோப்பிய தலைநகரங்களிலோ அல்லது லிபியாவில் கூடவோ எந்தவித ஆரவாரத்தைக் காட்டும் என்று கூறுவதற்கு இல்லை.

கிட்டத்தட்ட எட்டு மாத காலம் நீடித்த போர், அதன் இலக்கான கேர்னல் முயம்மர் கடாபியின் ஆட்சியைக் கவிழ்ப்பதை சாதித்தது; அவர் நேட்டோ ஆதரவு கொண்ட “எழுச்சியாளர்களின்” கும்பலால் கொலையுண்டது, ஜனாதிபதி பாரக் ஒபாமாவை வெள்ளை மாளிகை ரோசாப் பூங்காவில் இருந்து இந்த கோர நிகழ்வு “ஒரு புதிய, ஜனநாயக லிபிய” வருகையை அடையாளம் காட்டுகிறது என அறிவிக்கச் செய்தது.

இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட அத்தகைய அடையாளம் எதையும் லிபியாவில் காண்பதற்கில்லை. அமெரிக்க இராணுவம் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளால் குண்டுவீச்சிற்கு உட்பட்ட நாடு மிக அதிக சிதைவுத் தன்மையில் உள்ளது. நாட்டின் ஏற்றுமதி வருவாய் அனைத்திற்கும் கிட்டத்தட்ட பொறுப்பான எண்ணெய் உற்பத்தி, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் மேலாகக் கொண்டிருந்தது, நாள் ஒன்றிற்கு 90,000 பீப்பாய்கள் என்று போருக்கு முந்தைய அளவில் பத்தில் ஒரு பங்கையும் விடக் குறைவாகச் சரிந்துள்ளது என திங்களன்று அறிவிக்கப்பட்டது.

பெரிய  நிறுவனங்கள் ஆயுதமேந்திய போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. கிழக்கு லிபியாவில், இப்போராளிகள் நாட்டை மூன்று பிராந்திய கவர்னர் ஆட்சிப் பகுதிகளாக – சைரேனைக்கா, திரிபோலிடானியா மற்றும் பெஜன் என—பிரிக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர், அப்படித்தான் பாசிச இத்தாலியின் காலனித்துவ முறை ஆட்சியின் கீழ் அது இருந்தது.

சிறந்த மதிப்பீடுகளின்படி, கிட்டத்தட்ட கால் மில்லியன் ஆயுதமேந்தி போராளிகள் இன்னமும் லிபிய அரசாங்கத்திடம் ஊதியம் பெற்று வருவதோடு, ஆனால் எதற்கும் கட்டுப்படாமல் முற்றிலும் சுதந்திரமாக இஸ்லாமிய, பிராந்திய போர்ப்பிரபுக்களின் தலைமையில் உள்ளனர். போர்ப்பிரபுக்கள்தான் நாட்டின் பிரதான அதிகாரத்தை பெற்றுள்ளனர்.

இப்போராளிகளுக்கு இடையே மோதல்கள், அரசாங்கத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் படுகொலை செய்யப்படுதல் ஆகியவை வாடிக்கையாகிவிட்டன. இம்மாதம் முன்னதாக லிபியப் பிரதம மந்திரி அலி ஜெய்டனே இஸ்லாமியப் போராளிக்குழு ஒன்றினால் கடத்தப்பட்டார்; இது அக்டோபர் 5 ம் திகதி அல்குவேடா செயலர் எனப்பட்ட அப் அனஸ் அல் லிபியை அமெரிக்க சிறப்புத் துருப்புக்கள் கடத்தியதற்கு எதிர்ப்பு என்று கூறப்படுகிறது.

ஆயிரக்கணக்கான லிபியர்களும் துணை சகாரா ஆபிரிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் மறைமுகமாக போராளிகளின் கட்டுப்பாட்டின்கீழ் தற்காலிக சிறைகளில் வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர்.

எண்ணெய் செழிப்பு மிக்க நாட்டில் மக்களின் நிலைமை கீழ்த்தரமாக உள்ளது; உண்மையான வேலையின்மை விகிதம் 30%க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் ஆட்சியின் ஆதவராளர்கள் பலர், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ள நிலையில் உள்ளனர்.

போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னும் தொடரும் இப்பெரும் குழப்பம் போரின் தன்மையைத்தான் பிரதிபலிக்கிறது.

