சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European agencies, NSA collaborate on mass spying against European population

ஐரோப்பிய முகமைகளும் NSA யும் ஐரோப்பிய மக்களுக்கு எதிரான பரந்த உளவு வேலையில் ஒத்துழைக்கின்றன

By Alejandro López 
4 November 2013

Use this version to printSend feedback

முன்னாள் தேசியப் பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) ஒப்பந்தக்காரரான எட்வார்ட் ஸ்னோவ்டென் கார்டியனில் வெளியிட்டுள்ள புதிதாக கசியவிட்டுள்ள ஆவணங்களானது, ஐரோப்பிய உளவுத்துறைப் பிரிவுகளுக்கும் NSA க்கும் இடையில், இணைய தளங்களில் மற்றும் தொலைபேசி தொடர்புகளில் பெரும் கண்காணிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்தன என்பதைக் காட்டுகின்றன. எப்படி ஒரு முழு ஐரோப்பிய உளவு அமைப்புமுறை வெளிப்பட்டுள்ளதும், முழு ஐரோப்பிய மற்றும் உலக மக்களுக்கு எதிராக இயக்கப்படுகிறது என்பதையும் இவைகள் காட்டுகின்றன.

கார்டியனால் வெளியிட்டுள்ள இத்திட்டங்கள் ஏன் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய உளவுத்துறை அமைப்புக்களின் இணைய தள கண்காணிப்புகளின் ஆரம்ப அம்பலப்படுத்தல்களை அதிகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை காட்டுகின்றன. இரண்டு வாரங்களுக்கு முன்பு அப்பொழுது அமெரிக்காவானது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மீது உளவு பார்க்கிறது என்பது வெளிப்பட்டவுடன் ஒரு பெரிய இராஜதந்திர நெருக்கடி வெடித்தது.

தேசிய உளவுத்துறையின் அமெரிக்க இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் உளவுத்துறை பிரிவுகள் ஆயிரக்கணக்கான அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை “கூட்டணி நாடுகளில்” உளவு பார்ப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

NSA அமைப்பு தொடர்பாக பெருகும் சர்வதேச முறைகேட்டில், ஐரோப்பிய அரசாங்கங்கள் ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பாளர்கள் என்று எவ்வகையிலும் நடந்து கொள்ளவில்லை. NSA ஆல் மிகப்பெரிய அளவில் தொலைத்தொடர்பு கண்காணிப்பு நடத்துவதை அவர்கள் எதிர்த்தாலும், அவர்கள் NSA யுடன் இணைந்து உலகளாவிய இணைய தள செயற்பாடுகளில் ஒற்று வேலை பார்ப்பதோடு, தங்களுக்காக ஐரோப்பாவில் பொலிஸ் அரசுகளின் கண்காணிப்பு உள்கட்டுமானத்தை உருவாக்குகின்றன.

கார்டியனினால் வெளியிட்டுள்ள ஆவணங்களானது பிரெஞ்சு, ஸ்பெயின், ஸ்வீடன், டச்சு மற்றும் ஜேர்மனிய உளவுத்துறைகள் ஒரு ஐரோப்பா தழுவிய கண்காணிப்பு அமைப்புமுறை NSA உடைய உலகளாவிய ஒற்று வலையமைப்புடன் ஒப்பிடத்தக்கதாக ஒத்துழைக்கின்றன. இவ் உளவுத்துறைகள் பைபர் ஆப்டிக் கேபிள்களை நேரடியாக ஒட்டுக் கேட்பது மட்டுமல்லாமல், தேசிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் NSA ஆனது கூகுள் அல்லது பேஸ்புக்குடன் கொண்டுள்ள இரகசிய உறவுகளைப் போல் வளர்த்துள்ளன.

உளவு வலைப்பின்னலின் மையத்தில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்க தொலைத் தொடர்பு தலைமையகம் (GCHQ)  உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் உளவுத்துறை நிறுவனமானது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு அட்லான்டிக் கடந்த கேபிள்களின் நுழைவாயில் என்னும் இடத்தில் இருப்பதும், அதேபோல் NSA உடனான அதன் சிறப்புத் தொடர்புகள் மூலமும் ஒரு சலுகை பெற்ற நிலையை வகிப்பதோடு, மேலும் இதனுடைய அனுமதிக்கும் உளவு பார்க்கும் சூழல் தொடர்ச்சியாக தொழிற்கட்சி மற்றும் டோரி அரசாங்கங்களின் சட்டத்தால் உருவாக்கப்பட்டது.

