சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The rise of Europe’s far right

ஐரோப்பாவில் அதி-வலது கட்சிகளின் எழுச்சி

Chris Marsden
23 November 2013

Use this version to printSend feedback

அடுத்த மே மாத ஐரோப்பிய தேர்தல்களில் ஐரோப்பாவின் அதி-வலது கட்சிகள் கணிசமான வெற்றிகளைப் பதிவு செய்யுமென பரவலாக ஊகிக்கப்படுகிறது.

வலது கட்சிகள் முதன்மையாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிர்ப்பு என்ற அடித்தளத்தில், பெரும்பான சந்தர்ப்பங்களில் ஐரோப்பா முழுவதும் ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பாளர்கள் என்றரீதியில் தங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யக்கூடும். புலம்பெயர்வு மற்றும் இஸ்லாம் உடனான அவர்களின் வழக்கமான முன்முடிவுகளில் இருந்து சற்றே மாறுபட்டு, அவர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் சிக்கன நடவடிக்கை நிகழ்ச்சிநிரலுக்கு இருக்கும் மக்கள் கோபத்தை ஒன்றுதிரட்ட முடியுமென நம்புகின்றனர்.    

2008 நிதியியல் பொறிவிலிருந்து ஐரோப்பிய தொழிலாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல்களில் ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையும் உடந்தையாய் இருக்கின்ற நிலையில், அதி-வலது கட்சிகள் தங்களை அதுபோன்று காட்டிக் கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலைக்கு, "பிரதான" அரசியல் கட்சிகள்உத்தியோகபூர்வ "இடது" அதனோடு வலதுஅரசியல்ரீதியாக பொறுப்பாகும்

ஐரோப்பா முழுவதிலும், சமூக ஜனநாயக கட்சிகள்அரசில் இருப்பவை மற்றும் எதிர்கட்சிகளும்பாரிய வேலைவாய்ப்பின்மை, கூலி வெட்டுக்கள் மற்றும் சமூக சேவைகளின் அழிப்பு மூலமாக இலாப அமைப்புமுறையின் நெருக்கடிக்கு தொழிலாளர் வர்க்கத்தை விலை கொடுக்க செய்ய வேலை செய்துள்ளன. இதன் விளைவாக, சமூக ஜனநாயகவாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே விரும்பத் தகாதவர்களாக மாறி உள்ளனர்.  

இதே உண்மை தொழிற்சங்கங்களுக்கும் பொருந்தும், அவை செலவுகுறைப்பு நடவடிக்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் நெரித்துள்ளனர். இதற்கிடையில் குறிப்பாக சிக்கன நடவடிக்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கள் போன்ற நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு திரும்ப திரும்ப தொழிலாளர்கள் போராடி உள்ளனர், .

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூய்மைதனத்தை வலியுறுத்தியும், மற்றும் சமூக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் எவ்வித உடைவையும் எதிர்த்ததன் மூலமாகவும், போலி-இடது குழுக்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது ஓர் அரசியல் தடையைப் போன்று செயல்பட்டுள்ளனர். இது, இதன் விளைவாக விளைந்த தொழிலாள வர்க்கத்தின் அரசியல் முடக்கத்தை மூலதனமாக்கவும், மற்றும் சமூக அதிருப்தியை பிற்போக்கு முறைகளுக்குள் திருப்பிவிடவும் அதி-வலதை அனுமதிக்கிறது.

எடுத்துக்காட்டுகளாக இரண்டு சான்றுகள் போதுமானதாக இருக்கும்.

அதி-வலதின் மிகவும் வியத்தகு வெற்றிகள், பிரான்சுவா ஹாலான்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் மீதிருந்த பரந்த வெறுப்பின் காரணமாக பிரான்சில் நிகழ்ந்துள்ளன. மரீன் லு பென் இன் தேசிய முன்னணி சமீபத்திய தேர்தலில் நான்கில் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. அது கிரீட் வெல்டர்ஸின் (Geert Wilders) சுதந்திர டச் கட்சியோடு சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய விரோத வலதுகளை ஒரு பொதுவான தளத்தில் ஐக்கியப்படுத்தும் நோக்கத்திற்காக ஜோடிக்கப்பட்ட ஒரு புதிய கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.

கடந்த மாதம், பிரின்னியோல் மண்டலத்தின் (canton of Brignoles) ஒரு முதல் சுற்று தேர்தலில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியால் (PCF) ஆதரிக்கப்பட்ட "இடது" வேட்பாளர் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஒரு பழமைவாத மக்கள் இயக்க கூட்டை (Union for a Popular Movement – UMP) தேசிய முன்னணி எளிதாக தோற்கடித்தது.