அமெரிக்காவும் அதன் முக்கிய நேட்டோ நட்பு நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் இரண்டும், இது அப்பாவி உயிர்களை பாதுகாக்க மட்டும் வடிவமைக்கப்பட்ட ஒரு மனிதாபிமான தலையீடு என்ற போலிக்காரணத்தோடு போரைத் தொடங்கின. பெங்காசியின் கிழக்கு நகரத்தில் எழுச்சி செய்யும் மக்கள் மீது அரசாங்க படுகொலை நடக்கிறது என்னும் ஆதாரமற்ற கூற்றுக்களை தளமாகக் கொண்டு, உடனடித் தலையீடு தவிர்க்க முடியாதது எனச் சொல்லப்பட்டது. நேட்டோ சக்திகள் 1973 தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக் குழு மூலம் செயல்படுத்தினர்; அது அவர்களை பறக்கக்கூடாது பகுதியை நிறுவ அனுமதித்து, குடிமக்களை காப்பாற்றுவதற்கு “அனைத்து நடவடிக்கைகளுக்கும்” இசைவைக் கொடுத்தது.

இது, ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு, போலிச் சட்டபூர்வ அத்தி இலையாக ஆயிற்று, போரில் கிட்டத்தட்ட 50,000 லிபியக் குடிமக்கள் இறந்து போயினர், அதே அளவு எண்ணிக்கையினர் காயமுற்றனர். இப்போர் உயிர்களைக் காப்பற்ற ல்ல என்பது அப்பட்டமாகும். மாறாக இது ஒரு நவ-காலனித்துவ முறைக் கொள்ளை, இதன் முக்கிய நோக்கம் கடாபி ஆட்சியை அகற்றி, அதன் இடத்தில் வளைந்து கொடுக்கும் மற்றொரு ஆட்சியை நிறுவுதலாகும்.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் போரை பெரிய மட்டத்தில் தூண்டின; அது மேற்கத்தைய ஆதரவுடைய லிபிய மேற்கு எல்லையில் இருக்கும் துனிசியா, கிழக்கு எல்லையில் இருக்கும் எகிப்து ஆகியவற்றில் தொழிலாளர்கள் எழுச்சி வெடித்ததற்கு விடையிறுப்பாகும். இதன் நோக்கம் புரட்சி பரவுதலைத் தடுத்து, அமெரிக்க, மேற்கத்தைய ஐரோப்பிய மேலாதிக்கத்தை பிராந்தியத்தில் மீண்டும் உறுதிப்படுத்துவதாகும்; அதே நேரத்தில் சீனா மற்றும் ரஷ்யாவின் பொருளாதார, அரசியல் செல்வாக்குக்கு பதிலாக தங்கள் செல்வாக்கைக் கொண்டுவருதல், லிபியாவின் எரிசக்தி இருப்புக்கள் மீது இன்னும் நேரடிப் பிடியை கொள்ளுதல் என இருந்தது.

பெரும் முக்கியத்துவம் வாய்ந்த உண்மை, ஏகாதிபத்திய சக்திகளின், போரின் நவ காலனித்துவ தன்மையை மூடிமறைக்க ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள போலி இடது சக்திகளின் முழு அடுக்கும் உதவியதாகும்.

இக்கூறுபாடுகள், பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA),  பிரித்தானியாவில் சோசலி தொழிலாளர் கட்சி மற்றும் அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு உட்பட, லிபியாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரை “மனிதாபிமானத் தலையீடு” என்று கூறியது மட்டும் இல்லாமல், லிபியர்களின் “புரட்சி” என்றும் கூறின.

இக்கூறுபாடுகள் தற்போதைய லிபிய நிலை குறித்து மௌனமாக உள்ளது தக்க காரணத்துடன்தான். நாடு போட்டியில் இருக்கும் போராளிப் போர்பிரபுக்களின் பிரிவுகளாக சிதைந்துள்ளது, அதன் பொருளாதாரம் முடங்கியுள்ளது மற்றும் மக்களின் வறுமை அனைத்தும், லிபியாவில் 2011 போருக்கு அவர்கள் கொடுத்த ஆதரவு “புரட்சிக்கு” அல்ல ஏகாதிபத்திய சூறையாடலுக்குத்தான் என்பதற்கு நிரூபணமாகும்.

