சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

London Mayor Boris Johnson’s paean to the super-rich

பெரும் செல்வந்தர்களுக்கு லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சனின்  வாழ்த்துப்பா

By Julie Hyland 
22 November 2013

Use this version to printSend feedback

பிரித்தானிய அரசியலில் மிக இழிந்த நபர்களில் ஒருவராக லண்டன் மேயர் பொரிஸ் ஜோன்சன் கருதப்பட வேண்டும்.

இதுவே சாதாரண செயல் அல்ல; இந்நபர் ஒரு மேற்கோளைத் காட்டியதற்காக டைம்ஸ் பத்திரிகையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதுடன், ஒரு செய்தியாளரை அடிக்க அச்சுறுத்திய நண்பர் ஒருவருக்கு அந்நபரின் தனிப்பட்ட முகவரியைத் தர ஒப்புக் கொண்டதாக தொலைபேசியில் பதிவானதுடன், கறுப்பினமக்களை “குள்ளர்கள்” என்றும் வர்ணித்தார். 1989ல் ஹில்ஸ்பாரோ கால்பந்து மைதானத்தில் 96 இறப்புக்களுக்கு லிவர்பூல் ரசிகர்கள் பொறுப்பு என்றும் அவர்களை “குடிகாரர்கள்”, “மூளையற்றவர்கள்” என்றும் ஸ்பெக்டேடர் இதழ் தலையங்கம் குற்றம் சாட்டியதற்கு இசைவு கொடுத்தார், தன்னுடைய டெய்லி டெலிக்ராப்பின் ஆண்டு வருமானமான 250,000 பவுண்டுகள் “கோழிக்குஞ்சிற்கு உணவு கொடுக்கத்தான்” என்று உதறித்தள்ளியவர்.

இவை எதுவுமே ஜோன்சன் கன்சர்வேடிவ் கட்சியில் உயர்ச்சி பெற்றதற்குத் தடையாக இல்லாதிருந்ததுடன் அல்லது அவர் லண்டன் மேயர் பதவியை இரண்டாம் பதவிக்காலத்தை பாதுகாத்துக் கொள்வதற்கும் தடையாக இருக்கவில்லை.

இதற்கு ஓரளவு காரணம் செய்தி ஊடகம் இவருக்குக் கொடுத்திருக்கும் அசாதாரண உரிமையின்படி இவர் செயற்கையாகத் தோற்றம் அளிப்பது ஒரு P.G. Wodehouse கதையில் வரும் ஒரு பாத்திரம் போல் இருப்பதுதான்.

இன்னும் முக்கியமாக, பிரித்தானிய ஆளும் உயரடுக்கிற்குள் முக்கியமானதை அவர் பேசுகிறார். குறிப்பாக இந்த வர்க்கத்திமிரும் பொல்லாங்கு கூறுவதும்  பொதுவாக மிகத் தனிப்பட்ட உணவு மேசைகளில்தான் வெளியிடப்படும்.

இவ்வகையில்தான் ஜோன்சனின் நவம்பர் 18 டெலிகிராப் கட்டுரையில் வந்துள்ள சமீபத்திய கருத்துக்கள் உள்ளன.

நாம் பெரும் செல்வந்தர்களுக்கு தாழ்ந்து நன்றி செலுத்த வேண்டும், அவர்களைக் கடிந்து கொள்ளக்கூடாது.” என்ற தலைப்பில் ஜோன்சன் “மிகப் பெரும் செல்வந்தர்கள்” பக்கம் ஆதரவு கொடுத்துள்ளார்; அவர்களை அவர் வீடற்றவர்கள், மற்றும் அயர்லாந்து உல்லாசப் பயணிகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் ஒரு “சிறுபான்மையினராக்கப்பட்டுள்ளவர்கள்” என்றார்.

