சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Terrorist attack at Iranian embassy in Lebanon kills 23, wounds 140

லெபனானில் ஈரானிய தூதரகத்தை பயங்கரவாதிகள் தாக்குகையில் 23 பேர் கொலை, 140 பேர் காயம்.

By Keith Jones 
20 November 2013

Use this version to printSend feedback

லெபனானில் உள்ள ஈரானிய தூதரக வளாகத்தை இலக்கு வைத்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் செவ்வாயன்று குறைந்தப்பட்சம் 23 பேர் கொல்லப்பட்டனர், 140க்கும் மேல் காயமுற்றனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள முக்கிய ஷியைட் தெற்கு பெய்ரூட் புறநகரான ஜனாஹ் (Janah) ஐ சேர்ந்த பாதசாரிகள்; இங்குதான் தூதரகம் இயங்குகிறது. ஈரான் தனது தூதரகத்தின் கலாச்சார பிரிவினரின் மரணத்தை உறுதிசெய்துள்ளது.

அல் குவேடாவுடன் இணைந்துள்ள அப்துல்லா அசாம் பிரிகேட் என்னும் பிரிவு ஒரு ட்வீட்டில், தாக்குதலுக்குப் பொறுப்பை ஏற்று அதன் "ஆன்மீக வழிகாட்டியான" ஷேக் சிராஜிட்டின் ஜூரைக்கட் அதைச் செய்ததாகக் கூறியுள்ளது. ஈரானும் ஹெஸ்பொல்லாவும் (ஈரானிய பிணைப்புடைய லெபனிய ஷியைட் போராளிக்குழு) சிரிய அரசாங்கத்திற்கு இராணுவ வகையில் உதவுவதை நிறுத்தும் வரை, இந்த பிரிகேட் இத்தகைய தாக்குதல்களை தொடரும் என உறுதியளித்துள்ளது.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் பற்றி உயர்மட்ட பேச்சுக்களை முன்னெடுக்கையில், மேலும் சிரிய ஆட்சி அமெரிக்க ஆதரவுடைய அல்குவேடா தொடர்புடைய சிரிய எதிர்த்தரப்புடன் இராஜதந்திர தீர்வு உடன்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய இருக்கையில், செவ்வாய் நிகழ்ந்த கொடூரம் பிராந்தியத்தில் அழுத்தங்களை அதிகரிக்கும் நோக்கம் கொண்டது.

இன்று ஈரான், ஜெனீவாவில் அதன் அணுச்சக்தி திட்டம் குறித்து P6 எனப்படும் நாடுகளுடன் (அமெரிக்கா, பெரிய பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி) பேச்சுக்களை தொடரும். முன்னதாக இம்மாதம் ஈரானும் P6 ம் கிட்டத்தட்ட இடைக்கால உன்பாட்டைக் கொண்டன, இதன்படி ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஐரோப்பிய தடைகள் ஓரளவிற்கு தளர்த்தப்படுதவதை ஒட்டி, தெஹ்ரான் அதன் அணுசக்தி திட்டத்தை நிறுத்தி வைக்கும். இந்த உடன்பாட்டின்படி,  தற்பொழுது வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள பல பத்து பில்லியன் கணக்கான ஈரானிய எண்ணெய் வருமானங்களில் 5 பில்லியன் டாலர்களை மட்டும் திருப்பியளிக்கும்.

இப்பிராந்தியத்தில் அல் குவேடாவுடன் பிணைப்புக்களை கொண்டுள்ள, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல அமெரிக்க நட்பு நாடுகள், இப்பேச்சுக்களை எதிர்ப்பதாக பிடிவாதமாகக் குறிப்பிட்டுள்ளன. பொருளாதாரத் தடைகள் ஈரானின் சிவிலிய அணுசக்தித்திட்டம் முற்றிலும் அகற்றப்படும் வரை இருக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்துகின்றன. ஈரான் அணுவாயுதங்களை வளர்க்கிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பின்னால் வைக்கப்பட்டுள்ள அவர்களது கோரிக்கைகள், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் சமரசம் என்பது அவற்றின் அமெரிக்க நட்பு நாடுகள் என்ற முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்ற அவர்களின் அச்சத்தை பிரதிபலிக்கின்றன.

