சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Without the DIA we would not know anything about culture”

Workers and students speak out in defense of the DIA

“DIA இல்லாமல் எங்களுக்கு கலாச்சாரம் குறித்து எதுவும் தெரிந்திருக்காது

DIA பாதுகாப்பது குறித்து தொழிலாளர்களும் மாணவர்களும் கருத்துதெரிவிக்கின்றனர்

By WSWS reporters 
8 October 2013

Use this version to printSend feedback

டெட்ராய்ட் நகரில் டெட்ராய்ட் கலைக் கழகத்தின் முன்பு, கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் கண்ட பேட்டியில் பலவற்றை பிரசுரித்து வருகிறோம். சோசலிச சமத்துவ கட்சியும் IYSSE உம் கலாச்சாரம் மற்றும் அனைத்து சமூக உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக உழைக்கும் வர்க்கத்தினரிடையே ஒரு இயக்கத்தை அமைப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு பேரணியை ஒழுங்கமைத்தது.

படைப்பியல் ஆராய்ச்சிக் கல்லூரியில் வரைவியல் துறையில் ஷரோன் சிம்மோன்ஸ் பயின்று வருகின்றார். அவர் உயர்நிலைப் பள்ளியிலிருந்து எனது எல்லாத்துறை பயணங்களுக்கும் இங்குதான் வந்தேன். DIA இல்லாமல், நமக்கு கலாச்சாரம் பற்றி எதுவும் தெரிந்திருக்காது. அது இங்கு இருக்க வேண்டும் என்றும் கலையை விற்கக்கூடாது என்றும் நான் நினைக்கிறேன். அது நகரத்தின் இதயம் என்று அவர் கூறினார்.


இடது பக்கம்: ஷரோன் சிம்மோன்ஸ்

சிலரிடமும் அதிக பணம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே, அவர்களிடம் இதனை விற்கக்கூடது. அனைவரும் பார்ப்பதற்காக அது இங்கு இருக்க வேண்டும். ஒரு மாணவியாக, ஒரு உத்வேகத்திற்காக நீங்கள் இங்கு வருகிறீர்கள். அனைவரும் இங்கு வருகின்றனர். உங்களால் உண்மையில் இதை செய்ய முடியும் என்று நீங்கள் இங்குதான் ஊக்குவிக்கப்பட முடியும்.

கதவுகளின் மேலிருக்கும் கல்வெட்டுக்களில் இருப்பவை குறித்து நான் யோசித்து பார்க்கிறேன். அறிவிற்காகவும் கலையை அனுபவிப்பதற்மாக டெட்ராய்ட் மக்களால் அர்ப்பணிக்கப்பட்டது என்பதை நான் நம்புகிறேன்.

லிவோனியாவைச் சேர்ந்த அமி ஷிமித் WSU வில் இயற்பியல் மற்றும் தடயவியல் வைத்தியத்துறை மாணவியாவார் இந்த ஆர்ப்பாட்டம் பிரம்மிக்கத்தக்கது! எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த குழந்தைகளையும் இங்கு பார்ப்பதில் சந்தோஷம். மக்களுக்குள்ள மதிப்பினை அது இவர்களுக்கு கற்றுத்தருகிறது. அரசாங்கப் பிரச்சனைகள் மற்றும் சமுதாயப் பிரச்சனைகள் குறித்து அவர்கள் குரல் கேட்பது அனுமதிக்கப்பட வேண்டும்.


அமி ஷிமித் தன் மகனுடன்

இதுபோன்று ஒரு விஷயத்தில் ஈடுபடுவது இதுவே எங்களுக்கு முதல் முறை.

இந்த பொருட்காட்சிசாலை மிக முக்கியமானது. Wayne County இலிருந்து வரும் மக்கள் என்பதால் நாங்கள் நுழைவுக் கட்டணம் கூட செலுத்த வேண்டியதில்லை. இதனை விற்பதால் நகருக்கு விளையும் இழப்பீடு குறித்து அவர்கள் பார்ப்பதில்லை. மிக விரைவில் நமக்கு எதுவும் இருக்கப் போவதில்லை.

நிதி வெட்டுக்களின் காரணமாக தற்போது, குழந்தைகளை அறிவியல் மையத்திற்குள் அழைத்து செல்வதற்கு அதிக தொகை வசூலிக்கின்றனர். உள்ளே போவதற்கு பணம் கொடுப்பதை பற்றி எனக்கு கவலையில்லை. அது முக்கியமானது. ஆனால் அதிகளவு மக்களால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது.