2008ல் “டெம்போரா” முறை GCHQ வால் அபிவிருத்தி செய்யப்பட்டது; அது முறையாக அனைத்து ஐக்கிய இராச்சிய இணைய தளத் தகவல்கள் கடக்கும் பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் வெளியேறும், உள்ளேவரும் தொடர்புகளைக் கண்காணிக்கிறது. கசியவிடப்பட்ட ஆவணங்கள் கிட்டத்தட்ட 600 மில்லியன் அழைப்புக்கள் ஒவ்வொரு நாளும் 200 பைபர் ஆப்டிக் கேபிள்களை ஒற்றுப் பார்ப்பதின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன.

அதே ஆண்டு GCHQ அதிகாரிகள் ஜேர்மனியின் கூட்டாட்சி உளவுத்துறைப் பிரிவை (BND), அதனுடைய தொழில்நுட்பத் திறன்களுக்கு பாராட்டியது: அவர்கள் “மிகப் பெரிய தொழில்நுட்பத் திறன் கொண்டுள்ளனர், இணைய தளத்தின் இதயத்தானத்திற்கு அணுகுவதற்கான அணுகுமுறையை கொண்டுள்ளனர்—அவர்கள் ஏற்கனவே பைபர் ஆப்டிக் கேபிள்களை கொண்டுள்ளனர், அவைகளோ 40 Gbp க்களில் இயங்குபவை, 100 Gbp க்களிலும் இயங்குபவை.” ஒரு வினாடிக்கு கிகாபைட் என்பது பைபர் ஆப்டிக் கேபிள்களில் தகவல்கள் இயங்கும் வேகத்தைக் குறிப்பிடுபவை.

பிரித்தானிய அதிகாரிகள் BND ஐ வியப்பதற்குக் காரணம், அவர்கள் ஜேர்மன் அதிகாரிகளைப் போல் அதிக அளவு கேபிள்களை கண்காணிக்க முடியவில்லை. 2012ல் அவர்கள் 10 Gbp க்கள் மட்டுமே கண்காணிக்க முடிந்தது; 100 Gbp க்கள் பைபர் ஆப்டிக் கேபிள்களை ஒற்றுப் பார்க்கும் திறனை வளர்க்க முன்னோக்கி நிற்கின்றனர்.

ஐக்கிய இராச்சியத்தின் உளவுத்துறையானது ஜேர்மனிய சட்டங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறனை தடைக்கு உட்படுத்தியதைக் கடக்க  BND க்கு உதவியது. அறிக்கை கூறுகிறது: “நாம் BND க்கு SIS (இரகசிய உளவுத்துறை), பாதுகாப்புத் துறை இவற்றுடன் உதவுகிறோம்: இது ஜேர்மனியில் மிகவும் தடைக்கு உட்படுத்தும் தலையீட்டு சட்டத்தை சீர்திருத்த அல்லது மறு விளக்கம் அளிக்க உதவும்.”

GCHQ ஆனது, பிரான்சின் வெளிப் பாதுகாப்புப் பொது இயக்குனரகத்தையும் (DGSE) அதனுடைய பெயரிடப்படாத தொலைத்தொடர்பு நிறுவனத்துடனான உறவையும் பாராட்டுகிறது. “DGSE அதிக உந்துதல் கொண்ட, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி கொண்ட பங்காளி; இது அதனுடைய இணைய தள நெறிப் பிரச்சினைகளில் (IP - [internet protocol] ) ஈடுபடப் பெரும் விருப்பத்தைக் காட்டியுள்ளது; GCHQ  உடனும் “ஒத்துழைத்து பகிர்ந்துகொள்ளுதல்” என்பதற்குத் தயாராக இருக்கிறது.”

பிரித்தானிய உளவுத்துறையானது DGSE தொழில்நுட்பவாளர்களுக்கும் பயிற்சி அளித்தது. ஆவணம் கூறுகிறது: “நாங்கள் DGSE உடைய முக்கிய தொழில்துறை பங்காளியுடன் தொடர்பு கொண்டுள்ளோம்; அவர்கள் சில இணைய தள சவால்களுக்கு நவீன அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர். இது GCHQ இன் திறனை உயர்த்தி அது இந்நிறுவனத்தை நெறிமுறை வளர்ச்சிப் பகுதியில் பயன்படுத்தி கொள்ளச் செய்துள்ளது.” 2009ல் இரு நிறுவனங்களும் ஆன்லைன் குறியீட்டு வகைகளை உடைப்பதில் ஒத்துழைத்திருந்தன.

GCHQ ஆனது ஸ்பெயினின் தேசிய உளவுத்துறை மையத்துடனும் (CNI) ஒத்துழைத்துள்ளது; பிந்தையது பாரிய இணைய தள கண்காணிப்பை அதன் பெயரிடாத பிரித்தானிய தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கொண்டுள்ள தொடர்புகளை ஒட்டி நடத்தியுள்ளது; அது அதற்கு “புதிய வாய்ப்புக்களை கொடுத்து, சில வியப்பான விளைவுகளை காணவும் முடிந்தது.” ஸ்பெயின் சட்டப்படி வெகுஜனத் தொடர்புகளை பொறுப்பற்ற முறையில் பின்பற்றுவது சட்டவிரோதமாகும்.