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜோன்-லுக் மெலன்சோனின் இடது கட்சியை உள்ளடக்கிய இடது முன்னணி, சோசலிஸ்ட் கட்சியோடு தொற்றிக் கொண்டிருக்கையில், ஹாலாண்டிற்கு அதிகரித்து வரும் மக்கள் வெறுப்புக்கு புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் விடையிறுப்பு அந்த இடது முன்னணியோடு எல்லா கஷ்டங்களிலும் ஒட்டிக் கொண்டிருப்பது என்ற ரீதியில் உள்ளது.

NPA தலைவர் அலென் கிரீவின் சமீபத்தில் பின்வருமாறு எழுதினார்: இடது முன்னணிக்குள் "ஒரு இன்றியமையாத சர்ச்சை உள்ளது, என்னவென்றால்: வெறுமனே சிக்கன வெட்டு கொள்கைகளை எதிர்ப்பதில் நாம் பங்கேற்க வேண்டுமா, அல்லது எந்தவொரு அரசாங்கத்தின் சரணடைவுகள் அதி-வலதிற்கு ஊக்கமூட்டுமோ அப்படியொரு அரசாங்கத்திற்கு ஒரு நிஜமான இடது அரசியல் எதிர்ப்பை ஸ்தாபிப்பதில் பங்கேற்பதா? என்பதாகும்.

NPA இதுபோன்ற பிரமைகளை வளர்க்கிறது ஏனென்றால் அது சோசலிஸ்ட் கட்சியின் ஒரு கூட்டாளியாக உள்ளது. சோசலிஸ்ட் கட்சி கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை நெறிபிறழ செய்வதற்காக, அது இடது முன்னணியை ஊக்குவிப்பதன் மூலமாக அதன் பாத்திரத்தை வேறுபடுத்திக் காட்ட விரும்புகிறது.

கிரீஸில், கோல்டன் டோன் எழுச்சியோடு அதிவலது பட்டவர்த்தனமாக பாசிச வடிவங்களை எடுத்துள்ளது. அங்கே கோல்டன் டோனுக்கு தேர்தலில் ஏறத்தாழ பத்து சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.

பிரதான எதிர்கட்சியான சிரிசாவின் தலைவர் அலெசிஸ் சிப்ராஸ், போலி இடதின் அன்புக்குரியவராக உள்ளார். அவர் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் பதவிக்கு ஐரோப்பிய இடது கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எவ்வாறிருந்த போதினும், சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒரு முதலாளித்துவ எதிர்ப்பு மாற்றீட்டை முன்னெடுப்பதற்கு அப்பால், சமூக எதிர்ப்பின் விளைவாக தற்போதைய பழமைவாத புதிய ஜனநாயக கூட்டணி வீழ்கையில், சிரிசா ஒரு புதிய தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் அரசியல் அச்சாணியாக அதன் சேவைகளை வழங்கி வருகிறது.

ஜூலையில் அதன் சென்ற மாநாட்டில், சிரிசா அதன் முந்தைய கூட்டமைப்பு கட்டமைப்பிலிருந்து விலகி இருந்தது. அந்த கட்டமைப்பு பல்வேறு போலி இடது போக்குகளை சிரிசாவிற்குள் பகிரங்கமான கன்னைகளாக செயல்பட அனுமதித்திருந்தது. “சிரிசாவை இன்னும் பலமாக்க, மேலும் ஆற்றலுடன் செயல்பட செய்ய, இன்னும் கூடுதலாக ஆட்சிக்கு தயார் செய்ய மற்றும் இந்நாட்டிற்குத் தலைமை கொடுக்க" அதை ஒரே கட்சி வடிவத்தில் உருவாக்குவது அவசியமாகும் என்று சிப்ராஸ் அறிவித்தார்.

அந்த போலி இடது இயல்பாகவே இந்த புதிய அமைப்புமுறைக்கு இணங்கி உள்ளது.

கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (KKE) வலதுசாரி சுயாதீன கிரேக்கர்கள் (Independent Greeks) கட்சி வரை, மற்றும் தற்போதைய வலதுசாரி கூட்டணி அரசாங்கத்தில் பங்கு வகிக்கும் சமூக ஜனநாயக PASOK கட்சி வரை, ஓர் அரசியல் கூட்டணியிடம் சிரிசா முறையிட்டு வருவதை சிப்ராஸ் தெளிவுபடுத்தி இருந்தார். “இடதில் இருக்கும் அனைவரும், அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்," “அனைத்து ஜனநாயவாதிகளும் மற்றும் தேசாபிமானிகளும்" மற்றும் "கணக்குவழக்கு மற்றும் சுய-ஆர்வத்திற்கு முன்னால் சுதந்திரம் மற்றும் தேசிய இறைமையை கொண்டு வந்து நிறுத்துபவர்கள் அனைவரும்... [ஜேர்மன் சான்செலர்] மேர்க்கெலின் சைகைகளால் மற்றும் நமது நாட்டிற்கு எதிராக துரோய்காவின் (முக்கூட்டின்) இழிவுபடுத்தும் நடைமுறைகளால், கிரீஸிற்கு எதிரான இனவாத பிரசாரத்தால் பாதிக்கப்பட்டதாக உணரும் பழமைவாத குடிமக்களும் கூட" அவரது கூட்டாளிகள் என்பதை அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.  

சிரிசாவின் தேசியவாத வாய்ஜம்பம் கிரேக்க முதலாளித்துவ பாதுகாப்பை உள்ளடக்கியிருக்கிறது, மேலும் அது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திடம் கட்டிப்போடும் ஒரு முயற்சியாகும். கிரீஸின் கடனைத் திருப்பி செலுத்துவதற்கான விதிமுறைகள் மீது மறுபேரம் நடத்தினால், சிக்கன நடவடக்கைக்கு ஒரு மாற்றீடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிப்பது பொருந்தும் என்று வலியுறுத்துவதன் மூலம், சிரிசா தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஐரோப்பிய ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சியை மற்றும் உலகளாவிய நிதியியல் செல்வந்த தட்டின் கட்டளைகளைத் தூக்கிப்பிடிக்கிறது.

நவம்பர் 4இல் டெக்சாஸ் பல்கலைக்கழக்கத்தின் ஒரு கூட்டத்தில் பேசுகையில், சிப்ராஸ் கிரேக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாடே அவரது மேலான கவலை என்பதை தெளிவுபடுத்தினார். “நாங்கள் ஒரு பொருளாதார ஐக்கியத்தை மற்றும் ஒரு பொது செலாவணியை கொண்டுள்ளோம், ஆனால் கையிலிருக்கும் ஏனைய மாற்றீடுகள் மிகவும் மோசமாக உள்ளன," என்று அறிவித்த அவர், "வெளியேறுவதால் யாருக்கும் பலன் கிடைக்காது," என்றார்

அதிவலதின் வளர்ச்சியை எதிர்த்து போராடுவது மட்டுமல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் தலைவிதி சமூக ஜனநாயகவாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களின் போலி இடது அனுதாபிகளின் வலுவான அரசியல் பிடியிலிருந்து உடைத்துக் கொள்வதை சார்ந்துள்ளது. NPA மற்றும் சிரிசா ஒரு சலுகை படைத்த மத்தியதட்டு அடுக்கால் இட்டுச் செல்லப்படுகின்றன, அவை தொழிலாள வர்க்கத்தின் எவ்வித சுயாதீன போராட்டத்தையும் ஒடுக்குவதற்கு பிரதிபலனாக அரசில், அரசு இயந்திரத்தில் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்குள் அவற்றிற்கென ஒரு தனிப்பட்ட அரசியலைச் செதுக்க விரும்புகின்றன. மூலதனத்திற்கு செய்யும் அவற்றின் இந்த தலைசிறந்த சேவை, அதை தற்போதிருக்கும் அமைப்புமுறையின் ஓர் இழிவார்ந்த பாதுகாப்போடு இணைத்து வைத்து, சோசலிசத்தை அவமானப்படுத்த செய்ய உள்ளது.   

ஜேர்மன் மற்றும் பிரிட்டனில் உள்ள சோசலிச சமத்துவ கட்சிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மற்றும் அதனால் நியமிக்கப்பட்ட அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக சந்தேகத்திற்கிடமற்ற வகையில் நிற்கிறது. பெருவணிகங்களின் ஐரோப்பா, சிக்கன நடவடிக்கை மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் அரசாங்கங்களை மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை ஸ்தாபிக்க, நாங்கள் அக்கண்டத்தின் தொழிலாளர்களின் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான முன்னோக்கை முன்னெடுக்கிறோம். இந்த முன்னோக்கை உணர, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பகுதிகளாக தொழிலாள வர்க்கத்தின் புதிய மற்றும் உண்மையான சோசலிச கட்சிகள் கட்டப்பட வேண்டும்.