அல் குவேடா பிணைப்புடைய குழு, குண்டு தாக்குதலுக்கு பொறுப்பை ஏற்றுள்ளது, இக்கொடூரம் அமெரிக்க நட்பு நாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. குறிப்பாக சௌதி அரேபியா நீண்டகால பிணைப்புக்களை அல் குவேடாவுடன் கொண்டுள்ளது; அதன் முதல் தலைவர் ஒசாமா பின் லாடன் முடியரசின் செல்வமிக்க குடும்பங்கள் ஒன்றில் இருந்து வந்தவர். கட்டாருன் சேர்ந்து சௌதி அரேபியா அல்குவேடா பிணைப்புடைய சிரிய எதிர்த்தரப்பு சக்திகளுக்கு முக்கிய ஆதரவு கொடுக்கும் நாடுகளில் ஒன்றாகும். ஜனாஹ் (Janah) மக்களே சௌதிக்களைத்தான் தாக்குதலுக்குக் குறைகூறியுள்ளனர். நியூ யோர்க் டைம்ஸ் அறிக்கை ஒன்று, உள்ளூர் பெண்மணி ஒருவர் செவ்வாய் குண்டுத்தாக்குதல் இடத்திற்கு அருகே கத்தியதாக தெரிவிக்கிறது: “ஆண்டவன் பண்டாரை நரகத்திற்கு அனுப்பட்டும் இதுதான் சௌத் குடும்பம். (சவுதி அரேபியாவின் அரச குடும்பம்)” இளவரசர் பண்டார் பின் சுல்தான் சௌதி உளவுத்துறைத் தலைவர், அதன் நிதிய, இராணுவ ஆதரவை சிரியாவில் உள்ள இஸ்லாமியவாத பினாமிகளுக்கு கொடுப்பவர்.

ரோமில் பேசிய ஈரானிய வெளியுறவு மந்திரி ஜவாட் சரிஃப் சிரியாவில் உள்ள அல்குவேடா தொடர்புடைய போராளிகளின் எழுச்சியை தாக்குதலுக்குக் குறைகூறியுள்ளார். இப்போராளிக் குழுக்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் ஆயுதம் கொடுக்கப்பட்டு ஆதரவையும் பெறுகின்றன.

“ஏற்கனவே நாம் சிரியாவில் தீவிரவாத  சக்திகளின் செயலின் விளைவுகளை கண்டுள்ளோம்” என்றார் சரிஃப். “இதே அமைப்புக்கள் பாக்தாத் தெருக்களில் மக்களைக் கொன்று குவிக்கின்றன... இது ஒரு மிகவும் மோசமான பிரச்சனையாக உள்ளது, சிரியாவில் கொதித்துக்கொண்டிருக்கும் அழுத்தம் வெடித்தால், அது சிரிய எல்லையுடன் நிற்காது, [மேலும்] மத்திய கிழக்கிற்குள்ளும் நிற்காது என நான் நம்புகின்றேன்.” என்றார்.

சிரியாவின் வெளியுறவு மந்திரி, செவ்வாய் கொடூரத்தின் பின்னே நேரடியாக சௌதி அரேபியா இருப்பதாக குற்றம் சாட்டாமல், இது சௌதி மற்றும் கட்டாரி முடியாட்சிகள் அல்குவேடா பிணைப்புடைய போராளிகளுக்கு கொடுக்கும் ஆதரவின் விளைவு என்றார்.