இவர்கள் ஜில்லியனர்கள்”  (“zillionaires”)  என்று ஜோன்சன் எழுதினார். அவ்வளவு பணம் உடையவர்கள் சொந்த தனியார் விமானங்களில் பயணிக்கின்றனர்; தங்கள் நாய்களுக்கு நகைகள் அலங்கரிக்கும் கழுத்துப்பட்டைகளை வாங்குகின்றனர்; “எல்லா இடங்களிலும் இவர்கள் ஏவுவதைச் செய்யத் தயாராக இருக்கும் மக்கள் உள்ளனர். இவர்களுடைய கார்களை ஓட்டுபவர்கள், காலுறைகளை எடுத்துத் தருபவர்கள், அவர்களின் நெற்றிகளை வாசனைத்திரவியங்களை தடவிக் கொள்ளுபவர்கள் உணவினை முன்னரே அரைத்துக்கொடுப்பவர்கள் உள்ளனர்.”

இத்தகைய பெரும் செல்வத்தை சாடுவது அல்லது ஒப்புக் கொள்ளாமல் இருப்பது தவறாகும் என்று அவர் தொடர்ந்தார்; பெரும் செல்வந்தர்கள் “வாழ்க்கைக்குப் போதுமானதை சம்பாதிப்பவர்களைவிட ஒன்றும் அதிக மகிழ்ச்சியில் இல்லை.” சொல்லப்போனால், 20 ஆண்டு பழைய டோயோட்டா அல்லது புதிய மேர்சிடஸ் என்று எந்த வாகனத்தை ஓட்டினாலும், “அதே போக்குவரத்து நெருக்கடியில்தான் அகப்பட்டுக் கொள்கிறோம்.” என்றார்.

மாறாக ஜில்லியனர்கள் நம் “உளமார்ந்த நன்றியை” பெற வேண்டும் என்று அவர் தொடர்ந்தார்; உயர்மட்ட 1 விகிதமான சம்பாதிப்பவர்கள் அனைத்து வருமான வரியிலும், தேசியக் காப்பீட்டு அளிப்புக்களிலும் 29.8% கொடுப்பதால்: “செல்வந்தர்கள் அரிய கார்களில் முதலீடு செய்வது, வாசனைத்தரவியங்களை பயன்படுத்துவது இல்லை என்றால் பலருடைய குடும்பங்களின் மேசைகள் மீது வரும் ரொட்டியைச் சம்பாதிக்க ஆள் இல்லாமற் போகும்.”

ஜோன்சனுடைய கருத்து ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பொய்களின் தொகுப்பு ஆகும். வீடற்றவர் போல் இன்றி, குறிப்பாக லண்டனில் அவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது, பெரும் செல்வந்தர்கள் தங்கள் செல்வத்தின்மீது உறுதியான ஆதாயத்தை நாடுகின்றனர். பொலிசிடம் இருந்து அவர்களுக்கு இடத்தைக் காலி செய்யுமாறு அல்லது சொத்துப் பறிமுதல் செய்யப்படும் அல்லது சிறையில் தள்ளப்படுவர் என்று அச்சுறுத்தல் ஏதும்  கிடையாது.

மாறாக, பொதுநலன்களை வெட்டும் சிக்கன நடவடிக்கைகளில் ஏழைகள் அரசாங்கத்தின் இலக்காக உள்ளனர் என்றால், பெரும் செல்வந்தர்கள் கருவூலத்தில் இருந்து வரம்பற்ற வசதிகளைப் பெறுகின்றனர். 2008ம் ஆண்டு நிதிய சரிவின் அவர்களுடைய இழப்புக்கள் முழுவதும் வங்கிகளுக்குக் கொடுக்கப்பட்ட பிணையெடுப்புக்கள் மூலம் திருப்பிகொடுக்கப்பட்டுவிட்டன என்பது மட்டும் இல்லாமல் கூட்டணியின் சமூகநலச் செலவு வெட்டுக்கள் கொள்கை, தனியார்மயமாக்குதல், ஊதியத் தேக்கம் ஆகியவை சுரண்டலுக்கான புதிய வழிவகைகளைத் திறப்பதன் ஊடாக அவர்களுடைய செல்வத்தை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன.