GCHQ வைப்போலவே CNI யும் அனைத்து அழைப்புக்களிலும் தலையிடும், கண்காணிக்கும் மூலோபாய இடத்தில் உள்ளது. கொலம்பஸ் III அட்லான்டிக் கடந்த நீர் அடி தொலைத்தொடர்பு கேபிள், சிசிலியை பிளோரிடா மாநிலத்துடன் இணைப்பது Cádiz உள்ள கோனில் வழியே செல்லுகிறது. அன்றாடம் மில்லியன் கணக்கானவர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர்.

அறிக்கை கூறுகிறது: “வர்த்தகப் பங்காளியானது CNI க்கு சில கருவிகளைக் கொடுத்துள்ளது; நமக்குத் தகவல் கொடுத்து நாம் CNI ஐ இணைய தள நெறிமுறைக் (IP) குவிப்பு பற்றிய விவாதங்களை இந்த இலையுதிர்காலத்தில் (2008) நடத்த உதவுகிறது.” GCHQ “ஒரு திறமையுடைய பிரிவை CNI ல் கண்டுள்ளது, குறிப்பாக இரகசிய இணைய தள செயற்பாடுகளில்.”

அதே ஆண்டு GCHQ ஆனது ஸ்வீடன் பாராளுமன்றம் இயற்றிய புதிய சட்டத்தை பாராட்டியது; அது தேசிய பாதுகாப்பு வானொலி ஸ்தாபனத்தை (FRA) அனைத்து மின்னஞ்சல், தொலைபேசித் தொடர்புகள் என்று ஸ்வீடன் வழியே நுழையும், வெளியேறும், அதனூடாகச் செல்லும் தொடர்புகளை கண்காணிக்க அனுமதித்தது. இப்புதிய சட்டம், புஷ் நிர்வாகத்தின் ஒற்றுப் பார்க்கும் திட்டம் 2001 ம் ஆண்டிலிருந்து இருப்பதை ஒத்திருக்கிறது, இதற்கு கண்காணிப்பு நடத்த எந்தவொரு ஆணையும் தேவையில்லை. (See: Swedish government adopts invasive wire-tapping measures)

GCHQ ஏற்கனவே இப்பிரச்சினைகளில் நிறைய ஆலோசனை, வழிகாட்டு நெறிகளைக் கொடுத்துள்ளது, நாம் FRA க்கு இன்னும் உதவத்தான் உள்ளோம், தங்கள் பணியை அவர்கள் முன்னேற்றுவிக்க திட்டத்தைத் தயாரிக்கும் வரை” என்று அறிக்கை கூறுகிறது.

GCHQ இரண்டு முக்கிய டச்சு உளவுத்துறை நிறுவனங்களுடனும் வலுவான உறவுகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது; ஆனால் “டச்சுக்காரர்கள் சில சட்டமியற்றும் பிரச்சினைகளை கொண்டுள்ளனர்; சட்டபூர்வச்சூழல் GCHQ செய்வதைப்போல் செய்ய வேண்டும் என்றால் சில வழிவகைகளை கையாள வேண்டும். இந்த பிரச்சினைகள் சிலவற்றை எப்படிச் சமாளிப்பது என்று டச்சு வக்கீல்களிடம் நாங்கள் சட்ட ஆலோசனை கொடுத்து வருகிறோம்.”

அனைத்து ஐரோப்பிய உளவுத்துறைகளும் NSA ஒற்று வேலையில் உடந்தையாகத்தான் இருக்கின்றன; அமெரிக்க நிறுவனத்திற்கு மிக அதிக தரவுத் தொகுப்பை கொடுக்கின்றன; அழைப்புக்கள் எங்கிருந்து, யாருக்குச் செல்லுகின்றன, அழைப்புக்களின் நேரம், எங்கிருந்து அவை செய்யப்படுகின்றன என்பதையாகும்.

பயங்கரவாதம் குறித்த வல்லுனரான Jeans-Charles Brisard, El País இடம் கூறினார்: “ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களுடைதற்கு ஒத்த திறன்களை இடைமறித்தல் தலையீடு செய்வதில் கொண்டுள்ளனர்; ஆனால் அவர்களிடம் இத்தகவலை வழிமுறைப்படுத்த அதே ஆதார வளங்கள் போதுமானதாக இல்லை. எனவேதான் அவர்கள் இந்த மூலத்தை அடையாளம் காண்பதற்காக அனுப்பி வைக்கின்றனர்.”