செவ்வாய்க்கிழமை குண்டுத்தாக்குதல் தீவிர பதட்டங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல் பிராந்தியம் முழுவதும் படர்ந்திருப்பது குறித்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; இதற்கான முக்கிய பொறுப்பை அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் கொண்டுள்ளது. கடந்த தசாப்தத்தில், இது தனது மூலோபாய மேலாதிக்கத்தை அதிகப்படுத்த, தொடர்ச்சியான சட்டவிரோத போர்களை உலகின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதிப் பிராந்தியத்தின்மீது மேற்கொண்டது. இது ஈராக்கின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பு செய்தது; ஒரு “மனிதாபிமான” போரை லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக தொடக்கியது; சிரியாவில் சுன்னி இஸ்லாமியவாத தலைமை எழுச்சிக்கு ஊக்கம் கொடுத்தது, ஈரான் மீது போர் தொடுப்பதாகப் பலமுறை அச்சுறுத்தியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு சற்று முன்புதான், சிரியா மீது நேரடித் தாக்குதலை வாஷிங்டன் தொடக்க இருந்தது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நடைமுறைக்குள் எழுந்த பிளவுகளுக்கு இடையே முழுப் போரின் தேவை— சிரியாவில் அல் குவேடாவின் பங்கு குறித்து ஈரான் மற்றும் ரஷ்யா அசாத்திற்கு ஆதரவு கொடுக்கையில் பரந்த போர் பற்றிய எச்சரிக்கைகள் வந்த நிலையில், பென்டகன் அத்தகைய போரில் ஈடுபட்டு அதன் விரோதிகள் அனைத்தின்மீதும் முழுத் தாக்குதலை தொடரத் தயங்கியது; அதேபோல் அமெரிக்கப் போர் அச்சுறுத்தல்கள் குறித்து ஆழ்ந்த அதிருப்தியும் இருந்தது. ஒபாமா நிர்வாகம் இதையொட்டி கடைசி நிமிடத்தில் போரில் இருந்து பின்வாங்கியது.

அதன் கொள்கையில் ஒரு தந்திரோபாய மாற்றத்தை கையாண்டு, சிரியாவுடன் பேச்சுக்களை தொடங்கியது, அதன் பிராந்தியத்தின் முக்கிய நட்பு நாடான ஈரானுடனும் பேச்சுக்களை நடத்துகிறது. வாஷிங்டன் ஈரானை அமெரிக்க மேலாதிக்கத்தை மத்திய கிழக்கில் ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது, அதன் பொருளாதாரத்தை அமெரிக்க சர்வதேச நிறுவனங்களுக்கு திறக்கும்படி கோருகிறது மற்றும் தெஹ்ரானின் ஒத்துழைப்பை பிராந்தியத்தில் —ஆப்கானிஸ்தானில் இருந்து கிழக்கு மத்தியதரைக்கடல் வரை— ஸ்திரத்தன்மையை அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் உறுதிப்படுத்தவதற்கு நாடுகிறது. இக்கொள்ளை நோக்கங்களை அது இராஜதந்திர முறையில் அடையமுடியாவிட்டால், வாஷிங்டன் திடீரென செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை பாதைக்கு வந்தது போல் போர்ப்பாதைக்கும் திரும்பும்.

இஸ்ரேலையும் சௌதி அரேபியாவையும் இந்த திடீர் மாற்றம் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் உட்படுத்தியது; அவை பேச்சுக்கள் முறிக்கப்பட வேண்டும் என்று உரத்து குரல் கொடுப்பதுடன் போரையும் நாடுகின்றன.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் மீண்டும் தெஹ்ரான் நூற்றாண்டின் இராஜதந்திர வெற்றி வழங்க தயார் ஒபாமா நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலியப் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகு, தெஹ்ரானுக்கு இந்த நூற்றாண்டின் இராஜதந்திர வெற்றியை அளிக்கத் தயாராகிறது என்று ஒபாமா நிர்வாகத்தை பலமுறையும் குற்றம் சாட்டியுள்ளார். ஈரான் மீது இன்னும் கடுமையான பொருளாதார தடைகளை சுமத்த அமெரிக்க காங்கிரஸில் செல்வாக்கு செலுத்த மூத்த அதிகாரிகளை அவர் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்தார், இஸ்ரேல் P6 கையெழுத்திடும் எந்த உன்பாட்டிற்கும் கட்டுப்படாது என்றும் அவர் அறிவித்துள்ளார்; இது ஈரான்மீது ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்ற உட்குறிப்பான அச்சுறுத்தல் ஆகும்.