அதிகாரத்தில் இருத்தப்பட்ட ஆட்சி, அதிகாரமற்று உள்ளது; ஏனெனில் அது அதன் அதிகாரத்தை பரந்த மக்களின் புரட்சிகர எழுச்சியால் கொள்ளவில்லை, மாறாக, நீடித்த அமெரிக்க நேட்டோ குண்டுத் தாக்குதலை ஒட்டியும், அத்துடன் இருந்த இஸ்லாமியவாத போராளிக் குழுக்களின் செயற்பாடுகளினாலும் பெற்றது, இவற்றுள் பல அல் குவேடாவுடன் தொடர்புடையவை. அவை அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் கட்டாரி சிறப்புப் படை செயலர்களின் வழிகாட்டலில், நேட்டோ தரைத் துருப்புக்களாக பணியாற்றின.

லிபியப் போருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப்பின், இதே போலி இடது அடக்கு தொடர்ந்து சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு ஏகாதிபத்திய தலையீட்டை வளர்க்கின்றன, மீண்டும் CIA, சௌதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கியின் தந்திரங்களைப் பாராட்டுகின்றன; மற்றும் அல்குவேடா தலைமையில் உள்ள போராளிகள் நடத்தும் குறுங்குழுவாத கொடூரங்களை “புரட்சி” என அழைக்கின்றன.

ப்போலி இடது குழுக்குள், இப்போர்களை தங்கள் சொந்த அரசாங்கங்கள், ஆளும் உயரடுக்குகளுடன் நெருக்கமான பிணைப்புக்களைக் கொள்ளப் பயன்படுத்துகின்றன. அவற்றின் அரசியல், CIA மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் அடிப்படைகளில் இருந்து சிறிதும் பிரிக்க முடியாதவை, சலுகை பெற்ற மத்தியதர வகுப்பு அடுக்கின் நலன்களை பிரதிபலிக்கின்றன; அவைதான் ஏகாதிபத்தியதிதற்கு புதிய தளமாகியுள்ளன.

அமெரிக்க நேட்டோப் போர், கடாபியை கவிழ்த்துக் கொலை செய்வதிலும், லிபியாவின் பெரும்பகுதியை இடிபாடுகளாச் செய்வதிலும் வெற்றி கொண்டாலும், நாட்டின் எண்ணெய் வளத்தைக் கொள்ளையடித்து அதை அமெரிக்காவின் பிராந்திய மேலாதிக்கத்தின்கீழ் அரங்காகக் கொண்டுவரும் முயற்சிகள் அடையப்படவில்லை.

அமெரிக்க ஆளும் வட்டங்கள் மற்றும் வாஷிங்டனின் உளவுத்துறை அமைப்புக்களுள் இருக்கும் ஆழ்ந்த கவலைகளை பிரதிபலிக்கும் வகையில், வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளர் டேவிட் இக்நேஷியஸ் கடந்த வாரம் லிபியா “அமெரிக்காவின் செல்வாக்கு மத்தியக் கிழக்கில் குறைந்துவிட்டது என்பதை ஆய்ந்துள்ளது” என்றார். ஒபாமா நிர்வாகம் “கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு குழப்பத்தில் விழாமல் தடுப்பதை நிறுத்த நடவடிக்கைகளை” மேற்கொள்ளத் தவறிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப்பின், ஈராக்கும் உள்நாட்டுப்போரில் மூழ்குகிறது, இறப்பு எண்ணிக்கைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது இருந்த மிக அதிக அளவை எட்டியுள்ளன. சிரியாவில் ஒபாமா நிர்வாகம் நேரடி அமெரிக்க இராணுவ சக்தியை பயன்படுத்துவதில் இருந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் மக்கள் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து பின் வாங்கியது. இந்த எதிர்ப்பு முன்பு நடைபெற்ற போர்களுக்கு இருந்த மகத்தான எதிர்ப்பினால் உந்துதல் பெற்றது; போரோ நிதியத் தன்னலக்குழுவின் நலன்களுக்காக பொய்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது.

இறுதிப் பகுப்பாய்வில் இந்த நெருக்கடி, சிரியாவின் வாஷிங்டனின் போர் அட்டவணையில் தலையிட்டுவிட்டது; இது குறைவானவற்றை அல்ல, இன்னும் பேரழிவுகளைத்தான் கொடுத்திருக்கும். இந்த அச்சுறுத்தல், ஒரு புதிய வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கம் கட்டமைக்கப்படுவதின் மூலம்தான் நிறுத்தப்பட முடியும்; அது போர் மற்றும் இராணுவ வாதத்தின் மூலமான முதலாளித்துவ இலாபமுறைக்கு எதிராக இயக்கப்பட வேண்டும்.