இது (DIAவிலிருந்து கலைப்படைப்புகளை விற்பது) தீர்வல்ல. நம் குழந்தைகள் எதைப் பார்க்கப் போகின்றனர்? இணையம் பாதுகாப்பானதல்ல. இணையம், பொருட்காட்சிசாலை போன்றதல்ல. நிச்சயமாக அவர்கள் கலையின் ஒரு டிஜிட்டல் வடிவத்தினைப் பெற முடியும். ஆனால், மிகச் சிறந்த பொருட்காட்சியகத்தை இணையத்தால் பிரதியீடு செய்யமுடியுமென்று நினைப்பது முட்டாள்தனம்.

டெட்ராய்ட் குடிநீர் மற்றும் கழிவுநீர்த் துறையில் வேதியியல் துறையின் தலைவராக இருப்பவர் சாலியஸ் சிமோலினஸ். பொருட்காட்சியகத்தைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அதே நேரம் நகர பணியாளர்கள் சார்பாக பேசுவதற்காகவும் அவர் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்தார். நாட்டின் கடன்கள் நமக்கு தெரியாமல் பெறப்பட்டவை. நமது ஓய்வூதியமும் சம்பளமும் ஒப்பந்தரீதியான  கொடுக்குமதிகளாகும். அதில் அவர்கள் கைவைக்க முடியாது.


சாலியஸ் சிமோலினஸ்

இந்த கலை மக்களுக்கு செந்தமானது. அதனை விற்பனை செய்யக் கூடாது.

பில்லியனர் மைக் இலிட்சுக்கான ஒரு விலை உயர்ந்த திட்டத்திற்காக குடிமக்கள் பணம்செலுத்த வேண்டியிருக்கிறது. இலிட்சுக்கு சொந்தமான டெட்ராய்ட் ரெட்விங்ஸ் ஹாக்கி குழுவிற்காக ஒரு புதிய பனி அரங்கு கட்டுவதற்காக நாட்டின் கருவூலத்திலிருந்து 250 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அவர் Little Caesars Pizza உணவகத்தொடரின் உரிமையாளரும் ஆவர்.

பொது பங்குப்பத்திரங்களால் பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பத்திரங்களால் வங்கிகளுக்கு வட்டி செலுத்தப்படுகின்றது. இப்போது பத்திரங்களால் அதிகம் பணம் கிடைக்காததால், பத்திரங்களுக்கு பணம் செலுத்துவதற்காக நாம் அனைத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் பணியாளர்களின் ஓய்வூதிய நிதியிலிருந்து பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யவில்லை. அதனால், உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை மேம்படுத்துவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.

இரு கட்சிகளுக்கும் (குடியரசு மற்றும் ஜனநாயக) இடையேயான வித்தியாசம் என்ன? நான் ஒரு சோசலிசவாதி. இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பானது. இளைஞர்கள் கலை மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து ஆர்ப்பாட்டம் செய்ய வந்துள்ளனர்.

சீனாவின் யுனான் நகரை சேர்ந்த படைப்பியல் ஆய்வுகள் கல்லூரியின் மாணவரான ஹோமின் வைய், ஃபேஸ்புக் மூலமாக இந்த ஆர்ப்பாட்டம் பற்றி கேள்விப்பட்டார். அவர் ஏன் இங்கு வந்தார் என்று கேட்டபோது, இது DIA. இது விலைமதிப்பில்லாத கலைப்படைப்புகளை கொண்டிருக்கிறது. இது கலாச்சாரம் சம்பந்தப்பட்டது. என்றார்.

சீனாவில் சிக்கலான உழைக்கும் வர்க்க சூழலில் வளர்ந்தது அவரை கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது உணர்வுள்ளவராக ஆக்கியது. நான் கலாச்சாரம் குறித்து தீவிரமானவன், மாவோ என் நாட்டில் கலாச்சாரத்தை அழித்தார் என்பது உங்களுக்கு தெரியும். அது (DIA மீதான தாக்குதல்) மனிதநேயத்திற்கு எதிரானது. அரசாங்கம் மோசமான நிலையை ஏற்படுத்துகிறது. இது முட்டாள்தனம் என்றார்.

நான் ஒரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் நான் ஒரு சோசலிசவாதி. என்னை இங்கு அனுப்புவதற்காக என் தந்தை மிக கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. நான் ஏழையாக வளர்ந்த காரணத்தால், உழைக்கும் வர்க்கத்தினருக்காக நான் இரக்கப்படுகிறேன். முதலாளிகள் பணக்காரர்கள் பற்றியே யோசிப்பர். ஆனால் உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஏழைமக்கள்.