ஞாயிறன்று பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட பேட்டி ஒன்றில், நெத்தெனியாகுவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் யாகோவ் அமிர்டோர், இஸ்ரேலிடம் ஈரானின் அணுத் திட்டத்தை நிறுத்தும் இராணுவத்திறன் நீண்ட காலமாகவே உள்ளது என்று பெருமை பேசிக் கொண்டார். அதன் பின் அவர் ஹெஸ்பொல்லா ஈரான்மீது இஸ்ரேல் தாக்குவதற்குப் பதிலடி கொடுத்தால் இஸ்ரேலிய தரைப்படைகள் “லெபனானின் நகர மையங்களுக்குச் செல்லும்” என்றார்—அதாவது லெபனான் மீது முழுத்தாக்குதல் நடத்தும் என்றார்.

ஒபாமா நிர்வாகத்தின் ஈரான் உடனான “இராஜதந்திர ஆரம்பிப்புக்கு” அதிருப்தியைக் காட்டும் வகையிலும் மற்றும் சிரியாவிற்கு எதிராக போரைத் தொடக்காததற்காகவும், சௌதி அரேபியா சமீபத்தில் ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் இடத்தைப் பெற்றுக் கொள்ள, பல ஆண்டுகளாக இதற்காக அது பாடுபட்டிருந்தும்கூட மறுத்துவிட்டது.

சௌதி அரேபியா சமீபத்தில், ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் ஒன்றிற்கு உதவத் தயார் எனக் கூறியுள்ளது. இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் சௌதி வான்வழியில் பறக்க அனுமதிக்கப்படும் என்பதோடு, டாங்கர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்களை அளிப்பதாகவும் ரியாத் கூறியுள்ளது. லண்டனின் சண்டே டைம்ஸிடம் ஒரு தூதரக ஆதாரம் கூறியது: “ஜெனீவா உடன்படிக்கை கையெழுத்தான பின், இராணுவ விருப்ப நடவடிக்கை மீண்டும் மேசைக்கு வரும். சௌதிக்கள் சீற்றத்துடன் உள்ளனர், இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்யத் தயாராக உள்ளனர்.”

செவ்வாய்க்கிழமை குண்டுத் தாக்குதல், ஷியா-சுன்னி குறுங்குழுவாத இரத்தக்களரியில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவில் நடத்தி வருவதில் லெபனானையும் இழுக்கும் நோக்கம் கொண்டது மற்றும் சிரியா குறித்து அமெரிக்க ரஷ்ய தலைமையிலான பேச்சுக்களையும் தடம்புரள செய்யும் இலக்காகவும் உள்ளது. லெபனிய ஷியைட் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்துவதில் இது சமீபத்தியதாகும். இது கோடைத் துவக்கத்தில் இருந்து நடைபெறுகிறது.

ஏற்கனவே ஹெஸ்பொல்லாவும் அதன் அமெரிக்க நட்பு சுன்னிப் போட்டி அமைப்பான Future Movement ம் சிரிய மோதலில் வெவ்வேறு பக்கங்களில் உள்ளன; சுன்னி உயரடுக்கு, லெபனானின் சுன்னி இஸ்லாமிய வாதிகள் சிரிய மோதலில் சேர ஒழுங்கமைத்தும் நிதிய அளித்தும் உதவுகின்றது. Future Movement தன்னை அல்குவேடா சக்திகளுடன் பிணைத்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது—அவைதான் ஈரானிய தூதரகத்தை தாக்கின; இது சிரிய அரசாங்கத்திற்கு ஹெஸ்பொல்லா ஆதரவு கொடுத்ததால் வந்த தவறு என்றும் கூறியுள்ளது.