இதன் விளைவாக உழைக்கும் மக்கள் 1870 களில் இருந்து ஒரு நீண்ட ஊதிய வீழ்ச்சியை அனுபவிக்கின்றனர். ஜோன்சனின் கருத்து வெளிவந்த அதே தினத்தில் Income Data Services இனால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று பிரித்தானிய FTSE 100 பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்களின் மொத்த வருமானத்தில் 14% ஏற்றம், பெரும்பாலான தொழிலாளர்களின் வருமான வளர்ச்சியைப் போல் 20 மடங்கு என அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டது. ஜோன்சன் பேசும் பெரும் செல்வந்தர் அடுக்குகள் மட்டும் இதனுள் உள்ளடங்கவில்லை.

பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்டுள்ள சரிவுதான் பெரும் செல்வந்தர்கள் 1979இனை விட ஒப்புமையில் அதிக வருமான வரி கட்டிய உண்மையை ஏற்படுத்தியது. அத்தேதியை ஜோன்சன் ஒப்புமைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். அப்பொழுதுதான் வரிவிகிதம் உயர்மட்டத்தில் இருந்தோருக்கு மிக அதிகம். நேரடி வரிவிதிப்பில் வெட்டுக்கள் என்பதை அவர் புறக்கணிக்கிறார். இவை பாரிய மறைமுக வரிவிதிப்புக்களுக்குள் வந்துள்ளன. இவை குறிப்பாக உழைக்கும் மக்களுக்கு இடரினை கொடுத்தது. கிட்டத்தட்ட அவர் புகழும் ஜில்லியனர்கள் எவரும் வருமான வரிக்கு ஒரு பென்னி கூட அளிக்க மாட்டார்கள் என்ற உண்மையை அவர் கடந்து செல்கிறார்.

பிரித்தானியாவின் பெரும் செல்வந்தர்கள் வெளிநாட்டு நிதிய தன்னலக் குழுவினர் ஆவர். இவர்களில் பலருமே தங்கள் செல்வங்களை முன்னாள் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் முன்னாள் ஸ்ராலினிச ஆட்சிகள் கவிழ்ந்தபின் கொள்ளையடித்துச் சேர்த்தனர் அல்லது சொத்து/நிதிய “முதலீட்டாளர்களாகிசேர்த்தனர்.

இயக்கவியல் முறையில் செல்வத்தைத் தோற்றுவிப்பவர்கள் என்பதற்கு முற்றிலும் மாறாக அவர்கள் பொருளாதார ஒட்டுண்ணிகளாவர். இதுதான் அவர்களை லண்டனுக்கு ஈர்த்துள்ளது. தொடர்ந்த அரசாங்கங்கள் நகரத்தை தவறான முயற்சிகளில் வந்த ஆதாயத்தை முதலீடு செய்து சேமிப்பதற்கு அதன் “மிருதுவான” கட்டுப்பாட்டைத்தான் கொடுத்துள்ளன. இதைத்தவிர பல வாகன ஓட்டிகளையும் வாசனைத்திரவியங்களை பூசுவோரையும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் அதற்கும் குறைவான வருமானம் உடைய  கடின வாழ்க்கையில் ஈடுபட வைக்கின்றனர்.

பிரித்தானியா இப்பொழுது 88 பில்லியனர்களைக் கொண்டுள்ளது. அவர்களுடைய சொத்துக்களின் மதிப்பு 119 பில்லியன் பவுண்டுகள் ஆகும். அவர்கள் முக்கியமாக தலைநகரில் வசிப்பவர்கள்; 4,224 பிற நபர்கள், 19 மில்லியன் பவுண்டை ஒவ்வொருவரும் கொண்டுள்ள நிலையில், இது நகரத்தை உலகில் மற்ற இடங்களைவிட அதிக பல மில்லியன் உடையவர்களை கொண்டுள்ளதாகச் செய்துள்ளது.