டெட்ராய்டை சேர்ந்த இயக்கவியல் கலைஞரான ரியான் டோலி, DIA கலைப்படைப்புகளை விற்பனை செய்வது குறித்து முதலில் கேள்விப்பட்டபோது, நான் அழ ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன். அது மிகவும் கஸ்டமான சூழ்நிலை. கலையை ஆதரிப்பதற்காக நான் இங்கு வந்துள்ளேன்


ரியான் டோலி மற்றும் கீனன் நீல்பாக

அவசரகால மேலாளர் இது பற்றி சிறிது முன்னர் ஒரு குறிப்பு கொடுத்திருக்கின்றார். உலகம் முழுவதும் செய்தியை பரப்புவதற்காக, நான் இங்கு 60 அடி டிராகனுடன் வந்து அதை எரித்தேன்.

தனது ஆறு வயதிலிருந்து உலோகக் கலைஞராக இருந்து வரும் கீனன், உண்மையில் DIA விலைமதிக்க முடியாதது என்பதால் நான் இங்கு வந்தேன். வேண்டுமென்றால், அவர்கள் அதன் பண மதிப்பை டிரில்லியன் டாலர்களாக மதிப்பிடலாம். மக்கள் அதனை விற்க மாட்டார்கள். அதனை விற்பது, நம்மிடம் இருக்கும் அனைத்தின் மற்றும் நாம் செய்யும் அனைத்தின் மதிப்பினையும் குறைக்கும் என்றார்.

பில்லியனர்கள் டான் கில்பேர்ட் மற்றும் மைக் இலிட்ச் நகரில் இருக்கும் அனைத்துக்கும் சொந்தக்காரர்கள் என்பதுடன் அவர்கள் ஆதாயங்களைப் பிரித்துக் கொள்கிறார்கள். இதுதான் டெட்ராய்ட் விவகாரத்திலேயே தவறாகும்.

நகரத்தின் கடனை செலுத்தினாலும் அது அவர்களது வங்கிக் கணக்கினை ஒருபோதும் பாதிக்காது. இது அவர்கள் பொய் சொல்கிறார்கள் (அங்கு பணமில்லை என்ற கூற்றுக்காக) என்பதைக் காட்டுகிறது. இது அதிக பணம் பெறுவதற்கான ஒரு திட்டமாகும்.

டஸ்ரின், டானியல் மற்றும் லைடியா ஆகியோர் படைப்பியல் ஆய்வுகள் கல்லூரியின் மாணவர்கள். பேரணி சிறப்பாக நடந்தது என்று நினைக்கிறேன். இத்தனை பேர் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒன்றுகூடியிருந்த மக்கள் கூட்டும் நன்றாக இருந்தது. மக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர். அதில் மாணவர்களும், உழைக்கும் மக்களும் இருந்தனர். அனைவரும் கலந்து கொண்டனர்என்றார் டானியல்.


டஸ்ரின், டானியல் மற்றும் லைடியா

DIA இல்லாமல், நமது நகரம் உண்மையில் இறந்து போகப் போகிறது. நான் முதல் தடவை இங்கு வந்தது எனக்கு நினைவிருக்கிறது. இந்த கலைத்துறைக்காத்தான் நாங்கள் டெட்ராய்ட்டிற்கு வந்தோம். உலகம் முழுவதிலிருந்து பல மக்கள் இதைப் பார்ப்பதற்காக வருகின்றனர். என்று லைடியா கூறுகிறார்.

எல்லா வகையிலும் இது (கலையை விற்பது) தவறானது. ஒரு கலைஞரின் கோணத்தில் இருந்து நான் பேசுகிறேன். உதாரணத்திற்கு டியேகோ ரிவேராவை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் கடினமாகவும் நீண்ட காலமும் உழைத்தார், தங்களது சம்பள காசோலை குறித்து புகார் செய்யும் மற்ற பெருநிறுவன வங்கியாளர்களைவிட அவர் நீண்டகாலமும் அதிகமாகவும் உழைத்தார். இதுபோன்ற கலைப் படைப்புகளை பணம் கொடுத்து வாங்க முடிகிறவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. கலைஞர்கள் எதை விரும்பினார்களோ அதற்கு எதிராகவே இது சென்று கொண்டிருக்கிறது என்றார் டஸ்ரின்.