ஜில்லியனர்கள் “பரந்த நன்மைக்கு” பங்களிப்பு தருகின்றனர் என்னும் கூற்று அரசியல், அறநெறிப்படி, ஒவ்வாதது. அவை சமூகத்தை இன்னும் ஆழ்ந்த பொருளாதார புத்திஜீவித பள்ளத்தில்தான் தள்ளுகின்றன.

மிகவும் குறிப்பிடத்தக்கது ஜோன்சனுடைய கட்டுரை எவ்விமர்சனத்தையும் ஈர்க்காததுதான். தலைநகரில் துவிச்சக்கரவண்டி செலுத்துவோர் பாதுகாப்பை முன்னேறுவிப்பதில் மேயர் தோற்றதால் செய்தி ஊடகத்தில் இருந்து தினமும் தாக்குதல் பெறும் இவருடைய பெரும் செல்வந்தர்கள் குறித்த வாழ்த்துப் பா குறித்து தொழிற்கட்சியும் மற்றும் பசுமைக் கட்சியும் கிட்டத்தட்ட ஏதுவுமே கூறவில்லை. அவர்கள் மௌனமாக இருக்கவில்லை மாறாக அதை பொருட்படுத்தவில்லை. பெரும்பாலும் அவர்கள் அவருடைய கருத்தில் குறைகூற ஒன்றும் இல்லை.

உலக சோசலிச வலைத் தளம் பலமுறை இன்றைய ஆளும் உயரடுக்கை பிரான்சின் புரட்சிக்கு முந்தைய பழைய ஆட்சியின் உயரடுக்குடன் ஒப்பிட்டுள்ளது. இந்நிகழ்வு, இந்த அடுக்கு எவ்வளவு அழுகிய தன்மை உடையவையாக உள்ளன என்பதைத் தெளிவாக்குகிறது. ஜோன்சனுடைய கருத்துக்கள் ஆழ்ந்த முறையில் ஜனநாயக விரோதமானவை, நிதிய தன்னலக்குழுவிற்கு முற்றிலும் ஆதரவு கொடுப்பவை. அவர்கள் காட்டும் நன்மைக்கு “நன்றி செலுத்த வேண்டுமாம்.” அவர்கள் சற்றே கூடுதலான பாசிசத்தின் துர்நாற்றத்தின் தன்மையைத்தான் கொண்டுள்ளனர்.

செல்வந்தர்கள் மீது அதிருப்தி வருவதற்கு அவர்கள் “மத்தியதர வகுப்பினரைவிட செல்வம் சேர்க்கிறார்கள்” என்பதால்தான் என்று ஜோன்சன் புகார் கூறுகிறார்; அவர்கள் இவ்வாறு செய்வதின் காரணம் அவர்கள் பிற மனிதர்களைப் போல் இல்லை என்று “கருத்துத் தெரிவிக்கப்படலாம்.”

பெரும் செல்வந்தர்கள் மூன்று பிரத்தியேக மனிதப் பிரிவுகளில் உள்ளனர்” என்று அவர் எழுதுகிறார்.

இவர்கள் “கணிதவியல், அறிவியல் அல்லது குறைந்தபட்சம் தர்க்கவியல் காரண முறையிலாவது சராசரியை விட அதிகம் அறிவுள்ளவர்கள், பணத்தை சேர்க்கும் விருப்பம் உடையவர்கள், அதிருஷ்டம் அல்லது பிறப்பினால் இந்தத் திறமைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பை உடையவர்கள்.”

நாஜிக்கள் எவ்வாறு அதிக சக்திகள் திறமைகள் உடைய ஒரு சக்திவாய்ந்த மனிதன் என்ற “மிக்குயர் மனித" இனவாத கட்டுக்கதையை முன்வைத்தனரோ, அதேபோல் ஜோன்சன் ஊகவாணிபர்களையும் மற்றும் குற்றவாளிகளையும் பூகோளத்தின் இயல்பான எஜமானர்கள் என்று கூறுகிறார்.